Avengers Age of Ultron |
இப்படி சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது! இந்தப் படங்கள் வசூலிக்கும் தொகை தலை சுற்ற வைக்கிறது. இந்த வரிசைப் படங்கள் பல பில்லியன் டாலர் வசூலில் பட்டயைக் கிளப்புகின்றன.
அவன்ஜெர்ஸ் இரண்டாம் பாகம் உலகெல்லாம் வெளியிடப்பட்டுவிட்டது, அமரிக்காவில் வரும் மே ஒன்றில்தான் வெளியிடப்பட இருக்கிறது. அதற்குள்ளாகவே போட்ட பணத்தை திரட்டிவிடவும் வாய்ப்பு இருக்கிறது!
அயர்ன் மான், ப்ளாக் விடோ, தோர், ப்ரூஸ் பானர், காப்டன் அமெரிக்கா, கிளின்ட் பார்ட்டன், நிக் ஃபியூரி என்கிற அவன்ஜெர்ஸ் சூப்பர் ஹீரோக்களோடு புதிதாக சில சூப்பர் ஹீரோக்களும் இணையும் படம்.
ஒரு சூப்பர் ஹீரோ பண்ணும் அதகளமே தாங்க முடியாது, இத்துணை ஹீரோக்கள் சேர்ந்தால்?
படம் இன்னொரு ஹாலிவுட் பட்டாசு!
ஆனால் என்ன அதீத உணவு வகைகளைக் இலையில் பரப்பி எதைச் சுவைப்பது எதைத் தவிர்ப்பது என்கிற பாணியில் குழப்ப மசாலாதான்.
சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் சேர்ந்து ஹைட்ராவின் தளத்தில் இருக்கும் லோகியின் செங்கோலை கைப்பற்ற ஒரு பெரும் படையை எதிர்கொண்டு அழிக்கிறார்கள்.
படத்தின் டைட்டில் மோதல் இது, தாமதமாகப் போனால் மிஸ்பண்ணவேண்டும். படத்தின் புதிய சூப்பர் ஹீரோக்கள் க்விக் சில்வர் மற்றும் வாண்டா மாக்ஸிமாஃப் எனும் புதிய சூப்பர் ஹீரோக்கள் இந்த மோதலிலேயே அறிமுகமாகிவிடுகிரார்கள்!
இவர்கள் அவேஞ்சர்ஸ் குழுவை எதிர்க்கும் அணியில் இருக்கிறார்கள்! வாண்டா தனது சக்தியின் மூலம் அடுத்தவரின் மூளையைப் படிப்பதிலும், அதை அவள் நோக்கத்திற்கு பயன்படுத்துவதிலும் கில்லாடி, அவள் சகோதரனோ ஒளியின் வேகத்தில் நகர்பவன்!
லோகியின் செங்கோலில் இருக்கும் அழிவற்ற கல்லின் சக்தியால் தனது ரோபாட் ஒன்றை செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபாட்டாக மாற்றினால் அது உலகைக் காக்க பயன்படும் என்று முடிவெடுக்கிறான் அயர்ன்மான், இதற்கு ஹல்க் (ப்ரூஸ் பானர்) உதவ உருவாகிறது அல்ட்ரான்!
ஒரு வெற்றிப் கொண்டாட்டத்தில் இருக்கும் சூப்பர் ஹீரோ குழு தோரின் சுத்தியை நகர்த்த முயற்சிக்கிறது. ஒருவராலும் நகர்த்த முடியாத பொழுது தோர் அதற்கான தகுதி இருந்தால் சுத்தி கைக்கு தானே வரும் என்று சொல்கிறான்.
இதனிடையே உயிர்த்தெழும் அல்ட்ரான் முதல் போணியாக அயர்ன் மானின் செயற்கை நுண்அறிவு உதவியாளனைக் போட்டுத் தள்ளுகிறது.
சூப்பர் பவர் மூலம் இணையத்தில் ஒளிந்து கொள்ளும் அல்ட்ரான் விரும்பும் ரோபாட்டுகளில் தன்னை பதித்துக்கொள்ளும் திறனைக் கொண்டிருக்கிறது! அயர்ன் மான் வசம் இருந்த அத்துணை ரோபாட்டுகளையும் தன்வசப்படுத்திவிட்டு சூப்பர் ஹீரோக்கள் ஒரு கயிற்றின் கட்டுப்பாட்டில் ஆடும் பொம்மலாட்ட பொம்மைகள் என்று சொல்லி அவர்களோடு மோதுகிறது. உலக அமைதி என்பது உலகையும் மக்களையும் முற்றாக அழித்தொழிப்பதில்தான் இருக்கிறது என்கிறது அல்ட்ரான்!
எதையோ பிடிக்கப் போய் ஏதோ ஆன கதைதான்.
இணையத்தின் தொடர்பால் சொகாவியாவில் இருக்கும் ஹைட்ரா தளத்தில் பல ரோபாட்டுக்களை உருவாக்கி ஒரு பெரும் அழிவிற்கு அஸ்திவாரம் போடுகிறது அல்ட்ரான். க்விக் சில்வர் மற்றும் வாண்டா இருவரும் இதற்கு உதவுகிறார்கள். அவர்கள் பெற்றோரைக் கொன்ற ஸ்டார்க் நிறுவனத்தை அழிப்பதே அவர்களின் நோக்கம்!
எதிர்பாரா திருப்பங்களின் மூலம் சூப்பர் ஹீரோக்கள் உலகைக் காப்பதே கதை.
மிகபலமான உலோகமான வைப்ரேனியம் கொண்டு ஒரு ரோபாட்டை செய்து அதில் தனது சிந்தனையை பதிவு செய்கிறான் அல்ட்ரான்! இந்த செயல் மட்டும் முடிந்துவிட்டால் புவியை ஒரு புஸ்வானம் மாதிரி கொளுத்திவிட விரும்புகிறான்.
கிளைமாக்ஸில் அல்ட்ரான் சொகோவியவை அலேக்காக தூக்கி பல்லாயிரம் கிமி உயரத்தில் இருந்து புவியில் விழச் செய்து புவியை பஸ்ப்பமாக்க முயல்கிறான்.
ஒன்றுக்கு பத்தாக இருக்கும் சூப்பர் ஹீரோக்கள் இருக்கும் பொழுது இது சாத்தியமா என்ன?
படத்தில் என்னைக் கவர்ந்த விசயங்கள்.
அல்ட்ரான் - அற்புதமான ஹீரோக்களை மோசமான வில்லன்களே உருவாக்க முடியும்..
இந்த ரோபாட் ரொம்ப கூலாக வடிவமைக்கப் பட்டிருகிறது. மூக்கில்லாத முகத்தை வைத்துக்கொண்டு அது பேசும் வசனங்கள் ... உலகம் ஒரு உன்னத நிலையில் இருக்கும் பொழுது கடவுள் ஒரு கல்லை அதன் மீது எறிவார்!
(விண்கல் தாக்குதலை சொல்கிறது)
அடுத்து ஒரு பாட்டு என்னைக் கட்டிப் போட எந்த கயிறும் இல்லை...
அல்ட்ரான்தான் அழுத்தமாக படத்தை நகர்த்திச் செல்கிறது. சூப்பர் ஹீரோக்கள் அதன் கையில் மாட்டிய பொம்மைகளாகத்தான் தெரிகிறார்கள்.
அவன்தான் உலகை அழிக்கும் வெறியில் அவனையே அழிக்கும் விஷன் என்கிற சூப்பர் ஹீரோவை உருவாக்குகிறான்.
அல்ட்ரான் அழிவின் பக்கம் செயல்படும் பொழுது விஷன் வாழ்வின் பக்கம் செயல்பட முடிவெடுக்கிறான்!
படத்தின் இறுதியில் இருவரும் சந்திக்கும் பொழுது பேசும் வசனம் கூட கிளாஸ் ரகம்.
அல்ட்ரான் : தாங்க முடியாத அளவுக்கு குழந்தை மாதிரி பேசற நீ
விஷன் : ஆமா, நேத்துதானே நான் பிறந்தேன்.
இதே போல் விஷன் தோரின் சுத்தியை ஜஸ்ட் லைக்தட் எடுத்துக் கொடுப்பதும் ஒரு வாவ் சீன்தான்.
ஒரு பாப்பா கதைக்குள் பொதித்து வைத்திருக்கிற அறிவியல் செய்திகளும், எதிர்கால அறிவியல் சாத்தியங்களும்தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்க முடியும்.
அதிர்ச்சியாக ஒரு செய்தி. படத்தின் புதிய சூப்பர் ஹீரோ விஷன் உருவாக்கப் பட்ட ஆண்டு 1940!
அன்று உருவாக்கப்பட்ட ஒரு புனைவுப் பாத்திரம் இன்று வசூல் சாத்தியத்தோடு இருப்பது சாதரணமான விசயம் அல்ல!
இன்னும் என்னைக் கவர்ந்த விசயங்களைப் பட்டியலிட்டால் பதிவு காரிகன் அவர்களின் பதிவைப்போல பிரமாண்டப் பதிவாகிவிடும் என்பதால் இத்துடன் டாட்.
நீங்க எழுதியிருக்கிற விமர்சனத்தைப் பார்க்கும்போது நான் எடுக்கப்போற இங்கிலீஷ் படக்கதை போல இருக்கே,,,,, யாராவது எனது டைரியை படிச்சுட்டாங்களோ....
ReplyDeleteதமிழ் மணம் 2
ஆமா நானும் அப்படிதான் நினைக்கேன்
Deleteதியர்ட்டர் போய் பார்க்கும் அளவுக்கு படம் வெர்த்தா?? அல்லது பொருத்து இருந்து டவுன்லோட் பண்ணலாமா?
ReplyDeleteதங்கள் தளத்தை பார்க்க விடாது மறைக்கின்றன விளம்பரங்கள் ...
Deleteபடம் ஒருமுறை பார்க்கலாம் ..
வணக்கம்
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் ... நானும் விடயங்களை அறிந்தேன்.. பகிர்வுக்கு நன்றி. த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி தோழர்
Deleteஅருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஅப்பப்போ ரசிக்கலாம்ன்னு சொல்றீங்க... ரைட்டு...
ReplyDeleteரசித்தீர்களா
Deleteஅருமையான பதிவு நண்பரே
ReplyDeleteதியேட்டருக்குப் அவசியம் செல்வேன்
தம +1
நன்றி அண்ணா
Deleteஒரு பாப்பா கதைக்குள் பொதித்து வைத்திருக்கிற அறிவியல் செய்திகளும், எதிர்கால அறிவியல் சாத்தியங்களும்தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்க முடியும்.
ReplyDeleteஎப்படி தோழரே கணித்தீர்கள்
வெற்றியின் ரகசியத்தை?
ஹாலிவுட் ஜோசியர் ஆகிவிட்டீர்கள் போல் உள்ளதே?
த ம 7
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி அய்யா
Deleteமது,
ReplyDeleteஉங்களின் விமர்சனத்திற்க்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். சுவாரஸ்யமான எழுத்து. இன்னும் கூட எழுதியிருக்கலாம்.
படிக்க விரும்புவதில்லை மக்கள் என்பதால் சுருக்கி விட்டேன்
Deleteஅன்பின் இனிய வலைப் பூ உறவே!
ReplyDeleteஅன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
படம் பார்க்கவில்லை, விமர்சனம் படித்ததும் பார்க்க ஆசை வந்துவிட்டது.
ReplyDeleteதமிழ் நடிகர்கள் பேரே எனக்கு நினைவுக்கு வரதில்ல.ஜெய் யை விமல்னு விமலை ஜெய் ன்னும் நினைச்சுப்பேன். நீங்க என்னடான்னா ஹாலிவுட் ஹீரோக்கள் பேரா அடுக்கறீங்க .முதல் இவங்கல பத்தி தெரிஞ்சுகிட்டு வரேன்.
ReplyDeleteஉங்க விமர்சனத்தை பாக்கும்போது குழந்தைகளுக்கு பிடிக்கிற படம் மாதிரி தெரியது.வடிவேலு சொன்ன மாதிரி குழந்தைகளுக்கு பிடிச்சி போச்சுன்னா குடும்பத்தோட தியேட்டர் போய்த்தானே ஆகணும்
ஏதோ உங்களால நாலு ஆங்கில படத்தோட பேரையாவது தெரிஞ்சுகிட்டேன்.
அன்புள்ள அய்யா,
ReplyDeleteஅவென்ஜெர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான்- அருமையாக விமர்சனம் அமைந்துள்ளது. 1940 ஆண்டு உருவாக்கப் பட்ட ஹீரோ விஷன் என்பது வியப்பில் ஆழ்த்துகிறது.
நன்றி.
த.ம. 10
என் பொண்ணு சொல்லித்தான் இந்த படம் அப்புறம் theory of everything இரண்டும் பார்த்தேன் .. boy in the striped pajamas படம் மட்டும் என்னை பார்க்க வேணாம்னு சொலிட்டா ....நீங்க பாருங்க .
ReplyDeleteதியரி ஆப் எவரிதிங் இஸ் வைடிங் ...பார்க்கணும்
Deleteவருகைக்கு நன்றி
நன்றி அய்யா
ReplyDeleteநாங்களும் [அடம் எல்லாம் பார்ப்போம் இங்கிலீஷு அதிகமாகத்தான்...ஆனா என்னா ஹிஹிஹி இந்தப் பேரு எல்லாம் அப்பப்ப மறந்து போயிடுது......பார்த்த படத்தையே கூட பார்த்தமானு சில சமயம் டவுட் வந்துடுது....எலேய் வயசாயுப் போச்சுனு சொன்னேனு வையி........ஹூம் என்னத்தச் சொல்ல.....பார்க்கறோம்....
ReplyDeleteஒ...
Deleteஉங்கள் குறும்படத்தை பார்க்கும் ஆவல் இருக்கிறது ...
காத்திருக்கிறேன்
படம் பார்த்து ஆண்டுகள் ஓடிவிட்டது. என் பதிவில் பின்னூட்டம் பார்த்து வந்தபோதுஉங்கள் ப்ரொஃபைலில் கல்வியால் சமூக மாற்றங்கள் கொண்டு வரலாம் என்று கருத்து பதியப் பட்டிருப்பது கண்டேன் நான் இந்த மாதம் துவக்கத்தில் எழுதி இருந்த கல்வி இனி ஒரு விதி செய்வோம் பதிவினைப் படிக்க அழைக்கிறேன் நன்றி
ReplyDeleteஇன்னதாத்துக்கு தியெட்டருக்கு போயி... இங்கயே படம் பார்த்தாகி விட்டது
ReplyDeleteஆங்கிலப்படம் என்றாலே அலர்ஜி ஆனா நீங்க சொல்லும் போது பாக்கனும் போல இருக்கே சகோ
ReplyDelete