25/01/2015 வீதி கூட்டத்திற்காக சில சிறுகதைத் தலைப்புகள்
( கடந்த மாதத்தில் நான் படித்த சிறுகதைகளின் பட்டியல்)
dropbox link
வ.எண் நாள் இதழ் தலைப்பு எழுத்தாளர் பேசுபொருள் கருத்து
( கடந்த மாதத்தில் நான் படித்த சிறுகதைகளின் பட்டியல்)
dropbox link
வ.எண் நாள் இதழ் தலைப்பு எழுத்தாளர் பேசுபொருள் கருத்து
1 25/12/2015 ஆனந்த விகடன் குதிரைக்காரன் குறிப்புகள் லெக்ஷ்மி
சரவணக்குமார் ஒரு ஜாக்கிக்கும் அவனது
குதிரைக்கும் இருக்கும் பிணைப்பை சொல்லும் கதை. அஷோக் என்கிற ஜாக்கி ப்ளூ மவுண்டன்
என்கிற குதிரை ஆஷா என்கிற காதலி என சுழலும் கதை "அருமை,
சி பிஸ்கட் என்கிற ஆங்கிலப் படத்தை நினைவூட்டினாலும் நல்ல கதை."
2 ஜனவரி 2015 சினேகிதி சுத்தம் தவமணி கோவிந்த ராஜன் சுமித்ரா குழந்தைகள் வீட்டை சுத்தமாக வைக்க விடுவதில்லையே என்கிற
ஏக்கத்தில் நெடுநாள்தோழி ரோகினியை சந்திக்கிறாள். அவள் வீடு பளிச். கலைக்க கிறுக்க
பிள்ளையில்லையே என்கிறாள் அவள். நல்ல
முயற்சி
3 ஜனவரி 2015 உயிர்மை உலகின் கண்கள் எஸ்.ரா "அசாரிய
மலைகுகை ஓவியங்கள், காட்டிலாக்கா அதிகாரியின் மகன், ஐரோப்பாவில் ஓவியம் படித்தவன் ஆனால்
ஒரு ஓவியத்தினை பிரதியெடுக்க முடியவில்லை. பகுசேனன் வரைந்த ஓவியம்." நல்ல கதை. பிடித்தது
4 ஜனவரி 2015 உயிர்மை வள்ளித் திருமணம் லெக்ஷ்மி சரவணக்குமார் "நாடக நடிகர்களின் பால் வாழ்க்கை, உடைமாற்றும்
அறையின் கீற்றை பிரித்துப் பார்க்கும் சமூகம்." "அதீத பாலுறவு புனைவு, நடப்பது
தான் எனினும் மரிய பூசோ கூட வெருண்டுபோவார்"
5 14/01/2015 ஆனந்த விகடன் கொஞ்சம் அதிகம் இனிப்பு எஸ்.ரா "மனிதம், பேசும்
கதை, அருள்செல்வம், சியாமளா,
கண்ணையா என்கிற ரியல் எஸ்டேட் ப்ரோக்கர், ஸ்டீபன்,
ஷெட்டி என்கிற சிறுபாத்திரங்கள்" நம்பர் ஒன்
6 18/01/2015 கல்கி திரவியம்
சபீதா வெளிநாடு
செல்ல திட்டமிட்டு அதன் விளைவாக தனது மகள் தன்னை அந்நியன் மாதிரிப் பார்க்கும்
நிலையை தவிர்க்க திரைகடல் ஓடும் முடிவை கைவிடும் தையல் கலைஞன். நல்ல முயற்சி
7 18/01/2015 ராணி பெண்மை இரா. நவநீதகிருஷ்னன் "மனைவி இறந்த இரண்டாம் ஆண்டு தனது மகள் வீட்டிற்கு போகும் மாமனார்
மருகனால் எள்ளப்பட, அவர் தனது ஊழ் வினையை
நினைக்கிறார்" பொயடிக் ஜஸ்டிஸ்?
8 19/01/2015 குங்குமம் சொத்து நா.கோகிலன் ஒரே இடத்தை வேறுவேறு காலகட்டத்தில் விற்ற
இருவர் குறித்த கதை. "வறுமைக்கு
விற்பவர்கள், செழுமைக்கு விற்பவர்கள் "
9 19/01/2015 குங்குமம் இடக்கை கே.எம். சம்சுதீன் மளிகைக் கடைகாரர் ஒரு கவரை இடக்கையால் தருவதைப் பார்த்து
அதிரும் வாடிக்கையாளன் எப்படி தெளிகிறான். நல்ல
முயற்சி
10 19/01/2015 குங்குமம் ஜோசியம் எஸ். ராமன் "கல்யாணிக்கு கல்யாணம். பர்சேஸ்
டிபார்ட்மென்ட் வாஸ்த்து, லிப்ட் இல்லாத மூன்று மாடிக்
கட்டிடம்"
11 19/01/2015 குங்குமம் சின்னவீடு சுபமி "சின்ன்வீடே சிக்கனம், விருந்தினர் வேண்டாம் என்று சொல்லவைக்கும் விலைவாசி என்று சொல்லும்
மனைவி" இன்றைய பெருவாரி மனநிலை
12 19/01/2015 குமுதம் எல்லா மழையும் நின்றே தீரும் வைரமுத்து மீனாவை நேசிக்கும் ராஜேந்திரன் செய்யும் ஒரு தவறு
பல ஆண்டுகள் கழித்து மறக்கப்பட்டு மன்னிக்கப் படுகிறது. கணவனே காபி சாப்பிட
அழைக்கிறான்! கால ஓட்டத்தில் சின்னத் சின்ன
தவறையும் மன்னிக்கும் சில பெண்கள்.
13 19/01/2015 குமுதம் தெளிவு ஜெயந்தி பத்ரி "டிரைவர் பாபு பிரசவத்திற்கு பணம் தராத
முதலாளியின் மகனைக் கடத்தும் நேரத்தில் அவனது மனைவியின் பிரசவ செலவிற்கு பணம்
தந்து மருத்துவ மனைக்கு அனுப்பும் முதலாளி, தெளிகிறான்
" திடீர்மாற்றம்
14 19/01/2015 குமுதம் நல்லா பேசுங்க எஸ்.குமாரகிருஷ்ணன் வகுப்பறை புதுமை பழைய
மேட்டர்
15 19/01/2015 குமுதம் அவளோன்று நினைத்தால் மாலதி
ரகோத்தமன் நகை
16 19/01/2015 குமுதம் எத்தன் வி.சிவாஜி ஆட்டோ டிரைவர் பயணியை தனியாக அழைத்துப் பொய்
மிரட்ட ஒரு திருப்பம் நிறைய பாத்தாச்சு
17 25/01/2015 ராணி தொப்புள்
கொடி இள. அழகிரி குடியரசு தினத்தில் மட்டம் போட நினைக்கும் பேரன் வயோதிக தாத்தாவின்
ஈர்ப்பை பார்த்து திருந்தும் கதை நல்ல
முயற்சி
18 26/01/2015 குமுதம் ஹீரோயின் எஸ். மகாதேவன் ஹாசினி வாய்ப்பு மறுக்கும் இயக்குனர் - விஷம் -
அழைக்கும் இயக்குனர் ஐ லவ் யூ சொல்கிறான் மோசம்
19 26/01/2015 குமுதம் நம்ம ஸ்கூல் சுபமி எந்த வண்ணம் தேசியக் கோடியில் மேலே இருக்கும்
என்பதை நூலகப் புத்தகத்தை பார்த்து தெரிந்துகொள்ளும் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள்
"அதெல்லாம் சரி, எந்த வாத்தியார் நூலகத்துக்கு போறார்?"
20 26/01/2015 குமுதம் யாகம் கோமளா. ஜி "ஜோரான கதை, ஆனா
சில உறுத்தல்கள், சுமதி என்கிற நட்பினை பிரியும்
கதாநாயகியின் செய்கை சரியா?" சேரிக்கு கதாநாயகி செய்தது நியாயமா?
21 26/01/2015 குமுதம் சபலம் ஜி.சசிக்குமார் வேலைக்காரி மீனாட்சி தனியாக உங்களுடன்
பேசவேண்டும் என்றதால் கிளர்வுறும் கதாநாயகன் என்ன ஆகிறான்?
22 26/01/2015 குமுதம் வேதங்கள் சொல்லாதது வைரமுத்து "நடசே அய்யர் தோப்பு, இருளாண்டி
எப்படி உள்ளே வரலாம்? படித்ததில் பிடித்தது" "ஜோரான கதை, விவரணை
அற்புதம்"
23 28/01/2015 ஆனந்த விகடன் அஞ்ஞானச் சிறுகதைகள் சந்தோஷ்
நாரயணன் "கதை முயற்சி புதிது,
அறிமுகமான வடிவம் எனினும் பேசுபொருள் எல்லாம் சயன்ஸ்"
1 மூதாதை
2 மெட்டோமார்பிசிஸ்
3 நான்
4 பொம்மைகள்
5 மண்டே
24 28/01/2015 ஆனந்த விகடன் ஒன்றைக்கடன் வாங்கு அ.
முத்துலிங்கம் "ஆடு சாப்பிடும்
வீட்டுப் பாடம், என வாயோயாமல் பொய் பேசும் சிறுவனின்
துள்ளல் ஓட்டத்தில் தொடரும் கதை" அருமை
25 ஜனவரி 15-31 ஜன்னல் கார்னர் கதைகள் ஆனந்த் ராகவ் சின்ன
சின்ன நெகிழ்சிகள்
1 பிறந்தநாள் 8000 ரூபாய்
சம்பளத்தில் இருக்கும் ஓட்டுனர் பிறந்த நாளுக்கு அனைவருக்கும் இனிப்பு தர
வியக்கும் மேலாளர் அதிர்கிறார் ஒரு விளக்கத்தில். நடக்குது
2 பாசம் "சர்க்கரை வியாதி அம்மாவிடம் இனிப்பை
ஒளிக்கும் மகன், வழங்கும் மகள்." நல்ல கேள்விதான்
கோழிகள் லாரி ஒன்று ரிப்பர்.
உதவ மறுக்கிறான் நாயகன். கோழிகள் கொஞ்சம் கூடுதல் நேரம் உயிரோடு மனிதம்
4 பிரசாதம் "பெருமாள் கோவில் பிரசாதம், ஆட்டோ கூடுதல் கட்டணத்தை குறைக்கிறது " பயபக்தி
5 பிச்சை பிள்ளைக்கு பசிக்குது என்பளிடம் இறங்கி
முப்பது ரூபாய் கொடுத்தால் அவள் அடுத்த காருக்கு சென்று சொல்கிறாள் அதே வசனத்தை. பிள்ளை யாரூட்டு?
6 புறா மரித்த அப்பாவை புறாவாக காணும் மகள் நெகிழ்வு
7 மரணம் கடந்த நாள் வரை குடியிருந்த வீட்டில் புதிதாக
வந்தவர் மரித்த செய்தி -நண்பரின் கோணம் ஆறுதல் அவ்வ்வ்வ்
8 ஜகரந்தா காதல் மனைவியின் புன்சிரிப்பை நினவில்
கொண்டுவரும் மலர்கள் அட எங்கே கிடக்கின்றன சரியான
சுழல்
9 குழந்தை பேருந்தில் இருப்போரை விரும்பாததால் அழலாம்
குழந்தை! ஒ!
10 ஆசை தமிழ் தெரியாத மகன் 500
ரூபாய்க்கு கதை எழுதுவது வேஸ்ட் என்று சொல்கிறான் தாய்மொழி
மறப்போம்
11 அடி ட்ராபிக் ஜாம் ஏற்படுத்தும் திமிர் பிடித்த
ஓட்டுனருக்கு கிடைத்த அறை இயல்பு
12 நாய்க்குட்டி பூங்காவில் மூன்றில் ஒன்றைக் காணோம். காணாமல் போன
அண்ணனின் நினைவு அருமை
13 பாம்பு 41/2 அடிப்பாம்பைக்
கண்ட காலனி அலற தெரியவில்லை 6 அடிப்பாம்பு தெரிந்தால்தான் பிரச்னை
14 வாழ்க்கை கண்ணாடி அறையில் இருந்து பூங்காவை நோக்கி பறந்து
மரித்த பட்டாம் பூச்சி. படிமம்
15 புகார் ஒன் மகனுக்கு பெண் நண்பிகள் அதிகம் என்று த.ஆ
சொன்னதும் மகிழும் அப்பா! அடேங்கப்பா
26 ஜனவரி 15-31 ஜன்னல் மாமாவிஜயம் நாகா "பிருந்தாவின்
மாமனார் துபாய், அமெரிக்கா என்று செல்பவர். திடீர் என
பிருந்தா வீட்டிற்கு வந்து நன்கு சாப்பிட்டு செல்கிறார். " முதியோர் வாழ்வு குறித்த முக்கியமான பதிவு
27 ஜனவரி 15-32 ஜன்னல் தூரிகையும் சின்னக்
கதையும்
1 பானுக்குட்டி சி. பூவேந்தன்
2 நீயும் நானும்
ஒன்று பிருந்தா ரமணன்
3 குழந்தைபாடும்
தாலாட்டு செல்லம் ஜெரீனா
4 டிரீட்மென்ட் "கிருத்திகா, தாத்தாவை
நினைத்து " ஜோரான குட்டிக்கதை
5 ஒரே ஒரு கேள்வி ப.சேதுமாதவன்
தொகுப்பு மது www.malartharu.org
பொறாமையா இருக்கு :) இவ்ளோ புக்ஸும் எனக்கு இங்கே கிடைக்காது ..நாவல்கள் மட்டுமே லைப்ரரில இருக்கு .
ReplyDeleteஉங்கள் கருத்துக்கள் அனைத்தும் வாசிக்க ஆவல் உண்டாக்குது ..
the first one reminds me of azhagar saamiyin kuthirai
நன்றி சகோ.. தமிழ் இலக்கிய உலகம் இணையத்தில் விரிவடைய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது உங்கள் பதிவு
Deleteடாப்ளர் காலமாகவே வடிவமைத்திருக்கலாம். ஏற்கனவே இதைபற்றி அறிந்திருந்தால் மட்டுமே இந்த பதிவு புரியும் போல இருக்கு. dont மிஸ்டேக் me. ப்ளீஸ் do நெசசரி சென்சஸ்:(
ReplyDelete\\\\\\\பொறாமையா இருக்கு :) இவ்ளோ புக்ஸும் எனக்கு இங்கே கிடைக்காது /////இதே பிரச்சனை தான் எனக்கும். தங்கள் மாதொரு பாகம் பற்றியும் முழுவதும் பதிவுகளில் படிக்கக் கிடைக்கவில்லை. அந்த கதையும் வாசிக்கக் கிடைக்கவில்லை.நேரமின்மை தான் என்றாலும் வாசிக்க ஆர்வம் உள்ளது. கதையை வாசித்தால் தான் பிரச்சனை சரியாக புரியும் இல்லையா? ம்..ம்..ம் link இருந்தால் தாருங்கள் சகோ. மிக்க நன்றி வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteபடிக்காத மேதை ‘காமராஜர்‘ என்று பெருமையாகக் கூறுவோம்.... படிக்கின்ற மேதை என்றே சொல்லலாம் போல் இருக்கிறது! எத்தனை சிறுகதைகள்?