ஒரு பகிர்வு ... ஆமீர் பாக் செல்ல வேண்டுமா என்ன ?IsupportAamirKhan



இரண்டு சம்பவங்கள்..(ஆக்கம்  இயக்குனர்  கவிஞர்  நந்தன் ஸ்ரீதரன்)
முதல் சம்பவத்தில் அந்த நடிகர் ஒரு படம் எடுக்கிறார். அதில் குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் மனம் புண் படுமாறு ஒரு பகுதியை வைக்கிறார். அதை கண்டித்து அந்த மதத்தினர் போராட்டம் நடத்துகிறார்கள். அவர் அந்த மதத்தின் தலைவர்களை படம் பார்க்க அழைக்கிறார். அவர்கள் பார்த்தாலும் அந்த வசனம் மாறி விடுமா என்ன..? அதன் பின்னும் அந்த மதத்தினர் அப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.



அதைப் பார்த்து அந்த நடிகர் இந்த நாட்டை விட்டே வெளியேறப் போகிறேன் என்று சொல்கிறார். இந்த மீடியா கதறுகிறது. முகநூலில் அத்தனை பேரும் கதறுகிறார்கள். நிறைய பேர் தங்கள் சொத்து பத்திரத்தை அந்த நடிகருக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்று ஒரு mass mind seduction நடந்தேறியது.
சரி. போகட்டும். அந்த குறிப்பிடட முஸ்லிம் மதத்தினரை தீவிரவாதிகள்தான் என்று வலுவுடன் நிறுவிய அந்த நடிகர் கமலஹாசன் அதன் பின்னர் ஆளும் கட்சி தலைமையுடன் ஒப்பந்தம் போட்டு அந்தப் படத்தை ரிலீஸ் செய்தார். முஸ்லிம்களை புண்படுத்தும் அந்தப் பகுதியோடுதான் அத்திரைப்படம் வெளி வந்தது. அவர் வியாபாரி. அப்படித்தான் செய்வார்.
ஆனால் இந்த மீடியாக்கள் என்ன செய்தன. கமல் நாட்டை விட்டுப் போகப் போகிறார் என்று கதறி அழுதன. விட்டிருந்தால் அவர் காலில் விழுந்து போகாதே போகாதே என் கணவா என்று கதறி இருப்பார்கள். அந்த சம்பவம் அப்படியாக முடிந்தது.
இரண்டாவது சம்பவம்..
அமீர்கான் ஒரு பேட்டியில் மத சகிப்பின்மை பற்றி பேசுகிறார். அக்லக் படுகொலையைத் தொடர்ந்து நாமும் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்குமா என்று என் மனைவி என்னிடம் கேட்டார் என்று ஒரு வரிதான் சொல்கிறார்.
உடனே அமீர்கான் இந்தியாவை விட்டு வெளியேறப் போகிறார் என்று மீடியாக்கள் அனைத்தும் நெருப்பை அள்ளி அவர் மீது வீசுகின்றன.. இத்தனைக்கும் அவர் சொன்னது இந்த மாதிரி சம்பவங்கள் தொடருமானால் முஸ்லிம்களான நாமும் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டி வருமா என்று என் மனைவி கேட்டார் என்று மட்டும்தான்..
ஓர் இந்து நடிகர் தானாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன் என்று டிராமா போட்டால் அவர் காலில் விழுந்து இந்த மீடியா கதறும். ஆனால் அதே ஒரு முஸ்லிம் நடிகர் தன் மனைவி பேச்சு வாக்கில் இப்படி சொன்னார் என்று சொன்னாலே நீ முஸ்லிம்.. வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்குப் போ என்று தூசணம் செய்யும்..
இதில் அனுபம் கேர் போன்ற இந்துத்துவா அடியாட்களின் அட்ராசிட்டிகள் வேறு..
எனது ஒரே வருத்தம் என்னவென்றால் இந்த மீடியாக்கள் இப்படி பப்ளிக்காக இந்துத்துவாவுக்கு வக்காலத்து வாங்குவதை எத்தனை மக்கள் புரிந்திருக்கிறார்கள்.. இந்த இந்துத்துவா மீடியா அடியாட்களை தோலுரித்தல் நம் கடமை அல்லவா..?
அமீர்கான் விஷயத்தில் இந்த மீடியாக்களின் நிலைப்பாடு மிகவும் கேவலமானது. அட காசுக்கு மானத்தை விற்கும் நாய்களே (சின்னா என்னை கோபித்துக் கொள்ளாதே).. இவ்வளவு பச்சையாக, அசிங்கமாக நடந்து கொள்கிறீர்களே.. உங்களை யாரும் கவனிக்கவில்லை என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்...
‪#‎stop_harassing_Aamirkhan‬

Comments

  1. //இந்த இந்துத்துவா மீடியா அடியாட்களை தோலுரித்தல் நம் கடமை அல்லவா..?//நிச்சயமாக செய்ய வேண்டியது நம் கடமை ..

    இந்த கூட்டம் இப்படி ஒருவரை தூஷிப்பதும் தீவிரவாதமே ..
    தஸ்லிமா சொல்லாததை சொன்னதா memes ஆகபோட்டு தங்களை அசிங்கபட்டுதி கொண்டது ஒரு கூட்டம் ....
    மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு :( ..சிலரின் முகபுத்தக பதிவுகளை வாசித்து வெறுப்பே வந்தது இவ்வளவு கோபம் எதற்கு?
    ஒருவர் தனது கருத்தை சொல்வது கூட தவறா ..அந்த கருத்துக்கு இவர்கள் இப்படி விஷத்தை கக்குவதில் இருந்து தெரிகிறது சகிப்புத்தன்மை :(






    ReplyDelete
  2. நல்ல பதிவு....ஆதங்கம் புரிகிறது...

    ReplyDelete
  3. அமீர்கான் விஷயத்தில் இந்த மீடியாக்களின் நிலைப்பாடு மிகவும் கேவலமானது
    உண்மை
    தம +1

    ReplyDelete
  4. மீடியாக்களின் நிலைப்பாடு ரொம்பவே கேவலம்...

    ReplyDelete
  5. தோழர்! நம்ம மீடியாக்களுக்கு இதுவே வேலையாப் போச்சுப்பா...வேற வேலையே இல்ல...

    கீதா: நம்ம மீடியாக்கள் பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடிப்பதாகவே இல்லை. தங்கள் இஷ்டத்திற்குத் திரித்து திரிபடைமீடியாக்களாகிவிட்டார்கள்...அமீர் என்ன தப்பு பண்ணினார்....உங்கள் கேள்வி சரிதான்.. (ஒண்ணே ஒண்ணு...கஸ்தூரி...இந்தக் கேடுகெட்டவங்களை நாலுகால் செல்லங்களோடு ஒப்பிட்டோ, செல்லங்களை வைத்து விளித்தோம் னா அவங்க பாவம்...செல்லங்கள் ரொம்ப வருத்தப்படும்....நம்மள ஒருமாதிரிப் பார்க்கும்......ஹஹஹஹ் அதனால்தான்...

    ReplyDelete
  6. கமல் செய்தது - செய்வது தவறு என்பதும், அமீர்கான் மீதான குற்றச்சாட்டுகள் தவறு என்பதும் எனக்கும் புரிந்ததே! ஆனால், இவற்றை இப்படியொரு கோணத்தில் நான் சிந்தித்துப் பார்த்ததில்லை. நன்றி!

    ReplyDelete
  7. என்ன சொல்வது எல்லாம் வியாபாரமாகிவிட்ட இந்த உலகில் போறவனைப் போகாதே என்பதும் போகாமல் இருப்பவனைப் போ போ என்பதும் பழக்கமாகிவிட்டது இவங்களுக்கு !

    ReplyDelete
  8. நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்திய விதம் அழகு தோழரே...
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  9. நானும் இதை ஆதரிக்கிறேன்...#‎stop_harassing_Aamirkhan

    ReplyDelete
  10. Ellaavatrukkum kaaranam mazhai nintrathuthaan. Innaikku mazhai varumnu Ramanan solliyirukkiraar. Appuram ivunga 'vaattiya mazhaiyum vadiyaatha thanneerum'nu aarampichuduvaanga.

    ReplyDelete
  11. Anaithirkum kaaranam mazhai nintrathuthaan. Innum irantu naal kazhithu 'Thirumpavum mazhai Theeraatha thuyaram'nu pazhaiyabadi aarampichuduvaanga paarunga.

    ReplyDelete
  12. நாய்கள் வருத்தப் படக் கூடம் மதூ!
    காந்தியைக் கொன்றுவிட்டார்கள் என்றவுடனே, “சுட்டது யார், இந்துவா முஸ்லீமா? என்று தெரிந்து, “காந்தி ஒரு இந்துவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார்“ என்று வானொலிச் செய்தியை வாசிக்கச் செய்தாராம் நேரு. அவ்வளவு எச்சரிக்கையாக இருந்திரா விடடால் உடனடியாக ஒரு மதக்கலவரம் கோரத்தாண்டவமாடியிருக்கும். ஆனால், ஆளும் கட்சிக்கோ முக்கிய எதிர்க்கட்சிக்கோ இப்படியான அக்கறையில்லாத போது, ஊடகங்கள் தான் அந்தப் பணியை ஆற்ற வேண்டும்.. நம் நாட்டு ஊடகங்களின் நாடகம் அரசியல் வாதிகளை விடவும் இப்போது அம்பலமாகிறது. நல்ல பதிவு மதூ பாராட்டுகள். தம கூடுதல்1

