இந்தப் படங்களிலொன்று மட்டும் நட்பில் இருக்கும் பேராசிரியை ஒருவரால் 'காலை வணக்கம்' பதிவில் பகிரப்பட்டிருந்தது.
மேலதிக விபரங்கள் அறிவதற்காக இணையத்தில் தேடியபோது மெய்சிலிர்த்தது.
அந்தக் கரங்களில் என்ன இருக்கிறது?
அப்படி ஏன் அந்தக் கரங்களைப் பார்க்கிறார்கள்?
அந்தக் கரங்கள் அவர்களிடம் ஏதும் பேசுகிறதா?
கேளுங்கள்....
2012ல் ஆஃப்கானிஸ்தானின் கந்தகார் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டிருந்தார் தளபதி அப்துல் ரஹீம். அப்போது, குண்டு வெடித்ததில் தனது இரு கைகளையும் இழந்துவிட்டார். உடனடியாக அமெரிக்க மருத்துவக்குழு அவருக்கு முதலுதவி மற்றும் சிச்கிசை அளித்தது. இருப்பினும் தனக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் கைகள் பொருத்தப்பட வேண்டும் என்று பல நாட்டு மருத்துவமனைகளை அணுகியும் பயனில்லை.
இந்நிலையில் இந்தியா(கேரளா)வில் உள்ள பிரபல மருத்துவமனையில் வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அறிகிறார். ஆறேழு மாதங்களுக்கு முன் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பொருத்தமான கைகளுக்குக் காத்திருக்கும் வேளையில், விபத்தில் சிக்கி சிகிச்சையில் பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஜோஸப் என்பவரின் கைகளை பொருத்த ஆலோசிக்கப்படுகிறது. ஜோஸப் குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு ஆபரேஷனுக்கு ஆயத்தமாகிறது மருத்துவக்குழு.
பேராசிரியரும் உறுப்பு மாற்று சிகிச்சையின் நிபுணருமான டாக்டர். சுப்ரமணிய ஐயர், இருபது மருத்துவர்கள் மற்றும் எட்டு மயக்கமருந்து நிபுணர்கள் கொண்ட மருத்துவக்குழுவினருடன் செயல்முறைகளைத் தொடங்குகிறார். ஏறத்தாழ பதினைந்து மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்படுகிறது. தற்போது குணமடைந்து, தமது அன்றாடப் பணிகளை தமது(!) கைகளின் மூலமே செய்துவரும் அப்துல் ரஹீமை, மேலும் சில மாதங்கள் தங்கியிருந்து பிசியோதெரபி பயிற்சி எடுக்கப் பரிந்துரைத்திருக்கிறார் மருத்துவர்.
தமக்கு கைகளை வழங்கிய ஜோஸப் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பின்போது எடுத்த படங்கள் தான் இவை.
ஜோஸப் அவர்களின் மனைவியும் மகளும் அந்தக் கைகளை கண்ணீரோடும் அன்போடும் பார்க்கும் பார்வையை விவரிக்க உலகில் மொழியேதும் உண்டோ?
கைகளை இழந்த ஒரு இஸ்லாமியனுக்கு, ஒரு கிறிஸ்தவனின் கைகளை எடுத்து ஒரு ஹிந்துவின் கைகளால் பொருத்தப்பட்டுள்ளது.
மதங்கள் பிடிங்கி எறிந்து மனிதம் ஒட்டப்பட்டுள்ளது.
மனிதம் மறந்து மதம்பிடித்துத் திரியும் மனங்கள் மடிந்து போகட்டும்,
மண்ணில் நேயம் தழைக்கட்டும்!
Rafeeq Friend
வலைப்பதிவர் சந்திப்பு 2015
சில தகவல்கள்
கையேட்டின் பின் அட்டை விளம்பரம் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களின் மூலம் விசுஆவேசம் அவர்களால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நன்றிகள் இருவருக்கும்
அன்பன் மது
பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி. மனம் நெகிழ்ந்தது.
ReplyDeleteமனிதம் இன்னும் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன இவை போன்ற நிகழ்வுகள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘பேசும் கரங்கள்’ பேசியதைக் கேட்டு மகிழ்ந்தேன். புகைப்படத்தைப் பார்த்த பொழுது ஒன்றும் புரியவில்லை. உள்ளே சென்ற பிறகுதான் வியக்க வைக்கும் இமாலய சாதனை தெரிந்தது.
தளபதி அப்துல் ரஹீம் ஆஃப்கானிஸ்தானில் குண்டு வெடித்ததில் தனது இரு கைகளையும் இழந்து... கேரளாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருவதைக் கண்டு உறுப்பு தானம் கொடுத்த ஜோஸப் அவர்களின் குடும்பத்தினர் பார்த்து மகிழும் கண்கொள்ளா காட்சி.
மதம் கடந்த மனித நேயம். பாராட்டுகள்.
நன்றி.
த.ம.3.
google + சில் share செய்திருக்கிறேன் இந்த மனிதநேயத்தை !!!! ஆசிரியர் தின வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றிகள் நல்லாசிரியரே
Deleteமிக நெகிழ்ச்சியூட்டும் செய்தி. அருமை.
ReplyDeleteநன்றிகள் ஸ்ரீ ...ஜி
Deleteஆசிரியச் சகோதரருக்கு இனிய ஆசிரிய தின நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபதிவையும் படங்களையும் பார்த்தபின் பேச்சிழந்து நிற்கின்றேன்!
அருமையான தகவலைப் பதிவாக்கிப்
பகிர்ந்த உங்களுக்குக் - கண்களைக் கண்ணீர் திரையிட -
நன்றியுடன் வாழ்த்துக்களையும் கூறுகின்றேன்!
நன்றிகள் சகோ
Deleteஎன் உளம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சகோ ....!
ReplyDeleteநன்றிகள் சகோ
Deleteஇப்பொழுது தான் வாசித்தேன் சகோ! விம்ம வைத்தது நிகழ்வு . ஜாதி மாதம் கடந்த மனித நேயம் உள்ளம் நெகிழ வைத்தது. ஜோசெப் family க்கு ஆண்டான் ஆவி வழங்குவார். நன்றி விபரத்திற்கு! வாழ்த்துக்கள்....!
Deleteஇங்கு மதம் புதைக்கப்பட்டு மனிதநேயம் விதைக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteஇதே போல் சமீபத்தில் கேரளாவில் ஒரு இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இஸ்லாமியருக்கு இந்துவின் இதயம் கிறிஸ்தவ டாக்டரால் பொருத்தப்பட்டதாம்....
தகவலுக்கு நன்றியும்...வாழ்த்துக்களும்..........
ReplyDeleteநன்றி தோழர்
Deleteவணக்கம்,
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துக்கள்
மதங்கள் பிடிங்கி மனிதம் ஒட்டப்பட்டுள்ளது,,,,,,,,
அருமையான சொல்லாடல்,,,,
மலரட்டும் மனிதம்,
நன்றிகள் சகோ
Deleteசொல்லாடி ஒரு ஊடகவியலாளர் எனவே பதமாகத்தான் இருக்கும்
இது வெறும் கை என்பது மூடத்தனம் ,மதவாதிகளின் கழுத்தை நெறுக்கும் பத்துவிரல் மூலதனம் !
ReplyDeleteநன்றிகள் பகவானே
Deleteஅருமை தோழரே முடிவின் வரிகள் கண்களை நனைத்து விட்டது
ReplyDeleteமதம் மறந்தால் மனிதம் தழைக்கும்
தமிழ் மணம் 8
தோழர் ரபீக் பகிரும் அத்துணை விசயங்களுமே பயனுடையதாக இருக்கும்
Deleteநன்றி தோழர்
Delete-ரபீக்
வணக்கம் சகோ !
ReplyDelete// கைகளை இழந்த ஒரு இஸ்லாமியனுக்கு, ஒரு கிறிஸ்தவனின் கைகளை எடுத்து ஒரு ஹிந்துவின் கைகளால் பொருத்தப்பட்டுள்ளது.
மதங்கள் பிடிங்கி எறிந்து மனிதம் ஒட்டப்பட்டுள்ளது.
மனிதம் மறந்து மதம்பிடித்துத் திரியும் மனங்கள் மடிந்து போகட்டும்,
மண்ணில் நேயம் தழைக்கட்டும்! //
இவ்வரிகள் நெஞ்சைத் தொட்ட நிமிடங்கள் ....! இன்னும் ஈரமுடன் !
அருமை மனிதம் தழைக்கட்டும் .மதம் ..........????????????
ஈரம் இன்னும் இருக்கிறது தோழர்.
Deleteவருகைக்கு நன்றி
வணக்கம்
ReplyDeleteஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கொடூரத்தால் பிரிந்த கைகள் அன்பால், மனிதத்தால், இணைந்திருக்கிறது..... நெகிழ்ச்சியான பதிவு...
ReplyDeleteகைகளை இழந்த ஒரு இஸ்லாமியனுக்கு, ஒரு கிறிஸ்தவனின் கைகளை எடுத்து ஒரு ஹிந்துவின் கைகளால் பொருத்தப்பட்டுள்ளது.
ReplyDeleteமதங்கள் பிடிங்கி எறிந்து மனிதம் ஒட்டப்பட்டுள்ளது.
மனிதம் மறந்து மதம்பிடித்துத் திரியும் மனங்கள் மடிந்து போகட்டும்,
மண்ணில் நேயம் தழைக்கட்டும்! //
சபாஷ்!! மனம் அப்படியே நெகிழ்ந்து விட்டது கஸ்தூரி! மனிதம் தழைத்து ஓங்கட்டும்! உன்னும் நம் மண்ணில் இருக்கத்தான் செய்கின்றது. அது மடியாது நிச்சயமாகத் தழைத்தோங்கும். நமது இன்றைய தலைமுறையினர் பலருக்கு அந்த நல்ல உள்ளம் இருப்பதாகத்தான் தெரிகின்றது!
வாட்ஸப்பில் பார்த்தேன்!மனிதர்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை!மதவேற்றுமை பாராட்டுபவர்கள் மனிதர்கள் இல்லை
ReplyDeleteமது சார்
ReplyDeleteமதங்கள் பிடிங்கி எறிந்து மனிதம் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த வாக்கியம்தான் இந்தப் பதிவின் முத்தாய்ப்பு. மதம் பிடித்திருக்கும் மதப்பற்று மனிதனுக்கு இது ஒரு சவுக்கடி . இந்த நிகழ்வில் மதமல்ல மனிதம் அல்லவா வெற்றி கண்டது .