கொஞ்சம் நுட்பம்

ஒரு ஞாயிறு செல் அழைப்பு ஒன்று.

நீண்டநாள் அழைக்காத முன்னாள் மாணவர் ஒருவர். "வீட்டுக்கு வாங்க" சுருக்கமாக முடித்துவிட்டார்.



வீட்டுக்கு வந்திருந்த மாப்பிள்ளையிடம் சொன்னேன் எதோ புதுசா பர்ச்சேஸ் ஆகியிருக்கு அதான் அழைப்பு.

வாகனம் என்றால் வீட்டிற்கு வந்து காட்டிவிட்டு செல்லும் அவர் (ஆமா அவர்தான் இன்னைக்கு ரெண்டு குழந்தைகள் அவருக்கு) அழைக்கிறார் ஏதோ யு.ஹச்.டி டீவியாக்தான் இருக்கும் என்று ஊகித்தேன்.

மாலை நகருக்குச் சென்றபொழுது அவர் வீட்டிற்கு சென்றேன்.

கிட்டத்தட்ட சரி. ஆனால் முன்னொரு உரையாடலில் வாங்கவே மாட்டேன் என்று சொன்ன ப்ரொஜெக்டர்! எப்சன் திரீடி ரெடி. காட்சிகள் அசத்தியது. பலமுறை பேசியிருக்கிறோம் நம்ம டேஸ்டுக்கு ஒரு தியேட்டர் கட்டவேண்டும் என்று. பயல் முந்திவிட்டான். ஒரு பர்சனல் தியேட்டர். டால்பி ரிசீவருடன். எழுபத்தி ஐந்து ஆனது சார் என்றான்!

எனக்குத் தெரியும் அய்யாவின் பேரம் பேசும் திறன். உண்மையான விலை அதைவிட  அதிகம்தான்!

தொடர்ந்த உரையாடலில் என்.டி.எப்.எஸ்சில் மெமரி கார்டை ரெடிசெய்து ஹுவாய் டாபில் போட்டிருப்பதாகவும் பெரிய பைல்கள்கூட அசாத்தியமாக டவுன்லோட் ஆவதாகவும் சொன்னான்.

எனக்கு ஆச்சர்யம். கடந்த வருடம் முதல் வயர்லஸ் இணைய பயன்பாட்டில் இருந்தாலும் என் புத்தியில் ஒரு ஆர்.ஜே 45 இருந்தால்தான் பெரிய பைல்கள் டவுன்லோட் ஆகும் என்று உறுதியாய் ஒரு கருத்து இருந்தது.

அது தகர்ந்தது.

கரண்ட் செலவில் இருந்து, கணிப்பொறியின் வாழ்நாள் வரை பல்முனைச் சேமிப்பைத் தரும் இந்த நுட்பம்.

நான்கு ஜி.பிகளுக்கு குறைவான பைல்கள் என்றால் பாட்32 பைல் சிஸ்டத்தில் முடியும். ஆனால் எட்டு பத்து ஜீபி என்றால் மெமரி கார்ட் என்.டி.எப்.எஸ் பைல் சிஸ்டத்தில் பார்மட் செய்யப்படவேண்டும்.

இது என்ட்ரி லெவல் போன்களில் வேலை செய்யாது. ஆனால் ஹுவாய் ரக போன்கள் எளிதாக கையாள்கின்றன.

இப்பொது எனது மோட்டோ இ அநியாயத்திற்கு  டவுன்லோடு செய்கிறது! :-)

தேவையான ஆப்கள்
பிட் டொரண்ட்

இந்த ஆப் சிறிய போன்களில் நான்கு ஜி.பிக்குள் உள்ள பைல்களை அனாயாசமாக தரவிறக்க உதவுகிறது.

என்ட்ரி லெவல் போன்களில் நான்கு ஜி.பிக்களுக்கு அதிகமாக உள்ள பைல்களை தரவிறக்க விரும்பினால் உங்கள் போன் ரூட் செய்யப்பட்டு பாரகன் என்.டி.எப்.எஸ் என்கிற ஆப்பை நிறுவவேண்டும்.

இது கொஞ்சம் நுட்பம் அதிகம் தேவைப்படும் வேலை.

ஹுவாய்ரக போன்கள் டிபால்டாகவே என்.டி.எப்.எஸ் கார்டுகளை ஆதரிப்பதால் அவை அசத்தல் பர்பாமான்ஸ் தருகின்றன.

இன்னும் விரிவாய் தெரிந்துகொள்ளலாம் கூகிள் ஆண்டவரின் துணையோடு யூடியூப் துணையும் இருந்தால்.

சந்திப்போம்
அன்பன்
மது

பி.கு. கொஞ்சம் நுட்பமும் நிறைய புரிதலும் மட்டும் உள்ள பயனாளர்கள் மட்டும் பின்பற்றலாம். இல்லாவிட்டால் இவனால என் போன் போச்சு என்று புலம்ப வேண்டியதுதான்.

உதா: பிட் டோர்றேன்ட் ஒவ்வொரு பயன்பாட்டின் பொழுதும் சில விளம்பரங்களைக் காண்பிக்கும். அதில் பெருக்கல் குறி எங்கே இருக்கு என்று பார்த்து மூடவேண்டும். அல்லது பாக் பட்டன் அழுத்த வேணும். இல்லை எனில் சம்பந்தமே இல்லாத ஒரு ஆப் டவுன்லோடு ஆகலாம்!
இவை குறித்த புரிதல் உள்ளோர் செய்யவேண்டியது இந்த முயற்சி.

Comments

  1. நம்மை விட நம் மாணவர்கள் புத்திசாலியாக இருப்பது பெருமைக்குரிய ஒன்று தான்

    ReplyDelete
    Replies
    1. I always learn something from him.
      He thought me Flash animation once.

      Delete
  2. பிட் டோரண்ட் பயன்படுத்திய நாட்கள் இப்போது இல்லை...

    ReplyDelete
  3. நல்ல தகவல் நன்றி தோழரே!

    ReplyDelete
  4. வாழ்க தொழில் நுட்பம்!..:)

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சகோ

      Delete
  5. அழைப்பின் காரணம் இதுதானோ?

    ReplyDelete
    Replies
    1. 2002 இல் ஒரூ பாலிபோனிக் சாம்சங் மொபைலை வாங்கி அதை வீட்டிற்கு எடுத்து வந்து காட்டினார்.
      இன்னொரு நாள்
      திடீரென இரவு ஒன்பது மணிக்கு புதிய இண்டிகா ஒன்று வாசலில் வந்து நின்றது ...
      இப்படி எதை வாங்கினாலும் என்னுடன் பகிர்ந்துகொள்வார்...
      நகர்த்தும் பொருட்கள் என்றால் வந்தும்
      ஏனைய பொருட்களை அழைத்தும் மகிழ்வைப் பகிர்வது இவர் பழக்கம்

      இன்று 2015 அன்றய பழக்கம் இன்றும் தொடர்கிறது..

      Delete
  6. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் கவிஞரே

      Delete
  7. இதெல்லாம் வினோத் ஏரியா :-)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் எல்லையை விரிய செய்க ..
      சப்பை மேட்டர்தான் இது உங்கள் திறமையை வைத்துப் பார்க்கும் பொழுது
      முயலுங்கள் சகோ

      Delete
  8. தகவலுக்கு நன்றி.... பி.கு எல்லோரும் படில்லப்பட வேண்டிய ஒன்று.... அருமை அய்யா....

    ReplyDelete
    Replies
    1. அசத்தும் ஆர்.பிக்கு வணக்கங்கள்,
      அதுன்னங்க புதுவார்த்தை

      Delete
  9. பிட் டோரண்ட் முன்னர் பயன்படுத்தி இருக்கிறேன்...
    தகவலுக்கு நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. பயன்படுத்துங்கள் பரிவையாரே

      Delete
  10. தகவலுக்கு நன்றி நண்பரே
    தம+1

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா,

    முன்னாள் மாணவர் எதை வாங்கினாலும் என்னுடன் பகிர்ந்து கொள்வார் என்பது அவர் தங்கள் மீது வைத்துள்ள அன்பையும் மரியாதையையும் காட்டுகிறது. கொஞ்சம் நுட்பம் தெரிந்து கொண்டேன்.

    நன்றி.
    த.ம.7

    ReplyDelete

Post a Comment

வருக வருக