உமாசங்கர் ஐ.ஏ.எஸ் எல்காட்டின் தலைவராக இருந்தபொழுது எமது பள்ளிக்கு கணிப்பொறிகள் வழங்கப்பட்டன. அவற்றுடன் ஒரு பெருந்திரை காட்சி வீழ்த்தியும் (அட எல்.சி.டி ப்ரஜக்டர்தான்ப்பா) வழங்கப்பட்டது.
அனேகமாக தமிழகத்தில் அதிக முறை அவற்றைப் பயன்படுத்திய பள்ளிகளில் எமது பள்ளியும் ஒன்று!
கணித ஆசிரிய சகோதரி பயன்படுத்தியதும் நினைவில் இருக்கு. திடீரென புள்ளிகள் தோன்றி காட்சிகள் தெளிவில்லாது போய்விட்டன.
வழக்கம் போல கூகிள் ஆண்டவரைக் கேட்க அவரோ அபிஸ்டு இ.எம்.டி சிப் காலி விலை பதிமூன்று ஆயிரம் என்று சொல்லி கலங்கடித்தார்.
இப்படி ஓராண்டு ஓடிய பின்னர், நேற்று நண்பர் ஸ்ரீயுடன் திருச்சியில் நடந்த புகைப்படக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். காமிராக்கள் குறைவாகவும் மென்பொருட்கள் நிறையவும் இருந்த அரங்கை சுற்றி வந்த பொழுது ரிக்கோ கடை கண்ணில்படவே நின்று விசாரித்தேன்.
வயலோகம் பள்ளியில் பணிக்குச் சென்றிருந்த பொழுது அங்கே பார்த்த ஒரு நகலி நினைவில் வந்தது. அது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டது.
இப்படி என் பள்ளிக்கு வாங்குவது எப்படி என்று கேட்டபோது பொறுப்பாக பதில் வந்தது. ஒரு மாதிரி விண்ணப்பத்தையும் காண்பித்தார்கள்.
குறிப்பாக எல்.கார்த்திகேயன் விழுந்து விழுந்து விவரம் சொன்னார்.
அரங்கைப் பார்த்த என்னை ரிக்கோ லேசர் பிரிண்டர்கள் ரொம்பவே கவர்ந்தன. அவற்றுடன் இருந்த ப்ரொஜெக்டர் ஒன்று என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அய்யா தெய்வங்களா நமக்கு நாமே திட்டத்தில் ப்ரஜக்டர் வாங்கலாமா என்ற பொழுது முடியுமே என்று வந்த பதிலை நம்பவே எனக்கு சில நொடிகள் ஆனது.
வெறும் ஏழாயிரம் ரூபாயை பொதுமக்கள் பங்களிப்பாக செலுத்திவிட்டு, விண்ணப்பத்தை முதன்மைக் கல்வி அலுவலருக்கோ, அல்லது வட்டார வளர்ச்சி அலுவலருக்கோ அனுப்பி ஒரு கையொப்பம் வாங்க வேண்டும். இரண்டு வாய்ப்புகள் இருக்கு. யாரவது ஒரு அதிகாரியிடம் கையொப்பம் வாங்கினால் போதும்.
இன்னும் பள்ளியில் பேசவில்லை. இனி கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்!
வாங்கிடுவோம்ல !
மேலும் விவரங்களுக்கு
L. Karthikeyan
Channel Support Manager
Ricoh India Limited
CLR Green Field Centre
1St Floor, 70/2, R.R. Layout,
R.S. Puram, Coimbatore- 641 002
Tel + 91-9976066788
l.karthikeyan@ricoh.co.in
www.ricoh.co.in
பகிருங்கள் ஆசிரியர்களிடம்
அன்பன்
மது
அன்புள்ள அய்யா,
ReplyDeleteஅரசுப் பள்ளிக்கு ஏழாயிரம் ரூபாயில் ஒரு பெருந்திரை காட்சி வீழ்த்தி
(எல்.சி.டி ப்ரஜக்டர்) பற்றி
வெறும் ஏழாயிரம் ரூபாயை பொதுமக்கள் பங்களிப்பாக செலுத்திவிட்டு, விண்ணப்பத்தை முதன்மைக் கல்வி அலுவலருக்கோ, அல்லது வட்டார வளர்ச்சி அலுவலருக்கோ அனுப்பி ஒரு கையொப்பம் வாங்க வேண்டும். இரண்டு வாய்ப்புகள் இருக்கு. யாரவது ஒரு அதிகாரியிடம் கையொப்பம் வாங்கினால் போதும் என்ற தகவலைத் தந்ததற்கு மிக்க நன்றி.
அவசியம் நமது ஆசிரியர்களிடம் பகிர்வோம்.
நன்றி.
த.ம. 2
நல்லது விரைவில் நடக்கட்டும்...
ReplyDeleteநன்றி அய்யா
Deleteபல பள்ளிகளில் ப்ரொஜெக்டர் பயன்படுத்தப் படாமலே தூங்கிக் கிடக்கிறது. உங்கள் பள்ளி ப்ரஜெக்டர் அதியமானின் ஆயுதங்கள் போல பயன்படுத்தி பயன்படுத்தி பழுதடைந்தமைக்கு வாழ்த்துகள்
ReplyDeleteபுதிய பயனுள்ள தகவல்.
உண்மைதான்
Deleteஒரு திட்டத்தின் மூலம் பயன்படுத்தப் படாத அவற்றை பயன்படுத்துபவர்களுக்கு கொடுத்தால் கோடி புண்ணியம் கிடைக்குமே
நல்ல பயனுள்ள பகிர்வு! தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு..
ReplyDeleteகாட்சி வீழ்த்தி, நகலி....
ReplyDeleteபலே..பலே...
ஆகா .... நன்றி நன்றி
Deleteநல்ல முயற்சி! தொடருங்கள்!
ReplyDeleteநன்றி
Deleteநல்ல செய்தி. பல பள்ளிகள் பயன்பெறட்டும்....
ReplyDeleteநன்றிகள் தோழர்
Deleteநல்ல தகவலாச்சே...சகோ
ReplyDeleteநன்றி சகோ
Deleteதகவலுக்கு நன்றி கூறமாட்டேன் என்னை அங்கு கூடிசென்றதற்கு நன்றி அய்யா...
ReplyDeleteநன்றிகள் நல்ல அனுபவம் அன்று
Deleteஇன்னொரு பதிவு நாளை வரும்