திருச்சி புகைப்பட பொருட்கள் கண்காட்சி. நிகழ்வுகள்


விடுதலை  கொண்டாட்ட நாள் மதியம் திருச்சியில் நடைபெற்ற புகைப்பட கருவிகள் கண்காட்சிக்கு போவதாக ஸ்ரீயிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.



மதியம் புறப்பட்டு ஒரு நான்கு மணிக்கு கண்காட்சி நடந்த கலைஞர் அறிவாலயம் அடைந்தோம். அசத்தும்  விதத்தில் கட்டப்பட்டிருந்தது அறிவாலயம். பதிவு முடிந்ததும் அரங்கத்தை பார்க்க ஆரம்பித்தோம்.

ஆன் தி ஸ்பாட் ஹெச் டி வீடியோ மிக்சர்கள் வரவேற்றன. விலை சும்மா நாலு லெட்ச்சங்கள்  மட்டுமே. அடுத்ததாக எங்களை மிகவும் கவர்ந்த ஸ்ரீ வெங்கடேஷ்வரா போட்டோ ஸ்டுடியோ பார்வைக்கு வைத்திருந்த விதவிதமான போட்டோ பிரேம்கள். செமையான கலக்சன். பரிசுப் பொருள்களுக்கு நல்ல தேர்வு.

இப்படி பல்வேறு மின்னணு சாதனங்களை பார்த்த போதுதான் எங்கள் பள்ளி எல்.சி.டிக்கு ஒரு விடிவு கிடைத்தது.

இயல்பாகவே காமிரா ஆர்வம் உள்ளவன் என்பதால் மட்டுமே இந்த கண்காட்சிக்கு சென்றேன். அங்கே எனக்கு  ஒரு இனிய பரிசாக கிடைத்துதான் எல்.சி.டி ஐடியா.

அரங்கில் ஒரு புகைப்படக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காமிராவை விடாமல் வேலை வாங்கினேன். அங்கேயே ஒருவர் எதோ ஷூட்டிங்கிற்கு ரெடியான மாதிரி நின்று கொண்டிருந்தார்.

மெல்லப் பேசியதில் அவர்தான் நாங்கள் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த படங்களைப் எடுத்த சம்பந்தன் என்பது தெரிந்தது. நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு ராடி லென்ஸ் போட்டு நிலாவை ஒரு  ஷாட் எடுத்திருந்தார் மனிதர். நிலவுப் பள்ளங்களெல்லாம் தெரிந்தது. பாதிப் படங்களை பழைய பில்ம் காமிராவில் எடுத்ததாக சொன்னார். பனோரமிக் காட்சிகளை அவர் எடுத்ததை விளக்கினார். அருமை.

அப்போது அங்கே வந்த ஒரு பெண்மணி வெகு இயல்பாக எங்களிடம் அங்கே இருந்த படங்கள் குறித்துப் பேசினார். காமிரா குறித்துப்  பேசிய அவர் நீண்ட காலம் காமிரா வுமனாக இருப்பதாகவும், செவன் டி காமிரவினைப் பயன்படுத்திவருதாகவும் சொன்னார்.

வெண்ணிலா போட்டோஸ் என்பது அவரது நிறுவனத்தின் பெயர். உண்மையில் பாராட்டுக்கு உரிய விசயம்தான்.

சம்பந்தன், வெண்ணிலா போன்ற புதிய நண்பர்கள் மற்றும் காணக் கிடைக்காத புகைப்படங்கள் என  ஒரு நல்ல அனுபவத்தோடு ஹோட்டல் ரகுநாத்தில் இரவு உணவை முடித்துவிட்டு புதுகை திரும்பினோம்.

சந்திப்போம்
அன்பன்
மது


Comments

  1. நிகழ்வை விவரித்தமைக்கு நன்றி தோழரே
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. இரு வித்தியாசமான புகைப்படங்கள் சொல் பயன்பாட்டு நிலையில் The Hindu நாளிதழில் நான் இந்தியப் பாராளுமன்றத்தின் வித்தியாசமான புகைப்படம் Fish Eye view of the Parliament என்ற தலைப்பில் ஒரு முறை பார்த்தேன். கிட்டத்தட்ட 360 டிகிரியில் பாராளுமன்றத்தை அப்புகைப்படத்தில் காணமுடிந்தது. நல்ல பகிர்வு. நன்றி.
    வாய்ப்பு கிடைக்கும்போது கோயில் உலா செல்ல வாருங்கள்.
    http://www.drbjambulingam.blogspot.com/2015/08/2015.html

    ReplyDelete
    Replies
    1. அது தனி லென்ஸ் என்பது என் கருத்து
      எம்.டி யில் அதிகம் பயன்படுத்துவார்கள்

      Delete
  3. திருச்சி புகைப்பட பொருட்கள் கண்காட்சிக்குச் சென்ற அனுபவ நிகழ்வுகளை நல்ல ரசனையோடு சொன்னீர்கள். இந்த கண்காட்சி பற்றிய தகவல்கள் பொதுமக்களிடம் சரியாக சேர்ப்ப்பிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில், போட்டோகிராபியில் ஆர்வம் உள்ள எனக்கே, உங்கள் பதிவைப் பார்த்ததும்தான், இப்படி ஒரு கண்காட்சி நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அடுத்தமுறை நடக்கும்போது (அருகில் உள்ள ஊரில் நடந்தாலும்) சென்றுவிட வேண்டியதுதான். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக்கு ஒரு மெம் கார்ட் வாங்க பாரதி போட்டோ ஸ்டோர் போனபோது கிடைத்த தகவல்
      எனவே
      வர முடிந்தது

      Delete
  4. நல்ல பதிவு! இன்னும் கூட சற்று விளக்கமாக எழுதியிருக்கலாம் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்
      இதுவே ஸ்ரீ என்னை மீண்டும் மீண்டும் கேட்டதால் எழுதியதுதான்

      Delete
  5. புகைப்படம் எடுப்பதிலும், புகைப்படக் கருவிகளைப் பற்றி அறிவதிலும் ஆர்வம் உண்டு....இருவருக்குமே...ஆனால் என்ன பட்ஜெட்தான்...உதைக்கும்...

    நல்ல விவரணம்...பகிர்வுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete
  6. அன்புள்ள அய்யா,

    திருச்சி புகைப்பட பொருட்கள் கண்காட்சி. நிகழ்வுகள் கலைஞர் அறிவாலயத்தில் நடந்ததைக் கண்டு வியந்ததை விரிவாக விளக்கியது கண்டு மகிழ்ந்தேன்.

    சின்னதாக ஒரு நல்ல கேமரா வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.

    நன்றி.
    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படிங்க எந்த காம் நல்லா இருக்குன்னு
      போட்டோ கிராபிக்கு தமிழில் அருமையான ஒரு புத்தகம் வருது வாங்குங்க

      Delete
  7. புகைப்படம் எடுத்தாலே ஆயுள் குறையும் என்று அந்த காலத்தில் ஒரு பயம் உண்டு!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அது
      ஆயுசில் கொஞ்சம் பிடித்து வைத்துக்கொள்ளும் என்று சொல்வார்கள்

      Delete
  8. எனக்கும் கேமெர வாங்க ஆசைதான் .. நமக்கெல்லாம் மொபைல் தான் லாயக்கு

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேம் இப்போது இருபத்தி ஒரு ஆயிரத்திற்கு கிடைக்கிறது
      பிலிப் கார்ட் பாக்கவும்
      நிக்கான் 3200

      Delete
  9. நன்றிகள் ஸ்வாமிகள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக