கடந்த ஆண்டில் ஒரு நாள் அறந்தை மாவட்ட கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ராசி பண்ணீர்செல்வம் செல்பேசியில் அழைத்து எல்காம்னு ஒரு திட்டம் வந்திருக்கு உங்க பள்ளியில் செய்வோமா. குழந்தைகளுக்கு ரீடிங் மெடீரியல் தருவாங்க, என்று சொல்லவும் சரி சார் என்றேன்.
அப்போது எல்காம் ஒரு முன்னோடித் திட்டமென்றோ, முன்னோடித் திட்டம்மென்றால் என்னவென்றோ தெரியாது!
குழந்தைகளுக்கு ஏதோ நல்ல விசயம் ஒகே என்றுதான் புரிந்துகொண்டேன். அன்று ஒகே சொன்னதற்கு கடந்த காலாண்டு விடுமுறையில் பலன் கிடைத்தது. பல்வேறு பணிகளை விடுமுறையில் செய்யும் திட்டத்துடன் இருந்தேன்.
தலைமை ஆசிரியை அழைத்து சார் உங்களுக்கு ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் பயிற்சி என்று சொல்லவும் ஆனந்தக் கடலில் மிதந்தேன். (அப்படித்தானே சொல்லணும்)
மாவட்டத்தில் இருந்து ஒன்பது பேராக பயணத்தை துவங்கினோம். வழியில் இருந்த பிள்ளைக் கால்வாயை ரசித்தபடியே தொடர்ந்தது எங்கள் பயணம். புதுகோட்டையில் அப்படி பல கி.மி நீண்ட கால்வாய்களை பார்க்க முடியாது அல்லவா.
ஒரு வழியாய் ராசிபுரம் அடைந்தவுடன் பயிற்சிகள் துவங்கின. முன்னோடித் திட்டம் என்றால் என்ன என்று சேலம் ஆர்.எம்.எஸ்.ஏ அலுவலர் திரு.ரெங்கநாதன் விளக்கினார்.
முன்னோடித் திட்டம் என்றால் ஒரு புதிய கற்பித்தல் நுட்பத்தை மாநிலத்தில் எல்லாப் பள்ளிகளிலும் அறிமுகம் செய்வதற்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் மட்டும் செய்து, அப்படிச் செய்யும் பொழுது ஏற்பாடும் இடர்களை கண்டறிந்து, திட்டத்தை செழுமையாக்கி மாநிலத்தின் பிற பள்ளிகளுக்கு தருவது!
இம்மாதிரித் திட்டங்கள் நடைபெறும்பொழுது புது தில்லியில் இருந்து ஒரு ஐ.ஏ.எஸ் அலுவலர் எப்போது வேண்டுமானாலும் திட்டம் செயல்படும் பள்ளிகளைப் பார்வையிட வருவார். சரியாக செயல்படவில்லை என்று அவர் நினைத்தால் பின்விளைவுகளும் இருக்கும்!
மாநிலத்தில் முதன் முதலில் ஒரு திட்டத்தை சோதித்துப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு (மாவடத்திற்கு பத்துப் பள்ளிகள்) கிடைத்திருகிறது.
என்ன கிடைக்கும்?
அனுபவம். குழந்தைகளுக்கு வாசிப்புத் திறன் மேம்பாடு,
எப்படிப்பட்ட வாசித்தல்.
ஆங்கிலத்தில் எதைக் கொடுத்தாலும் வாசிக்கும் திறன் என்பதே இப்போதைய குறிக்கோள். ஏற்கனவே மொழியகராதி பயிற்சி மாணவர்களுக்கு கொடுக்கப் பட்டிருப்பதால் சுயசார்புள்ள ஆங்கில வாசிப்புப் பழக்கத்திற்கு குழந்தைகள் தயாராவார்கள்.
திட்டத்தின் முதல் கட்டம் இதுதான்..
மேலும் பேசுவோம்
அன்பன்
மது

ஆஹா வாழ்த்துகள் நல்ல திட்டமாருக்கே...சகோ
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் பயிற்சி என்று சொல்லவும் ஆனந்தக் கடலில் மிதந்தேன். (அப்படித்தானே சொல்லணும்) உண்மையைச் சொன்னீர்கள்!
ஆர்.எம்.எஸ்.ஏ அலுவலர் திரு.ரெங்கநாதன் அவர்கள் விளக்கியதை
ஆங்கிலத்தில் எதைக் கொடுத்தாலும் வாசிக்கும் திறன் மேம்பாடு என்பது பெரிய விசயம் தான். நன்கு படிக்கச் சொல்லிக் கொடுத்தால் போதும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான படியில் ஏற்றி விடும் முயற்சிக்கு வாழ்த்துகள்.
எல்காமின் முன்னோடித் திட்டத்திற்குப் பாராட்டுகள்.
நன்றி.
த.ம.1.
திட்டம் சிறப்பாய் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல திட்டம்... வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅட! நம்ம கனவு!!! நான் இதைத்தான் முன்பு உங்கள் விதைக்கலாம் பற்றி எழுதியிருந்த போது சொல்லியிருந்தேன் என்று நினைக்கின்றேன்....அருமை அருமை! எங்கள் பள்ளியில் அப்போதே 70 களில் வாசிப்பு, மொழி அகராதி உபயோகப்படுத்தல் ஃபோனிட்டிக்ஸ் என்று ஆசிரியைகள் எங்களுக்கு நன்றாகக் கற்பிப்பார்கள்...
ReplyDeleteகஸ்தூரி பொளந்து கட்டுங்கப்பா...வாழ்த்துகள்..
கீதா
திட்டம் பற்றி மேலும் தொடர்ந்து கொள்ள தொடர்கிறேன் மது.
ReplyDelete