நடிகர் சங்கத் தேர்தல் விஷாலின் விஸ்வரூபம்



ஒற்றைக் குரல் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்?

மாற்றங்களுக்கான குரல்களின் குரல்வளைகளை எப்போதும் அழுத்துகிற முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.

நம்ம பேசுற அளவிற்கு இது வொர்த்தா மச்சான் என்று மதுரைத் தமிழன் கேட்பது எனக்கும் கேட்கிறது.



போகிற போக்கில் இவனுகளுக்கு ஒரு சங்கம் அதுக்கு ஒரு எலக்சன் என்று போட்டுதாக்கும் முகநூல் நண்பர்கள் எந்த தளத்தில் இருந்து பேசுகிறார்கள் என்று வியப்பினூடேதான் என் கோணத்தையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

நாட்டின் எரிகிற பிரச்னைகளை கொஞ்ச நாட்களுக்கு ஒத்திவைத்துவிட்டு எல்லா ஊடகங்களும் இந்தத் தேர்தல் குறித்தே பேசினார்கள்.

இறுதியில் நான் விரும்பிய ரிசல்ட்தான் வந்திருக்கிறது.

உங்களுக்குதெரிந்த குற்றச்சாட்டுக்கள், எதிர்வினைகள் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம் விஷாலின் தனிமனித துவக்கத்தையும் கூட்டு வெற்றி வியூகத்தைப் பார்ப்போம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விஷால் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஒத்த கருத்துடைய நண்பர்களின் ஆதரவைத் திரட்டுகிறார், இயக்கமாக வளர்கிறார், தனியாக மிரட்டலைச் சந்திக்கிறார், சட்டரீதியாக மிரட்டலைச் சந்திக்கிறார், தேர்தல் அன்று அடிபடுகிறார், ரிசல்ட் மாறிவிடாது இருக்க விழிப்போடு இருக்கிறார், பதவிக்கு வருகிறார்.

இது  நல்ல அரசியல் செய்ய விளையும் நம் இளைஞர்களுக்கும் பொருந்தும்.

பொதுவாழ்க்கை வெற்றிச் சூத்திரம் அல்லவா இது.

படிக்க வேண்டுமென்றால் எங்கிருந்தும் பாடங்கள் கிடைக்கும். 

Comments

  1. அரசியல் ஒரு சாக்கடை என்பது போல சினிமாவும் ஒரு சாக்கடைதான் ஆனால் அதில் இருந்தும் ஒருவர் முத்து எடுக்கிறார் என்றால் அது நம்ம மாப்பிள்ளை மதுவாகாத்தான் இருக்க வேண்டும் சபாஷ் மாப்பிள்ளை,

    தலைப்பை பார்த்ததும் எவனோ நம்ம மாப்பிள்ளை தளத்தை ஹேக் பண்ணிட்டான் என நினைத்தேன் படித்து முடித்த பின் தான் அது மாப்பிள்ளை மது எழுதியதென்று...

    ReplyDelete
  2. ****Avargal Unmaigal22/10/15

    அரசியல் ஒரு சாக்கடை என்பது போல சினிமாவும் ஒரு சாக்கடைதான் ஆனால் அதில் இருந்தும் ஒருவர் முத்து எடுக்கிறார் என்றால் அது நம்ம மாப்பிள்ளை மதுவாகாத்தான் இருக்க வேண்டும் சபாஷ் மாப்பிள்ளை,

    தலைப்பை பார்த்ததும் எவனோ நம்ம மாப்பிள்ளை தளத்தை ஹேக் பண்ணிட்டான் என நினைத்தேன் படித்து முடித்த பின் தான் அது மாப்பிள்ளை மது எழுதியதென்று...***

    அவர் தளத்தை யாரும் ஹாக் பண்ணினாங்களோ இல்லைனா மதுரைத் தமிழன் ஐ டியை யாரும் ஹாக்ப் பண்ணி பின்னூட்டமிட்டாங்களா?னு குழப்பமா இருக்கு எனக்கு..:)

    --------------------

    சரத்குமார் ஏன் இப்படி பதவியிலிருந்து இறங்குவேனா?னு அடம் பிடிச்சாருனு விளங்கவில்லை.. போதாக்குறைக்கு அவரோட ஆத்துக்கார அம்மா வந்து எங்காத்துக்காரர் மஹா யோக்கியர்னு சான்றிதழ் வேற.இதெல்லாம் செல்லுபடியாகுமா??

    இந்தக் கட்டடம் கட்டுறேன்னு சொல்ற காசிலே நளிந்துபோன ஏழை எளிய நடிகர் நடிகைகளுக்கு ஏதாவது பண உதவி மருத்துவ உதவி செய்து உதவினால் நல்லது . செய்வார்களா? அம்மாவை அனுசரிச்சு, அம்மா அருளினால் ஏதாவது பலன் கிடைக்கும்! புது கம்மிட்டி! சூதானமாக நடந்துக்கோங்கப்பா!

    ReplyDelete
    Replies
    1. ஒரு அமைப்பில் நெடுங்காலம் பதவியில் இருந்தால்

      நம்மை எவன் எதுக்க போறான் என்று நினைக்கிற பொழுது ஊழல்களை துணிந்து செய்ய முடியும்

      பொதுவாக கேட்க நாதி இருக்காது..

      இது ஒரு சங்கப் பிரச்னை மட்டும் அல்ல...
      ஒரு ஜனநாயக அமைப்பை நேர்மையான வழியில் சீர்செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான செயல் முறை ...

      தமிழர் கொடுத்த பின்னூட்டம்..ஹேக்டு என்றால்
      வருணின் பின்னூட்டம்?
      இன்னமோ நடக்குதுப்பா

      Delete
  3. சத்தியம் இங்கு வெற்றி பெற்றிருக்கிறது . ஆணவமும் பண பலமும் படைபலமும் அராஜகமும் அரசியலும் ரௌடிசமும் தவிடு பொடியாகியிருக்கின்றது. விஷால் அணியை நானும் எதிர்பார்த்தேன் . அப்படியே நடந்திருக்கின்றது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக