அதி அற்புதமான இலக்கியப் படைப்பு. குழந்தையின்மையின் வலியைச் சொல்கிற, கிராமத்து மக்களின் உழைப்பைச் சொல்கிற, வாழ்வியலை வேளாண் யுக்திகளை சொல்கிற நாவல்.
எனது மனதிற்கு நெருக்கமாக காளியும் அவனது மனைவி பொன்னாவும் இன்னமும் இருக்கிறார்கள்.
முற்போக்காய்ச் சிந்தித்து அருவருப்பாய் அனாயாசமாய் கேள்விகளைக் கேட்கும் நல்லுப்பையன் சித்தப்பா கதாபாத்திரம் செமை.
வட்டார வழக்கில் வயல் நடுவே கம்பீரமாய்ப் ஊர்ந்து போகும் ஒரு பாம்பு மாதிரி என்னோவோர் நடைப்பா. எழுத்து நடை அருமை.
நிச்சயமாக ஆங்கிலத்தில் வந்திருந்தால் உலக இலக்கியம் என்று கொண்டாடப் பட்டிருக்கும்.
இவ்வளவு இருந்து ஏன் இதன் எழுத்தாளர் தான் செத்துவிட்டதாக தானே அறிவிக்க வேண்டும்?
எதற்காக தமிழகத்தின் ஒரு முக்கியமான வணிக நகரில் முழுஅடைப்பு நடத்தப்படவேண்டும்?
பலகட்ட பேச்சு வார்த்தைகள் ஏன் தேவைப்பட்டன?
ஏன் எழுத்தாளர் பெருமாள் முருகன் மிரட்டப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கிறார்?
ஒரே காரணம்தான்.
இந்நூலில் வருகிற முக்கிய கதா பாத்திரங்கள் எல்லாம் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களாக எழுதப்பட்டிருக்கின்றனர்.
எனவே இது சாதிய அரசியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
அவர்கள் கேட்கும் கேள்வியெல்லாம் இப்படி வேறு எந்த சாதியைப் பற்றி எழுதினால் அவர்கள் சும்மா இருப்பார்களா என்பதே.
இது இந்து முன்னணியோ, அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்போ எடுத்து நடத்தும் போராட்டம் அல்ல என்றும் 'சிலர்' சொல்கிறார்கள்.
ஞாநி தனது நிலைத்தகவலில் இதுகுறித்து விரிவாகவும் தெளிவாகவும் எழுதியிருப்பதால் போராட்டக் காரர்களின் பின்னணி குறித்து நான் விரிவாக சொல்லத் தேவையில்லை. (ஞாநி ஒரு அனுபவமிக்க உண்மை சார்ந்து எழுதும் பத்திரிக்கையாளர் என்பது உங்களுக்குத் தெரியும்)
வெகு அருமையான வாசித்தல் அனுபவத்தை கொடுக்கும் ஒரு நாவல் எவ்வளவு கவனமாக கையாளப் படவேண்டும் என்று படைப்பாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஊர் பெயர், திருவிழா, அதன் சாமியின் பெயர் அனைத்தும் உண்மையானவை. கற்பனையூரின் கதாபாத்திரங்கள் அல்ல. எனவே நிகழ்வும் உண்மையைத்தான் சொல்வதாக வாசகர்கள் நம்புவார்கள்.
இதை உறுதி செய்யும் வண்ணம் முன்னுரையில் ஆசிரியர்தான் நிதி பெற்று சமூக ஆய்வை செய்த விசயத்தையும் பதிவிடுகிறார். எனவே சம்பவங்கள் முழுக் கற்பனை அல்ல என்றே வாசகன் நம்புகிறான்.
இன்றைய சமூகச் சூழலில் இது எத்தகு இடர்பாடுகளை அந்தச் சமூகத்திற்கு ஏற்படுத்தும் என்பதை உணர முடிகிறது. கருத்துரிமைக்கு தொடர்ந்து வாதிடும் எனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. நேரடியாக ஒரு சாதியினை குறிப்பிட்டது பெரும் சிக்கலை உருவாக்கிவிட்டது.
என்னைநோக்கி போராட்டக்காரர்கள் காளியை உன் சாதிக்கரனாகவும் பொன்னவை உனது சொந்தமாகவும் நினைத்துப் பார்த்து இந்த வழிபாடு உனது ஊரில் நடந்ததாக எழுதியிருந்தால் ஏற்றுக் கொள்வாயா என்று கேட்டால் எனது பதில்
ஆம் என்பதே.
அவர்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கலாம். எனது வாசிப்பும், மானிட குலத் தோற்றத்தையும், ஆதி வழிபாட்டு முறைகளை குறித்த அறிவும் பெருந்திரள் வாசககர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும்.
இந்த இடத்தில்தான் பெருமாள் முருகன் துணிச்சலாக வேறுமுடிவை எடுத்திருக்கிறார். அதன் காரணமாக தனது பேனாவையும் படைப்புரிமையையும் இழந்திருக்கிறார்.
ஒரு இனத்தை மலினப் படுத்தும் படைப்புகளை வெளியிடாமல் இருப்பதே நல்லது என்கிற புள்ளிக்கு எழுத்தாளுமைகளை தள்ளியிருக்கிறது இந்தப்போராட்டம்.
இன்றளவும் பேசப்படும் ஈசாப் குட்டிக் கதைகள் அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசர்களின் குரூரங்கள் குறித்த கலை வெளிபாடே. இன்றளவும் ஈசாப்பும் அவர் கதைகளும் நம்முடன் இருக்கின்றன. அரசர்கள்தான் காணாமல் போய்விட்டார்கள்.
பெருமாள் முருகன் மௌனித்திருக்கலாம். ஆனால் விநோதத்திலும் விநோதமாக அவரது படைப்புகளை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் பணியைப் போராட்டக்காரர்கள் செவ்வனே செய்துவிட்டார்கள். இந்நிகழ்வின் கடுமை கடந்து போனால், பெருமாள் முருகன் பிழைத்துக் கிடந்தால்(அவ்வளவு தீவிரமாய் இருக்கிறது எதிர்ப்பு) அவரது அந்திமத்தில் அவர் நன்றியோடு நினைத்துப் பார்ப்பவர்களாக இந்தப் போராட்டக்காரர்கள் இருப்பார்கள்.
இப்போதைக்கு
இவ்ளோதான்
மது
சரியான விமர்சனம்....ஆமா கர்ணன்,தர்மன்,அர்ஜீனன்,போன்றோர்கள் எப்படி பிறந்தார்கள்...அந்த கதைக்கு ஏன் எதிர்ப்பு வரல...மகாபாரதக்கதையில் இல்லாததையா பெருமாள் முருகன் சொல்லிவிட்டார்...என்ன ஒண்ணு...தெரியாதவங்க எல்லாம் கூட நூலை வாங்கி படிக்க வைத்து என்ன இருக்கு இதில்னு கேட்க வைத்துவிட்டனர்...எதிரிகள்
ReplyDeleteஇதுமாதிரி நடுநிலையான கேள்விகளின் கழுத்தை முறிப்போம் என்று உணர்த்துவதே இந்தப் போராட்டத்தின் உண்மையான நோக்கம்.
Deleteஇன்றைய சாதிய சூழலில் எழுத்தாளர் இந்த சாதியினை நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும்.
குறியீடுகளால் சொல்வது தான் எழுத்தின் வெற்றி அதை விடுத்து நேரிடையாக குறிப்பிடிருப்பதால் ரொம்ப பர்சனலாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.
வாசிப்பு பழக்கமே இல்லாத நமது சமூகத்தில் இது இயல்பே.
திரையில் அடிபடும் கதாநாயகனுக்கு கண்ணீர் விட்டு அழும் சமூகம் இது.
அடக்க அடக்கத்தான் வெகுவாய்ப் பரவும் என்பது இந்த விசயத்தில் நிருபணமாகிவிட்டது.
அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் இவ்வளவு விரைவாக (நான்கு ஆண்டுகள் கழித்து) நான் படித்திருக்க மாட்டேன்.
எதிர்பாளர்கள் எல்லாமே பர்சனலாக அசிங்கப் படுத்தப் பட்டமாதிரி உணர்வதுதான் வேதனை. இது ஒரு சாதிக்கும், சமூகத்திற்குமான குறியீடு அல்ல.
அருமையான பதிவு! இப்படி ஒரு நச் பதிவை என்னால் எழுத முடிந்திருந்தால், அதோடு என் பேனாவின் தாகம் கூட தணிந்துவிடகூடும். hats off கஸ்தூரி:)
ReplyDeleteஇந்த படிக் கட்டுகள் பாதம் படிவதற்கு அல்ல!
ReplyDeleteஎனறு சொன்னால் எப்படி இருக்குமோ?
அப்படித்தான் இருக்கிறது இன்றைய எழுத்தாளர்களின் நிலை!
பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" விமரசனம்
உலகம் யாவும் பரவும் வகை செய்தலில் நடு நிலை வேண்டும்!
புதுவை வேலு
இந்தப் போராட்டத்தின் வேகம்தான் என்னைப் இந்த நாவலை ஒரே நாளில் படிக்க வைத்தது.
Deleteசில கருத்துக்களை மாற்றிக்கொள்ளவும் வைத்தது.
கருத்துரிமை குடையை அடுத்தவர்களின் மீது இடிக்காமல் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் உணரவைத்தது.
ஒரு சிலரின் அரசியலுக்காக பெருமாள் முருகன் பலிகடா ஆக்கப்பட் டுள்ளார் என்பது வருந்த வேண்டிய விஷயம் !
ReplyDeleteத ம 2
அடிப்படை உணர்வுகளைத் தூண்டி ஒரு நொடியில் சக மனிதனை மிருகமாக்கி ஒரு புள்ளியில் ஒன்றிணைந்து அதை அரசியல் அறுவடை செய்துகொள்வது ஒரு கலை
Deleteபலவிசய்தில் நாம் ஏற்கனவே பார்த்ததுதான் மொழியை காப்போம் என்று சொல்லி ஈழத்தில் உறவுகளின் கொலையை பார்த்தோம்.
கோயில் மசூதி விசயம்
இப்போது இந்த விசயம்
நல்ல விசயத்திற்கு நம்மால் இவர்களை ஒன்றுதிரட்ட முடியாது என்பதே வருத்தம்.
கோவில் இடிப்பு, பஸ் எரிப்பு, கடை அடைப்பு இவற்றிற்கு மட்டும்தான் நம்மால் ஒன்றிணைய முடிகிறது.
இந்த லிஸ்டில் இப்போது எழுத்தாளனை எதிர்ப்பதும்.... புதிதாக
சிந்திக்க வைக்கும் விமர்சனம் மேலும் அறிய ஆவல். நன்றி!
ReplyDeleteஅற்புதமான நாவல் சகோதரி ஆனால் ஒரு சாரரின் மனம் புண்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள்
Deleteஎனவே அழுத்திப் பேச முடியவில்லை.
குறியீடுகளின் மூலம் மட்டுமே பேசியிருந்தால் பிரச்சனையில்லை.
பெருமாள் முருகனின் ஜாதி எனக்கு தெரியாது... மாதொரு பாகன் நாவலை படைக்கவில்லை. ( நிச்சயம் படிப்பேன் ! )
ReplyDeleteநாவலில் குறிப்பிடப்பட்ட ஜாதி அவருடையதாய் இருப்பின்...
இல்லையெனில்...
" அவர்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கலாம். எனது வாசிப்பும், மானிட குலத் தோற்றத்தையும், ஆதி வழிபாட்டு முறைகளை குறித்த அறிவும் பெருந்திரள் வாசககர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். "
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் !
உலகின் வேறு எந்த சமூகத்துடனும் ஒப்பிடமுடியாத அளவுக்கு ஜாதி மத அடுக்குகளையும் கூறுகளையும் கொண்ட நமது சமூகத்தில் எழுதும்போது ஜாக்கிரதை உணர்ச்சி அதிகம் தேவைதான்.
நன்றி
சாமானியன்
நிறய விஷயங்களை பகிர விருப்பம் திரு.சாம்ஜி ஆனால் அதற்கான வார்த்தைகளையும் குறியீடுகளையும் தேடிக்கொண்டிருகிறேன்.
Deleteவேறு என்னாத்த சொல்வது.
சின்ன சின்ன பாண்டசி விஷயங்கள் கூட இருக்கிறது. கேணிக்குள் குகை, மலைக் கல் குகை, மரத்தில் மறைவுத் தொட்டி என ...
பாவாத்தா வழிபாடு, இரண்டு வழிபாட்டுக்கும் இடையே உள்ள வித்யாசம் என நிறய நல்ல விசயங்கள் இருக்கிறது ...
இனி ஒரு பய எழுத மாட்டன் சமூக ஆய்வு புதினத்தை ...
எப்படியோ தொலைங்கப்பா என்கிற ஆயாசம் தான் வருகிறது எதிர்ப்பை பார்த்து.
இது ஒரு வாழ்வியல் முறை வழிபாட்டு முறை. ஒரு சாதிக்கானதாக மட்டும் பார்க்கவில்லை நான். தமிழ் மெய்யியல் குறித்த தேடல் உள்ளவர்களுக்கு முக்கியமான தரவு இந்த நூல்.
எனது எணணங்களின் பிரதிபலிப்பாய் உங்களின் இந்த பதில் அமைந்ததால்...
Deleteஉண்மை ! நேற்று உங்களின் இந்த பதிவை படித்ததும் எனக்கும் அயர்வுதான் தோன்றியது ! அப்புறம் நான் எழுத நினைத்ததையெல்லாம் எழுதினால்.... முதலில் நீளும்.... அத்துடன் நீங்கள் குறிப்பிட்டபடி நானும் வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்...
நேற்றே மேலும் சில தளங்களில் படித்தபோதுதான் எதிர்ப்புக்கான காரணம் புரிந்தது ! எந்த நூலையும் முழுமையாக உள்வாங்கி வாசிக்காமல் விமர்சிப்பது சரியாகாது என்றாலும்...
பாலியல் பற்றிய குறிப்புகள்தான் பிரச்சனை என்றால்... ( சில வலைப்பூக்களை படித்தபோது இதுதான் முன்னிறுத்தப்படுகிறது ! )அவர் குறிப்பிட்டவை விதிவிலக்காக உலகெங்கும் நிகழ்பவைதான் என்பதே நிதர்சனம் ! மேலும் அப்படிப்பட்ட தொடர்புகளை இலைமறை காயாய், ஏன் அப்பட்டமாகவே பேசிய படைப்புகளுக்கு தமிழில் பஞ்சமில்லை என்றே தோன்றுகிறது... நாவல்களை விடுங்கள், கோணல் பக்கங்களில் சாரு நிவேதிதா தன் சொந்த தங்கையை பற்றியே குறிப்பிட்டது ?!...
ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் குமுதம் பத்திரிக்கையில் படித்த ஒரு பக்க கதை...
தனக்கு பிள்ளை இல்லை என்பதால் படும் சித்திரவதைகளை தன் தோழியிடம் கூறி அழுவாள் ஒருத்தி. அன்றிரவு அவளை தன் குடிசையின் உள்ளே படுக்க வைத்துவிட்டு தோழிக்காரி வெளியே திண்ணையில் படுத்துக்கொள்வாள்... இரவு குடிபோதையுடன் வீடு திரும்பும் தோழியின் கணவன்...
மறுநாள் தோழி தூக்கில் தொங்குவதோடு கதை முடிவதாக ஞாபகம் ! கதையின் பெயரெல்லாம் மறந்துவிட்டாலும் " காடா விளக்கொளியில் கனகு ஒரு ஓவியமாய் தெரிந்தாள்... " என்ற வரி இன்னும் நினைவில் !
அப்போது எனக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயது இருந்திருக்கலாம் ! கதை மனதில் பதிந்ததே தவிர அதன் அர்த்தம் பல்லாண்டுகள் கழித்தே புரிந்தது !
சரி பாலியலை விடுங்கள்... அதை பற்றிய நமது பயம் (?!) உலகறிந்ததுதான் !!!
இதே தமிழ்நாட்டில்தான் " நீ வெறும் கல் ! " என சாமியை பார்த்து கர்ஜித்த பராசக்தி படமும் வெளிவந்தது... இன்று அப்படி ஒரு படத்தினை வெளியிட்டால்...
"மைலாஞ்சி" எழுதிய ரசூல் பட்ட பாடுகளை நான் சொல்ல வேண்டியதில்லை !!
எரியும் வீட்டில் பீடி பற்ற வைக்கும், எத்தை தின்றால் பித்து தெளியும் என்ற நிலையிலிருக்கும், இளம்பிஞ்சுகளின் மரணங்களில் கூட அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் சூதாட்டம்தான் இந்த நிலைக்கு காரணம் !
எழுத்தாளனின் கரங்கள் வெட்டப்படுவது அரச ஆட்சிகளிலும், சர்வாதிகாரத்திலும் மட்டுமே நிகழலாம்... உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில்...
அட போங்கப்பா ! கிரிக்கெட்டை நம்பி மீதி விளையாட்டுகளை கைவிட்டமாதிரி சினிமாவை மட்டும் வச்சிக்க்கிட்டு எழுத்தை மறந்துடுவோம்... அதுல மட்டும்தான் யாரை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம்... அதில் அம்மாவாக, அக்கா, தங்கையாக வருபவளை எப்படியும் சித்தரிக்கலாம் ! நாமும் குழந்தை குட்டிகள் சூழ தொலைக்காட்சியிலேயே " உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக... " அறிவிப்புடன் வரும் ஆபாச குத்தாட்டம் பார்ப்போம் !
நன்றி
சாமானியன்
வீரா என்றோர் எழுத்தாளர் இது விமர்சனம் சும்மா படிங்க
Deleteஒவ்வொரு நிலையில் தடைக்கல்லைப் போட்டு வரலாற்றை அழிக்க முற்படுவதற்கு இவை போன்ற நிகழ்வுகளே சான்று. உள்ளதை ஒரு எழுத்தாளன் பதியும்போது இவ்விதமான எதிர்ப்புகள் வருவது என்பது அதுவும் காலங்கடந்து வருவது என்பதானது பின்புலத்தில் ஏதோ நடக்கிறது என்பதை உணர்த்துகிறது. வரலாற்றை மறைப்பதாக எண்ணிக்கொண்டு வரலாற்றை தொலைக்கிறோம் என்பதே உண்மை.
ReplyDeleteஒரு ஆய்வின் கணமும் அது இருபுறமும் கூர்கத்தியாக கிழித்த விசயமும் வேதனைதான்.
Deleteதாங்கள் அவமானப் படுத்தப்பட்டதாக உணர்ந்து கிளர்ந்து எழுந்திருகிரார்கள் ஒரு சாரார்.
அவர்களுக்கு அப்படி ஒரு உணர்த்துதலை கொடுத்த சக்திகளின் பின்னிருந்து சிரிக்கிறான் வசீகரமாய் மனு. (தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் ஒரு சமூக அமைப்பை வெற்றிகரமாக ஏற்படுத்திவிட்டான் பார்த்தீர்களா?)
இதில் வன்முறை என்பது தவிர்க்கப் படவேண்டியது என்றாலும் தனிப்பட்ட ஒருவரின் கருத்துரிமையை விட சமூகத்தின் உணர்வுரிமைக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும். ஒரு சமுதாயத்தின் ஒரு வழக்கம் உண்மையாகவே இருந்தாலும் பிறர் அதனை கேலியாகவும் நாகரீகமற்றதாகவும் கருதப்படுவதாக இருக்குமாயின் அதை களஆய்வு செய்து வெளிப்படுத்தி இந்த சமுதாயத்திற்கு என்ன சொல்லப் போகிறார் பெ.மு
ReplyDeleteதவறு என்றே வாதிடும் விஷயம் ஒரு சாரர் அசிங்கப்படுத்தப் பட்டிருப்பதாக உணர்வதே.
Deleteஅவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்று பெ.மு யூகித்திருந்தால் இந்த சிக்கல் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
மேலும்
இதில் அந்த சாதியினர் தவிர அவர்களின் பின்புலத்தில் கோரப் பற்களுடன் ஒரு சாத்தான் ஒளிந்திருப்பதாக இலக்கியவாதிகள் சொல்கின்றனர்
வராலாற்றைத் திரும்பிப் பார்க்கும் பொழுது திடுக்கிடும் அச்சம் ஒன்று சூழ்கிறது. சாத்தானை உங்களால் இனம் காண முடிகிறதா ஐயா?
நேர்மையான அலசல்.
ReplyDeleteஎன்னத்த நேர்மையான அலசல்..
Deleteகலக்கீருக்கான் பாருங்க வீரா.
இந்த நாவலை வாசித்துவிட்டு,மீண்டும் உங்களின் இந்த பதிவை படித்து பார்க்கிறேன்
ReplyDeleteவாசிங்க சொக்கன் உங்கள் கருத்துக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
Deleteஇதற்கு முன்னர் ஒரு கருத்துப் போட்டேன்.
ReplyDeleteவரவில்லையா மது சார்?
முகநூலில் இருந்து இணைப்பு எடுத்து நானும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்....
வாசித்து முடித்தால் தெரியும்... பிரச்சினைக்கான காரணம்....
வரல .. அய்யா
Deleteபடிச்சுட்டீங்கள ?
அவர் எழுதியது எனக்குத் தவறாகப் படவிலலை. மனிதகுலம் முழுவதுமே அப்படியான வரலாறுகளின் எச்சம்தான். ராகுல்ஜியின் “வால்காவிலிருந்து கங்கைவரை“ படித்தால் புரியும். அப்புறம் மகாபாரதக் கதையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மாதொரு பாகன் மட்டும் கசக்குதோ? (பாண்டவர்கள் யாரும் பாண்டுவிற்குப் பிறந்தவர்கள் இல்லை..) இப்போது ஓடிக்கொண்டிருக்கும் விஜய்டிவி கதைக்கு எதிராக இவர்கள் கலகம் செய்வார்களா? எனக்குத் தெரிந்து பெருமாள் முருகன் அவர்களின் தவறான புரிதல் அவரது படைப்பு எதிலும் இல்லை. “எந்த அமைப்பிலும் சாராதிருத்தல் நல்லது” எனும் தவறான புரிதல்தான் இந்த நிலைக்குக் காரணம் என நினைக்கிறேன். அவர் மீண்டும் எழுவார். எழுதுவார், எழுத வேண்டும். அவருக்கான தங்களின் வலைப்பங்களிப்பு சிறப்பானது வாழ்த்துகள் மது.
ReplyDeleteசெலபஸ் கவர் பண்ணுவதில் ஆசிரியப் பேரினம் தனது சக்தியெல்லாம் இழந்துவிட்டு
Deleteபள்ளியின் நூலகப் புத்தங்களை பத்திரமாக பீரோவை திறக்காமலே பாதுகாக்கும் புள்ளியில் துவங்கிறது சமூகத்தின் சரிவு..
வணக்கம் மது.. உங்களோட விவாதம் செய்ய வரவில்லை. ஒரு சில விடயங்களை சொல்லிவிட்டுப் போகலாம்னு வந்தேன்..
ReplyDeleteதொடருங்கள்..
முதல் பின்னூட்டதில்..கீதா சொல்கிறார்..
1) மஹா பாரதத்தை போற்றுகிறீர்கள் என்று..
மகாபாரதம் குப்பை என்றால் இதையும் குப்பை என்று ஏற்றுக்கொள்வார் போலிருக்கு. ஆமாம் மகா பாரதம் ஒரு குப்பைதான்! இப்போ பெ முருகன் படைப்பு குப்பைனு இவர் ஒத்துக்கொண்டதாக எடுத்துக்குவோம்.
-------------------------
பெரியார் இந்து மதத்தை மட்டும் அதிகமாக விமர்சித்தற்கு காரணம், அவர் பிறப்பால் ஹிந்து என்பதால்..
அதேபோல் பாலசந்தர் பிராமணர்களை இஷ்டத்துக்கு விமர்சித்து படங்கள் எடுத்துள்ளார். அவர் பிராமணர் என்பதால் அவ்வுரிமை அவருக்கு கிடைத்தது.. அதேபோல் ஜானகிராமன் அலங்காரம், அம்மணி, ரங்கமணினு பாப்பாத்திகளைத்தான் அசிங்கமாகக் காட்டினார்.. திராவிடப் பெண்மணிகளை அல்ல!
கருப்பு சிவப்பு வெளுப்புனு சுஜாதா கதை எழுதுறென்னு நாடார் சமூகத்தை இழிவுபடித்தி எழுதியபோது அவர் கதை அச்சமூகத்தால் நிறுத்தப்பட்டது. அது குமுதத்திலோ விகடனிலோ வந்ததால் அவர்கள் இம்மீடியட்டாக நிறுத்தினார்கள். பெ முருகன் எழுதியது அப்படி வெகுஜன பத்திரிக்கையில் வந்து இருந்தால் அவர் எழுதிபோதே அதை நிறுத்தி இருப்பார்கள். இவர் எழுதிய புத்தகம் யாரும் படிக்கவில்லை என்பதால்தான் இவ்வளவு தாமதம்..இது அனைவருக்கும் தெரியுமா என்ன்னு தெரியலை..
கொஞ்ச வருடம் முன்னால், நிசபதம் மணிகண்டன், சக்கிலிப் பையன் என்று ஒரு கதை/கட்டுரை/புனைவு எழுதினார். இவர் அந்த சாதியச் சேர்ந்தவரல்ல. ஏதோ தாழ்த்தப்பட்டவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்தார்.. அதில் அவர் சாதித்தது அந்த சாதியினரை இன்னும் இழிவு படுத்தியது மட்டுமே..இதுபோல் இஷ்டத்துக்கு சாதிச்சாயம் போட்டு பதிவெழுதாத என்று நான் ஒரு எதிர் பதிவும் எழுதினேன்.
இப்போ பெ முருகணுடைய நிலையும் மணிகண்டன் நிலையும் ஒன்றாகவே உள்ளது. அதனால்தானோ என்னவோ, சாரு, ஜெ மோ போலல்லாமல் மணிகண்டன் பெ முருகனுக்கு வக்காலத்து வாங்குவதுபோல் நடிக்கிறார் பாவம்.
சாதியை ஒழிக்கணும், நம்முடைய கலாச்சாரத்தில் உள்ள மடமைகளை தூக்கி எறியணும்னா என்ன செய்யணும்? இலக்கியம் எழுதுறவங்க சாதி அடையாளத்தை சொல்லாமல் எழுதத் தெரியணும். பெ மு ஒரு பேராசிரியர். சாதி அடையாளத் தவிர்க்கணும்னு இந்தாளுக்குத் தெரியாதா என்ன? அந்த அளவுக்கு ஒரு மடையனா இந்த மேதாவி?? அதுவும் ஒரு சாதியினரை இழிவுபடுத்துவதுபோல் எழுதும்போது சாதி அடையாளத்தை தவிர்க்கணும்னு தெரியாத ஆளா என்ன இவரு??
இலக்கியம் எழுதுறேன்னு ஜாதிச்சாயம் பூசி தப்பு செய்தது பெ முருகன்..தப்பு செஞிட்டு இப்போ என்னவோ ஹிந்துத்தவா சண்டைக்கு வரான், இந்த சாதிக்காரன் சண்டைக்கு வர்ரான்னா??
உன் சாதியில் உள்ள இழிநிலைகளை எழுது.. இன்னொரு சாதிக்காரனை எழுதும்போது உனக்கு பிரச்சினை வரும்னு தெரியலைனா உனக்கு ஆறாவது அறிவு இல்லைனுதான் அர்த்தம்..
He should have known better when he uses "caste labels" to the characters in his story.
Casteism still EXISTS. >80% people marrying in their own community. if P. Murgan had written this story when caste were a "history", people would have taken this issue casually. When the caste identity is still existing in our tamil community how can he write something like this is the BIG question..
Even in US, if a white guy writes racial slur like "nigger", he will have to pay a price.
நேரடியாக குறிப்பிட்டது தவறுதான் இன்றைய சமூகத்தில், சூழலில், எதிர்பின் விளைவு என்னவென்று உணராத எதிர்ப்பாளர்கள், என இருவருமே தவறுதான் செய்கின்றனர்..
Deleteஇதை காலம்தான் உணர்த்த வேண்டும்
பாக்கலாம்.
இலக்கிய வராலாற்றில் இது ஒரு முக்கியமான வராலாற்று நிகழ்வு ...
Deleteஇதன் பின்னர் சமூக ஆய்வுகள் குறைந்துபோகலாம் அல்லது சொல்லப்படாமல் புதைந்து போகலாம்.
இது இறுதியில் பின்னிருந்து இயக்கும் கரங்களுக்கே வெற்றி. கண்முன்னால் பலியான எழுத்தாளனுக்கோ, போராட்டத்தை வெற்றி என்று கருதிக்கொண்டிருக்கும் போராட்டவாதிகளுக்கோ இதனால் பெரும் நட்டம் இல்லை.
மேலும் இதன் ஆங்கிலப் பதிப்புத்தான் இத்துணை எதிப்புக்கும் காரணம் என்று ஒரு சாரர் பதிவிடுவதையும் கவனித்திருப்பீர்கள்.
அப்போ இது வெகு கவனமாக திட்டமிட்டு தூண்டப்பட்ட ஒரு எதிர்ப்பு என்றே கருதுகிறேன்.
பின்னால் உள்ள சூட்சும கரங்கள் உங்கள் கண்ணுக்கு புலப்படாமல் போயிருக்கலாம்.
இது குறித்து அழுத்தி பேச முடியாதவண்ணம் நண்பர்களின் பின்னூட்டம் இருக்கிறது. (அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நானும் காத்திருக்கிறேன்).
மது சார் எது எப்படியோ, இவ்வருடம் பெஸ்ட் செல்லர் மாதொருபாகனும் அர்த்தநாரியும் ஆலவாயனும் தான்...
ReplyDeleteவருண் -
நீங்கள் குறிப்பிடுவது போல் பத்திரிகையில் தொடராக வெளிவந்திருந்தால் அப்போதே கண்டனம் எழுதிருக்கலாம் ஆனால் நிறுத்தபட்டிருக்குமா என்றால் அந்த பிரச்சனைக்குரிய வரிகள் நாவலின் இறுதி கட்டத்திலேயே வருவதாக கூறுகிறார்கள். அதனால் கதை நிறுத்தபடாமல் முழுமை அடைந்திருக்க சாத்தியம் அதிகம் என்றே நினைகிறேன்...
வருக சீனு
Deleteநம்மவர்களின் வாசிப்பு விரிவடைந்தால் சரி..
நந்தவனமும் நொந்தகுமாரனும் ரியாக்சன்தான் இப்போது
விமர்சனம் தேவைதான் அதற்காக வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது வருண். அவரவரும் அவரவர் சாதியை-மதத்தைப் பற்றி மட்டுமே ஆராய்ச்சி செய்யலாம், எழுதலாம் மற்ற சாதி-மதங்களைப் பற்றி எழுதக்கூடாது என்பது என்ன நியாயம் என்று புரியவில்லை. சரி, நான் பிறந்த சாதி-மதம் உட்பட எந்தச்சாதி-மதத்தையும் ஏற்காத என்னைப் போன்றவர் பெருமாள் முருகன் அப்படியானால் நாங்கள் எந்தச் சாதிமதத்தைப் பற்றியுமே எழுதக் கூடாதா? நல்லா இருக்கிறதே உங்கள் நியாயம்! தங்கள் சொற்களிலும் அதைச் சொன்ன பொருளிலும் சற்றும் நியாயமில்லை நண்பரே.
ReplyDeleteநல்லவேளை சில பின்னூட்டங்களை வெளியிடவில்லை.
Deleteகற்பனையாக இருந்தாலும் உண்மையில் ஒன்றோடொன்று இணைந்து இருக்கும் சாதிப்பெயர், ஊரின் பெயர், தெய்வத்தின் பெயர் என்று எல்லாம் உபயோகித்தது தவறு. இதில் கள ஆய்வு பற்றிய வரிகள் வேறு முன்னுரையில...எழுத்துச் சுதந்திரமும், பேச்சுச் சுதந்திரமும் இருந்தாலும் அவை ஒருவரைப் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
ReplyDelete// எனது வாசிப்பும், மானிட குலத் தோற்றத்தையும், ஆதி வழிபாட்டு முறைகளை குறித்த அறிவும் பெருந்திரள் வாசககர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். // உண்மைதான் அண்ணா..பரந்த வாசிப்பு இந்த விசயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு சிந்திக்க வைக்கும்.
நீங்கள் சொல்வது போல நம் சமூகத்தின் நிலைப்பாட்டை அறிந்து கவனமாக இருந்திருக்கலாம் எழுத்தாளர்..
எப்படியோ போராட்டம் காரணமாக பலர் வாசிக்கின்றனர்..
வருக சங்கத்தமிழ் கவிஞரே..
Deleteகருத்துக்கு நன்றி..
கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் பெஸ்ட் செல்லர் ஆகியிருக்காது ஒரு நல்ல நாவலாக அது பாட்டுக்கு அமைத்யாக இருந்திருக்கும்
ஏறுவெயில் இன்னமும் அமைதியாக அடுக்கினில் உறங்க திரைப்பார்த்தே இந்த நாவலை நான் படித்தது அப்படி என்ன கீது என்று பார்க்கும் ஆவலில்தான் ..
***Muthu Nilavan20/1/15
ReplyDeleteவிமர்சனம் தேவைதான் அதற்காக வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது வருண். அவரவரும் அவரவர் சாதியை-மதத்தைப் பற்றி மட்டுமே ஆராய்ச்சி செய்யலாம், எழுதலாம் மற்ற சாதி-மதங்களைப் பற்றி எழுதக்கூடாது என்பது என்ன நியாயம் என்று புரியவில்லை. சரி, நான் பிறந்த சாதி-மதம் உட்பட எந்தச்சாதி-மதத்தையும் ஏற்காத என்னைப் போன்றவர் பெருமாள் முருகன் அப்படியானால் நாங்கள் எந்தச் சாதிமதத்தைப் பற்றியுமே எழுதக் கூடாதா? நல்லா இருக்கிறதே உங்கள் நியாயம்! தங்கள் சொற்களிலும் அதைச் சொன்ன பொருளிலும் சற்றும் நியாயமில்லை நண்பரே.***
ஐயா!
நீங்களும் நானும் எதிலுமே எதிரும் புதிரும்தான். இந்தக் கருத்திலும்தான்.
நீங்க பண்புடன் எழுதுபவர். நான் பண்பற்று எழுதுபவன்! நீங்கள் "கலா ரசிகர்" நான் ஒரு காட்டுமிராண்டி!
உங்களுக்கு பெருமாள் முருகன் சாதிச்சாயம் பூசுவது சரி என்று தோன்றுகிறது. எனக்கு "சாதிச் சாயம்" பிடிக்கவில்லை. அதைத் தவிர்த்து இருக்கணும்னு நம்புறேன்.
உங்களுக்கு நான் பேசுவது அநியாயமாகத்தான் தோன்றும். இதில் வியக்க ஒண்ணுமில்லை.
ஆனால் சுஜாதா கதையை நிறுத்திய நாடார் சமூகத்துக்கு அவர்கள் செய்தது அநியாயமாக தோணவில்லையே என்ன செய்வது? அதுவும் புனைவுதான்.
நீங்க நாடார் சமூகத்துக்கு, சுஜாதா எழுதியதில் தவறில்லை, அவர்கள் செய்தது அநியாயம்"னு எனக்கு சொல்கிற அறிவுரையைச் சொல்லி ஒரு பதிவு எழுதினால் என்ன? நம்புங்க! அப்படி நீங்க செய்தால், ஒரு வேளை நீங்க சொல்வ்வதுதான் அநியாயம்னு அவர்கள் உங்களை கை காட்ட வாய்ப்பிருக்கிறது. செய்து பாருங்கள்! பிறகு பெ முருகன் விவகாரத்துக்கு வருவோம். சரியா? நன்றி. :)
****சரி, நான் பிறந்த சாதி-மதம் உட்பட எந்தச்சாதி-மதத்தையும் ஏற்காத என்னைப் போன்றவர் பெருமாள் முருகன் அப்படியானால் நாங்கள் எந்தச் சாதிமதத்தைப் பற்றியுமே எழுதக் கூடாதா?****
ReplyDeleteஐயா!
நீங்க எழுதுங்க! உண்மையைத்தான் எழுதுறேன்னு சொல்லுங்க! சாதிச்சமயத்தில் நம்பிக்கை இல்லைனா இன்னும் எதுக்கு உங்க கதைகளில் வரும் சுப்பன் குப்பனுக்கு பின்னால சாதி நிக்கிது???
உங்களுக்கு நம்பிக்கை இல்லாத ஒரு (சாதி) அடைமொழி என்னத்துக்கு கொடுக்குறீங்கனு தெரியலை?
வருண் ஐயர்
வருண் அம்பலம்
வருண் கவுண்டர்
வருண் முதலியார்னு னு ஒருவர் ப்ளாக்ர் ப்ரஃபைல்ல கொடுப்பது போலிருக்கு நீங்கள் பூசும் ச்சாதிச்சாயம். நீங்க உருவாக்கும் குப்பன் சுப்பன் மேலே உங்களுக்கு "நம்பிக்கை இல்லாத" சாதியை "கட்டி" அழுறீங்கனு தெரியலை???
படித்தவுடன், “நான் சாதியைக் கட்டி அழுகிறேனா? அழுகிறேனா?” என்று சந்திரமுகி போலக் கத்துவேன் என்று நினைத்தீர்கள் போல. போட்டுவாங்குவதற்கு நான் ஆளல்ல நண்பா.. “நீங்க பண்புடன் எழுதுபவர். நான் பண்பற்று எழுதுபவன்! நீங்கள் "கலா ரசிகர்" நான் ஒரு காட்டுமிராண்டி!“ - (அதுயாருங்க கலா?) இப்படியான கருத்தை நான் முன்வைக்கவில்லை. நீங்கள் வைப்பதும் சரியல்ல என்பதே என் கருத்து. தொடர்ந்து இங்கேயே எழுதினால் அது மதுவின் பதிவைவிட நீளமாகிவிடும். தோட்டத்தில் பாதி கிணறாக இருப்பதும் சரியாக இருக்காது. நீங்களும் நானும் எல்லாவற்றிலும் வேறுபடவிலலை நண்பா, கோபப் படுவதில் இணைந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன் எதில் என்பதில் பிரச்சினை தனியே எழுதலாம்.
ReplyDeleteநிலவன் ஐயா!
Deleteஒரு பக்கம் உங்க தளத்தில் ஷங்கரால் காயம்பட்ட திருநங்கைகளுக்கு ஆதரவு தருறீங்க. அதாவது ஷங்கரின் கருத்துச் சுதந்திரத்துக்கு வரம்பு இருக்குணு சொல்றீங்க!
இன்னொரு பக்கம் பெருமாள் முருகன், பல தாய்களை கண்கலங்க வைத்துள்ளார். ஒரு சிலர் பின்னூட்டங்களில் வந்து தானும் திருச்செங்கோடுதான், அம்மா அப்பாவுக்கு பல வருடங்கள் சென்றுதான் குழந்தை பிறந்தது .. இப்படி ஒரு கதை எழுதி என் மனதை, குடும்ப வாழ்க்கையை பாதிக்கப்பட வச்சுட்டாரு இந்தாளுனு சொல்றாங்க..
நீங்கள், அப்படி கண்கலங்க சொல்லும் பெண்களை/தாய்களைக் கண்டுக்காமல்.. அவர்கள் உணர்வுகளை குப்பையில் போடணும் என்பதுபோல் பெ முருகனின் "அ"நியாய கருத்துச் சுதந்திரத்துக்கு வக்காலத்து வாங்குறீங்க.
கருத்துச் சுதந்திரம் சம்மந்தமான உங்கள் நிலைப்பாடு வேடிக்கையாக இருக்கிறது. அதாவது நீங்கள் பெ முருகனுக்கு ஆதரவு தந்தால் ஷங்கருக்கும் ஆதரவு தரணும். கருத்துச் சுதந்திரம் ரெண்டு பேருக்கும்தான் இருக்கு..இல்லையா???
அல்லது
பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் மனவேதனைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், பெ முருகனின் புனைவால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.
I dont see any consistency in your stand. கலைஞர்கள் ஷங்கர், பெ முருகன் இருவர் மேலே உள்ள உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை வைத்து உங்க நிலைப்பாடு மாறுபடுகிறது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
தயவு செய்து நாகரிகமாக எழுதப்பட்ட இப்பின்னூட்டத்திற்கு விளக்கம் கொடுக்கவும்.
நன்றி நிலவன் ஐயா!
//உன் சாதியில் உள்ள இழிநிலைகளை எழுது.. இன்னொரு சாதிக்காரனை எழுதும்போது உனக்கு பிரச்சினை வரும்னு தெரியலைனா உனக்கு ஆறாவது அறிவு இல்லைனுதான் அர்த்தம்..//
ReplyDeleteComments are free; but facts are sacred? Have you read it anywhere?
You have assumed Perumal Murugan is a non-Gounder who wrote about Gounders. Wrong! He is a Gounder; that too, from the self-same town Thiruchengodu. He was born and brought up in a village at the outskirts of the town. He knew the local culture and lives of his caste people like the back of his hand. Nevertheless, during his research for his impugned novel, he came across many matters and things, which surprised him as being new. Read the introduction to his novel. Therefore, don’t assume that he has written about another caste people.
You are wrong to conclude that a writer should write only on his own caste people. Writers generally write about matters they are quite familiar with; and therefore, if it is a novel, they take characters and background from the very places they have lived for years. Apart from places, they take the same people with whom they lived to create fictional characters. Only then, they feel they can pour out their hearts in their work as each and every incident and scene therein they can relate to. For e.g. Dalit writers of TN who write about dalits. Perumul Murugan relates to each word in the novel. Hence, the novel soars as a great classic. However, a greater writer has the ability to transcend beyond his known environs and people. There is no control over literary imagination. What is best for them, they choose. Not you!
Novels are written not for the people who became fictionalised therein, but for lovers of literature who may be anyone from anywhere. All of us should come to the novel as readers of literature only, not as Gounders, Thevars and Nadars.
Nadars stopping Sujatha, Gounders stopping Murugan etc. - these show the kind of culture that is prevalent in TN i.e. false pride of caste and places. Caste per se is not the villain; but the false pride attached to it makes everyone the villain of the society. You are born in a caste: it is an accident. What is there in it to feel proud of?
If one is proud of his caste, it is obvious that one has nothing else to be proud of, so one makes up the void with the false pride. This has been analysed well by many sociologists in studying caste clashes of TN. Imaginary self-glorification of caste fills a void in them, according to sociologists who advise government and others to develop the areas such empty people live so that their young people get gainful employment and lead a life of dignity which will create, as a natural corollary, an evolved culture. Culture includes reading literature as literature also. If you go to literature to search for clues to create caste clashes, or, to boost caste vanity, and, in both cases, you are not a cultured being. You are caste pig.
If a local custom in UK village is the base for a novel in which the locals are fictionalised to show the custom as bad or worse viewed from current society, no one is going to make a scene there. We are not developed as fully cultured people. This is a fact you should boldly face.
***
sir, glad to see u here.
DeleteWhere on earth you have been so far?
This kind of matured approach cannot be expected from common folks.
Folks with very little reading, very little exposure to the past ...
Thank you very much for the points u ve mentioned ...
//If you go to literature to search for clues to create caste clashes, or, to boost caste vanity, and, in both cases, you are not a cultured being.// the pronoun you could have been changed to 'someone'... it sounds better that way..
thank u very much.
//You are caste pig. //
Deletemakes hell a lot of echos in my ear...
thank god i am not one...
//Comments are free; but facts are sacred?//
Deleteமில்லியன் டாலர் பதம்..
நன்றி
மது தோழரே!, உங்களின் இந்தப் பதிவை இப்போது நாங்கள் வாசிக்க வில்லை. காரணம் நாங்களும் மாதொருபாகன் வாசித்துக் கொண்டிருக்கின்றோம். விமர்சனங்கள் எதையுமே வாசிக்கவில்லை இப்போது. நாங்களும் வாசித்துவிட்டுக் கருத்திட்ட பிறகு தங்கள் விமர்சனம், பிறருடைய விமர்சனம் எல்லாம் வாசிக்க வேண்டும் என்றிருப்பதால்....ஓகேயா? தவறாக நினைக்க வேண்டாம்...தோழரே!
ReplyDeleteபடிங்க மெதுவா ... அப்புறம் சொல்லுங்க
Delete*****ஓரிடத்தில் சாணார் குழந்தையை தத்தெடுக்கலாம் என்று கூட காளி பேசுகிறான். சொந்த சாதிக்காரன் எவன் எதிர்ப்பான் பார்ப்போம் என சவாலும் விடுகிறான். அப்போது அவன் அந்த சாணாரின் சாராயக் கடையில் குடித்துக் கொண்டிருந்தான் என்றாலும் இந்த முரண்பட்ட நிலை சாதி மேலாதிக்கத்தை சற்றே அசைத்து பார்க்கிறது.****
ReplyDeleteYou are missing the point here, "kaavyaa aka kulasekaran or whatever". He is insulting Nadars too! "Chaanaar" is a "slur for Nadars. They dont want to be clled like that. They dont want to be "reminded" of that either. That was the main reasonSujatha novel was stopped.
Pe Murugan is not helping anybody. He makes the situation worse by reminding the "ugly past"! He is stirring up the "casteism" and insulting some castes as inferior. NOBODY wants to THINK they are INFERIOR to anybody. Nobody is INFERIOR to anybody. Today Nadars and Gounders are friends. They dont think one is superior over other. Now he is digging out the "past" and shows one community were untouchables. I am saying he is insulting Nadars!
DEFEND my argument, sensibly, Kaavyaa!
I am here waiting.
*** Therefore, don’t assume that he has written about another caste people.***
ReplyDeleteHe DID write about other castes and he has shown them those were "untouchables" and "inferior". He DID write "slurs" about other castes!
DO YOU UNDERSTAND??
this argument is going nowhere..
DeleteThat is wat i perceive...
k..
The slurs are to be read and understood in elevated plain.. i hope..
if someone doesn't like a work they can simple forget it and move with their life..
these kind of protests boosts the sales of the book!
Thank you Varunji
நண்பரே! அருமை! எங்களுக்கும் சித்தப்பா பாத்திரம் ரசித்தோம்....அவரின் முற்போக்குக் கொள்கைகள்...வாசனை சோப், குடுமி களைதல்....அவரது இந்தப் பேச்சுகள் காளியையும் சிந்திர்க்க வைத்தல்....
ReplyDeleteஆசிரியரின் வாழ்வியல் விவரணம்..தொண்டுபட்டு, மலையின் ரகசிய இடங்கள் வர்ணனை, விவசாயம், பொன்னாளின் பாட்டி ஒருவர் சொல்லும் கதை பிரபு வை தாத்தா ஏமாற்றி குளத்தில் கல் எரிதல்...அந்த ஏமாற்று சரியா தவறல்லவா என்று பொன்னால் சிந்தித்தல்... இப்படிப் பல சொல்லிச் செல்லலாம்..நம்மையும் அவர்களுடன் வாழ வைத்திருப்பது...
எல்லா கதாபாத்திரங்களையும் விட....காளியும், பொன்னாளும் மனதில் நிற்கின்றார்கள்...அவர்கள் படும் வேதனைகள்...
அவர்களது அன்பான வாழ்க்கை...
அந்த அன்பான வாழ்க்கை ஒடியும் போதுதான் மனது வேதனித்து விட்டது.. ஒரு இலக்கியவாதியின் யதார்த்தமான படைப்பாக இருந்தாலும், அது தவறு என்று சொல்வதற்கில்லை என்றாலும்....ஒரு வேளை கதாபாத்திரங்களோடு ஒன்றிப் போவதினாலோ என்னவோ தெரியவில்லை இறுதியில் மனது வேதனை...அவர் சற்று வேறு விதமாக முடித்திருக்கலாமோ என்றும் தோன்றியது....என்னவோ உண்மை...
தேவையற்ற எதிர்ப்புகள் சர்ச்சைகள், ஒரு நல்ல எழுத்தாளரை முடக்கிவிட்டது.
அதன் தொடர்பாகங்கள் முடக்கப்பட்டு விட்டன ஆசிரியரால்...மனம் மிகவும் வேதனை அடைந்தது. இதைக் குறித்து ஒரு பதிவு உண்டு...ஏனென்றால் இந்த பதிவில் பல விட்டுப் போயின....நாங்கள் இருவரும் எழுதியதால் பெரிதாகி...பல விட்டுப் போயின... ..என்பதால் அதைச் சொல்ல வேண்டும்...ஒரு இடுகை உண்டு..
..மீண்டும் பெருமாள் முருகன் வரவேண்டும். எழுத வேண்டும். எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது...
பெருமதிப்பிற்குரிய அய்யாவிற்கு வணக்கம்,
Deleteமுழுவதும் படித்துவிட்டீர்கள் என்பது தெரிகிறது நான் ரசித்த விசயங்களை நீங்களும் ரசித்திருப்பது தெரிகிறது..
மிக முக்கியமான விசயம் என்னவென்றால் நேரிடையான குறிப்புகளே இதை தவிர்த்திருந்தால் ..
1. நாவல் பல்கலைகழக நூலகங்களில் தூங்கிப் போயிருக்கும்.
2. இந்த அளவு எதிர்ப்பும் (கேலிக் கூத்து என்னவென்றால் எந்தப் பக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று போராடினார்களோ அந்தப் பக்கத்தை லட்சக் கணக்கில் பிரதி எடுத்துப் பரப்பியது போராட்டக்காரர்களே) அதன் விளைவாக ஒரு வெடிப்பு விற்பனையும் சாத்தியம் ஆகியிருக்காது.
விநோதமாக அடுத்து வரும் படைப்புகளும் இதேமாதிரி நேரடி குறியீடுகளுடன் வந்தால் வியப்பேதும் இருக்காது.
பார்ப்போம் தோழர்
ஆனந்த விகடன் கட்டுரை ஒன்றும் அவரை எழுத வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறது ... வருவார் என்றே நம்புகிறேன்.
இது ஒரு வெற்றி இலக்கிய பார்முலாவாக ஆகாமல் இருந்தால் சரிதான்.
Deleteமது சார்
ReplyDeleteமாதொரு பாகன் இணைப்பு கொடுத்திருந்தீர்கள். வாசித்தேன் . நல்லதொரு படைப்பு. ஆனால் பொதுவாக சாதி , மதம், அரசியல் தொட்டு எழுதும்போது நாம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் . ஏனென்றால் மூன்றிலும் பிரியர்களை விட வெறியர்கள் அதிகம். சாதி... தொட்டுவிட்டால் சுட்டுவிடும் தீ. நாம் இந்தத் தீவிரமான உணர்வுகளைக் கடக்க இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும் . அதுவரை பொறுக்க வேண்டும் .