எஸ்.பி. ஜனநாதன் என்பதால்தான் தியேட்டர் பக்கம் போனேன். நம்பிக்கை தரும் கலைஞர் அவர்.
சமூகத்திற்கு சிவப்பு சிந்தனையை மசாலா தடவி மாஸ் வெற்றிகளை கொடுத்தவர் என்பதால் அவர் மீது எனக்கு மரியாதை.
ஜனா பேசும் விசயங்களைப் பற்றி முழுதான புரிதல் உள்ளவர். தோளில் கைபோட்டு நம்மை தோழமையுடன் அழைத்துச் செல்லும் பாணியில் கதைகளை சொல்பவர். சான்ஸ்லஸ் கிரியேட்டர்.
இந்தப் படத்தில் சிறைவாழ்வின் கொடுமைகளையும், அவர்களது பிரச்சனைகளையும் நுட்பமாக பேசுகிறார். தூக்குத் தண்டனைக் கைதி ஆர்யாவின் வாழ்வே திரைப்படம்.
இந்தப் பிரச்னை ஏற்கனவே விருமாண்டியில் பேசப்பட்டிருந்தாலும் இந்தப் படம் பிரசண்டேசனில் அசத்துகிறது.
வர்ஷன் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா என இரண்டு இசையமப்பாளர்கள். என்.கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு பல காட்சிகளில் குளுமையாக இருக்கிறது.
செமையான மேக்கிங்.
பாலா ஒரு சர்வதேச தீவிரவாதி. ரயில் கடத்தல், வங்கிக் கொள்ளை, இந்திய ராணுவத்திற்கு எதிராக குண்டுவைக்கும் முயற்சி என பல்வேறு குற்றங்கள். அவனது பார்வையில் களையெடுப்பு. சட்டத்தின் பார்வையில் கடும் குற்றம்.
பாலா ஒரு சர்வதேச தீவிரவாதி. ரயில் கடத்தல், வங்கிக் கொள்ளை, இந்திய ராணுவத்திற்கு எதிராக குண்டுவைக்கும் முயற்சி என பல்வேறு குற்றங்கள். அவனது பார்வையில் களையெடுப்பு. சட்டத்தின் பார்வையில் கடும் குற்றம்.
உணவு ரயிலை கடத்தி உணவு மூட்டைகளை மக்களுக்கு தருவதாக வரும் காட்சி. சினிமாவிற்காக படம் செய்ததில் கொஞ்சம் சேதாரம் அதிகம். கார்த்திகாவின் உடைகளே நாற்பதாயிரம் இருக்கும்! எப்படி லால் சலாம் என்று சொல்லி ஏழைகளோடு நிற்கிறார்? !
அதேபோல் ஆர்மி அட்டாக்கிற்கு செல்லும் காட்சிகள் தமிழ் திரையில் முதல் முயற்சி என்றாலும் இன்னும் கொஞ்சூண்டு உழைத்திருந்தால் நன்றாக வந்திருக்கும். இப்பவே நம்ம பசங்க ரசித்துப் பார்க்கிற மாதிரி இருப்பதால் இது போதும் என்று விட்டிருக்கலாம்.
இப்படி பாலுவின் சிவப்பு நியாயங்கள் சட்டதின் முன்னால் குற்றம் என நிருபிக்கப் பட்டு மூன்று தூக்குதண்டனைகளை அனுபவிக்கத் தீர்ப்பாகிறது. திரைகதையின் முடிச்சில் அறிமுகமாகிறார் எமலிங்கம். உண்மையில் விஜய்சேதுபதி பற்றி நிறையக் கேள்விப்படிருகிறேன் இப்போதான் அவர் படத்தை பார்கிறேன்! நாள் கேள்விப் பட்டதற்கும் திரையில் பார்த்ததற்கும் நிறைய வித்யாசம். இயக்குனர் அவரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
புரட்சிக்காரி குயிலியாக வரும் கார்த்திகாவின் பாத்திரப் படைப்பில் இருக்கும் மெனக்கெடல் மற்ற கதாபாத்திரங்களின் படைப்பில் மிஸ்ஸிங். கார்த்திகாவின் திரை வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படம். பாப்பா இன்னும் உழைக்கனும். உடல் மொழி மேம்படவேண்டும். பலூனில் இருந்து வெளிவரும் காட்சியிலும், சுரங்கத்தில் கையிற்றை பிடித்து தொங்கும் இடத்திலும் அவரையும் அறியாமல் வீக்னஸ் வெளிப்படுகிறது. இப்படி கதாநாயகிக்கு ஆக்டிங் ஸ்கோப் தரும் இயக்குனர்கள் குறைவு, சக நடிகர்கள் அதனினும் அரிது. பாப்பாவுக்கு செமையான அதிர்ஷ்டம் இந்தப் படம். குறைந்தபட்சம் ஒரு ஆறுமாதத்திற்காவது அம்மணியின் பாத்திரம் பேசப்படும்.
