வணக்கம்
பக்ரீத் விடுமுறை நாள் என்பதால் 24/09/2015 அன்று காலையிலேயே சுமார் பத்து மணியளவில் அமைக்குழு கூடி விவாதிக்க முடிவானது.
முதல் ஆளாக குமாரமலையிலிருந்து கவிஞர்.சோலச்சி வருகைதர கவிஞர் வைகறை பின்தொடர நண்பா அறக்கட்டளைக்கு அடுத்த தெருவில் இருக்கும் நான் மூன்றாவது ஆளாக ! அரங்கிற்கு சென்றோம்.
குழுவின் தலைவர் கவிஞர் நிலவன் அவர்களைத்தொடர்ந்து கவிஞர் பொன்.கா வர முக்கிய விருந்தினர்களை வரவை உறுதி செய்யும் பணி துவங்கியது. ஒருவர் தமிழகத்தில் பணியில் இருந்தாலும் தற்போது ஒரு சுற்றுப் பயணத்தில் அயல்நாட்டில் இருப்பதால் நிகழ்வின் அவசரம் கருதி தொலைபேசியில் அழைத்து விவரம் தெரிவித்த பொழுது மகிழ்வுடன் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். யார் என்பது சஸ்பென்ஸ். காத்திருங்கள்.
யுகே டெக் கார்த்திக் நிகழ்ச்சியை நேரலை செய்ய தேவையான தொழில் நுட்ப விசயங்களைப் பற்றி பகிர்ந்து பணியைப் பெற்று விடைபெற்றார். இவரது திட்டத்தின் படி யூடியூபின் சிறப்பு சலுகையைப் பயன்படுத்தி நேரலை இணைப்பை வாங்குவது என்று முடிவாகியிருக்கிறது. இதற்காக முன்னூறு காணொளிகளைக் பதிவேற்றம் செய்ய உள்ளார். முதல் கட்டமாக நண்பா அறக்கட்டளை பதிவுகளைப் பெற்று சென்றுள்ளார். (300 அப்லோடுக்கு பின்னர் இலவசமாகவே லைவ் ஸ்ட்ரீமிங் கிடைக்கும் என்று சொன்னதால் இந்த முறை முயற்சிக்கப் படுகிறது) இல்லாத பட்சத்தில் பாக் அப் ப்ளான் வாழ்க வாழ்க இருக்கிறது. ஆல் தி பெஸ்ட் டீம். கலக்குங்க.
நிகழ்விற்கு முதல் முறையாக கவிஞர் ராசி பன்னீர் செல்வம் வந்திருந்தது குழு தன்னிறைவு அடைந்ததை உறுதி செய்தது. இவர் ராசி திரைப்படத்தின் மூலக்கதை எழுத்தாளர், தமிழகத்தின் சிறந்த இலக்கிய விமர்சகர்களில் ஒருவர் என்பது பதிவர்களின் கவனத்திற்கு.
நிகழ்வின் இறுதியில் ஒரு சிறு கடை இருக்கிறது வாருங்கள் தேனீர் அருந்தலாம் என்றார் அண்ணாத்தே. அவருடைய ஸ்பெசாலிட்டிகளில் இதுவும் ஒன்று. எங்காவது ஒரு மூலையில் இருக்கும் தேநீர்க் கடையின் தேநீரின் சுவை குறித்து தெளிவாக அறிந்திருப்பார் அவர். தேநீரின் தோகை வழக்கம் போல நிலவன் அண்ணாத்தேவின் பையில் இருந்தே கொடுக்கப்பட்டது!
அரங்கம் இப்போது வைபை செய்யப்பட்டிருப்பதால் இனி நேரலைக்குக் கூட வாய்ப்பு இருக்கிறது.
உங்கள் வலைப்பூவின் மனதை கையேட்டில் பரப்பலாமே?
அல்லது நிறுவனங்களை விளம்பரப்படுத்தலாமே?
பதிவர் கையேட்டின் உட்பக்க விளம்பரக் கட்டணங்கள்
இருவண்ணம் முழுப்பக்கம் - 3000 ரூபாய்கள்
இருவண்ணம் மூன்றில் ஒரு பங்கு - 1000 ரூபாய்கள்
ஒரே வண்ணம் (கருப்பு) - ஒரு பக்கம் - 1500 ரூபாய்கள்
மூன்றில் ஒரு பங்கு ஒரே வண்ணம் - 500 ரூபாய்கள்
அன்பன்
மது

இந்த முறையாவது நேரலை (முக்கியமாக Audio) சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்...
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன்
அந்தக் கடைசியில் போட்ட செய்தி முக்கியம் மது.
ReplyDeleteகையேட்டுக்குள் கூடுதலாக விளம்பரம் கிடைத்தால் நிதி கூடும்.
மற்றவரும் இதை எடுத்துப் போடலாமே? நன்றி
தொடர்ந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. விழா சிறக்க எனது வாழ்த்துகளும்...
ReplyDeleteமும்முரமாக நடக்கும் பணிகளைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி.
ReplyDeletepathivai vasithu mudithathum nan solla vanthathai munnadiye dd sir solli irunthar.
ReplyDelete2012 chennai pathivar santhippu audio clarity nalla irunthichu. athan piraku nadantha irandu pathivarkal santhippilum
sari ila.
intha murai antha thavaru nadakkaamal munnathakkave oru trial check pannidunga sir!
வணக்கம்
ReplyDeleteதொடர் பயிற்சி இலகுவான வெற்றி... த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதிவர்குழுவின் உழைப்பு பாரட்டத்தக்கது வாழ்த்துக்கள்(uncle me 2 joined blog)
ReplyDeleteவலைப் பதிவர் திருவிழா நிகழ்வுகளை நேரடி அலைவரிசையாக வழங்கி வரும் தங்களது தனிச் சிறப்புமிக்க பதிவுக்கு வாழ்த்துகள் தோழரே!
ReplyDeleteசஸ்பென்ஸ் நபர் யார்?
பொடி வைத்து எழுதிய எழுத்தின் நெடி !!!!
ஹச்!! ஹச்! ஹச்
ஒரே தும்மல் மயம்.
........... அவர்தானே? ¨ எப்படி கண்டுபிடித்தேன்! பார்த்தீர்களா?
நன்றி தோழர்!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு