பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய படம். ஆனால் ட்ரைலர் என்னை ஈர்க்கவில்லை. அதே கிளிஷே காட்சிகள், அலறல்கள், அதே தப்பிப் பிழைத்தல் ட்ரைலர் பார்த்தவுடனேயே கதை புரிந்துவிட்டதால் படம் குறித்த அதீத எதிர்பார்ப்புகள் என்னிடம் இல்லை.
படத்தில் நான் எதிர்பாராத ஒருவிசயம் இர்பான் கான், ஒரு இந்திய நடிகர்! ஏற்கனவே இவரை லைப் ஆப் பை படத்தில் பார்த்திருந்தாலும் ஒரு மெகா பட்ஜெட் படத்தில் இவரை பார்த்தது ஆச்சர்யம். நம்ம ஆட்கள் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சி.
ஜூராசிக் பார்க்கை பார்க்க வரும் கூட்டத்தை ஈர்க்க புதிது புதிதாக ஹைபிரிட் டைனோசர்களை உருவாக்குகிறார்கள். இப்படி உருவாகிறது இண்டோமினஸ் ரெக்ஸ்.
உண்மையில் இது விலங்குகளின் ஜீன்களை எடுத்து மேலும் பல டைனோக்களின் டி.என்.ஏக்களுடன் ஓர் காக்டெயில்லாக கலக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
திட்டம் போட்டுத் தப்புவது, ஜாலிக்கு மற்ற டைனோக்களை கொலைசெய்வது, தன்னைக் கொல்ல வரும் ராப்டர்களை மனிதர்கள் மீது ஏவுவது என செமையான வேலைகளை செய்கிறது இது படத்தினை அசுர வேகத்தில் நகர்த்துவது இந்த டைனோதான்!
படத்தின் ஹீரோ கிரிஸ் பிராட்! (முந்தய பிளாக் பஸ்டர் கார்டியன்ஸ் ஆப் த காலக்சி) கடந்த பாகங்களில் பார்வையாளர்களை மிரட்டிய ராப்டர் வகை டைனோக்களை இவர் செல்ல நாய்க்குட்டிகள் மாதிரி பழக்கிவைத்திருக்கிறார். சக்தி வாய்ந்த அழிவு எந்திரங்களான இவற்றை ராணுவத்தில் பயன்படுத்த விரும்புகிறான் வில்லன்!
டோரா போரா மலையில் மட்டும் இவை கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சிலாக்கிறான் அவன்!
பெரும்பாலான அமெரிக்கர்களுக்கே இந்த வசனம் பிடிக்காது என்றே நினைக்கிறேன். பார்ப்போம்.
பல ஆ ஊ அலறல்களுக்குபின்னர் படம் சுபம்.
படத்தின் இசை தொழில் நுட்பம் என பல விசயங்கள் வழக்கம்போலவே அசத்தல். காலின் ட்ரீவோரோவிடம் இயக்கத்தை கொடுத்துவிட்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்போடு நின்றுகொண்டுவிட்டார்.
படத்தில் வரும் கண்ணாடி மோனோ ரயில், கைரோஸ்பியர் என்ற வாகனம் எல்லாம் அசத்தல். படத்தில் ஹீரோ செலுத்தும் டிரயம்ப் பைக் நம்ம பசங்களின் விஷ் லிஸ்டில் இருக்கும்!
ட்ரைலர் தந்த ஏமாற்றத்தை படம் தரவில்லை. அருகில் அமர்ந்திருந்த நிறையப்பேர் ஆழ்ந்துபோய் ரசித்தார்கள். நம்ம ரசிகர்கள் படத்தை ஒரு மெகா ஹிட்டாக்கி விடுவார்கள் என்று தோன்றுகிறது.
நிச்சயமாக ஒன் பில்லியன் வசூல் செய்யும்.
பார்த்து சலித்த காட்சிகள் என்றாலும் மீண்டும் ஒருமுறை பார்க்கவைக்கும்படி வந்திருக்கிறது படம்.
படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது விமர்சனம்
ReplyDeleteதமிழ் மணம் 2
வாங்க ஜி நலம்தானே
Deleteநிச்சயமாக ஒன் பில்லியன் வசூல் செய்யும்.
ReplyDeleteபடத்தின் தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தரும் வார்த்தை!
ஒளிவு மறைவு இல்லாத உன்னதமான பட விமர்சனம் தோழரே!
த ம 3
நட்புடன்,
புதுவை வேலு
புதிய டைனோக்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள் படத்தின் வில்லன் இண்டோ பச்சோந்தி மாதிரி நிறம் மாறுகிறது ...
Deleteபொறி வைத்து மனிதர்களைப் பிடிக்கிறது...
பல காட்சிகளில் வெகு எளிய ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வந்து கைதட்டினார்கள் எனவே தான் ஒன் பில்லியன் வசனத்தை சேர்த்தேன்.
இது ஹாலிவுட்டில் 80ஸ் ரிட்டர்ன் சீசன் !...
ReplyDeleteமேட் மாக்ஸ், 3, டெர்மினேட்டர் 5, ஜுராஸிக் வேர்ல்ட்... மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் சலிக்க ஆரம்பிக்கும் நொடியை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தொடங்கிவிட்டார்கள் முன்னால் வசூல் இயக்குநர்கள் !
பிரான்ஸில் ஜுராசிக் பயம் நேற்றுதான் ஆரம்பித்தது ! நாளை பார்க்க போகிறேன்...
நன்றி
சாமானியன்
வாருங்கள்
Deleteரோஜாத் தோட்டக்காரரே ...
வருகைக்கு நன்றி
வணக்கம்
ReplyDeleteவிமர்சனத்தை படித்த போது. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபஸ் ஜி
Deleteஅவர்களது படங்களில் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை உணரமுடிகிறது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதொழில் நுட்பம் மட்டுமல்ல நம்மை கதைக்குள் உள்ளே இழுத்துவிடுவார்கள் ...
Deleteரைட்டு... பார்த்து விடுவோம் - குழந்தைகளுக்காக...!
ReplyDeleteகுழந்தைகள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்தான் ...
Deleteநான் விமர்சனம் படிப்பதோடு சரி
ReplyDeleteநன்றி அய்யா..
Deleteரசனைகள் மாறுபட்டவை...
என்னால் பெரும்பாலான தமிழ்ப்படங்களை பார்க்க முடியாது ..
திருமணமான புதிதில் இரண்டு என்ற தமிழ்ப்படத்தை என்னுடன் பார்த்த அனுபவத்தை என் மனைவி இரண்டு ஒரு படம் இரண்டு நிமிஷத்தில் பார்த்தான் இந்த ஆள் என்ற பொருமிக்கொண்டே இருந்தது நினைவில் இருக்கிறது ...
பாட்டு, சண்டை இரண்டையும் பாஸ்ட் பார்வர்ட் செய்துவிடுவேன்..
அன்னைக்கு என்னுடன் படம் பார்ப்பதை நிறுத்தியவள்...
நம்ம ரசனை இப்படி..
என்ன செய்வது ?
நன்றி அற்புதமான ஹைக்கூ கவிஞரே ...
ReplyDeleteஅவசியம் பார்த்துவிடுகிறேன் நண்பரே
ReplyDeleteநன்றி
தம +1
வாருங்கள் கரந்தையாரே
Deleteதங்கள் வருகைக்கு நன்றி
நல்ல படம் என்று தான் சொல்கிறார்கள். நாம் நாளை பார்க்கப் போகிறோம். நான் வரவில்லை என்று சொன்னாலும் விடவில்லை வீட்டில். இப்போ தங்கள் விமர்சனம் பரர்க்க தூண்டுவதால் மகிழ்ச்சியாக செல்வேன் அவர்களுடன். நன்றி பதிவுக்கு.
ReplyDeleteவாருங்கள் சகோதரி
Deleteநீண்ட நாட்கள் கழித்து சந்தித்ததில் மகிழ்வு
நாங்களும் தமிழ், மலையாளம் என்று கலந்து கட்டி பார்த்தாலும் ஆங்கிலப்படங்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பவை. அது சரி இந்த டைனோசர் இன்னும் எத்தனை காலம் எடுப்பார்கள்....அதே க்ராஃபிக்ஸ் போரடிக்காதோ.....ப்யூட்டிஃபுல் மைன்ட், இன்டெர்ஸ்டெல்லர், இன்செப்ஷன் போன்றவைகளைச் சொல்லும் போது....ம்ம்குழந்தைகள் எஞ்சாய் செய்வார்கள்தான்....
ReplyDeleteவிமர்சனம் அருமை! வழக்கம் போல
இதில் டைனோக்கள் மட்டுமல்ல ..
Deleteகொஞ்சம் கரம் மசாலாவும் கீது
வருகைக்கு நன்றி தோழர்
ரைட்டு கண்டிப்பாகப் பார்கத்தான் வேணும்....
ReplyDeleteபார்த்தீர்களா ?
Delete