லேய் போதும்ல நிறுத்துல ஆர்யா தலைய பத்தி சொல்லுல என்று நீங்கள் கூவுவது எனது காதில் விழுகிறது. ஆர்யாவும் எஸ்.பி.ஜெக்காவே படத்தை ஒக்கே செய்திருக்க வேண்டும். கொள்கைக்காக வாழும், வீழும் பாத்திரத்தை இளம் பெண்களின் இதயத் துடிப்பிடம் கொடுத்ததே சவால்தான். பயல் காதலிக்கவில்லை, மரத்தை சுற்றி டுயட் பாடவில்லை ...நிச்சயமாக ஆர்யாவிற்கும் இது ஒரு பம்பர் பரிசுதான். அவர் ரசிகர்களுக்கும் அப்படியே இருந்தால் ஜனா அடுத்த படத்தை நோக்கி விரைவாய் நகரலாம்.
நான் ரொம்பவும் எதிர்பார்த்த பர்பார்மன்ஸ் விஜய் சேதுபதி! நல்லாவே செய்திருக்கிறார்! நடிகர்கள் யார்மீதும் குறை சொல்ல முடியாது. அவர்களின் பெஸ்ட்டை தந்திருக்கிறார்கள்.
12 பியில் கிடைத்த வெற்றி ஷாமுக்கு இதில் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். மனிதர் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆமா ஜனா மொசாட்டில் ட்ரைன் ஆன ஒரு உயர் அதிகாரி..... என்கிற பில்டப்பை நியாயம் செய்கிறமாதிரி ஏதாவது காட்சிகள் இருக்கா? நேக்கு தெர்ல.
புதிய மாற்றங்களை ஜெயிலில் கொண்டுவரும் பொழுது ஷாம் காட்டுகிற மிடுக்கு மட்டுமே அவர்நோக்கி எனது கவனத்தை ஈர்த்தது.
அப்போ யாரைக் குறை சொல்கிறாய் என்கிறீர்களா?
இயக்குனரைத்தான்.
இன்னும் கிராப்ட் செய்திருக்க வேண்டும். இன்னும் காட்சிகளில் நெகிழ்ச்சியினை கொண்டுவந்திருக்க வேண்டும். கூடவே திரைக்கதையில் துரிதத்தை கையில் எடுத்திருக்க வேண்டும்.
ஜனாவின் படங்கள் பாடங்கள் என்கிறார் டி.வி. எஸ். சோமு. நானும் ஒப்புக் கொள்கிறேன். சில நேரம் வகுப்பறையில் இருந்த மாதிரிதான் இருந்தது! இந்த பீல் எலிமினேட் ஆகியிருந்தால் படம் ஜனாவின் ஆகச் சிறந்த படங்களில் ஒன்றாக ஆகியிருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
கலை என்பது மக்களின் சமூகத்தின் பிரச்சனையை பேசும், தீர்வுகளை நோக்கி சமூகத்தை உந்தும் ஒரு கருவி. ஜனா தனது படங்களில் இதைத்தான் செய்கிறார். கடந்த படங்கள் தந்த வெற்றியை இந்தப் படம் அவருக்குத் தருமா என்பதுதான் இப்போது உள்ள கேள்வி. காத்திருக்கிறேன்.
எத்துனை குறைகளை அடுக்கினாலும் இந்தச் சமூக அக்கறைதான் ஜனாவின் படங்களின் மாபெரும் பலம்.
ஆல் த பெஸ்ட் ஜனா.
எனது மதிப்பெண் 7/10...
சமூக சிந்தனை உள்ளவர்கள் தவிர்க்கக் கூடாத படம்.
எலே சொல்லததை படிக்கயிலே எனக்கும் பாக்கத்தோனுதுலே சரிலே பாக்கேன்
ReplyDeleteதமிழ் மணம் ரெண்டுலே.
இணைய சூறாவளியாக முதல் வருகை...
Deleteநன்றி தோழர்
தமிழ்ப் படங்களை மட்டுமே பார்ப்பவன். உங்கள் விமர்சனம் என்னை விரைவாக பார்க்க உந்துகிறது
ReplyDeleteஇன்னாது உங்களுக்கு படம் பார்க்க நேரம் இருக்கா தோழர்...
Deleteபடம் ஒரு சிகப்பு பட்டறையில் புடம் போடப்பட்ட கலைஞரிடம் இருந்து வந்திருக்கிறது ...
பாருங்கள் பேசுங்கள்
வருகைக்கு நன்றி தோழர்
கட்டாயம் படத்தைப் பார்க்கத்தான் போறேன் ,ஏன்னா 'சமூக சிந்தனை உள்ளவர்கள் தவிர்க்கக் கூடாத படம்.'ன்னு சொல்லிட்டீங்களே :)
ReplyDeleteநீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.
Deleteமுதல் பாடல் குத்துப் பாடலாக இருந்தாலும் துணிச்சலான விமர்சனம் டாஸ்மாக் குறித்து..
ரைட்டு... பார்த்துடுவோம்...!
ReplyDeleteபாருங்கள் அண்ணா ...
Deleteபார்த்துட்டு சொல்லுங்க
அசத்தலான விமர்சனம் படம் பார்ப்பற்கான உந்துதலைத் தந்திருக்கிறது. பார்த்து விடுவேன் சகோ...
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குபின்னர் ...
Deleteவருக வருக
பார்த்தவுக நீங்க...ஒங்க பக்கடி சொல்லிட்டீங்க.....அடத்தவுக பார்த்துட்டு என்ன ா சொலற்ாங்கன்னு பாத்துட்டு, பின்னாடி பாக்லாம்மா...வேண்டாமம்முனு முடிவு எடுத்துக்கலாம்னு இருக்கேன் என்ன ....நா.... சொல்றது....
ReplyDeleteஅலோ ஜனவிற்காக பாருங்க... நல்லாத்தான் இருக்கு
Deleteஜனாவின் படம் என்றால் கண்டிப்பாக அது ஒரு நல்ல விஷய்ங்கள் பேசும் படமாகத்தான் இருக்கும். அவரின் படங்கள் எல்லாமே பார்த்திருக்கின்றோம்....உங்கள் விமர்சனம் ஜனா படத்தை நன்றாகவே தந்திருக்கின்றார் என்பது போலத்தான் இருக்கு....பார்த்துட்டாப் போச்சு....அது சரி கார்த்திகா ஜனாவின் படத்திலா?! ம்ம்ம்ம்ம் எப்படிப் பொருந்தினார்?
ReplyDeleteஜோரா பொருந்தியிருக்கிறார் ..
Deleteபாருங்க...
எனக்கும் பிடித்த இயக்குநர் ஜனா. எப்படியும் பார்த்துடணும். நீங்கவேற ஆவலைத் தூண்டிவிட்டுட்டீங்க... பார்த்துட்டு வந்து எழுதுறேன்?நன்றி
ReplyDeleteஉங்களை மாதிரி ஆக்டிவான இளைஞர்களுக்கு பிடிக்காமல் போனால்தான் அதிசயம்...
Deleteபடம் பார்க்கும் ஆசையைத் தங்களின் பதிவு தூண்டிவிட்டது. அருமையான விமர்சனப் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteசமூகத்திற்கு அவசியமான பல ஆய்வுகளை செய்த ஐயா ...
Deleteதங்கள் வருகைக்கு வணக்கம்.
நான் பார்த்திட்டேன் ..படம் அருமை ..இறுதி காட்சி ரொம்ப வலிச்சது ... (எமலிங்கம் பஞ்சடைத்த பொம்மையுடன் இருக்கும் காட்சி )
ReplyDeleteநிறையபேர் நெகிழ்ந்தார்கள்
Deleteகலைஞன் கருத்து சொல்லும் பொழுது ரொம்பக் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்கான காட்சியாகத்தான் எனக்குப்பட்டது
மது சார்
ReplyDeleteஐனாக்ஸ் தியேட்டரில் படம் பார்க்கும் வாய்ப்பு வந்தது. பொதுவுடைமை , சோசலிசம் என்று பக்கம் பக்கமாய் கொஞ்சம் வசனம் பேசி போரடித்தார்கள். காட்சிகள் சில இடங்களில் நாடகம் பார்ப்பது போல் இருந்தது. எடுத்துக் கொண்ட களம் புதுமையானது. கொடுத்த பாணி பழமையானது.