கேள்விகளின் நாயகன் |
நான் நினைக்கிறது இருக்கட்டும் அடுத்த பிறவியில் முள்ளிவாய்க்கால்தான். கொத்துக் கொத்தாக சொந்தங்கள் சாவதை பார்த்துக்கொண்டு இருந்ததற்கு.
அடேய் அப்போவும் அப்படித் தான் இருக்குமா என்று பொருமுபவர்கள் கவனத்திற்கு முள்ளிவாய்க்கால் அல்லது முள்ளிவாய்க்கால் போல ஒரு கடுமையான நரகத்தில்தான் என் பாவங்களை கழுவ வேண்டும்.
02. ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
உலகம் ஒரு மோசமான சர்வாதிகாரியை சந்திக்கும்.
03. இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்?
இந்தியர் மட்டுமா ஐநா கூட எதிர்ப்பு தெரிவிக்கலாம். அமரிக்காவிற்கு ரெண்டு பெட்ரோல் கிணறுகளை காண்பித்தால் எனக்கு ஆதரவு வந்துவிடும். அமெரிக்காவே ஆதரித்த பின்னர் நம்ம ஆளுக எப்படி எதிர்பாங்க?
04. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
இலவச உடற்பயிற்சி மையங்கள். தரமான மருத்துவ சேவை.
05. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?
திட்டம் என்றாலே சிலருக்கு கமிசன் என்று காதில் கேட்கும். இந்தக் கழிசடைகளை போட்டுதள்ளுவதே புதிய திட்டம்.
06. மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?
மதிப்பெண் மாயை முற்றாக விலக்கப்படும். வேண்டும் என்பவர்களுக்கு மணியடித்தால் சோறு மற்றும் கேப்பைக் களி இலவசமாக வழங்கப்படும்.
07. விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?
தலைமை அதிகாரிகளாக இருப்பார்கள். புதிய கண்டுபிடிப்புகளை அல்ல புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குபவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
08. இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
எனக்கு பின்? யாரங்கே இந்தக் கேள்வியைக் கேட்க இவர்களுக்கு எப்படி துணிவு வந்தது? ஆறாம் கேள்வியின் பதிலை ஒருமுறை படிக்கவும்.
09. மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
இதை விடப் புதுமை ?
10. எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?
இருக்கும் வரை பலன் தரும் ஏதாவது ஒரு விருட்சமாக.
இவ்வினியப் பதிவினைத் தொடர, நான் அழைக்கும் நண்பர்கள் வேறு யார்?
உங்கள் அனைவரையுமே அழைக்கிறேன்...
வாங்க பதில் சொல்லுங்கள் ...
அன்பன்
மது
வணக்கம் நண்பரே இதுவரை யாருமே சொல்லாத புதுமைதான் போங்க..... லே்ட்டாத்தான் போட்டீங்க,,, எதிர்ப்பவனை 'லேட் பண்ணிட்டீங்க,,,, ஸூப்பர் தோழா...
ReplyDeleteத.ம.1
வருக தோழர்..
Deleteநான் இதை விட ரகளையாக ஒரு கேள்விக்கு ஒரு கேள்வி என்று காந்தியாரிடம் கேள்வி எழுப்புவது மாதிரி எழுத நினைத்தேன்...
நிறைய பேர் மனசு புண்படும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொண்டேன்...
உலகம் ஒரு மோசமான சர்வாதிகாரியை சந்திக்கும்போது
ReplyDeleteசர்வமும் சர்வாதிகாரி வசம் என்று பாராட்டு பாடலை மட்டும்
பாடி விடும் படி காந்தி எனது கனவில் சொன்னதை இங்கே பதிவுசெய்துபறந்து விடுகிறேன்.
நல்ல கனவு ! பலிக்கட்டும் !
புதுவை வேலு
தகவலுக்கு மிக்க நன்றி தோழர்
Deleteவணக்கம் சகோ!
ReplyDeleteஇந்தத் தொடருக்கு தங்களின் பதில்கள்
சுவரோடு நிற்க வைத்து நெற்றிப் பொட்டில்
ஆணி அடித்தது போல சுள் சுள் என இருக்கின்றன!..
முதலாவது பதிலோடு உங்கள் உள்மனத்தை அப்படியே
திறந்து வைத்துப் படிக்க வைத்து விட்டீர்கள்!..
பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள் அதற்கு!..
உங்கள் உணர்விற்கு என் தலைதாழ்ந்த வணக்கமுடன்
நன்றி சகோ!
இல்லை சகோதரி எதுவுமே செய்துவிடக் கூடாது என்று அன்றைய அரசு தெளிவாக இருந்தது...
Deleteமீதி அரசு ஊழியர்கள் ஆறாம் ஊதியக் குழுவின் குளிர்ச்சியில் இந்த குற்றத்தை நியாயம் வேறு செய்தனர்..
கொடூரமான நாட்கள் அவை...
வலிகள் நிரந்தரம்...
உப்பிட்டு உண்பவர் உணர்வாளர்கள் யாரும் மறக்க இயலாத் துயரம் அது..
அனைத்து பதில்களுமே, நாட்டில் தற்போது உள்ள அவலங்களை மாற்ற முடியவில்லையே என்ற தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது.
ReplyDelete2ஆம் கேள்விக்கான பதில் - சில வருடங்களாவது நம் நாட்டை அந்த மாதிரி ஆண்டால் தான், மக்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். பிறகு மீண்டும் ஜனநாயக ஆட்சி முறை வந்தால், மக்கள் கேள்வி கேட்பார்களே என்கிற பயம் அரசியல்வாதிகளுக்கு வந்துவிடும்.
உண்மையானவரே ...
Deleteகேள்விகேட்கும் குழுக்களை நாம் உருவாக்கினாலே மாற்றங்கள் நிச்சயம்..
கேப்பைக் களி இலவசம்... விரைவில் வந்து விடும்... ஹிஹி...
ReplyDeleteவாங்க அண்ணா வாங்க ..
Deleteசுருக்கமான கேள்விகளுக்கு சுருக்கமான பதில்கள்.
ReplyDeleteத.ம.4
வருக வருக ...
Deleteவாக்கிற்கு நன்றிகள்
வித்தியாசமான பதில்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி தோழர்
Deleteஅருமையான பதில்கள். நம் நாட்டிற்கு இது போன்ற ஒருவர் தான் தேவை!
ReplyDeleteத.ம. +1
வருக பயணப் புயலார் .. வெங்கட் ...
Deleteவாக்கிற்கு நன்றி வருகைக்கும் நன்றி
#இதை விடப் புதுமை ?#
ReplyDeleteகிடையவே கிடையாது !
த ம 6
நமஸ்காரம் பகவானே
Deleteநன்றிகள் தங்கள் வருகைக்கு
பதில்கள் எல்லாமே நல்லாயிருக்கு, மது. I would rate this as THE BEST in this series. மைதிலியை நீங்க "பீட்" பண்ணீட்டீங்க! குடும்பத்துக்குள்ளே சண்டை இழுத்துவிடும் எண்ணமில்லை. ஆனால் உங்களுக்குள் "ஹெல்த்தி காம்பெட்டிஷன்" உண்டு என்று எங்கோ படித்த ஞாபகம். அதை படித்ததால் இதை சொல்ல வேண்டியதாகிவிட்டது. :)
ReplyDeleteகணவன் வெற்றிக்குக் காரணம் தன்னலமற்ற மனைவியின் ஊக்குவிப்பு
மனைவியில் வெற்றிக்குக் காரணம் தன்னலமற்ற கணவனின் ஊக்குவிப்பு
ஆக, உண்மையில் வென்றது யார்? எனக்கே குழப்பமா இருக்கு! :))
பதிவில் பீட் செய்தது சப்பை மேட்டர்
Deleteஅதுவும் உங்கள் கருத்துத்தான் ...
பணியில் பீட் செய்யவே முடியாது அம்மணியை..
ஹும் ஒரு பெருமூச்சு வேறே என்ன ..?
அன்புள்ள அய்யா,
ReplyDeleteகனவில் வந்த காந்தி-தங்களின் பதில் அனைத்தும் நன்றாக இரசித்துப் படித்தேன். படித்ததில் பிடித்தது எது என்றா கேட்கிறீர்கள்... இதோ இதுதான்...!
ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
உலகம் ஒரு மோசமான சர்வாதிகாரியை சந்திக்கும்.
நன்றி.
லேட்டாக வந்து லேட்டஸ்டான பதில்கள்! மிகவும் புதுமையான பதில்கள் நண்பரே! மிகவும் ரசித்தோம்.. பயந்து கொண்டே.....பின்னே சர்வாதிகாரியாயிற்றே! ஹஹஹ்
ReplyDelete