இத்துணை எத்தனங்களும் யாருக்கு

பதிவர் சந்திப்புக் அமைப்புக் குழுகூட்டம்

25/09/2015, நண்பா அறிவை விரிவு செய் அரங்கு, புதுகை

வழக்கம் போல் முதல் ஆள் சோலச்சிதான்! வைகறை தொடர நாங்களும் குழும விவாதங்கள் தொடங்கின.


இன்று முன்னோடி நிலவன் அண்ணாத்தே அழைப்பிதல் வடிவமைப்பில் எம்.எஸ்.ஆரில் அமர்ந்துவிடவே கூட்டம் பொன்.கா அய்யாவுடன் தொடங்கி கவிஞர் கீதாவால் வழிநடத்தப்பட்டது.

மேடை பின்னணி பதாகை வடிவமைப்பு குறித்து பேசவே ஓவியர் ரவியை அழைத்து செய்யலாம் ஓர் பிளக்ஸ் என்று நான் பொருப்பேற்றுக் கொண்டேன்.

முதற்கட்ட காணொளி நேரலைச் செயல்பாட்டில் ஒளி மிகத் தெளிவாகவும் ஒலி ஒளிந்து கொண்டும் கண்ணாமூச்சி காட்டியதாக நேரலைக் குழு கூறியதை தொடர்ந்து எழுந்தது கேள்விகள். கார்த்திக் சரிசெய்துவிடுவார் நிகழ்வுக்குள் என்றே நினைக்கிறன். வாழ்க வாழ்க இணையமும் தயாராகவே இருப்பதால் ஏதும் பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

பதிவர்கள் குறித்த  விவரங்கள் கியூ ஆர் கோடில் இருப்பதால் பதிவருக்கு ஐந்து வரிகள் என்கிற விதத்தில் கையேடு தயாராகி வருகிறது.

முதல் நாள் வருகைதரும் பதிவர்களுக்கு.

முன்னரே விழாக்குழு தளத்தில் தெளிவாக குறிப்பிட்டது போலவே விழா மண்டபத்தில் மாடியில் விரிப்புகளும் தலையணைகளையும் தயாராக வைத்திருக்க முடிவாகியுள்ளது. நான் பெரிதும் எதிர்பார்க்கும் சில கவிஞர்கள் இங்கே தங்கவிருப்பதால் இரவு ஒரு கவிமன்றம் நடக்கும் எனவே நம்புகிறேன்!

முதல் நாள் வருகைதரும் பிரைவசி விரும்பும் பதிவர்கள் தங்குமிட விவரங்களுக்கு அதற்கான பொறுப்பாளர்கள் திரு.  வைகறையையும் திரு. செல்வாவையும் தொடர்பு கொண்டால் நலம். தங்கும் விடுதியில் சில அறைகளை முன்னரே சொல்லி வைத்திருந்தாலும் விடுதிக் கட்டணத்தை பதிவர்கள்தான் செலுத்த வேண்டும் என்பதும் நினைவில் நிறுத்த தக்கது.

அதிகாலை வரும் பதிவர்கள் மண்டபத்தில் இருக்கும் அறைகளைப் பயன்படுத்திக் கொள்வது எளிது.

இப்படி பல விசயங்களைப் பேசி விடைபெற்றது குழு.

இத்துணை யத்தனங்களும் பதிவர்கள் ஒன்று கூடவே, புதிய நண்பர்களை அறிந்துகொள்ளவேதான் எனவே நிதியளிக்காத பதிவர்கள் வருகை குறித்து கலக்கம் கொள்ளவேண்டாம்.

எனது மாணவர் ஒருவர் பதிவராக இருக்கிறார். அவர் நிதியளித்துத்தான் பதிவர் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொன்னால் வருவாரா? அப்படி சொல்வதும் ஆரோக்கியமானது அல்லவே.

நிதியளிப்பு முக்கியம்தான் ஆனால் இத்துணை உழைப்பும் யாருக்கு என்றால் அது உங்களுக்காக மட்டுமே. பதிவர்கள் பல்வேறு சூழல்களில் இருக்கலாம் என்பதையும் நாங்கள் அறிவோம்.

எனவே கட்டாயம் வருகை தாருங்கள்.

அன்பன்
மது.



 உங்கள் வலைப்பூவின் மணத்தைக் கையேட்டில் பரப்பலாமே?
அல்லது உங்கள் / உங்கள் நண்பர்களின் நிறுவனங்களை விளம்பரப்படுத்தலாமே?
பதிவர் கையேட்டின் உட்பக்க விளம்பரக் கட்டணங்கள்

இருவண்ணம் முழுப்பக்கம் - 3000 ரூபாய்கள்
இருவண்ணம் மூன்றில் ஒரு பங்கு - 1000 ரூபாய்கள்

ஒரே வண்ணம் (கருப்பு) - ஒரு பக்கம் - 1500 ரூபாய்கள்
மூன்றில் ஒரு பங்கு  ஒரே வண்ணம் - 500 ரூபாய்கள்
விளம்பரக் கட்டணங்களைக் இதே வங்கிக் கணக்கிலும் செலுத்தலாம். அதே வங்கிக் கிளை என்றால் நிர்ணயிக்கப்பட்டத் தொகையையும் வேறு வங்கிகள் என்றால் பணமாற்றுச் சேவைக்கட்டணத்தையும் சேர்த்து செலுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நிதியளிக்க

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
bloggersmeet2015@gmail.com 

Comments

  1. பரவால்லயே....நேரலை கார்த்திக் செய்வதாயிருந்தால் மதுரை தம்பியிடம் விவரத்தை தெரிவித்து விடவேண்டும்....ல

    ReplyDelete
  2. திரு. வைகறை அவர்களின் மற்றும் திரு. செல்வா அவர்களின் கைபேசியை எண்ணையும் குறிப்பிட வேண்டும்... நன்றி... DD

    ReplyDelete
  3. தெளிவூட்டும் அருமையான பதிவு
    குறிப்பாக பணமும் முக்கியம்
    அதே சமயம் அது ஒன்றே முக்கியம் எனச் இல்லை எனும்படிச்
    சொல்லிப் போன விஷயம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. விழா சிறப்புற நடக்க எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. விழா ஏற்பாடுகள் அருமை
    திரு வைகறை மற்றும்
    திரு செல்வா ஆகியோரின் அலைபேசி எண்களையும்
    குறிப்பிட்டிருப்பீர்களேயானால்
    உதவியாக இருக்கும்
    தம +1

    ReplyDelete
  6. விழாவைப் பற்றி தினமும் நடைபெறும் நிகழ்வுகளை பதிவிடுவது அருமையாக உள்ளது. நாங்களும் விழா குழுவினருடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
    த ம 4

    ReplyDelete
  7. அன்புள்ள அய்யா,

    விழாவிற்கு மிகுந்த உற்சாகத்துடன் உழைப்பை உவந்து கொடுத்து ஒத்துழைக்கும் புதுகை வலைப்பதிவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    த.ம. 5

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

Post a Comment

வருக வருக