சில நாட்கள் முன்பு இரவு வீட்டில் புத்தக அலமாரி ஒன்றைச் சரிசெய்து கொண்டிருந்தேன்.
துணைக்கு அலைகள் ஓய்வதில்லை பாடல்களுடன்.
வேலை கொஞ்சம் கொஞ்சமாக நடு நிசி வரை தொடர துணையாய் இருந்த இசை எனக்கு ஒரு உரையாடலை நினைவூட்ட Shiva Ji சொன்ன ஒரு விசயம் உண்மைதான் என்று புரிந்தது.
Shiva Ji
வாழ்வை இவர் அணுகும் முறையில் இருக்கும் தில் எனக்கு பிடிக்கும்.
இதையெல்லாம் விட திரைப்படங்களுக்கு இவர் எழுதும் சிறிய விமர்சனங்கள் நச்சுனு இருக்கும்.
சமீபத்தில் கேரள விருதுகளில் பிரமேம் புறக்கணிக்கப்பட்ட போழ்து இவர் எழுதிய ஸ்டேஸ்கள் இன்னும் நகைப்பை வரவழைக்கின்றன.
இறுதி சுற்று படத்திற்கு இவர் எழுதிய சிலவரி விமர்சனமும் அருமையாக இருந்தது.
மிகப்பொறுப்பான மத்தியஅரசுப் பணியில் இருக்கும் இவர் சமூக ஊடகங்களிலும் செமை ஆக்டிவ்!
விதைக்கலாம் கடலூருக்கான வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பொழுது இவரும் இவர் குழுவினரும் மையத்தில் தங்கி பணிபுரிந்தது இன்னமும் நினைவில்!
நடு நிசிப்பொழுதில் யு.கே. இன்போவில் பணிகளை முடித்து Baskar Gopalலுடன் லாரிக்கு காத்திருந்த பொழுது சிவாவின் செல்பேசி இடைவிடாது இளையராஜாவின் இசையால் இரவை நிரப்பியது.
"இரவென்றால் அது இளையராஜாவின் இசையுடன் இருக்க வேண்டும்" என்றார் ஷிவ்!
எனது அனுபவமும் அதை வழிமொழிகிறது!
நட்பு வட்டத்தில் இசை நல்ல (பண்ப)அலைவரிசை!!!
ReplyDelete--------"இரவென்றால் அது இளையராஜாவின் இசையுடன் இருக்க வேண்டும்" என்றார் ஷிவ்!
ReplyDeleteஎனது அனுபவமும் அதை வழிமொழிகிறது!-------
நண்பர் மது,
நானென்ன சொல்வது? அது உங்களுக்கே தெரியும். நானும் ஒரு நாள் இரவு முழுவதும் எப் எம் ஒன்றில் இளையராஜா பாடல்களாகக் கேட்டு .. சலித்துப் போய் அதன் பிறகு இரவில் இராவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
என் அடுத்த பதிவு உங்களுக்காக தயாராகிறது.
வாந்தி எடுங்க ராஜாவை தூற்றி எழுதி பதிவை ஹிட்சு ஆக்குவதுதானே உங்க பிழைப்பு!காரிகன்.
Deleteஇசையால் வசமாகா இதயம் எது? அதுவும் எம்எஸ்வியும் இளையராஜாவும் ரகுமானும் இருந்தால் நான் தனிமைச் சிறையில் பலவருடங்கள் கிடக்கத் தயார் (கொஞ்சம் புத்தகங்களும்) ரசனை வழியும் பதிவு ஒன்றிரண்டு பாட்டுகளை இணைத்திருந்தால் ஒன்றும் குறைந்து போயிருக்க மாட்டீர்கள்தானே? சரி நண்பர்களின் தளங்கள் இசை ரசனையோடு இருப்பதால் விட்டுவிட்டீர்களாக்கும்.
ReplyDeleteமது சார்
ReplyDelete"இரவென்றால் அது இளையராஜாவின் இசையுடன் இருக்க வேண்டும்" என்று நீங்கள் ' நச் ' சென்று முடித்திருக்கிறீர்கள் . அது மிகப் பெரிய உண்மை என்பது இசையை ஆராதிக்கும் ஒரு சிலருக்குத்தான் புரியும். இசையை மேலோட்டமாக அணுகும் நபர்களுக்கு இந்த வரி விநோதமாய் தெரியும் . அவர்களுக்கு நாம் பாடம் எடுக்க முடியாது . இந்த மாதிரி பாடங்களை அவரவர் படித்துக் கொள்ளும் பக்குவம் இருந்தால்தான் புரியும். சிவா அவர்களின் தளம் அறிமுகம் செய்தால் நலம்!
இசை நட்பை ஆளும்
ReplyDeleteநாற்பது வயதை ஒட்டியவர்கள்,அதைத் தாண்டியவர்கள் யாராயினும் இளையராஜாவின் இசை இன்றி வாழமுடியாது!நல்ல பதிவு.வாழ்த்துகள்..!
ReplyDeleteஇசை என்றால் அது ராஜா தான்!
ReplyDelete