எம்.ஐ.இ.டி சி ப்ளாக் |
கடந்த வாரம் ஒரு பயிற்சிக்காக திருச்சி எம்.ஐ.ஐ.டி கல்லூரிக்கு சென்றிருந்தேன். திருச்சி ஆர்.எம்.எஸ்.ஏ பொறுப்பில் நடைபெற்ற நிகழ்வு. அதிகாலை புறப்பட்டு அதிர்ஷ்டவசமாய்க் கல்லூரி வாசலில் இறங்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன். சாலிடாய் இரண்டு கிலோ மீட்டர்கள் இருக்கும்.
நந்தன் அனுப்பியிருந்த தும்பா குமாரியின் ஆஷிக் டூ பாடலைத் துணைக்கு வைத்துக்கொண்டு நடந்தேன். உயிரை உருக்கும் குரல்.
வளாகத்தில் முதலில் என்னை வியப்பில் ஆழ்த்தியது ஒரு மசூதி. தூரத்தில் பிரமாண்டமாய்த் தோன்றும் இது அருகே செல்ல செல்ல சிறியதாவது ஒரு கட்டிடக் கலை நுட்பம்.
MIET Mosque |
இந்த ஆண்டு அவர்கள் கல்லூரி சேர்க்கை நடைபெற இருந்த குளிரூட்டப்பட்ட அறையை எங்கள் பயிற்சிக்காக ஒதுக்கியிருந்தார்கள்! மாநில பயிற்சி ஆலோசகர் தலைமையேற்க பயிற்சி இனிதே துவங்கியது. காலை முழுதும் திரு.செல்வநாதன் அவர்களின் போனிக் பயிற்சி. மனுஷன் பட்டாசு கிளப்பீட்டார்.
இத்துணைக்கும் அவர் செய்தது அனைவரும் அறிந்த எளிய பயிற்சிகளைத்தான். இருப்பினும் ஒரு தேர்ந்த பயிற்சியாளர் என்று தன்னை நிருபித்துவிட்டார் பேரா.செல்வநாதன்.
நேர்த்தியாக நடந்த இந்தப் பயிற்சி, எந்த வித அடிப்படை புரிதலும் இல்லாமல் வழங்கப்படும் பயிற்சிகளின் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருகிறது என்பதை உணர்த்தியது.
திரு.ஜெயப் பிரபு, |
பயிற்சியில் சில சிகரங்களைத் தொட்ட எனது நண்பர் ஒருவர் என்னுடன் வேதனையுடன் ஒரு விசயத்தை சொன்னார்.
எல்லோர்க்கும் பயிற்சி கொடுத்துடலாம் ரொம்ப சவாலாகவும் சங்கடமாகவும் இருப்பது ஆசிரியர் பயிற்சிகள்தான்.
நான் மெல்லக் கேட்டேன். நீங்கள் எங்கே பயிற்சி கொடுகிறீர்கள்?
வகுப்பறைகளில்தான்.
எந்தமாதிரி அமரும் வசதியில்..
டெஸ்க் மற்றும் பெஞ்சுகள்தான்.
பிரச்சனையே அதுதானே தோழர். டிப்பிங் பாய்ன்ட் படிக்கலையா நீங்க என்றவுடன் அவர் முகம் ஒரு கணம் சுடர்விட்டு ஒளிர்ந்தது.
சூழல்களின் தாக்கம் மனிதர்களின் மீது எப்போதுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. வகுப்பறை மேசைகளில் எவ்வளவு வயதான ஆசிரியர்கள் உட்கார்ந்தாலும் இந்த pullலில் இருந்து தப்ப முடியாது!
இதுதான் பயிற்சியாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால். அவுட் பவுண்ட் பயிற்சியாகவோ, செயல்பாடுகள் நிறைந்த பயிற்சியாகவோ கொடுத்தால் பயிற்சி அனுபவம் இருவருக்குமே நன்றாக இருக்கும்.
செல்வநாதன் செயல்பாடு மீண்டும் செயல்பாடு மேலும் செயல்பாடு என்று பட்டையைக் கிளப்பிவிட்டார்.
வழக்கம்போலவே இதை நாம எப்படி நமது மாவட்ட பயிற்சிக்கு எடுத்துச் செல்வது என்று விவாதங்கள் நடந்தது. எடுத்துக் கொள்ளும் விசயங்களைவிட கொடுக்கும் விசயத்தில் நாம் எப்போதுமே கவனமாக இருப்போம். நமக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் மட்டும்!
அருமையான ஒரு மதிய உணவுக்குப் பின்னர் மதியம் முனைவர். ஜெயச்சந்திரன் பட்டையைக் கிளப்பினார். ஒரு ஆசிரியராக நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது என உணரவைத்தது அவரது பயிற்சி. என்ன பிரச்னை என்ன என்றால் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.
தமிழக பள்ளிப் பாடநூல்களை எழுதிய பெட்ரா, சிவராஜ்ஜூடன், பேரா. பாலகுமாரும் மறுநாள் பயிற்சி வழங்கினார்கள்.
என்சிஎப், புதிய கற்றல் நுட்பங்கள், செயல்பாடுகளுக்கான குறுந்தகடுகளைத் தயாரித்தல் என செம டிமாண்டிங் பயிற்சி.
மிக அருமையான என்.சி.ஆர்.டி கையேடு ஒன்று கிடைத்தது. முகநூலில் சிகரங்களைத் தொட்ட எழுத்தாளார் தஞ்சை ஆசிரியர் திரு.ஜெயப்பிரபுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. ரொம்பவும் மகிழ்வான நிகழ்வு இது.
மாவட்ட கல்வி அலுவருக்கான தேர்வை எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் நண்பர் சரவணனை நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்தேன். கடந்த தேர்வில் கலந்துகொண்டு காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மத்யாசையும் சந்தித்தேன்.
இப்படி மூளைக்கும் இதயத்திற்கும் நிறைய இன்புட்ஸ் இந்த இரண்டு நாள் பயிற்சியில்.
நன்றிகள் ஆர்.எம்.எஸ்.ஏவிற்கு.
வாழ்த்துக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை திறம்படச் செய்த
திருச்சிமாவட்ட ஆர்.எம்.எஸ்.ஏ குழுவிற்கும்.
சிவராஜ் ஆங்கில ஆசிரியர்கள் தனியே செயல்பட்டால்தான் விடிவு என்ற கருத்தைக் கொண்டவர். இது குறித்து புதுகை புனித இருதய மகளிர் பள்ளியில் ஒருமுறை பேசியிருக்கிறார். ஆனால் அன்று நண்பர்களின் ஒத்துழைப்பு இல்லை. இன்று கொஞ்சம் தேவலை. சிவராஜ் எங்களுக்கு சிவாஜி. அவர் சொன்ன என்னை உலுக்கிய நிகழ்வை தொடரும் பதிவில் சொல்கிறேன்.
இரண்டு நாட்களும் சிரித்த முகத்துடன் சவாலான இந்தப் பணியை திறம்பட நிகழ்த்திய மாவட்ட கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஒவ்வொருவருக்கும் இனிப்புகளை வழங்கி நிகழ்வை நிறைவு செய்தார்.
நிறைவு விழாவில் பேசிய நிறுவனத்தின் தலைவர் திரு.முகமது யூனுஸ் பள்ளிகளில் ஆங்கிலத்தில் இன்னும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார். பதில் மிகநீண்ட பதிவாக வரும் பின்னால்.
அன்புடன்
மது
ஜெயப் பிரபு |
கிஷோர், முனைவர் ஜெயச் சந்திரன் மற்றும் சிவாஜி !
பயிற்சியை அனுபவித்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்
ReplyDeleteபத்தாம் வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியருக்கு பயிற்சிகள் தேவையானவை ...
Deleteஅதே சமயம் அளவோடு இருந்தால் நலம்.
அளவு மீறா பயிற்சி
Deleteஎனவே
நன்றாக இருந்தது
இந்த பதிவு நீங்கள் பயிற்சியை அனுபவித்திருக்கிறீர்கள் என்பதை மட்டும் அறிய முடிகிறது. ஆனால் அங்கு எப்படி பயிற்சி அளித்தார்கள் என்னென்ன புதிய முறையை எப்படி கையாள வேண்டும் என்று சொல்லி கொடுத்திருக்கலாம் அதை நீங்கள் சுவைபட எழுதி இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. இதை சொல்லக் காரணம் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு பல ஆசிரியர்களுக்கு பல கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு கிடைக்காமல் போய் இருக்கலாம். அதனால் நீங்கள் பெற்ற பயனுள்ள தகவல்களை இங்கே பகிரும் போது அது பலரைஸ் சென்று அடையும் அதானல் பல ஆசிரியர்கள் மட்டுமல்ல நிறுவனங்களும் பயன் பெறும். உங்களை போன்ற ஆசிரியர்கள் நடத்து தளம் பலரைச் சென்று அடைகிறது சர்ச் இஞ்சின்கள் மூலம் அதனால் தேடுவோர்களுக்கு நல்ல பயன் உள்ள செய்திகளை உங்கள் தளம் தரட்டும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநிறய எழுதினால் கற்பித்தல் நுட்ப பதிவாகவோ
Deleteதற்பெருமை பதிவாகவோ நீண்டுவிடும் என்று சுருக்கினேன்.
கருத்துக்கு நன்றி
மிகச் சிறந்த பதிவு நட்பே! அடியேனையும் நினைவு கொண்டு புகைப்படத்தோடு வெளியிட்டு கௌரவப்படுத்தியிருக்கிறீர்கள். நெஞ்சார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்...
ReplyDeleteநன்றி தோழர்
Deleteஉங்கள் படத்தை என் முகநூல் பக்கத்தில் போட்டவுடன் திருச்சி தாசில்தார் ஒருவர் அலைபேசியில் வந்தார்...
உங்கள் உயரம் உங்களுக்கு தெரியாமல் இருப்பது வரம் ...
தொடர்க
நீங்கள் பெற்ற இன்பம் நீங்கள் பெற்றதாகவே இருக்கட்டும் ,காதிலே வாங்கியதை எழுத்திலே கொண்டு வருவது சிரமமான காரியம் :)
ReplyDeleteஅப்படியல்ல அது ஆசிரியர்களுக்கான பதிவாக மட்டும் சுருங்கிவிடும் என்று நினைத்தேன்.. எனவே தவிர்த்தேன்.
Deleteஆமா இன்னொரு தளத்தில் அந்த விசயங்களை பகிர இருக்கிறேன்