தங்கமகன்



தனுஷ் இன்னும்  கல்லூரி  பையன்தான். அவர் உடல்வாகா அல்லது கவனமா என்று  தெரியவில்லை. மனிதர் அசத்துகிறார். எனக்கு முதலில் வந்த  எண்ணமே  This sweet little rascal needs new faces to act with him! என்பதுதான்.



அணிருத் ஒரு  இசைத்திருவிழாவையே  நடத்தியிருக்கிறார். பாடல்கள் ஒரு தனி வசூலை செய்யும் என்றே  நினைக்கிறன்.

ஆமா  இந்த வேல்ராஜ் எப்படி காதல் வேதியியலை  திரையில் விரிக்கிறார். பல ஆண்டு  அனுபவம்  இருக்கும் என்றே நினைக்கிறன். சான்சே இல்லாத காதல் விரவும் காட்சிகள்.

எனது பதின் பருவங்களில் மௌனமான நேரம்  பாடலை பார்த்த பொழுது எழுந்த உணர்வுகள் மீண்டும் எழுந்தன!
இரண்டு இளம் இதயங்களுக்குள்  இருக்கும் உணர்வுபூர்வமான ஒன்றுதல் திரையில் வந்திருக்கும். கமல் தவிர வேறு யாருமே  பண்ணவே முடியாது என்று நினைத்தேன். வேல்ராஜ் தனுஷ் கூட்டணி அதை வெற்றிகரமாக  செய்துவிட்டது. செமை.

முதல் பாதியில் துரத்தி துரத்தி காதலிக்கும் ஏமி ஜாக்சனை ஜஸ்ட் லைக்தட் தூக்கி எரியும் தனுஷ் இயல்பில் சாத்தியமா என்றால் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

தனுஷிடம் நடிங்க என்றுதானே  சொல்லியிருப்பார் வேல்ராஜ். இவர் என்ன காதல் உணர்வை அனுபவிச்சு வாழ்ந்துவிட்டு திடுமென சமந்தாவுடன் செகன்ட் இன்னிங்க்ஸ் ஆரம்பிப்பது எல்லாம் வேல்ராஜுக்கே அடுக்குமா?

ஏமி முதல் பாதியில் ரசிகமணிகளின் விசிலுக்கு வேலை வைப்பது இவர்தான். தண்ணியைப் போட்டுவிட்டு தனுசை சாத்துவது, குழந்தை மாதிரி கோவிலில் உட்கார்ந்திருப்பது தனுசுக்கு சரியாக சண்டையிட்டு பிரிவது அப்புறம் கூப்பிட்டு நாமெல்லாம் ஒரே பாமிலி இல்லையா இப்போவே சரியா பேசிக்கிறது நல்லது என பாய்வது என அசத்தியிருக்கிறார் ஐ நாயகி.

இதைவிட படம் எப்போதும் நினைவு கூறப்படப்போவது அந்த அறைக் காட்சிக்குத்தான்.

சமந்தா இரண்டாம் பாகத்தை இழுத்துச் செல்ல உதவியிருக்கிறார். தியேட்டரில் மூவருக்குமே விசில் பறக்கிறது. படம் முழுக்க தனுஷ் காதலித்துக் கொண்டே இருக்கிறார். முதல் பாதியில் காதலி  என்றால் பின்பாதியில் மனைவி ஆனால் எந்த இடத்திலும் உணர்வுகள் குறைவற்று பிரவகிக்க வைத்திருப்பது ஒரு பெரிய வெற்றிதானே.

படத்தின் இன்னொரு ஹீரோ குமரன்தான். பலமுறை யார் சினிமொட்டோகிராபி என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். இதற்காவே ஒருமுறை திரும்பப் போகவேண்டும்(சத்தியமாக இதற்குதான், நம்பீட்டீங்கதானே)

கே.எஸ்.ரவிக்குமார் பண்பட்ட நடிகராக மிளிர்கிறார். ராதிகாவைபற்றி சொல்லவே வேண்டாம்.

ஜாக்கி நுட்பமாக ஒன்று சொல்வார். வேல்ராஜ் செலவே இல்லாமல் படம் எடுப்பவர் என்று. இந்தப் படத்திலும் அதை நிறுவியிருக்கிறார். படம் முழுதும் பாய்ந்து பிரவகிக்கும் காதலுக்காவே படத்தைப் பார்க்கலாம்.

ஆனால் தனுஷ் ரசிகர்கள் அவரிடம் இதை எதிர்பார்க்கவில்லை! தமிழ் திரையுலகின் மர்ம முடிச்சுகளில் இதுவும் ஒன்று. நாங்கள் ரசிக்கிற மாதிரி நீ நடி என்று நடிகனை ஒரு வட்டத்திற்குள் தள்ளுவது ரசிகர்களின் தவறு என்பதையும் இப்படம் குறித்த தனுஷ் ரசிகர்களின் கருத்தில் இருந்து அனுமானிக்க முடிகிறது.

சில காட்சிகளின் பொழுது நானுமே கேட்டேன் இது என்ன சீரியல் போல இருக்கு என. குறிப்பாக பணப்பையை வைத்துகொண்டு அரவிந்த் காரக்டர் பைத்தியம் ஆகும் பொழுது.

இதுவே பல மீம்ஸ்களில் எதிரொலிக்கிறது!

முன்பெல்லாம் விமர்சனம் வரவே ஒரு வாரம்  ஆகும். அல்லது ஒரு  நாள்  ஆகும். ஆனால்  இன்று  காட்சியின் பொழுதே மீம்ஸ் உற்பத்தி ஆகி முதல் காட்சி  முடிவதற்குள் உலகைச் சுற்றி வந்துவிடுகின்றன.  எனது கணிப்பில் எவ்வித  சமரசமும் செய்யாமல் மீம்ஸ்கள்  வந்துவிடுகின்றன.

அப்புறம்  ஏன் மவுஸ் பிடிக்கிறவர்களை  ஏச மாட்டார்கள்!

பி.கு
தியட்டரில் படம் பார்ப்பது எனபது ஒரு தனி விவகாரம்!

கமண்ட்டுகள் எக்கு தப்பாய் பறந்துகொண்டே இருக்கும். நமது வயிற்றை புண்ணாக்கும் அவை.

தனுஷ் மெல்ல ஏமியை பின்தொடர்ந்து பேர் என்ன என்று கேட்கும் பொழுது அவர் பேசும் நீளவசனங்களுக்கு எழுந்தது குரல் ஒன்று.

ஏண்டி அவன் பேரத்தானேடி கேட்டான்!

அடுத்து தனுஷ் பேசும் வலி நிறைந்த வசனம் "நான் அப்பாவாகப் போறேன் ...ஆனா சிரிக்க முடியல, வீட்டில் அப்பா இல்லை .... எனத் துவங்க "
அதே ஆள்
வீட்ல வாசிங் மெஷின் இல்லை, கிரைண்டர் இல்ல, சிலிண்டர் இல்ல என்று உரக்க பேச அதிர்ந்தது அரங்கம்.

என்னை கிட்னாப் செய்து திரையரங்கத்திற்கு கொண்டு போன நண்பர்களுக்கு நன்றி..

இன்னொரு தபா பார்க்கலாம்.


Comments

  1. படம் நல்லாயிருக்கு...
    ஆரம்பத்தில் மீசையில்லாமல் வரும் தனுஷ் பார்க்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு... பின்னர் மீசையுடன்....

    நடிப்பில் சொல்லவே வேண்டாம்...
    பிச்சி உதறியிருக்கார் தனுஷ்...

    இங்கு இன்னும் படம் வரலை.... நான் இணையத்தில் பார்த்தாச்சு...
    நல்ல பிரிண்ட் வந்ததும் மறுபடியும் பார்க்கணும்...
    அருமையா எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
  2. இந்த படத்தை இன்னொரு தபா பார்க்கலாமா, சரி சரி நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. உங்களிடமிருந்தே "இன்னொரு தபா" அப்படினா பார்க்கலாம்னு சொல்லுங்க. இல்லேனாலும் பார்க்காமயானு ..ஹிஹி..

    This sweet little rascal needs new faces to act with him! // யெஸ் !!! தனுஷ் நல்ல திறமையான நடிகர்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக