படம் ஒரு அனாயசமான துப்பாக்கி சண்டையில் துவங்குகிறது. நியூயார்க் போலிஸ் மாத்தியு ஸ்கட்டர் ஒரு பாரில் ஓசியில் குடித்துக் கொண்டிருக்கிறான்.
என்னது அங்கேயுமா ?
மனிதர்கள் எல்லா இடத்திலும் மனிதர்கள்தான்!
மாத்யூவின் தலை எழுத்தை மாற்றியது அந்த இரண்டு கிளாஸ் சரக்குதான். சரியாக அந்தநேரத்தில் பார் உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட சுட்டவர்களை துரத்துகிறான் மாத்தியூ.
இரண்டு கிளாஸ் சரக்கின் பின்னரும் குறிதவறாமல் இரண்டு கொள்ளையர்களை ஸ்பாட்டிலேயே காலி செய்து மூன்றாவது கொலையாளியைத் துரத்துகிறான். காலில் ஏற்கனவே குண்டு பாய்ந்து படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் அவனை நிதானமாக குறிவைக்கிறான். அந்தப் பன்னாடை சரண்டர் ஆகாமல் மாத்யூவைக் குறிவைக்க பணால் மூன்றாவது டிக்கெட் அவுட்!
வெகு ஸ்டைலாக படிகளில் குதித்து குதித்து இறங்குகிறான் மாத்தியு. ஆனால் இதன் போக்கில் ஒரு பெரிய தவறும் நிகழ்ந்துவிட தனது குடிப்பழக்கதிற்காக ஆல்கஹோலிக்க்ஸ் அனானிமஸ் அமைப்பில் எட்டு ஆண்டுகளாக உறுதியுடன் தொடர்கிறான் மாத்தியூ.
அப்போ புவாவிற்கு. தனியார் துப்பறிவாளனாக பணியாற்றுகிறான். ஒரு ஏஏ மீட்டிங் முடிந்தவுடன் சக குடிநோயாளி பீட்டர் ஒரு வேலை இருக்கு வா என்று தனது அண்ணனிடம் அழைத்துச் செல்கிறான்.
பீட்டரின் அண்ணியைக் காணோம். அவன் அண்ணன் பணயப் பணத்தை கொடுத்த பிறகு சின்னச் சின்ன போதை மருந்துப் பொட்டலங்களில் ஒரு காரின் டிக்கியில் மனைவியைக் கண்டெடுக்கிறான்.
அவன் மத்யூவிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். யாரு எனது மனைவியைக் கொன்றது. அவனை என்னிடம் கொண்டுவா.
அவன் கொடுத்த பெரும் தொகை பணயப் பணம் உறுத்துகிறது.
ஒரு நைட்டில் இவ்வளவு பணத்தை போதைவியாபாரிகள் மட்டுமே புரட்ட முடியும் என்று சொல்லும் மாத்தியூ இதற்க்கு நான் ஆள் கிடையாது என்று சொல்லி விடைபெறுகிறான்.
சில நெட் தேடல்களில் இதேபோல் பல பெண்கள் காணமல் பொய் பார்ட் பார்ட்டாக வந்து சேர்ந்திருப்பது தெரியவே இனி வேறு எந்தப் பெண்ணிற்கும் இது நிகழக் கூடாது என்று களத்தில் இறங்குகிறான்.
அழகாகா ஓர் பெண் எதிரில் வந்தால் என்ன செய்வீர்கள்.
ஒரு நிமிடம் ரசிக்கலாம். ஈ என்று இளிக்கலாம்.
அவ்வளவுதானே அவளைக் கடத்திக் கொண்டுபோய் கற்பழித்து கூறு கூறாய் வெட்டி கவர்களில் அடைத்து குளத்தில் மிதக்கவிட்டால்?
மனநோயாளிதானே. (இன்றைக்கு நாட்டில் நெறையபேர் இப்படிதான்ப்பா யோசிக்கிறான் என்று சொல்ல வேண்டாம்)
ஆனால் கடத்தப்படும் எல்லா பெண்களுமே போதை வியாபாரிகளின் மனைவிகள் அல்லது மகள்கள்!
திருடனுக்கு தேள் கொட்டினால் என்ற கணக்கில் இவர்கள் மட்டும்தான் கொலையாளிகளின் டார்க்கெட்.
இப்படி இரண்டு பேர் இந்தப் படத்தில் கதி கலக்க வைத்திருகிறார்கள். டேவிட் ஹார்பர், செபாஸ்டின் ரோச்... அவ்வவ் கொலைகாரப் பாவிகளா என்று தியேட்டரை அலறவிடும் பொறுப்பை நூறு சதவிகிதம் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
இவர்களை வேட்டையாடும் லியாம் நீசன் அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு நட்ச்சத்திர காவல் அதிகாரியாக, தனது குடிப்பழக்கத்தின் விளைவுகளை அறிந்து தந்து பதவியை தூக்கிப் போடும் இடத்திலும், போதை வியாபாரிகளுக்கு உதவ மாட்டேன் என்று மறுக்கும் இடத்திலும் முத்திரைப் பதிக்கிறார்.
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல திரில்லர்.
அப்புறம் இதை நாவலாக படித்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று தோன்றுகிறது.
தர்ட்டி நைன் ஸ்டெப்ஸ் நாவலை பேரா. நவநீதன் இன்று நடத்திய மாதிரி இருக்கிறது. அந்த நாவல் வாசிப்பை மீண்டும் உணர வைத்த படம்.
வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்.
அன்பன்
மது
ஆஹா ! லியாம் நீசன் படங்கள் என்றாலே திரில்லருக்கும் ஆக்சனுக்கும் பஞ்சமிருக்காது . ஒருவகையில் பார்க்கும் போது THE EQUALISER - ன் பாதிப்பு தெரிகிறதே ? பார்த்துவிடவேண்டியதுதான் .
ReplyDeleteநன்றி அண்ணா
தம +
நன்றி மெக்...
Deleteஉஸ் அப்பா மெக் பார்க்காத ஒரு படத்தை பற்றி எழுதிவிட்டேன்..
அண்ணே ! நான்லாம் அந்தளவுக்குப்படம் பார்க்கமாட்டேன் ணா !!!! நீங்க எழுதியிருக்க பல திரைப்படங்கள் , நான் பார்க்காதவை பற்றியதுதான் .
Deleteநன்றாக உள்ளது விமர்சனம். பார்க்க தூண்டும் படியாக. நன்றி !
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் அம்மு மகிழ் நிறைக்கும். அனைத்தும் பொங்கி நிறையட்டும் வாழ்வில் வளங்கள் ...!
வாழ்த்துக்கள் நன்றியுடன் பெறப்பட்டன ..
Deleteநன்றி சகோதரி..
பணிகள் நலமே முடிந்ததா?
இல்லையே இனிமேல் தான் ரொம்ப busy நாள் கிட்டி விட்டது அல்லவா. இனி மேல் வருவது ரொம்பக் கஷ்டம் தான் பார்ப்போம். நன்றி சகோ.
Deleteநல்லதோர் திரைப்படம் பற்றிய அறிமுகம்.... நன்றி மது.
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteவிமர்சனமே பார்க்கத் தூண்டுகின்றது. பார்த்துவிட வேண்டியதுதான்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தோழரே
தங்களுக்கும் தங்கள் குடும்பாத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நண்பரே.. நன்றி நன்றி
Deleteவிமர்சனம் பார்க்கத்தூண்டுகிறது தோழரே....
ReplyDeleteநன்றி நண்பரெ ..
Deleteதிரைப்படம் பார்ப்பதுபோலவே இருந்தது. விறுவிறுப்பான படம் பற்றிய பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteயம்மா..நான் பார்க்கமாட்டேன்!!
ReplyDeleteகூடிய மட்டும் கண்ணியமான காட்சிகளில்தான் வன்முறை காட்டப்பட்டிருக்கிறது
Deleteகொஞ்சம் தைரியம் வேண்டும் ..
உங்களுக்கும், அம்மா, மைதிலி மற்றும் குட்டீசுக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி நன்றி சகோதரி ..
Deleteபொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஅருமையாக ஓர் உலகப்படத்தை புரியும் வண்ணம் பகிர்ந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுக்கும் , தங்களின் குடும்பத்தார் , சுற்றத்தார் , உறவினர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் அண்ணா
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteஎ வாக் அமாங் தி டும்ஸ்டோன்ஸ் விமர்சனம் படித்தேன். நன்றாக திரில்லர் படம் ஆக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி.
த.ம. 5.