ஆசை அதிகம் வைச்சு ..

தொடர் பதிவில்  இணைக்கும் நண்பர்களுக்கு ஒரு சிரம் தாழ்ந்த  வேண்டுகோள். பதிவர்களின்  மனவோட்டம் தெரிந்து தொடர்  இணையுங்கள்.

இந்தியாவில் கடவுள்  இருக்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஒருவேளை  யார்  கண்ணில்லாவது  தென்பட்டால்  அவன் அடிபட்டு சாகும் சாத்தியம்தான்  அதிகம்.



பெரிய மனதுடன் உங்கள் ஆசைகள்  என்று  விதியைத் தளர்த்திய நண்பர்களுக்கு ஒரு பூங்கொத்து.

எத்தனையோ நிறைவேறாத  ஆசைகள்  இருக்கிறது. கல்வியில் மாற்றங்கள் அவற்றில் ஒன்று.

டொமோயி ஹாகுன் போல  ஒரு  பள்ளியை  நிறுவி நடத்தினால் மகிழ்வு இருக்கும்.

எத்துணைத்  தயாரிப்புகளுடன்  செய்ய வேண்டிய பணி அது.

குறைந்த பட்சம் நீண்ட நேரம் மாணவர்கள் சுயகட்டுப் பாட்டுடன் கற்றலுக்கு பயன்படுத்தும் ஒரு கணிப்பொறி ஆய்வகம்.

மாணவர்களுக்கு எப்போதும் திறந்திருக்கும் ஒரு நூலகம்.

மொழித்தேர்வுக்கு செயல்முறை தேர்வும் அதற்கு மதிப்பெண்ணும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

அடுத்த கல்வி ஆண்டிலாவது சாத்தியமானால் மகிழ்வு.

இப்படி பணி சார்ந்த ஆசைகள் பத்து என்ற எண்ணிக்கையில் சாதரணமாக அடங்கிவிடக் கூடியதா என்ன?

பொதுவான  ஆசைகளை சொல் என்பவர்களுக்கு

பெரும் திரளுக்கு மதம் குறித்த விழிப்புணர்வும், முட்டாள்த்தனமான மத வெறியும் இல்லாத ஒரு விடியல் ..

அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடுமா என்ன நமது ஆசைகள். 

Comments

  1. சிக்கலையும் கூறிவிட்டு, ஆசைகளையும் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
  2. அதானே பார்த்தேன்! மது சார் இன்னும் வரவில்லையே என்று.

    ReplyDelete
  3. அன்புள்ள அய்யா,

    பகுத்தறிவுவாதியின் சீர்மிகு ஆசைகள் கல்வியாளர் என்ற வகையில் சுட்டிக் காட்டியது அருமை.

    நன்றி.
    த.ம.2

    ReplyDelete
  4. வணக்கம்
    அனைத்து ஆசைகளும் நன்று...நிறைவேற எனது வாழ்த்துக்கள் த.ம 3
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. கடவுளே இருந்தாலும் உங்கள் ஆசைகளை நிறை வேற்ற முடியாது :)

    ReplyDelete
  6. உண்மைதான்....
    பதிவில் இணைக்கும் போது எவர் எவரை இணைக்கலாம் என யோசிக்க வேண்டும்...
    தங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்...

    ReplyDelete
  7. அதானே... ஆசைக்கு அளவேது...?

    ReplyDelete
  8. பணி சார்ந்த ஆசைகள் மதம் சார்ந்த பொது ஆசைகளை சொன்ன நீங்கள் குடும்பம் சார்ந்த ஆசைகளையும் ஆங்கிலப் சினிமா ஆசைகளையும்,சமுக நலன் கருதி செய்யும் தொண்டுகள் பற்றிய ஆசைகளை சொல்ல மறந்தது ஏன்?

    ReplyDelete
  9. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    ReplyDelete
  10. அருமை கஸ்தூரி சார்....உங்கள் பதிவுகளின் மூலம் நானும் படிக்கிறேன் ஏதேனும் ஒரு புது தகவல்....எப்போதும்.

    ReplyDelete
  11. //இந்தியாவில் கடவுள் இருக்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஒருவேளை யார் கண்ணில்லாவது தென்பட்டால் அவன் அடிபட்டு சாகும் சாத்தியம்தான் அதிகம்// - செம்மை!... செம்மை!!... செம்மை!!!...

    ReplyDelete
  12. கல்வி குறித்த தங்களின் ஆசைகள் நிறைவேறினாலே பின்னர் கூறிய ஆசைகள் தானாக நிறைவேறிவிடும் என்று தோன்றுகிறது! அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  13. ஆமாம் தோழர் கல்வி பற்றிய ஆசைகள் எங்களுக்கும் உண்டு....அதுவும், அடிப்படை வறுமைக் கோட்டிலிருந்து மக்கள் மேலெழுந்துவிட்டால் நிறைய ஆசைகள் நிறைவேறிவிடும்....

    இப்படித்தான் எங்கள் ஆசைகளையும் சேர்த்து நீங்கள் எல்லோரும் சொல்லிவிடுவீர்களே..நாமளும் அப்பப்ப எழுதறோமே அப்படினு.. அப்போ நாம எதுக்குச் சொல்லணும்னு இந்தியாவ கனவுலயாவது வல்லரசா பார்ப்பம்னு அதுக்குக் கில்லர் "ஜி" ய பிரதமராக்கிட்டா அப்படினு...

    உங்கள் ஆசைகள் நியாயமான ஆசைகள் நிறைவேறினால் ஆஹா...ஆஹா தான்...

    ReplyDelete

Post a Comment

வருக வருக