ஒரு விடைபெறல்

பிரியத்திற்குரிய  சகோதரி இளமதியின் கணவர், நெடிய  போராட்டத்திற்கு  பிறகு  இறையடி சேர்ந்தார்  என்கிற செய்தி  இன்று  காலைதான்  எனக்குத்  தெரிய வந்தது.


எப்படியும் முகநூலில் நாளொன்றுக்கு ஒருமணிநேரம்  இருக்கும் எனக்கு  இது மூன்று நாட்களுக்குப் பின்னரே தெரியவந்தது கடும் குற்ற உணர்வை எழுப்புகிறது.

சகோதரி   இளையநிலா  ஒரு இரும்புப் பெண்மணி, பாரதிதாசன்  அய்யாவிடம் தமிழ் பயின்று தமிழ் மரபுக் கவிதைகளை http://ilayanila16.blogspot.com/ தொடர்ந்து  எழுதிவந்தவர்.

தனக்கென பெரும் வாசக சாம்ராஜ்யத்தை வைத்திருப்பவர். மரபுத் தமிழ் தரித்திரம் பிடித்த தமிழ்நாட்டில் செத்துப் போனாலும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் எங்கோ எப்படியோ பிழைத்துக் கொள்ளும் என்ற நன் நம்பிக்கையை விதைத்தவர்.

வீச்சோடு  இயங்கிய  இவரின் ஒரு மின்னஞ்சல் தந்த சோகம் தாளமுடியாதது. ஒரு சாலை விபத்தில் சிக்கி தனது கணவர் நீண்ட நாட்களாக அசைவின்றி இருக்கிறார் என்கிற  விசயத்தை பகிர்ந்த அஞ்சல் அது.

அய்த்தான் செயல்பாட்டில் இருந்த பொழுது ஜெர்மனியில் இருக்கும் தமிழ்ச் சிறார்களை ஒருங்கிணைத்து தமிழ் பயிற்சியை அளித்தவர்.

தமிழகத் தமிழர்களால் அல்ல தமிழ் உயிர்த்திருக்கப்போவது இது போன்ற செயல்களை தொடரும் சேவகர்களால்தான்.

அத்தகு சேவகர்களில் ஒருவர் சமீபத்தில் நம்மிடம்  இருந்து விடைபெற்றிருக்கிறார்.

நெஞ்சம் கனத்த, கண்கள் பணிக்கும் வழியனுப்பல் இது.

கணிப்பொறித் துறையில் இருக்கும் மருமகனுக்கும், மற்றும் சகோதரிக்கு உதவும் அத்துணை நல்ல இதயங்களுக்கும் ஆறுதல்கள்.

அன்பன்
மது

பிகு.
இத்தகு இடர்பாடுகளுக்குள்ளும் இடையறாது இணையத்தில் செயல்பட்ட சகோதரிக்கு ஆறுதல்கள்.

எந்தச் சூழலிலும் வாழ்வு குறித்த நம்பிக்கையை விட்டு விடாதீர்கள். நாங்கள் மட்டுமல்ல இணய உறவுகள் ஓராயிரம் உண்டு உங்களுக்கு. மறந்துவிடாதீர்கள்.

முன்னைவிட அதி தீவிரத்துடன் இயங்க வேண்டிய நாட்கள் உங்கள் முன் இருகின்றன.

போதுமான கால இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். மீண்டு வாருங்கள்.

காத்திருப்பது
நாங்கள்
மட்டுமல்ல

அன்னைத் தமிழும்தான்.

துயருடன் உங்கள் சகோ

மது.



Comments

  1. வலைப்பதிவர் சகோதரி இளமதியின் கணவரின் ஆன்மா அமைதி அடையட்டும். உங்களோடு நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். சகோதரி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. மிகுந்த வருத்தம் அண்ணா.

    ReplyDelete
  3. கஸ்தூரி என்ன சொல்ல என்று வார்த்தைகள் இல்லை. சகோதரி/தோழி அவர்களின் கணவர் செயலிழந்து இருந்தார் என்பது தெரியவந்த போதே மனம் மிகவும் வேதனை அடைந்தது. எத்தனை வருடங்கள்! சகோ இளமதி எவ்வளவு வேதனை அடைந்திருப்பார். எப்படி அந்த நாட்களைக் கடந்துவந்திருப்பார் என்று நினைக்கும் போதே மனம் வலிக்கின்றது. அவரது கவிதைகள் பல சொல்லும். வேதனையைக் கூட வெளிப்படுத்திய தருணங்கள் உண்டு. மரபுக் கவிதையில் கலக்குபவர்.

    அவரது கணவரும் தமிழிற்காக ஆற்றிய சேவையை நீங்கள் குறிப்பிட்டிருப்பதைக் காணும் போது மனம் இன்னும் நெகிழ்ந்துவிட்டது. நல்ல உள்ளங்களின் வாழ்வு இவ்வளவுதானா?

    நேற்று கில்லர்ஜி அவர்கள் பதிவிட்ட போதுதான் தெரிந்தது.

    அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம். ஆழ்ந்த இரங்கல்கள். சகோதரிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நம் எல்லோரது ஆறுதல்களும் உரித்தாகுக. வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை வார்த்தைகள் இல்லை இந்நேரத்தில்...

    ReplyDelete
  4. ஆழ்ந்த இரங்கல்கள் ...

    ReplyDelete
  5. எம் அஞ்சலியும் ,,,, அவர் இத்துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்,,,

    ReplyDelete
  6. ஆழ்ந்த இரங்கல்...........

    ReplyDelete
  7. ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  8. வணக்கம் தோழர் சகோதரி இளமதி அவர்களுக்கு இதை தாங்கும் வல்லமையை படைத்தவன் அருளட்டும்.

    ReplyDelete
  9. எனக்கும் இன்றுதான் தெரியும் பா...மிகவும் வருத்தப்பட்டேன்..

    ReplyDelete
  10. எத்தனை துயர் இருப்பினும் தொடர்ந்து வலைப்பூவில் மரபுக் கவிதைகள் எழுதி வந்தவர். அவருக்கு இது பெரியதோர் இழப்பு. இத் துயரிலிருந்து விரைவில் மீண்டு வரட்டும்......

    ReplyDelete
  11. நான் எழுதவேண்டும் என்று நினைத்திருந்த வேளையில் நீங்களும் சகோதரி கீதாவும் எழுதியது கண்டு நெகிழ்கிறேன் மது. ஏதோ நம் புதுக்கோட்டையில் வாழும் நம் சகோதரியின் துயரம் போலவே உணர்கிறேன். அன்பிற்குத் தூரம் ஏது? நீங்கள் எழுதியிருப்பது போல, எந்தச் சூழலிலும் வாழ்வு குறித்த நம்பிக்கையை விட்டு விடாதீர்கள். நாங்கள் மட்டுமல்ல இணய உறவுகள் ஓராயிரம் உண்டு உங்களுக்கு. மறந்துவிடாதீர்கள்” என்றே நானும் சொல்ல விரும்புகிறேன். அவர் வாழ்வில் எத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டு பணியாற்றினார் என்பதை, நம்போலும் ஒருசில நண்பர்களே அறிவர்! இனியும் பணிகளைத் தொடர, நிதி உதவி தேவைப்படுமானால் நம் பதிவுலக நண்பர்கள் இணைந்து அவருக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறேன். நேரில் பேசுவோம்.

    ReplyDelete
  12. ஆழ்ந்த இரங்கல்கள்! காலம் ஆறுதல் தரட்டும்!

    ReplyDelete
  13. அனைவருக்கும் நன்றி ...
    பிரார்த்தனை
    அன்பு

    ReplyDelete
  14. அன்னாரை எனக்குத் தெரியாவிட்டாலும் இணைய நண்பர்கள் அனைவரின் வருத்தத்தில் நானும் பங்க கொள்கிறேன். சகோதரி இளமதிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !

    ReplyDelete

Post a Comment

வருக வருக