இரண்டு உரையாடல்கள்


இரண்டு உரையாடல்கள் ...
ஒன்று 
மாவட்ட மனநல ஆலோசகர் மரு. நிர்மலிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தேன்.
பார்ன் கிரிமினல்ஸ் என்று ஒரு பதத்தை அவர் உபயோகிக்க அப்படீன்னா என்னா ? 


எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தானே 
மண்ணில் பிறக்கையிலே என்று நான் கேட்க...
உண்மைதான் 
சில குழந்தைகள் சூழலோ, வேறு காரணிகளாலோ அப்படி ஆவதும் உண்டு. 
இவர்கள் சின்ன பூச்சி, செல்லப் பிராணிகள் போன்றவற்றை தேவையின்றி வதைப்பார்கள் 
அவை படும் துன்பத்தை ரசிப்பார்கள் 
இத்தகு குழந்தைகள் நெறிப்படுத்தப் படவில்லை எனில் பின்னர் கொலைக் குற்றவாளிகளாக வாய்ப்பு உண்டு என்று சொன்னார். 
தகவல் எனக்கு ரொம்பப் புதிது. 
கிலியூட்டிய தகவல் என்பதால் மனதில் பொதிந்துவிட்டது .. 
இன்று இதை ஏன் பகிர்கிறேன் என்கிறீர்களா? 
அடுத்த இற்றையை படியுங்கள்...


உரையாடல் இரண்டு 
இன்று
இடைவேளையில் ஒரு சிறுவன் ஓடிவந்து சார் நல்லபாண்டி ஒரு புறாவை அடித்துக் கொன்றுவிட்டான் சார் என்றான்.
எனக்கு அவன் குறித்த இன்னொரு தகவலும் நினைவில் வந்தது.
கடந்த வாரம் ஒரு கிளியைக் கொன்று ஒரு மரத்தில் ஏறி உச்சிக் கிளையில் அதை அமர வைத்ததாக ஏற்கனவே ஒரு புகார் பைசல் பண்ணாமல் இருந்தது.
ஆகா அன்னைக்கு கிளி இன்னைக்கு புறாவா 
சிம்ப்ட்டம் சரியில்லையே என்று யோசித்து அவனை நெருங்கினேன்.
படிப்பில் ஒன்றுமே இல்லை என்றாலும் சிரிப்பில் சூரியன் நல்லபாண்டி.
நீட்டா தலைவாரி, சிறு திருநீற்றுக் கற்றையுடன் இருந்த அவனைப் பார்த்ததும் இவனா இப்டியெல்லாம் பண்ணினான் என்று குழம்பினேன்.
முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு ஏன் இப்படியெல்லாம் செய்யற என்றேன் ..
சார் வளக்கலாம்னு பார்த்தேன் சார்.
ஏண்டா வளர்க்கிறவன் எவனாவது கல்லை எறிவானா?
இல்லை சார் காலைப் பார்த்து எறிந்தால் கால்மட்டும் உடைந்தாலும் கட்டுப் போட்டால் போதும் சார்.
சரியாய்டும் என்றான்.
இப்போ செத்துப் போச்சே என்ன பண்ணப் போற.
அதற்குள் மற்ற மாணவர்கள் கோரசாக சார் இவன் வீட்டில் நிறய புறாவும் கிளியும் வைத்திருக்கிறான் சார். என்றார்கள்
ஹைலைட் ஒரு பையன் சொன்னதுதான்
சார் நெறய நாயும் வளர்கிறான் சார்.
ரெண்டு நாய ஓடவிட்டு நடுவுல ஓடிவருவான் சார் என்று சொன்னதும் சிரித்துவிட்டேன்.
டெரராக முகத்தை வைத்திருந்த என்னை சிரிக்க வைத்து விட்டது அந்தப் பையனின் கமென்ட்.
மிடிலப்பா மிடில
நல்லபாண்டியனுக்கு நல்ல விதத்தில் சொல்லியிருக்கிறேன் ...
பாப்போம் அடுத்து ஏதும் புகார் வருதான்னு...

அன்பன் 
மது 

Comments

  1. நல்லதொரு செய்தி தோழரே இதில் சிந்திக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றது பதிவுக்கு நன்றி
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி தோழர் ...
      வாக்கிற்கும்

      Delete
  2. மாணவர்களை கையாள்வது கடினமான விஷயம்தான். அசாத்திய பொறுமை தேவை.
    அவன் சொன்னதும் உண்மையாக இருக்கலாம் .சிலருக்கு பறவைகள் வளர்ப்பதில் ஆர்வம்.அதிகம் இருப்பதுண்டு

    ReplyDelete
    Replies
    1. ஆர்வம் இருக்கு
      கொஞ்சம் பிரச்னையும் இருக்கு

      Delete
  3. இனி புகார் வராது நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. நல்ல வார்த்தைக்கு நன்றி

      Delete
  4. அன்புள்ள அய்யா,

    இரண்டு உரையாடல்கள்- வித்தியாசமனவை.

    நல்லா பாண்டியன் வர வேண்டும்.

    நன்றி.
    த.ம. 5

    ReplyDelete
  5. அன்பால் அவனை திருத்த முடியும்னு தோணுது......சகோ

    ReplyDelete
  6. நல்லதொரு பதிவு நண்பரே! அந்தப் பையனைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து வாருங்கள்...ஒருவேளை அவன் வேறு ஏதேனும் ஆர்வத்துடன் செய்யப் போக அந்தக் கிளியும், புறாவும் இறந்திருக்கலாம்....இருந்தாலும் கவனிப்பது நல்லது...நார்மலாக வரும் ஒரு க்யூரியாசிட்டிக்கும், சோதித்துப் பார்க்கும் ஆர்வத்திற்கும், ஒரு சாடிஸ்ட் ப்ளெஷருக்கும்/கொல்வதற்கும் இடையில் சிறிய மெல்லிய கோடுதான்...ச(ப்)ட்டில் வித்தியாசம்தான்...

    அவன் வளர்ந்த பையனாக இருப்பதால்....கவனிக்கப்பட வேண்டும். ஒரு வேளை அவன் மீண்டும் மீண்டும் செய்தான் என்றால்....அப்படியே அவனது குடும்பத்தில் ஏதேனும் டொமஸ்டிக் வயலன்ஸ் இருக்கா என்றும் செக் செய்துவிடுங்கள்...அவனை யாரேனும் துன்புறுத்தினார்களா....அவனுக்கு மூட் ஸ்விங்க்ஸ் இருக்கா...என்றும்...வீட்டில் பெரியவர்கள்/அக்கம்பக்கத்தார்...அவன் வளர்ப்பவற்றைத் துன்புறுத்தினார்களா...இல்லை இவன் தான் வளர்ப்பவற்றின் மீது அதீத அன்பு அளவிற்கு மீறிய அன்பு என்று ..உங்களுக்குத் தெரியாதது இல்லை...ஏதோ சொல்லத் தோன்றியது அதான்...



    ReplyDelete
    Replies
    1. ஆகா
      தாங்கள் இது தொடர்பாக நிறைய எழுதுங்கள் ...
      மூட் ஸ்வின்ங்ஸ் இல்லை ..
      மற்ற விசயங்கள் இருக்க வாய்ப்பு இருக்கு
      நன்றி

      Delete
    2. மற்ற விசயங்கள் என்றால் கண்டிப்பாக அவனுக்கு நல்ல அன்பும் அரவணைப்பும், நல்லசெயல்களுக்கு ஊக்கமும் தொடர்ந்து கொடுக்கப்பட்டால் சரியாகிவிடும். முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும் சகோதரரே! விட்டால் எல்லை மீறலாம். வீட்டில் அவனது பெற்றோர் புரிந்து கொள்பவர்கள் என்றால் சொல்லுவதும் நல்லது. வீட்டிலும் அன்பு கிடைக்க வேண்டுமே...

      மன உளவியல் துறை சார்ந்தவர்கள் சொல்லுவது என்னவென்றால் எதிர்காலத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகமாகலாம் என்றும், பிறப்பிலேயே வரும், இல்லை பரம்பரையாகவோ, ஜெனிட்டிக்கலாகவே வரும் ஆட்டிசம், ஹைப்பர் எனப்படும் எடிஎச் , கற்றல் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றார்கள்.

      Delete
    3. எழுத ஆர்வம் உண்டு. குழந்தைகள் மன உளவியல் சம்பந்தமாக. எதிர்கால குழந்தைகள் மீது நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருக்கின்றது. எனக்குத் தெரிந்ததுடன் ஆத்தெண்டிக் தகவல்கள் பெற முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். பார்ப்போம். முயற்சிக்கின்றேன் சகோ.

      கீதா

      Delete
    4. நானும் படிக்க வேண்டும் ஒரு நண்பரிடம் இருந்து பெற்ற அற்புதமான குழந்தை உளவியல் நூல் இன்னும் தூங்குது எனது புத்தக அலமாரியில்

      Delete
  7. நல்லதொரு உளவியற் பகிர்வு சகோ!

    சிறு பிள்ளைகளின் விளையாட்டென விட்டால்
    பெருந் துன்பம் பின்நாளிலே!... உண்மைதான்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சகோதரி..
      மிக்க மகிழ்வு தங்களைப் பார்த்தது

      Delete
  8. நல்லபாண்டிக்கு நல்ல ஆசிரியர் கிடைத்திருப்பதால் கவலைப்பட தேவையில்லை...

    ReplyDelete
    Replies
    1. மச்சான் உங்க தங்கச்சி நினைப்பில் என்னைய சொல்லீடீங்க ...
      நான் இன்னும் நிறைய மாற வேண்டும்..
      நன்றி

      Delete
  9. சிறு வயதிலேயே இப்படிச் சிலர் இருப்பதுண்டு. அவர்கள் சூழ்நிலை என்ன என்று தெரிந்து கொண்டு அவர்களை மாற்ற வேண்டும். உங்களைப் போல நல்ல ஆசிரியர்களால் முடியும்..... வாழ்த்துகள் தோழரே.

    ReplyDelete
    Replies
    1. இன்றும் அவனிடம் பேசினேன்.
      கால்வைக்கவே பயப்படும் பணங்காடுகளுக்குள் போய் பறவைகளைப் பிடித்து விற்கும் வேலையை சுமார் ஆறுவருடம் செய்து வருகிறான்.
      நிறைய பேசவேண்டும் பயலுடன்

      Delete
  10. என் நண்பன் ஒருவன் , ஜீசஸ் ஜீசஸ் என்பான் ,ஆனால் ,பூச்சிகளின் இறக்கை மேல் தீக்குச்சிகளை கொளுத்தி போட்டு ரசிப்பான் :)

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணா கிருஷ்ணா என்பவர்களும் இந்தப் பட்டியலில் வருவார்கள் ...
      மன பிறழ்வு எல்லோருக்கும் வரும்
      அது ஜீசஸ் என்றோ கிச்சா என்றோ அல்லா என்றோ பார்க்காது
      வருகைக்கு நன்றி தோழர்

      Delete
  11. மாணவர்களின் மனதறிந்து செயல்படும் நல்லாசிரியராய் இருப்பதே சிரமமான விஷயம் . நீங்கள் மாணவர்களை கவனமாகத்தான் கையாள வேண்டும் . சிரிப்பும் மூட்டுவார்கள் ; சிக்கலும் செய்வார்கள் .

    ReplyDelete
    Replies
    1. ஆம்
      கவனமாகத்தான் கையாள வேண்டும்.
      தங்கள் வருகைக்கு நன்றி ...

      Delete
  12. மது: சிறப்பான பதிவு..

    உரையாடல் ஒண்ணு ...சுத்தமாகப் பிடிக்கவில்லை. நான் அதை எப்படி எடுத்துக்கப் போறேன் என்றால்..ஏதாவது மனக்கோளாறு உள்ள குழந்தையாக இருக்கலாம். எனக்கென்னவோ அது போல் குழந்தைகளை "சொல்லி, பேசி உணரவைத்து" வழிப்படுத்த முடியுமா? என்னனு தெரியலை..ஏதாவது மருத்துவம்

    --------------

    ரெண்டாவது சொல்லியிருப்பது மிகவும் எதார்த்தமான நிகழ்வு. எனக்கென்னவோ இவன் கொஞ்சம் மெச்சூரிட்டி வந்ததும் திருந்திடுவான்னு தோணுது. பொதுவாக குழந்தைகள் இவ்வகைதான். துன்புறுத்தி அதை ரசிப்பவர்கள் அல்ல என்பதையே நான் நம்புகிறேன் unless they think they are very harmful or BAD to us- e.g bedbug or mosquito or cockroaches- not many of us will treat them "properly" and we dont mind killing them ruthlessly. Right? Are we sick then??

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருன்ஜி
      அது தகவலே கிலியூடுவதாகத்தான் இருந்தது எனவே அதுகுறித்து மருத்துவரிடம் நிறய பேசவில்லை ..
      இந்தப் பையன் குறித்து விவாதித்த பொழுது சொன்ன தகவல்கள் இவை
      http://www.malartharu.org/2014/11/friends-of-your-child.html

      நேற்று பயலிடம் பேசினேன் நீண்ட நாட்களாக பறவை வேட்டையில் இருக்கார்.

      அதுதான் கொஞ்சம் டிஸ்டர்பிங்...
      படிப்பு சுத்தமா இல்லை
      வீக் எண்டில் பறவை வேட்டை பிடித்து விற்பதுதான் பணி.
      பேசிப்பார்ப்போம்

      Delete
  13. மனரீதியாக மாணவர்களை அணுகும் நிலையில் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வழியுண்டு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விக்கி வித்தகரே

      Delete
  14. புறாக் கறி பூரா கறிக்கும் ஆசை பட்டிருப்பான் போல. விடுங்க பாஸ்.

    ReplyDelete
    Replies
    1. கிண்டல்...
      விளையும் பயிர் என்று நான் அடைந்த கிலி எனக்குத்தான் தெரியும்
      கருத்துக்கு நன்றி தோழர்

      Delete
  15. வித்தியாசமான மாணவர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுவாமிகளே

      Delete
  16. மாணவர்களை கையாளுவதற்கு திறமை வேண்டும்...
    நல்ல மாணவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பரிவையாரே

      Delete

Post a Comment

வருக வருக