எந்தப் பயிற்சியில் இருந்து இவருடன் பணியாற்றுகிறேன் என்று சரியாக
நினைவில் இல்லை. வெகு காலம் ஒன்றாக இருந்திருக்கிறோம். பிஷப் ஹீபர் கல்லூரியில் பகுதிநேர
உதவிப் பேராசிரியராக பணியாற்றிவிட்டு ஒரு டி.ஆர்.பி தேர்வு மூலம் பணிக்கு வந்தவர்.
அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து வள ஆசிரியராக இருப்பவர். செமையான
டிரெஸ்ஸிங் சென்ஸ் உள்ளவர். எப்போதும் மாறாத புன்னகை ரசிக்க வைக்கும் வார்த்தைத்
தேர்வு, என அழகான ஆங்கிலத்தில் உரையாடக் கூடியவர்.
அன்று தொடர்ந்து குறுவளப் பயிற்சிகளில் வகுப்புகளை கையாண்டதால்
இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது இவர் பணியிடைப் பயிற்சிக்கு ஒரு
கையேட்டைச் சொந்தமாக தயாரித்திருக்கிறார். அதை சக ஆசிரியர்களிடம்
பகிர்ந்துகொண்டும் இருக்கிறார். கர்சிவ் எழுத்து மற்றும் போனிக்ஸ் சிஸ்டம்
குறித்து எளிய அறிமுகத்தை தரும் கையேட்டைக் கடந்த சில நாட்களுக்கு முன்னர்
கீரனூர், விராலிமலை, ராணியார் மற்றும் பிரஹதாம்பாள் பள்ளிகளில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம்
பகிர்ந்துகொண்டவர்.
சி.சி.ஈ திட்டம் புதிதாக அறிமுகமானபொழுது காம்ப்ரிஹென்சிவ் என்று
எதற்கு வைத்திருக்கிறார்கள் என்று சக வள ஆசிரியர் ஒருவர் வினவிய பொழுது
காம்ப்ரிஹென்சிவ் என்றால் முழுமையான என்று ஒரு அர்த்தம் உண்டு என தனது செல்லை
இயக்கி அகராதி மூலம் காண்பித்து வியப்பை ஏற்படுத்தினார். கிஷோரிடம் பிடித்ததே
இதுதான் ஒரு வார்த்தையை குறித்து விவாதம் எழும் போதெல்லம் எங்களை அவரது செல்பேசி
திரையைக்கண்பித்து அமைதிப்படுத்துவார். என்னிடமும் செல் உண்டு அதில் ஒன்றுக்கு
இரண்டாக அகராதிகளும் உண்டு. ஆனால் அறிமுகமான வார்த்தைகளை ஒருபோதும் அகராதியில்
சரிபார்க்க மாட்டேன் நான். அதைச் செய்வது எவ்வளவு நல்லது என்று உணர்த்தியவர்
கிஷோர். நன்கு அறிமுகமாகி நம்
பயன்பாட்டில் உள்ள வார்த்தைகளுக்கும் நமக்குத் தெரியாத அர்த்தங்கள் உண்டு
என்று உணரவைத்தவர்.
ஒருமுறை பயிற்சிகளில் ஆங்கிலத்தில் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை
என்று சொன்னபொழுது அதுக்காத்தான் நீங்க ஆர்.பியாக
இருக்கீங்க. அவ்வளோ பேரு முன்னால
ஆங்கிலத்தில் பேசுவதால் மட்டுமே நீங்க செலக்ட் ஆகியிருக்கீங்க தொடர்ந்து பேசுங்க
என ஊக்கம் தந்தவர் கிஷோர்.
நாங்கள் இருவருமே அகில பாரத
வானொலி நிலையத்தில் சிலமுறை பாடங்களை வழங்கியிருக்கிறோம். அவரது பதிவுகள்
வழக்கம்போல் அவரது செல்லிலேயே இருக்கும்.
ஒருமுறை கேட்டபோது அசந்துபோனேன். கிராமத்துக் குழந்தைகளை அற்புதமான
ஆங்கிலத்தில் பேச வைத்திருந்தார் கிஷோர். யப்பா சாமி எப்டிப்பா என்றால் அதுக்கும்
ஒரு சிரிப்புதான் பதில். எளிதில்
அணுகிவிடமுடியாத சாதனை அது.
கிஷோர் ஒரு விதத்தில் அதீதத்தின் சுவைதான். கடந்த ஆண்டு கோவையில்
தரப்பட்ட பாடம்சார் மென்பொருள் தயாரிப்பு பணிக்கு அழைக்கப்பட்ட பொழுது இவர்
செய்தது அதீதத்திலும் அதீதம்.
மென்பொருள் தயாரிப்பில் அனுபவம் உள்ள திரு ஸ்மார்ட் சங்கர்(இன்னொரு வள
ஆசிரியர்) இவரை தொலைபேசியில் அழைத்து நான் திருச்சி வந்துவிடுகிறேன். மடிக்கணினி
அவசியம் எடுத்துவர பணித்திருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். அய்யோ என்னிடம்
மடிக்கணினி இல்லையே என்று சொல்லி வருந்தியவரை சங்கர்ஜி கவலை வேண்டாம் நான்
எடுத்துவருகிறேன் என்று ஆறுதல் படுத்தியிருக்கிறார். ஒன்பதரைக்கு திருச்சி
மத்தியப்பேருந்து நிலையத்தில் புத்தம் புது ஹச்.பி மடிக்கணினியுடன் வாங்க சங்கர்
என்று சொல்லியிருக்கிறார் கிஷோர்!
ஏங்க உங்களிடம்தான் மடிக்கணினி இல்லையே அப்புறம் எப்படி இப்போ என்று
குழம்பியிருக்கிறார் சங்கர்.
இப்போத்தான் வாங்கினேன். போறது மென்பொருள் தயாரிப்புக்கு இது இல்லாம
போனா அங்கே யாரு நம்மள மதிப்பா. தெரியுதோ தெரியலையோ திறந்து வைதுகொண்டாவது
உட்கார்ந்து இருக்க வேண்டாமா என்று பதில்கேள்விவேறு!
ஒரு பயிற்சிக்கு முப்பத்தி இரண்டாயிரம் ரூபாய் செலவழித்த ஆசிரியர்
எனக்குத் தெரிந்து கிஷோர் ஒருவராக மட்டுமே இருப்பார் என்று நினைக்கிறேன்.
சின்ன சின்ன இடர்பாடுகளுக்கே சோர்ந்துவிடும் எனக்கு கிஷோர் இன்னொரு
விசயத்தில் ஆதர்சம். அவர் நிலையில் நான் இருந்தால் இந்நேரம் பாதி உயிராகத்தான் இருந்திருப்பேன்.
எப்படி கிஷோர் இவ்வளோ பெரிய விசயத்தை தாங்குறீங்க என்றபோது அவர் சொன்ன
பதில் இன்னொரு கிளாசிக். கடவுள் எனக்கு மகிழ்வைத் தருகிறபொழுது விரும்பும் நான்
துன்பத்தை தரும்பொழுது எப்படித் தவிர்ப்பது. இதுவும் கடவுள் கொடுத்ததுதானே என்று
அவர் சோகத்தையும் இயல்பாக எடுத்துக்கொண்டுவிட்டார். இதற்கான அடையாளங்கள் கிஷோரின்
முகத்தில் தேடினாலும் கிடைக்காது. இவர் நிலையில் இருக்கும் சிலர் நிரந்தர
தாடியுடனும் மொடாக் குடியர்களாகவும் மாறிவிடுவதையும் பார்த்திருக்கிறேன். இப்படி
ஏதும் விபத்தில் மாட்டிவிடாமல் எந்நேரமும் மரணித்துவிடக்கூடிய தனது மூத்த மகளுக்கு
ஒரு அன்புத் தந்தையாக நண்பராக இருக்கும் கிஷோர் ஒரு நிஜ ஹீரோ.
அன்பன்
மது
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
கிஷோர் டேவிட் ராஜ ராஜன் அவர்களைப்பற்றி நல்ல அறிமுகம். அவரின் கல்வி முகத்தைப் படம் பிடித்துக் காட்டினீர்கள்.
காணொளியில் ஆடலுடன் பாடலைக் (பாடத்தைக் கேட்டு) இரசிக்க செய்தார்.
த.ம.2.
அருமையான பின்னூட்டம்
Deleteநன்றி
அழகு. என் வாழ்த்துக்களை அவருக்கு சொல்லுங்கள் தோழர்
ReplyDeleteநன்றிகள் தோழர்
Deleteதிரு.கிஷோர் அவர்களை அறிய வைத்தமைக்கு நன்றிங்க...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteநல்ல ஆசிரியரெல்லாம் வெளிலயே தெரிய மாட்டேங்குறாகளே....சகோ
ReplyDeleteநன்றிகள் சகோ...
Deleteஅதான் துவன்கீட்டேனே நீங்க தொடருங்க
மற்றொரு வள ஆசிரியரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அவருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றிகள் அய்யா
Deleteஉலகிற்கு லைம் லைட்டில் வந்தால்தான் நல்லாசிரியர் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் இப்படித் தாங்கள் நல்ல ஆசிரியர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு வாழ்த்துகள்! பாராட்டுகள் கஸ்தூரி!
ReplyDeleteகாணொளி எரர் வந்து விட்டது....கிடைத்ததும் பார்க்கின்றோம்....
கீதா: ஃபோனிக்ஸ் மிக மிக நல்ல பயிற்சி. நான் படித்தது அரசுப் பள்ளி கான்வென்ட் எங்கள் ஆசிரியரின் ஆங்குல உச்சரிப்பு என்னை மிகவும் வசீகரிக்க, நான் அகராதி மிகவும் பயன் படுத்துபவளாக இருந்ததால்அதை வைத்துக் கொண்டு அதில் இருக்கும் ஃபோனிக் அடையாளக் குறிகளுக்கு விளக்கம் சொல்லிக் கொடுத்து எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டு ஆசிரியரிடம் அதை உச்சரிக்கச் சொல்லிக் கேட்கவும் ஆசிரியை அடுத்த வகுப்பிலிருந்து ஃபோனிக்ஸ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அகராதி என்பது அர்த்தம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, ஃபோனிக்ஸ் கற்றுக் கொண்டு உச்சரிக்கவும் முடியும் என்றும் நான் கற்றுக் கொண்ட காலம். பிழையில்லாமல் எழுதவும் வழிவகுக்கும். துளசியின் அடுத்த பதிவு அதைப் பற்றியதுதான் ...இரு பகுதிகளாக...
ஆம்! காம்ப்ரிஹென்சிவ் லேர்னிங்க் ....அந்த முழுமையான கற்றல் இல்லாததால் தான் நாம் பலரும் தடுமாறுகின்றோம்...எல்லாவற்றிலும்...அருமையான பதிவு சகோ...தொடர்கின்றோம்...
arumai! arumai! ivaridam paiyilum maanavarkal mikavum athirstta saalikal.
ReplyDeletepathivu eluthiya ungalukkum nandikal and vazthukkal sir.
Thanks
Delete@ mr.kishore
Deletehats off Kishore sir!! you are living as an ideal teacher!!! a great inspiration too!!!
@madhu
really this work is incredible yaar!! here is a special bouquet for u:)
அவரின் பயிற்சியை நேரில் பார்த்து வியந்து போனேன்
ReplyDeleteExcellent sir.
ReplyDelete