புது தில்லியில் இருந்து திரு.ஷாஜகான் ...
சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வருமா? வரும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.
சொந்தத்திலேயே திருமணம் செய்தவர்களும், (திருமணம் செய்ய இருக்கிறவர்களும்கூட) இப்படிச் சொல்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்கு பிரச்சினைகள் வரவில்லை என்றாலும்கூட, பொதுவாக நிலவும் இந்தக் கருத்தை ஒப்பிக்கிறார்கள். பத்திரிகைகளில், செய்திகளில் மேலோட்டமாக அறியக் கிடைத்த தகவல்களை அவர்கள் கூறுகிறார்கள்.
ஆங்கிலத்தில் ஃபர்ஸ்ட் கசின் என்கிறார்களே – அப்படி ஃபர்ஸ்ட் கசின்களுக்குள் திருமணம் செய்தால் மரபியல் கோளாறுகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் காட்டியுள்ளன. அதுவும், 6 சதவிகிதம் என்கிறார்கள். வெளியே திருமணம் செய்தாலும் இதுவே 3 சதவிகிதம் வாய்ப்பு உண்டு. இந்த ஆய்வுகள் எல்லாமே வெளிநாடுகளில்தான் என்பது வேறு விஷயம்.
இந்த கசின் என்ற சொல்லே நமக்கு சிக்கலானது. உறவு முறைக்குள் திருமணம் என்பது மதத்துக்கு மதம் வேறுபடுகிறது. இந்து மதத்தில் மாமன் மகளைத் திருமணம் செய்யலாம். இஸ்லாத்தில் சித்தி மகளைத் திருமணம் செய்யலாம். இந்து மதத்தில் அக்காள் மகளைத் திருமணம் செய்யலாம். இஸ்லாத்தில் செய்ய முடியாது. ஹரியாணாவில் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்த்தால் கௌரவக் கொலைகள் நிகழும். ஒரு காலத்தில் சில சமூகங்களில் அண்ணன்-தங்கை திருமணம் நிகழ்ந்திருக்கிறது. இப்போதும் சில சமூகங்களில் உறவைத்தவிர வெளியே திருமணம் செய்ய முடியாது.
இப்படி ஒவ்வொரு மதத்திலும் உறவுமுறைத் திருமண முறைகளை அடிப்படையாக வைத்து, அவர்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்ட நோய்கள் மற்றும் மரபியல் கோளாறுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் ஏதும் உண்டா என்று தேடினால், இந்திய அளவில் கிடைக்கவில்லை. யு.கே.வில் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் கொஞ்சம் அதிகமாக உள்ள பகுதியிலும் பொதுவான பகுதியிலும் மக்களை வைத்து நடத்திய ஆய்வு குறித்த தகவல் கிடைத்தது.
அதில், உறவுமுறைக்குள் திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு இதய அல்லது நரம்பியல் பிரச்சினைகள் வரும் சாத்தியம் 3 சதவிகிதம் எனத் தெரிந்தது. உறவுக்கு வெளியே திருமணம் செய்பவர்களுக்கு இது 1.6 சதவிகிதம்.
இதிலிருந்து தெரிவது – திருமணம் செய்யும் இருவரிடமும் நோய்க்கான மரபணுக்கள் இருந்தால், குழந்தைக்கு கோளாறு ஏற்படும் வாய்ப்பு உண்டு. பெற்றோர் இருவருக்குமே தமது மரபணுவில் கோளாறு இருப்பது தெரியாமல் இருக்கலாம். குழந்தைக்கு அது வெளிப்படவும் செய்யலாம், வெளிப்படாமலே போகலாம். இதுவும் ஃபர்ஸ்ட் கசின்களுக்குப் பொருந்துவது. செகண்ட் கசின், தேர்ட் கசின் எனப் போகப்போக இந்த வாய்ப்புகள் மேலும் குறைகின்றன. வெளியிலிருந்து திருமணம் செய்யும்போது இந்த வாய்ப்பு இன்னும் குறைகிறது. அதே சமயத்தில் வெளியில் திருமணம் செய்பவரிடமும் அதேபோன்ற நோய்க்கான மரபணு இருந்தால், கோளாறு ஏற்படலாம். உறவுகளுக்குள் கோளாறு இருக்கும் வாய்ப்பு அதிகம் என்பதே இதன் உட்பொருள். ஆக, உறவுமுறைத் திருமணம் கூடாது என்பதும்கூட எவ்வளவு நெருங்கிய உறவு என்பதைப் பொறுத்தது.
சில குடும்பங்களில் பிறக்கிற குழந்தைகள் எல்லாமே ஒரேவிதமான கோளாறு கொண்டவையாகப் பிறக்கக்கூடும். அது நிச்சயமாக குடும்ப மரபணுக் கோளாறுதான். அத்தகைய உறவுகளில் திருமணத்தைத் தவிர்க்கவே வேண்டும்.
குழந்தைகளுக்கு மரபியல் பிரச்சினைகள் வந்தால் அதற்கு உறவுமுறைக்குள் திருமணம் செய்தது மட்டுமே காரணம் என்று முடிவு செய்ய வேண்டியதில்லை. அதுவும் காரணமாக இருக்கலாம். அதேபோல, எல்லா நோய்களுக்கும் உறவுமுறைத் திருமணமே காரணம் என்றும் கருதத் தேவையில்லை.
பி.கு. – இந்தப் பதிவு உறவுமுறைக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும், அல்லது அதுவே நல்லது என்று காட்டுவதற்கில்லை. எங்கள் குடும்பத்தில் என்னைத்தவிர எல்லாருமே வெளியில் திருமணம் செய்தவர்கள்தான். குடும்பத்தில் நான்குபேர் புற்றுநோய்க்கு பலியாகியிருக்கிறார்கள். இதயநோய் மற்றும் சர்க்கரை நோய்ப் பிரச்சினை உள்ளவர்கள் பலர். இந்தியாவில் இதுகுறித்து ஆய்வுகள் ஏதும் நடந்திருந்தால் அதுகுறித்து நண்பர்கள் அறியத்தரலாம்.

வணக்கம் தோழர்.
ReplyDeleteஇது குறித்த இனவரைவியல் ஆய்வுகள் ஆங்கிலேயரால் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றன.
பகிர்வு பல செய்திகளை அறியத் தந்தது.
த ம 2
நன்றி தோழர் ...
DeleteThere is a misconception that if one marries the first cross cousin or second cousin or "first cousin once removed", their children will have genetic disorder. It is true the chances may be just a few percentage more but it is NOT such a big deal. Some of my relatives married their first cousins some others second cousin removed, they are all having healthy children. :)
ReplyDeleteoosi oyatha alaigal guy was spreading this nonsense in the tamil websites as if you he is a "know it all" . Such jokers are always around us. We need to ignore them and look at the facts carefully.
உண்மைதான்...
Deleteஇது அய்யா ஷாஜகானின் சுவரில் இருந்து எடுக்கப்பட்டது ...
ஓசை எழுப்பும் ஓசை குறித்து உங்கள் மூலமே அறிந்தேன் ...
நன்றி
நல்லதோர் தலைப்பு எடுத்துள்ளீர்கள். இங்கு பிள்ளைகள் கசினையா கல்யாணம் செய்வதா என்று முகம் சுளிப்பார்கள்.சொந்தத்திற்குள் செய்வதை விரும்ப மாட்டார்கள். அது உண்மை தான் நோய் வரும் சான்ஸ் குறைவுமட்டும் அல்ல புத்திசாலிக் குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இது பற்றி அலசுவதும் ஆராய்வதும் மிகுந்த நன்மை பயக்கும் என்று எண்ணுகிறேன். மிக்க நன்றி பதிவுக்கு.
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள் ....! மற்றவர்கள் கருத்தையும் அறிய ஆவலாக உள்ளேன். மீண்டும் வருகிறேன்.
நன்றி சகோதரி
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையாக சொல்லியுள்ளீர்கள் சில விடயங்களை அறிந்தேன்.பகிர்வுக்கு நன்றி த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புற்று நோய் என்பது எங்களின் பரம்பரையிலேயே இல்லை… அது என் சகோதரியை கொண்டு சென்று விட்டது... ம்...
ReplyDeleteம்
Deleteபிளாஸ்டிக் தண்ணீர்க் குழாய்கள்தான் பிரதான காரணம் என்று சொல்கிறார்கள் புற்று பரவ ..
குழந்தைகளுக்கு மரபியல் பிரச்சினைகள் வந்தால் அதற்கு உறவுமுறைக்குள் திருமணம் செய்தது மட்டுமே காரணம் என்று முடிவு செய்ய வேண்டியதில்லை. அதுவும் காரணமாக இருக்கலாம். என்ற தங்களின் கருத்தையே நானும் ஏற்கிறேன். மற்றபடி ஏதோ ஒரு வகையான நம்பிக்கையையோ, மூட நம்பிக்கையையோ நம்முள் உண்டாக்கி இவ்வாறு ஒரு விவாதப் பொருளை நம் முன் இச்சமுதாயம் கொண்டுவந்து வைத்துவிட்டது.
ReplyDeleteநன்றி முனைவரே
Deleteதோழரே!
ReplyDeleteதமிழ் மணத்தில் ஜொலிக்க... 7
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி தோழர் ...
Deleteஇது பல காலங்களாகக் கூறப்பட்டு வந்தாலும், இங்குச் சொல்லப்பட்டக் காரணங்கள் சரி என்றாலும், நடை முறையில் எங்கள் குடும்பங்களில் ஒன்றுக்குள் ஒன்று என்று ஒரே இடியாப்பச் சிக்கலான வகையில் உறவுக்குள்ளேயே 4 தலைமுறைகளாகத் திருமணம் பந்தங்கள். இப்போது கூட ஆண் ஒரு உறவாக இருபார் , அவரது மனைவி வேறு ஒரு உறவு முறை சொல்லி அழைக்கும்படி இருப்பார்...என்ன உறவு என்றால் தலை சுத்தும்.....எல்லாம் இதே ஃபர்ஸ்ட் கசின், மாமனை மணம் முடித்தல், பெண் கொடுத்து பெண் எடுத்தல் இப்படித்தான். ஆனால் இந்த 4 தலைமுறைகளிலும் இது வரை எந்த ஜெனிடிக்கல் வியாதிகள் என்று, இந்த உறவு முறை மணத்தினால் என்று இல்லை. சர்க்கரையைத் தவிர....அது சரி சர்க்கரை யார்கிட்டதான் இல்லைனு கேளுங்க? ரேஷன்ல மட்டும்தான் இருக்காது....அப்படிப் பார்த்தால் இந்தியாவில் பெரும்பான்மையோர் ஸ்வீட் மக்காஸ்தான்...பழங்காலத்தில் எல்லாம் ஒரு கிராமமே உறவாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோரும் நன்றாகத்தான் இருந்திருக்கின்றார்கள். ஆனால் ஆராய்ச்சிகள் சொன்னால் சரியாகத்தான் இருக்குமோ?!
ReplyDeleteநல்ல பகிர்வு!
வாவ் ...
Deleteஆழப்பார்க்க வேண்டிய விசயம் இது ...
பார்வைகளின் ஆய்வுகளின் பல்வேறு பரிமாணங்களை பதிவு செய்வதே எனது நோக்கம்..
நன்றி அய்யா ...
உங்கள் குட்டிப் பதிவிற்கு..
குழந்தைகளுக்கு மரபியல் பிரச்சினைகள் வந்தால் அதற்கு உறவுமுறைக்குள் திருமணம் செய்தது மட்டுமே காரணம் என்று முடிவு செய்ய வேண்டியதில்லை.
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே
நன்றி
தம ’+1
நன்றி தோழர்
Deleteகுறுகிய வட்டத்தைத் தாண்டி திருமணம் செய்வதே நல்லது என படுகிறது :)
ReplyDeleteநன்றி பகவானே
Deleteஉறவுமுறைத் திருமணம் தவறா? - என்பது பற்றி நல்ல ஆராய்ச்சி கட்டுரை. உறவுகளை கடந்து திருமணம்... சில குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.
ReplyDeleteநன்றி.
த.ம. 10.
நன்றி தோழர்
Deleteதமிழ் மணத்தில் ஜொலிக்க...த.ம.1
ReplyDeleteநன்றி நன்றி தோழர்
Deleteமிக நல்ல பதிவு.
ReplyDeleteஉறவுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு.
த ம 11
விரிவான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி தோழர்
Deleteவணக்கம் தோழரே ஆண்டாண்டு காலமாக சொந்தத்தில் தான் திருமணம் செய்தார்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றார்கள் இதில் ஊனமும் இருந்தது இருப்பினும் இப்பொழுது இது தவறென்று சொல்கிறார்கள் இருப்பினும் இதை தடுப்பது 80 முடியாத காரியமே....
ReplyDeleteதமிழ் மணம் 11
நன்றி தோழர் ...
Deleteவிரைவு என்பது ஜி
If one marries within his cousins, amount of DNA shared between him and his wife is more, which leads to the problems with recessive genes that have less fit chosen and passed to kids. If it continues for more generations, the chances of Recessive genetic disorders is so common. Lots of research had been done and reported the ill effect in breeding marriages. Some of the genetic orders as a result of cousin marriage or in breeding Is Cystic Fibrosis, Sickle Cell Anemia, Tay-Sachs Disease
ReplyDeleteஅம்மா உங்கள் கருத்துக்கு நன்றி ...
Delete