காவியத் தலைவன்: தோழர் ஜெயப் பிரபுவின் விமர்சனம்


நாசர், சித்தார்த், ப்ருத்விராஜ்,வேதிகா,அனைகா சோட்டி, தம்பிராமையா,சிங்கம்புலி,குயிலி,பொன்வண்ணன்,பாபு ஆன்டனி,மன்சூர் அலிகான் -என ஒரு நடிப்புப் பட்டாளத்தையே இறக்கி திரையரங்குகளை நடுநடுங்க வைத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவலை நான் படித்து பல்லாண்டுகளுக்குப் பிறகு அவரது வசனங்களில் (திரைக்கதையிலும் பங்குண்டு) ஒரு படத்தைக் பார்க்கும் வாய்ப்பு.

அவ்வை சண்முகத்தின் 'எனது நாடக வாழ்க்கை' என்ற புத்தகத்தை ஜெயமோகன், வசந்தபாலனுக்கு அளிக்க, அதோடு சங்கராபரணமும்,சலங்கை ஒலியும் இயக்குனரின் மனதில் குடிகொண்டு விட, அவசரப்படாமல் தேடித் தேடி ரசனையோடு இப்படத்தைசெதுக்கியிருக்கிறார் இயக்குனர்.

1920-30 களில் தமிழகத்தில் பரவிக் கிடந்த நாடகக் கலாசாரத்தை நம் முன்னே கொண்டு வர, ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர்.

படம் முடிவானதும் சுமார் ஓராண்டிற்கு மதுரை, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் என ஊர்,ஊராக சுற்றி பழைய நாடக நடிகர்களைச் சந்தித்து அனுபவங்களையும், ஆதாரங்களையும் பெற்று கொஞ்சம் கொஞ்சமாகக் கதையைக் கோர்த்திருக்கும் வசந்தபாலனுக்கு பாராட்டுகள்.

பட்டணம் ரஷீத் நடிகர்களுக்கான ஒப்பனைகளை சிரமேற்கொண்டு செய்திருக்கிறார்.

பெருமாள் செல்வமும், நிரஞ்சனி அகத்தியனும் ஆடை அலங்காரத்திற்காக அதிக பாடுபட்டிருக்கிறார்கள்.

-சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பான நாடக ஒப்பனைகளையும்,ஆடை அலங்காரத்தையும் இப்போது செய்வது அவ்வளவு எளிதல்ல.

சிவதாஸ் சுவாமிகளின் ( நாசர்) நாடகக் கொட்டகையில் சிஷ்ய நடிகர்களாக இருக்கும் காளி(சித்தார்த்), கோமதி(ப்ருத்வி)
ஆகியோருக்கிடையேயான கலைப் போட்டி தான் கதைக் களம்.

இம் மூவரும் மூன்று புறங்களிலிருந்தும் நடிப்பு பந்துகளை நம் மீது வீசிக் கொண்டிருக்க,

நாங்களுமிருக்கிறோமென, வடிவும்(வேதிகா), இளவரசியும் (அனைகா) வந்து குதிக்கிறார்கள்.

இப்படத்தில் நடனம் உள்ளிட்ட ஸ்கோர் செய்ய வேண்டிய பகுதிகள் இருப்பதால் 1966 இல் வெளிவந்த 'சரஸ்வதி சபதம்' மாதிரியான படங்களைப் பார்த்து வேதிகா பயிற்சி எடுத்தாராம்.

அதன் பின்னர் காலம் சென்ற நடன இயக்குனர் ரகுராம் அவர்கள் வாணி ஜெயராம் பாடிய 'திருப்புகழ்' பாடலுக்கு வேதிகாவை நடனமாட வைத்திருக்கிறார்.

வேதிகாவின் கதாப்பாத்திரத்தில் கேபி சுந்தராம்பாளின் தாக்கமிருப்பதாக சொல்கிறார்கள்.

இன்னொரு நடிகை 'அனைகா சோட்டி' உத்திரப் பிரதேசத்துக்காரர்.

சுவாதியையும், ஸ்ருதிஹாசனையும் சேர்த்து மெல்லீஸ்ஸாக இருக்கிறார் (இளவரசி கேரக்டருக்காக லிப்ஸ்டிக் கொஞ்சம் தூக்க்க்..கல் போல)

தம்பிராமையா, மன்சூர் இருவரும் மற்ற நடிகர்களோடு போட்டி போட்டிருக்கிறார்கள்.

நீரவ்ஷாவுக்கு தனி அப்ளாஸ்! 

பரபரன்னு காட்டுக்குள்ள பகத் சிங்கோட ஓடுறதும், திடீர்ன்னு மலைக்கு மேலையும், நாடக் கொட்டாய் மேலேருந்து உள்ள போறதும் செம்ம பாஸ்!

பில்லா,சர்வம்,பட்டியல்,மதராஸபட்டினம்,சர்வம் போன்ற தமிழ்ப்படங்கள் இந்தியில் பனாரஸ் போன்ற படங்களுக்காக பெரிதும் பேசப்பட்டவர் இவர்.

ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்க்கு இசையமைக்க 1920 களோடு ஒன்றிப் போவதற்காகவே 6 மாதகாலம் எடுத்திருக்கிறார்.

"வாங்க மக்கா வாங்க, ஏய் சண்டிக் குதிர, யாருமில்லா தனியரங்கில் "-பாடல்கள் பலே..

இப்படத்திற்காக 7 முழு பாடல்களுக்கும், 14 சிறிய பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

'ஏய் மிஸ்டர்' - இருவர் பட பாடலையும், 'யாருமில்லா' பாடல் ஏதோ ஒரு பழைய பாடலையும் நினைவூட்டுகிறது.

படம் தொடங்கி அரை மணி நேரத்திற்குள்ளாக நம்மை 1930 களுக்கு கொண்டு சென்றுவிடுவதில் ஆர்ட் டைரக்டர் (சந்தானம் என நினைவு) வெற்றி கண்டிருக்கிறார்.

துரோகம் (பொன்வண்ணன்), சூழ்ச்சி (ப்ருத்வி), குரு பக்தி(சித்தார்த்), கலை தாகம்(நாசர்), பணவெறி(மன்சூர்) -என நடிப்பில் வரிந்து கட்டி வந்திருக்கிறார்கள் அனைவரும்.

குறிப்பு:

சுமார் 2 ஆண்டுகளாக இப்படத்திற்காகவே வாழ்ந்து காவியமாகவே படைத்திருக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் சுதந்திரப் போராட்டத்திற்காக வீதி நாடகங்கள் போட்டு எப்படி சுதந்திர தாகத்தை வளர்த்தார்கள் என்பதையும் இதன் வாயிலாக அறிய முடிகிறது.

காமெடி,ரொமான்ஸ்,ஸ்டன்ட்-போன்ற மசாலா பட வகையறாவில் ஒன்றாக இதை எதிர்பார்க்க வேண்டாம்.

இது ஈடு இணையற்ற ஒரு வரலாற்று காவியப் படைப்பு.

ஒப்பனை,ஆடை,கலை,ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் மாநில,தேசிய விருதுகளுக்கு போட்டி போடக் கூடியது.

ஆக்கம் 
ஜெயப் பிரபு .

Comments

  1. த ம 1
    ( இதுக்கும் குறைவாப் பின்னூட்டம் போட முடியாது தோழர் )

    ReplyDelete
  2. விமர்சனம் நன்று...

    ReplyDelete
  3. பார்க்கத் தூண்டும் விதமான விமர்சனம். கண்டிப்பாக பார்க்கிறேன்.
    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்....

    த.ம. +1

    ReplyDelete
  5. வணக்கம் சகோ
    நண்பரின் விமர்சனம் படம் பார்த்து விட வேண்டும் ஆவலை மிகுவித்திருக்கிறது. விரைவில் பார்க்க வேண்டும். விமர்சனம் மட்டுமல்லாமல் பல தகவல்களையும் நமக்கு கோடிட்டுக் காட்டிருக்கும் நண்பருக்கும் பகிர்ந்த தங்களுக்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  6. படம் பார்த்துவிட்டோம். நல்ல படம். நல்ல கதைக் களம்.

    விமர்சனமும் நன்றாக உள்ளது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக