குவிஸ் குவிஸ் குவிஸ்

சூரியனின் வெப்பத்திற்கு காரணம் ?

ஹைட்ரஜன் எரிந்து ஹீலியமாக மாற்றப் படுகிறது

கிரீன்விச் தீர்க்கக் கோட்டுடன் தொடர்புடையது

கிரீன்விச் இடத்திலுள்ள வானவியல் ஆராய்ச்சிக்கூடம், லண்டனில் அமைந்துள்ளது, o டிகிரி தீர்க்க கோடு.

இரவில் மின்னும் நட்சத்திரங்கள் பகலில் வானில் தென்படாதன் காரணம்
சூரிய வெளிச்சத்தால் மறைக்கப்படுவதால்

புவியின் வட, தென் துருவங்களை இணைக்கும் கற்பனைக் கோடுகள்

தீர்க்கக் கோடுகள்

நட்சத்திர தொகுதி என்பது
அண்டமாகும்.

புவிக் கோளத்தின் நடுவில் வரையப்பட்டுள்ள o டிகிரி அட்சக் கோடானது
பூமத்திய ரேகை

பால்வழி அண்டத்தின் வடிவமானது
சுருள் வடிவம்.

பூமியின் மொத்த பரப்பளவு
510 மி.ச.கி.மீ

தாமாகவே ஒளிரும் தன்மை கொண்டது
நட்சத்திரங்கள்.

சூரியனில் அதிகம்(92 %) உள்ள வாயு
ஹைடிரஜன்

சூரியக் குடும்பத்திற்கு அருகிலுள்ள நட்சத்திரம்
பிராக்சிமா சென்டாரி

அட்சக் கோடுகள் புவிக் கோளத்தின் மீது கற்பனையாக எவ்வாறு வரையப்பட்டுள்ளன
கிழக்கு மேற்காக

புவியில் உயிரினங்கள் தோன்றுவதற்கும் தோன்றிய உயிரினங்கள் பெருகுவதற்கும் அடிப்படையாக விளங்குவது
சூரிய ஒளி

சூரியனில் எங்கிருந்து வெளிப்படும் வெப்பநிலை அதன் பேரொளிக்கு காரணம்
சூரியனின் மேற்பரப்பு

சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை
6000 டிகிரி செல்சியஸ்

Comments

  1. பரவாயில்லை கஸ்தூரி..என்னை நான் சோதித்துக் கொண்டேன். கேள்விகளுக்குப் பதில் தெரிந்துவிட்டிருந்தது. ஹப்பா 51 வயதிலும் படித்தவை நினைவில் இருக்கே என்று ஒரு அல்ப மகிழ்ச்சி. ஹிஹிஹி. நீங்கள் விடைகள் கொடுத்திருந்தாலும் நான் கேள்வியைப் படித்த பின் கண்ணை மூடிக் கொண்டுவிட்டேன் நம்புங்க ஸார்!!! மொத்தம் 15 கேள்விகள்...அதில் ஒரு கேள்விக்குப் பதில் தெரியவில்லை ...பூமியின் மொத்த பரப்பளவு..(நாம் வாழும் இடத்தோட பரப்பளவே தெரியலையே)

    ஸோ 14 கொடுத்துக்கலமா ஸார்??!!

    கீதா

    முந்தைய பின்னூட்டத்தில் பெயர் விடுபட்டுவிட்டது

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ...
      நன்றிகள்
      இந்த முற்சிகள் தொடரலாமா என்று நினைத்தேன்
      இப்போ தொடர்ந்தால் என்ன என்று நினைக்கிறன்

      Delete

Post a Comment

வருக வருக