எனது முகநூல் நண்பர் வேடியப்பன் கணேசன் (இணைப்பு) அவர்களின் திரைப்பட விமர்சனம்- அவரது அனுமதியோடு பகிரப் படுகிறது ..
'Cinema is the ultimate pervert art. It doesn't give you what you desire- it tells you how to desire' என்றொரு மேற்கோள் உள்ளது ஆங்கிலத்தில். எதை ஆசைப்பட வேண்டும், எப்படி ஆசைப்பட வேண்டும், அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மிகச்சொற்பமான படங்களே உண்மைக்கு மிக அருகில் இருந்து நமக்கு எடுத்துரைக்கிறது. அப்படி எனக்கு ஒரு பாடமாக இருந்த படம் தான் இறுதிச்சுற்று.
'Cinema is the ultimate pervert art. It doesn't give you what you desire- it tells you how to desire' என்றொரு மேற்கோள் உள்ளது ஆங்கிலத்தில். எதை ஆசைப்பட வேண்டும், எப்படி ஆசைப்பட வேண்டும், அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மிகச்சொற்பமான படங்களே உண்மைக்கு மிக அருகில் இருந்து நமக்கு எடுத்துரைக்கிறது. அப்படி எனக்கு ஒரு பாடமாக இருந்த படம் தான் இறுதிச்சுற்று.
அழகான, அற்புதமான, உணர்வுப்பூர்வமான, தத்ரூபமான, கனக்கச்சிதமான என்று இன்னும் என்னென்ன பொருத்தமான வார்த்தைகள் இருக்கிறதோ, அது அத்தனையையும் இட்டு நிரப்பிக்கொள்ளலாம் இந்த படம் குறித்துப் பேசும் போது. ஏனென்றால், இயக்கம், திரைக்கதை, நடிப்பு, வசனம், எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு என எல்லா ஏரியாவும் செம்ம பெர்ஃபெக்ட். இப்படி ஒரு களத்தில் புகுந்து விளையாடியதற்கு இயக்குநருக்கு ஸ்பெஷல் பூங்கொத்து. வெல்டன் மேடம்!
விளையாட்டை மையப்படுத்தி இதுவரை வெளிவந்த நூத்திச்சொச்சம் படங்களில் இதுவும் ஒன்று. ஈடுபாடு கிடக்கட்டும் ஒருபக்கம். என் வரையில், அவ்வளவாக விவரம் தெரியாத ஒரு விளையாட்டு சம்பந்தப்பட்ட ஒரு படம் எனக்கு இந்த அளவு பிடித்துப்போகிறது, பாதிப்பு ஏற்படுத்துகிறது, கலங்க வைக்கிறது என்றால் அதை காட்சிப்படுத்திய விதமும், மனதோடு ஒன்றிப்போகும் கதையும் அன்றி வேறென்ன?
மாதவன், நாசர், ராதாரவி தவிர்த்து வேறெந்த பிரபலமும் இல்லை படத்தில். மூன்று பேருமே அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார்கள். "வாழ்க்கையில முன்னேர்றதுக்கு ஒரு நல்ல சான்ஸ் கெடைக்கும் போது அப்படி என்னடி ஒரு கண்ட்ரோல் பண்ண முடியாத லவ்வு" என்று மாதவனும், "ரைட் சார்! ஆனா 'கப்பு' உன்கிட்ட இருந்துல்ல வருது" என்று நாசரும், "அந்த ஓடிப்போன முண்டத்தோட அப்பன் நான்தான்!" என்று ராதாரவியும் கைதட்டல் பெறுகிறார்கள்.
ஹீரோயின் ரித்திகா சிங். மை டியர் செல்லக்குட்டி. என்ன ஒரு ஃப்ரெஷ் புதுவரவு தமிழ் சினிமாவுக்கு? முகம் மட்டுமல்ல. ஒவ்வொரு பாகமும் நடிக்கிறது. அப்படி ஒரு உடல்மொழி! சரியான வாய்ப்புகளும், நேரமும் அமைந்தால் இந்த பெண் தொடப்போகும் உயரங்கள் ரொம்ப பெரிதாக இருக்கும். இப்படி மதி கெட்டுத் திரிய வைத்துவிட்டாயே மதி?? மிஸ் யூ ஹனி!!!
ஒரு ஸ்போர்ட்ஸ் கேர்ள், அவளுக்கு பயிற்சியாளராக ஒரு நடுத்தர வயது ஆண் என்றவுடன் குருநாதரின் 'பத்து செகண்ட் முத்தம்' நாவல் போல இருக்குமோ என்று நினைத்தேன். இல்லை. அதற்கும் இதற்கும் ஆறு அல்ல. ஆறாயிரம் வித்தியாசங்கள். கிளைமாக்ஸில் வரும் செங்கிஸ்கான் போர்த்தந்திர ட்விஸ்ட் சூப்பர்.
இதுவும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதைதான். ஆனால், தெறிக்க வைக்கும் ரத்தம் இல்லை. மண்டையை பிளக்கும் கோரம் இல்லை. குரல்வளையை கடித்துக் குதறும் கொடூரம் இல்லை. மென்மையாக, அழகாக மனதில் ஆழப்பதிகிறது இந்த இறுதிச்சுற்று.
எப்போது பார்க்க நேர்ந்தாலும் நான் தவறவிடாமல் முழுவதும் பார்க்கும் மாதவனின் ஒரே படம் தம்பி. இனிமேல் இறுதிச்சுற்றும் அதில் இடம் பிடிக்கும்!
தனி மனித துதிகளே அதிகம் வரும் இப்போதைய படங்களை நான் பார்ப்பதில்லை ,இறுதிச் சுற்று ...சற்று வித்தியாசமானப் படம் போலிருக்கே:)
ReplyDeleteஇறுதிச் சுற்றுப் படம் பார்த்துவிட்டோம். நல்ல படம். அதுவும் தமிழுக்கு. படத்தை விட அந்த ரித்விகாவின் பாடி லாங்குவேஜ்...செம பக்கா...நடிப்பு அசாத்தியம். ரித்விகாவே பாக்சர் என்பது கூடுதல் ப்ளஸ். என்ன ஒரு அசால்டான நடிப்பு. ஒரு ஸ்போர்ட்ஸ் பெண்ணின் பாடி லாங்குவேஜ் அதுவும்...விளிம்பு நிலைச் சூழ்நிலையிலிருந்து வரும் ஸ்போர்ட்ஸ் பெண்ணின் பாடி லாங்குவேஜ்......இயக்குநர் மிளிர்கின்றார்...
ReplyDeleteஆங்கிலப்படம் மில்லியன் டாலர் பேபி படத்தின் தழுவல் என்பது கொஞ்சம் மனதில் தோன்றியதைத் தவிர்க்க இயலவில்லை..
கீதா
நேற்றுதான் பார்த்தேன் !! அருமையான படம் ...
ReplyDeleteஎல்லாருமே சூப்பர்ப் அந்த பொண்ணு செம casual அப்படியே மதி காரக்டரா வாழ்ந்திருக்கா
அருமையான விமர்சனம்...
ReplyDeleteஎல்லாரையும் யார் அந்தப் பொண்னுன்னு சொல்ல வச்சிருச்சே இந்த மதி....
வணக்கம்
ReplyDeleteவிமர்சனம் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அவசியம் பார்க்கிறேன் நண்பரே
ReplyDeleteநல்லதோர் விமர்சனம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete