சாண்டில்யன், கோவி மணிசேகரன் நாவல்களை வெறிகொண்டு படித்தோருக்கு கிடைத்த ஜன்ம சாபல்யம் இந்தப்படம்.
ஓவரா ஹைப் வேறு. சமயங்களில் இதுவே படத்திற்கு நெகடிவ் ரிசல்டை கொடுத்துவிடும். போதாக் குறைக்கு ட்ரைலரில் கருப்பர்கள் அடிவாங்கி பறப்பதை பார்த்து காண்டாகி இருந்தேன். (கருப்பா இருக்கவங்க அடிவாங்கினால் வேறு மாறி யோசித்து தொலையும் என் மூளை). அதுவும் அடிக்கற பார்டி வெள்ளையா இருந்தா அதைவிட காண்டாவேன்!
பொதுவாக படைப்பாளிகள் ரசிகர்களின் மூளைக்குள் ஏற்கனவே பதிந்திருப்பதை பயன்படுத்திக் கொள்வார்கள். சேக்ஸ்பியரின் பல வில்லன்கள் யூதர்களானது இப்படித்தான்! அது ஒரு படைப்பாளியின் படைப்பை எளிமையாக பார்வையாளர்களிடம் எடுத்து சென்றுவிடும்.
எனது நண்பர் ஒருவர் எம்.சி.ஏ முதல் வகுப்பில் தேர்ந்த மென்பொருள் வல்லுநர். அவருடன் ஒரு ஆங்கிலப் படத்தை பார்த்துகொண்டிருந்த பொழுது வில்லன் கதாபாத்திரத்தை ஏய் இவன்தான் கொள்ளைக்கூட்ட பாஸா என்று கேட்ட பொழுது நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தது நினைவில் இருக்கு.
எனவே அன்றைய சௌகார் ஜானகி முதல் இன்றைய சரண்யா வரை ஒரு படத்தில் அழுவாச்சி கேரக்டர் என்றால் சாகும் வரை அந்தப் மாதிரி பாத்திரத்திரங்களில் தான் நடித்தாக வேண்டும்.
ராஜ மௌலியை மட்டும் நாம் எப்படி குற்றம் சொல்ல முடியும். வில்லன்கள் எப்போதும் கருப்பாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!
ஆமா எப்படி இவர் மட்டும் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸை தொடர்ந்து தகர்க்கிறார்? ஒரு படம் கூட தப்பாமல் அதிரடி சரவெடியாக இருக்கிறது.
ஒரு இயக்குனரின் படத்திற்காக இரண்டு ஆண்டுகள் ஒரு நடிகர் பட்டாளமே உழைக்கிறது என்றால் அந்த இயக்குனரின் படைப்புத் திறன் எத்தகையதாக இருக்க வேண்டும்?
மௌலி குறித்து எழுகின்ற மனச்சித்திரம் சாதரணமானது அல்ல.
ரொம்ப மொக்கையைப் போடாம படத்தை பத்தி சொல்லு என்று சீறுபவர்களுக்கு
அய்யா தொரைகளா எப்படிப்பா ஒரு பதிவில் எழுத முடியும். அம்புட்டு மேட்டர் கீதே.
ஷார்ட்டா எனக்கு பிடித்த விசயங்களை மட்டும் சொல்கிறேன்.
மாஸ் கிளாஸ் செமை என்று கொண்டாடும் அளவிற்கு பெண் கதாபாத்திரங்கள்!
எனக்கு மிகவும் பிடித்த விசயத்தில் இதுதான் முதலாவது.
இப்படி பெண் கதாபாத்திரங்களுக்கு வெய்ட் கொடுக்கும் தில் இங்கே ஒருவருக்கும் இல்லை என்கிற எல்லைக்கு போயிருக்கிறார் இயக்குனர்.
அவந்திகா பாத்திரத்தில் தமன்னா தனது காரீயரின் அடுத்த தளத்திற்கு போயிருக்கிறார். இவரது அறிமுகக் காட்சியில் அவர் எடுக்கும் ருத்ர அவதாரம் வீரியம். தமன்னாவிற்கு செமையான பாத்திரம் இது. ஆனால் அடுத்தது பிரபாஸை சந்தித்து ஹவுஸ் ஆப் த ப்ளையிங் டாகர்ஸ், ஹிடன் டிராகன் க்ரவுச்சிங் டைகர் போலவே ஒரு காதல் ஒரு காமம் என சராசரியாக சரிந்து போகிறது அவரது பாத்திரம்.
சரி ஒரு பொண்ணுதான் கதையில் வெய்ட் என்று பார்த்தால் ரம்யா கிருஷ்ணன் பாத்திரம் ஒரு பயல் மறக்க மாட்டான்.
அருவிக் கரையில் இரண்டு வீரர்களை பலி போடுவதாகட்டும், குழந்தையை கையில் இருந்து கீழே விடாமலேயே அமைச்சரை போட்டுத்தள்ளிவிட்டு அடுத்த நொடியில் குழந்தையை அணைத்துக் கொஞ்சுவதில் மாஸ் பெர்பாமான்ஸ்.
அடுத்தது அனுஷ்கா. அம்மணி இந்த பார்ட்டில் டம்மி என்றாலும் அடுத்த பார்ட்டில் அசத்துவார். இது இயக்குனரின் படைப்பு செறிவின் திமிர் அன்றி வேறென்ன.
படத்தில் பிடித்த மற்றொரு விசயம் சத்தியராஜ். பல படங்களில் கதாநாயகனாக நடித்த இன்றும் நடிக்கிற மாஸ் ஹீரோ. தமிழ் திரையுலகில் எத்துனையோ முத்திரைகளை பதித்திருந்தாலும் இந்தப் படம் சத்தியராஜின் ஆகச் சிறந்த படம்.
ஒரே காட்சி பாகுபலியை தாக்க பாயும் அவர் முகத்தைப் பார்த்தவுடன் ஈட்டியைப் போட்டுவிட்டு சறுக்கிக் கொண்டே போய்க் கொடுக்கிறாரே ஒரு முகபாவம்.... சான்சே இல்லாத மேட்டர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே தனது தலையில் பிரபாஸின் காலை எடுத்து வைத்துக் கொண்டு பார்பவர்களை அதிரவைக்கிறார். இது போதாது என கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் அடுத்த பாகம் வரும் வரை ரசிகர்கள் மனதில் அப்படியே இருக்கும் சத்தியராஜின் உருவமும் நடிப்பும்.
இந்த ஆண்டின் பல விருதுகளை சத்தியராஜ் பெற வாய்ப்பு இருக்கிறது.
படம் நிச்சயமாக உலகத்தரம் என்று சொல்ல வைப்பது மொக்கைக் காதல் வழியும் முதல் பாதியல்ல இரண்டாம் பாதிதான்!
ஒரு காட்சியில் அந்தரத்தில் பறந்து சுழன்று ஓடும் வில்லன் ஒருவனின் தலையை வெட்ட அதைத் தொடர்ந்து அவன் முண்டமாக ஓடுவது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.
யப்பா மேக்னேஷ் பீட்டர் ஹெயின் பத்தி முதல்ல எழுதப்பா. படத்தின் ஹீரோவே பீட்டர்தான் என்கிற அளவில் இருக்கின்றன சண்டைக் காட்சிகள்.
படத்தின் பிரமாண்டக் காட்சிகள் என்று சி ஜி ஐயில் மட்டும் இருக்கும் அருவி, அதில் பிரபாஸ் ஏறுவது என பிரேம் பிரமாண்டம். ஆனால் இயல்புக்கு மாறான இயல்பு அது. சினி இயல்புக்கே மாறானது அது!
பல இடங்களில் ப்ரோபோர்ஷன் காலியாகிருக்கிறது. முழங்கால் அளவு நதிநீரே உங்களை அடித்து செல்ல போதுமானது ஆனால் ஆர்பரித்து விரையும் தோள் அளவு நீரில் நின்று நிமிடக்கணக்கில் வசனம் பேசுகிறார் ரம்யா. வாட்யா நீங்களுமாய்யா? அவர் குழந்தையை உயர்த்திப் பிடிக்கையில் சரியாக ரெண்டர் ஆகாத குழந்தையின்கால் பளிச்சென தெரிகிறது.
அவதார் போன்ற படங்கள் ஏன் ஆண்டுக்கணக்கில் தயாரிப்பில், பின் தயாரிப்பில் இருக்கிறது என நாம் உணர இத நொடிநேர தவறு போதும்.
ஒரு இலையில் இருந்து சொட்டும் நீருக்கு ரெண்டரிங் தர ஒரு நாள் முழுதும் கணிப்பொறிகள் இயங்கியவாறே இருக்கும் என்று சொல்லக் கேள்வி. அந்த பட்ஜெட்டும் காத்திருப்பும் நம்ம தயாரிப்பாளர்களுக்குக் கிடையாது. நட்சத்திரங்களுக்கும் பெரும் சவால்தான்.
இறுதிக் கலை வெளிப்பாடு என்பது இன்னும் மேம்பட்டதாக இருப்பது இந்த காத்திருத்தலின் காரணமாகத் தான்.
சமீபத்தில் மரித்த ஜேம்ஸ் ஹார்னர் டைடானிக் திரைப்படத்திற்கு ஒரு ஆண்டு முழுதும் அதிகாலை தன்னுடைய இசைப்பணியை ஆரம்பித்து நடு நிசிவரை தொடர்ந்தவர். இப்படி உழைப்பதால்தான் அவர்களின் படைப்புகள் உலகளவில் நெகிழ்ந்து ரசிக்கப்படுகின்றன.
எது எப்படியோ
இந்தியத் திரையுலகில் பாகுபலி ஒரு மைல் ஸ்டோன் படம் மட்டுமல்ல டச் ஸ்டோன் படமும் கூடத்தான்.
எஸ்.எஸ்.ஆர் ஆரம்பித்து வைத்துவிட்டார். உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு படங்களைக் கொடுக்க. பார்ப்போம் எத்துனைப் பேர் தொடர்கிறார்கள் என.
முத்து ஓடின மாதிரி ஜப்பான், யூரோப்பில் புதிய ரசிகர்கள் பார்க்கிறார்களா ரசிக்கிறார்களா என அறிய உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்.
இந்தப் படத்திற்கு நான் எதிர்பார்க்கும் ரிசல்ட் இந்தியர் அல்லாத எத்துனை ரசிகர்களை இந்தப் படம் ஈர்க்குது என்பதில்தான் இருக்கு. நிச்சயம் ஈர்க்கும்! பொறுத்திருப்போம்.
அன்பன்
மது
படம் மாதிரியே இந்த விமர்சனமும் அசத்தல்.உங்கள் நடையில் இருந்து மாறுபட்டது போல் தோன்றுகிறது
ReplyDeleteபார்த்துடீங்களா ...
Deleteகருத்துக்கு நன்றி ...
ஷார்ட்டா மேட்டர் நல்லாயிருக்குங்க...
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteவித்தியாசமான விமர்சனம் கண்டேன். நன்றி.
ReplyDeleteஅருமையான வித்தியாசமான பதிவு. தங்களிடமிருந்தது நான் எதிர்பார்த்ததும் இதைத் தான். பிரபாஸ் இயக்குநர் சொன்னதைக் கச்சிதமாக செய்திருக்கிறார் என்று தான் நான் சொல்வேன். பிரபாஸ்-தமனா காதல் காட்சிகள் இலக்கிய புனைவுகளின் தழுவல் போல தெரிகிறது.
ReplyDeleteஇதுகுறித்து விரிவாக பேசுவது கலைஞர்களின் இரண்டு ஆண்டு உழைப்பையும் காத்திருப்பையும் புண்படுத்தலாம் எனவே ஒரு மதம் கழித்து இன்னொரு பதிவை வெளியிட விருப்பம்
Deleteநன்றி பாண்டியன்
எழுதரதுக்கு நிறைய மேட்டர் இருக்குங்ணே ! கிளைமேக்ஸ் சீன் போர்க்காட்சிகளுக்கு மட்டும் 2000 ஸ்டண்ட் மேன் பயன்படுத்துனாங்க . அதுனால தா அந்த சீன்ஸ் எல்லாம் பர்பெக்சன் தெரிக்குது. அதே மாதிரி ராஜ்மௌலியே ஒரு பர்பெக்ட் ஸ்டண்ட் டைரக்டர் தாங்ணா. இந்திய அளவில சிறந்த சண்டையெல்லாம் கண்டிப்பா ராஜ்மௌலி படங்கள் வந்துடும். பீட்டர் ஹெய்ன் கூட ஒரு ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோ கிராபரும் சில காட்சிகள் உதவிருக்காரு . படத்துக்காக ப்ரபாஸ் ரெஸ்லிங் சூப்பர் ஸ்டார்ஸ சந்திச்சி உடம்ப ரெடி பண்ரதுக்கு அட்வைஸ் வாங்கிருக்காரு . முதல் பாதில வர ப்ரபாஸ் 100 கிலோ வெய்ட். இரண்டாம் பாதில வர பாகுபலி 70 கிலோ . இட விட அதிகமா உழச்சது ராணா தான் . இப்படியான விசயங்கள சொன்னா அதுவே 20 பக்கம் வரும்ணே . பக்கலாம் அடுத்த பார்ட் வரதுக்குள்ள ராஜமௌலிய ஒரு கடை கடைஞசிடரேன .
ReplyDeleteஅடுத்த பாகத்தையும் பார்ப்போம் மேக்...
Deleteவிரிவான தகவல்களுக்கு நன்றி
நண்பா கறுப்பு வெள்ளைனு நீங்க சொல்லும் போது எங்களுக்கும் என்னவெல்லாமோ நினைவுக்கு வருது...வேண்டாததுதான் வரும் வேற என்ன வரப் போகுது.......சொல்ல ஆரம்பிச்சா ...வேண்டாம்...அது இங்க ....நிற்காது.....தாங்காது அப்புறம்...மேட்டர் சினிமாக்கு அப்பால போயிடும்...
ReplyDeleteவிமர்சனம் போட்டுத் தாக்கிட்டீங்க நண்பா....தாக்கிட்டீங்கன்னா எதிர்மறை இல்ல...நேர்மறை இங்கு...பார்க்க வேண்டும்...
பீட்டர் ஹெயின் செம ஸ்டன்ட் மாஸ்டர் ...
மைல் ஸ்டோன், டச் ஸ்டோன் அப்படினு வேற சொல்லிருக்கீங்க...பார்த்துடுவோம்....
நன்றி ...
நன்றி
Deleteஉங்கள் படத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனம் மது சார்...
ReplyDeleteபடம் பார்க்கணும்..
பாருங்க பரிவையாரே ..
Deleteமுதல் பாதி மெதுவாகத்தான் நகரும்
இரண்டாம் பாதி ராக்கெட்டு ...
பாருங்கள்
படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம் அண்ணா. ஒவ்வொன்றையும் அலசி பதிவைச் சுருக்கக் கஷ்டப்பட்டிருப்பீங்க போல :)
ReplyDeleteஎல்லாப் படங்களுக்கும் இப்படித்தான்
Deleteநிகழ்கிறது ...
ரஷ் திரைப்படம் குறித்து நான் எழுதாதது எழுதியதை விட அதிகம்...
இதற்கும் இன்னொரு பதிவு என்று சொல்லியிருக்கிறேன்
வந்த அன்றுதான் நிச்சயம்..
வருகைக்கு நன்றி சகோ
அருமையான விமர்சனம் நண்பரே
ReplyDeleteபடம் பார்க்க, ரசிக்கத் தூண்டும் விமர்சனம்
நன்றி
தம +1
நயமான பின்னூட்டம் நன்றிகள் அய்யா
Deleteநீங்க தமிழ் படம் பாக்குறீங்க ஆங்கில படம் பாக்குறீங்க. நண்பர்களை சந்திக்குறீங்க மீட்டிங்க் அது இதுன்னு போய் அட்டெண்ட் பண்ணுறீங்க...வலைத்தளத்தில் எழுதுறீங்க. பேஸ்புக்குல நிறைய படித்து ஷேர் பண்ணுறீங்க. இதெல்லாம் பண்ணிகிட்டு கூடவே மனைவியையும் சமாளித்து கொண்டே அவங்கிட்ட அடி வாங்காமலும் தப்பிகிட்டு இப்படி அருமையாய் விமர்சனமும் எழுதுறீங்க...நிச்சயம் நீங்கள் பெரிய ஆளுதாங்க
ReplyDeleteமதுரைத் தமிழன்.... :))))
ReplyDeleteஅருமையான விமர்சனம். பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் படம். நிச்சயம் பிரம்மாண்டமாக எடுதிருப்பார்கள் என்பதால் பார்க்க நினைத்திருக்கிறேன். இந்த வாரத்தில் செல்ல வேன்டும். இங்கே ஹிந்தியில் பார்க்க வேண்டிய சூழல். தமிழ் படம் பார்க்க வெகு தொலைவு செல்ல வேண்டும் என்பதால் கொஞ்சம் யோசனை!
படத்தை... பார்த்தாகிவிட்டது..தொலைக்காட்சியில் வரும்போது தாங்கள் சொல்லாத விபரத்தையும் பாத்துக்கிலாம் த.ம்8
ReplyDeleteமது சார்
ReplyDeleteவிமர்சனம் அருமை . படம் பார்த்தேன் . ரசித்தேன். மிகவும் பிரமாண்டமான படம் . சரித்திரக் கதைகள் வாசித்தபோது நமது மனபிம்பத்தில் தோன்றிய விசயங்களுக்கு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது .
கறுப்பர் வெள்ளை பார்வை ஒரு அரசியல் பார்வை. கறுப்பு நிறத்தவன் என்றால் வில்லன் , கொடுங்கோலன் என்று பழைய சினிமா ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மறையவில்லை. மக்களுக்கு எளிதாய் புரியவைக்க ராஜமௌலிக்கு வேறு வழிகள் தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். தென்னிந்திய சினிமாக்களில் காலங்காலமாய் காட்டப்படும் கறுப்பு வண்ணம் பூசிய காட்டுமிராண்டிகள் அவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் . மற்றபடி கறுப்பு மேல் காழ்ப்புணர்வை திணிப்பதாக தோன்றவில்லை. நீங்கள் சொன்னது போல் இன்னும் எழுத வேண்டியது நிறைய அந்தப் படத்தில் உள்ளது.
போர்க் காட்சிகள் பிரமாதம் என்றாலும் ' மெல் கிப்சன் ' பிரேவ் ஹார்ட் என்ற படத்தில் பத்து வருடங்களுக்கு முன்பே அதை விட பிரமாதமாக காட்டிவிட்டார். அந்தப் படத்தை பார்த்துவிட்டு ' போர் என்றால் இவ்வளவு கொடூரமானதா ...' என்னும் அதிர்ச்சியும் பிரமிப்பும் பல நாட்கள் நீடித்தது.