    ReplyDelete
  13. அமீர்கான் மீதான பாய்ச்சல் தேவை அற்றது, அநாகரீகமானது என்றாலும்.அமீர்கான் பி.ஜெ.பி நடவடிக்கைகளை நேரடியாக விமர்சிக்கலாம். பொதுவாக சொல்வதே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவில் பெரும்பாலோர் மத சகிப்பு தன்மை உடையவர்களே. அமீர்கானுக்கு எதிரான கருத்துடைய எல்லோரும் பிஜெ பி க்கு ஆதரவானவர்கள் அல்ல. கமலைப் போலவே இவர் சொன்னதும் தவறு என்றுதான் தோன்றுகிறது. அவரது பேச்சு மதபேதமின்றி அமீர்கான் மீது அபிமானம் வைத்துள்ளோர் பலரின் மன வருத்தம் கொள்ள வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது. இது போன்ற பேச்சுகளை மத சகிப்பு அற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    ReplyDelete
  14. ஊடக வியாபாரம் இது என்றாகிப்போச்சு!
    நல்ல கருத்து!

    ReplyDelete
  15. நாம் அக்கினியைக் கக்கினாலும், மீடியா சொல்வதை மட்டுமே வேதவாக்கு என்று எடுத்துக்கொண்டு, சுயமாகச் சிந்திக்காமல் ஒருவர் மீது பாயும் மக்கள் இருக்கும்வரை....
    எதைச் சொல்ல அண்ணா?...படித்த நண்பர்கள் பலரும் புரிந்துகொள்ளாமல் வாதிடும்பொழுது சிறிது நம்பிக்கை இருந்தாலும் அதுவும் அற்றுப்போய்விடுமோ என்ற பயமே தலைதூக்குகிறது.. :(
    நல்ல பதிவு அண்ணா...
    I support Amirkhan. #‎stop_harassing_Aamirkhan‬

    ReplyDelete
  16. சகிப்புத்தன்மை இல்லை என்ற வார்த்தையைக் கூட சகித்துக்கொள்ள முடியாத வெறியர்கள் நம்மோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாம்தான் சகித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. சகிப்பு செத்துப் போனால் மனிதமும் மாய்ந்து போகும் நிலை ஏற்படும்.

    அமீர்கானுக்கு மட்டுமா ...நம் ஒவ்வொருவருக்குமே இந்த மாதிரி சவால்கள் நாட்டில் இருக்கின்றன. எதிர்க் கட்சிகள் விமர்சனத்தை சகித்துக் கொள்ள முடியாத அரசு இருக்கிறது. அவதூறு வழக்குகள் போடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. உச்ச நீதி மன்றமே சிரிக்கிறது.

    ReplyDelete
  17. வணக்கம்...

    மிகவும் யோசிக்க வைத்த ஒரு பதிவு !

    இந்த " மீடியா புத்தியை " பற்றி எனகு அசைக்க முடியாத கருத்து ஒன்று உண்டு...

    முதல் பத்திரிக்கை தர்மம் என்பதே ஒரு பம்மாத்து ! எது " சர்க்குலேசனை " உயர்த்துமோ அதுவே பத்திரிக்கை தர்மமாக போற்றப்படும் !

    இந்த்துக்கள், முஸ்லீம்கள் விசயத்தில் மட்டுமல்லா, ஜாதி வேறுபாடுகளில்கூட அவர்களின் நிலைப்பாடு மிகவும் தந்திரமானது...

    மீன்டும் சர்க்குலேசன் உதாரணத்தில் சொல்ல வேண்டுமானால் " மெஜாரிட்டி " பக்கமே பத்திரிக்கை உலகம் சுழலும் !.... புரிகிறதா ?!!!

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


    ReplyDelete
    Replies
    1. ஊடக அறத்தை மதிக்கும் ஊடகவியலாளர்கள். அதற்காக பணியையும், உயிரையுமே கூட இழந்திருக்கும் எத்தனையோ செய்தியாளர்கள். ஊடக அறத்திலிருந்து வழுவாமல் இருந்ததால் அரசின் அடக்குமுறைகளையும் இன்ன பிற இன்னல்களையும் எதிர்கொண்ட இதழ்கள். இவற்றையெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டதேயில்லையா ஐயா?

      Delete

Post a Comment

வருக வருக