தமிழின் பதிவுகளை தேடித் தேடி அறிமுகம் செய்யும் தளம். தமிழ்ப் பதிவர்களின் புரவலராகவே மாறிவிட்ட தளம். திரு.சீனா, திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும் இணைந்து நடத்தும் தளம்.
எப்படி இயங்குகிறது.
கெஸ்ட் ப்ளாகிங் முறையில். நீங்கள் பதிவுகளை அவர்களது தளத்தில் வெளியிடலாம். ஆனால் அவர்களின் பழைய பதிப்புகளைத் திருத்த முடியாது. இன்வைட் ஆதர்ஸ் என்கிற செட்டிங்கில் நீங்கள் உங்களின் நண்பரின் முகவரியை உள்ளிட்டால் போதும், உங்கள் தளத்திலும் உங்கள் நண்பர்கள் இதே மாதிரி எழுதலாம்.
வலைச்சர ஆசிரியருக்கான குறிப்புகள்
உருப்படியாய் செய்ய வேண்டும் பொறுப்பை என்கிற ஆவல் இருக்கிறதா உங்களிடம்?
அப்போ முதலில் உங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுவிட்டதாக சொல்லும் மின்அஞ்சல் வரும் அந்த நாளிலேயே பதிவுகளை எழுத வேண்டியதுதான்.
கிட்டத் தட்ட இரண்டு மாதம் முன்னாலே உங்களுக்கு அறிவிப்பு வந்துவிடுவதால் நீங்கள் அறிமுகம் செய்ய வேண்டிய தளங்கள், பட்டியலை எடுத்துக் கொண்டு ஏழு பதிவுகள் அல்லது அதற்கு மேல் தயார் செய்ய வேண்டியதுதான்.
பொறுப்பு வந்த அன்று நீங்கள் வெறுமனே போஸ்ட் மட்டுமே செய்ய வேண்டும். இதன் பின்னர் நீங்கள் அறிமுகப் படுத்திய தளங்களில் செய்தியைச் சொல்ல வேண்டும். திண்டுக்கல் தனபாலன் அய்யா இந்தப் பணியை பல நாட்கள் செய்தார். ஆனால் இப்போது வலைச்சர பொறுப்பாசிரியரே செய்வதுதான் நடக்கிறது.
எனவே நீங்கள் பதிவை முழுமையான வடிவத்தில் வைத்துக்கொண்டு வெளியிட்டுவிட்டு நீங்கள் அறிமுகம் செய்த தளங்களுக்கு சென்று நீங்களே அறிமுகம் செய்ய வேண்டும். பதிவையும் அன்னைக்குத் தான் எழுதுவேன் என்று சொன்னால் வேலை பல மணிநேரம் இழுத்துவிடும்.
பதிவர்களை அறிமுகம் செய்வது எப்படி
நமக்கு பிடித்த பதிவர்கள், வெகு ஆழமாய் அழகாய் எழுதும் பதிவர்கள் கூடவே ஒவ்வொரு பதிவிலும் த ம வாக்களர் உரிமை உள்ள பதிவர்களையும் அறிமுகம் செய்ய வேண்டும்.
ஏன்?
பல புதிய பதிவர்கள் பதிவினை மட்டும் எழுதிவிட்டு அதன் அடைதல் குறித்து எந்த முயற்சியும் எடுக்காமல் சென்றுவிடுகின்றனர்.
நீங்கள் அறிமுகம் செய்தால் இந்த மாதிரிப் புதிய பதிவர்கள் நன்றிகூட தெரிவிப்பதில்லை. இது அவர்களின் மமதை இல்லை. அவர்களுக்கு தெரிய வில்லை அவ்வளவே.
எனவே நீங்கள் சீசன்ட் பதிவர்களை அல்லது பதிவுலகின் விதிகளைப் புரிந்த பதிவர்களை கட்டாயம் ஒவ்வொரு பதிவிலும் இணைக்க வேண்டும்.
இவர்கள் உங்களுக்கு முறையான பின்னூட்டம் தந்து வாக்களித்து உங்களின் சேவைக்கு ஊக்கம் தருவார்கள். எனவே இப்படிச் செயல்படும் ஆக்டிவான பதிவர்களை ஒவ்வொரு பதிவிலும் இணைக்க வேண்டும் இல்லையேல் வருந்த நேரிடலாம்.
எனக்கு தெரிந்ததை சொல்லீட்டேன்
அப்புறம்
உங்க பிரியம்
நன்றி
மது
நல்லதை தானே சொல்லிருக்கீங்க சகோ...வாழ்த்துகள்.த.ம.2
ReplyDeleteநன்றி .. சகோ
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteவலைச்சரம் பற்றி விரிவான தகவல்களைத் தந்தமைக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.சீனா, திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-நன்றி.
நன்றி அய்யா
Deleteஅருமையான தகவல் அண்ணா !!
ReplyDeleteநன்றி திரு..
Deleteவிரைவில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க வாழ்த்துகள்!
ReplyDeleteத ம +1
நன்றி பகவானே
Deleteஇன்னும் நிறைய இருக்கே...!
ReplyDeleteஅதையும் சேர்த்து சொல்லுங்கள் ...
Deleteநன்றி
நல்ல தகவல்கள் தோழரே கத்துக்குட்டியான நானும் நிறைய விட.ங்களை கற்றுக்கொண்டேன் தங்களின் பதிவு மூலம்
ReplyDeleteதாங்கள் சொல்வதும் உண்மையே.... நான் அறிமுகப்படுத்தியவர்களில் பலரும் நன்றி கூட சொல்லவில்லை... இத்தனைக்கும் அவர்களுக்கு தகவல் கொடுத்தும்.
தமிழ் மணம் 5
அவர்களை ஒரு ஆர்வத்தில் தளம் ஆரம்பித்துவிட்டு அப்படியே விட்டுவிடுபவர்கள் .. பெரும்பான்மை அப்படிதான்.
Deleteஎல்லாம் நல்ல அனுபவம் தான்
உண்மையை அழகாகச் சொல்லியிருக்கீங்க..
ReplyDeleteவாருங்கள் ... நன்றி
Deleteவலைச்சர ஆசிரியர் பற்றிய உங்கள் ஆலோசனைகளைப் பின்பற்றினால் வேலை எளிதாகும் . நான் வலைச்சரம் தொகுத்தபோது சரியாக திட்டமிடாதாதால் சிரமப்பட வேண்டி இருந்தது. அறிமுகப்படுத்தப் பட்டவர்கள் நன்றி கூறுவதுதான் சிறந்த பண்பாடு.
ReplyDeleteதமிழ் மண வாக்குப் பட்டை வேலை செய்யும் எந்த வலைப்பதிவிற்கும் வாக்களிக்காமல் சென்றதில்லை.
வேலை செய்யாவிட்டாலும் ஒரு முறை முயற்சித்துப் பார்த்துத்தான் செல்வேன்.
வீட்டில் அவர்கள் ஒரு வாரம் பொறுப்பில் இருந்ததால் இந்த அனுபவம் கிடைத்தது..
Deleteவருகைக்கு நன்றி
வரும் காலங்களில் ஆசிரியர் பொறுப்பேற்க உள்ள எனக்கு மிகத் தெளிவாக வழிகாட்டியதற்கு மிக்க நன்றி. சகோதரர் கில்லர்ஜி வலைச்சரம் பார்க்க அறிவுறுத்தினார், எல்லா நாட்களும் பார்த்தேன். என்னையும் அறிமுகப்படுத்தியிருந்தார். எப்புடி நன்றி சொன்னேன் தெரியுமா...அப்பாடா...
ReplyDeleteபணி சாதாரணமானது அல்ல ...
Deleteஒரு நாளைக்கு குறைந்தது மூன்று மணி நேரம் எடுக்கலாம்
விபரமான நல்ல பதிவு சகோ !
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!
நன்றி சகோ
Deleteமிகவும் உபயோகமான தகவல்கள்! புதியதாய் பொறுப்பேற்க இருப்பவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் உதவும்! நன்றி!
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் நண்பரே! எங்களுக்கு 5 நாட்களுகு முன் தான் அழைப்பும் தகவலும் வந்தது, நாங்கள் முடிவு செய்ய ஒரு நாள் கடந்தது, மிச்சமுள்ள நாளில் ஏதோ முடினததை எழுதினோம். நல்ல பதிவுகளாகத் தர இயலவில்லை....எப்படியோ அந்த அனுபவம் நல்ல விட்யங்களைக் கற்றுத் தந்தது....
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடனும் நட்புடனும்
துளசிதரன், கீதா
பணி அருமையாகத்தான் இருந்தது ..
Deleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா...
ReplyDeleteநன்றி சகோ
Deleteநல்ல பதிவு! வலைச்சர ஆசிரியராகும் அனைவருக்கும்
ReplyDeleteஆசிரியரால் வழங்கப்பட்ட சிறப்பான பகிர்வு!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!
நன்றி சகோ
Deleteதகவல் பதிவு அருமை அண்ணா
ReplyDeleteஉங்களுக்கும் மைதிலிக்கும் நிரை, மகிக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! :)
நன்றி சகோ ... மகிழ்வு
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteநன்றி அய்யா
Deleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு தின வாழ்த்துகள் ணா .
ReplyDelete..புத்தாண்டுக்கொண்டாட்டம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விரதம் காரணமாய் கொஞ்சம் லேட் ஆகிடுச்சி ணா
இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
அருமையான பல தகவல்கள். நன்றி தோழரே....
ReplyDeleteமமதை அல்ல அவர்களுக்கு தெரியாது என்றாலும், நமது தளத்தை அறிமுகம் செய்துவிட்டு நம் தளத்துக்கும் வந்து தெரிவிப்பவர்களுக்கு நன்றி கூட சொல்ல முடியவில்லையென்றால்...
நன்றி !
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
வணக்கம் சகோதரர்
ReplyDeleteதங்களின் வழிகாட்டுதல் வரவிருக்கும் வலைச்சர ஆசிரியர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். சிற்ந்த யோசனைகளுக்கு நன்றி சகோ..