ஒரு சூப்பர் ஹீரோவை வைத்து படம் எடுத்த காலமெல்லாம் மலையேறி இப்போ பிரேமுக்கு பிரேம் சூப்பர் ஹீரோக்கள் நிரம்பிய படங்கள் வரத் துவங்கியிருகின்றன. மார்வல், டிடக்ட்டிவ் காமிஸ் போன்ற பெரும் காமிக்ஸ் நிறுவனங்கள் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கி அவற்றிற்கு ஒரு மாபெரும் சந்தையை வைத்திருக்கின்றன.
மார்வல் அவேஞ்சர்ஸ் என்று களமிறங்கினால் டி.சி ஜஸ்டிஸ் லீக் என்று பதிலடி தருகிறது. விலிங் சஸ்பென்சன் ஆப் டிஸ்பிலீப் வகைப் படங்கள்தான் இவை.
இப்டிலாம் நடக்குமா என்று கேள்வி கேட்காமல் பார்க்க வேண்டிய படங்கள். லோக்கலா சொல்லனும்னா மூளையை கழட்டி கடாசிவிட்டு கொஞ்சநேரம் சூப்பர் ஹீரோக்களுடன் பறந்து வரலாம்.
இந்தப் படத்தில் வரும் பாட் மொபில் வடிவமைப்பு, அதன் படத்தை வெளியிட்டதெல்லாம் ஒரு திருவிழா போல இருந்தது. ஏகப் பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கிய படம்.
உங்களை யாருப்பா கண்ணாபின்னாவென எதிர்பார்க்க சொன்னது என்பது மாதிரி வந்திருக்கிறது.
ஹாலிவுட்கார்கள் நம்ம ரசிகர்களை தெய்வம் ரேஞ்சில் வைத்திருக்கிறார்கள் போல. சாமிக்கு படைச்சுட்டு அப்புறம் இலைக்கு வரும் விருந்து போல அமரிக்காவில் திரையிடும் முன்னர் இந்தியாவில் இது முதலில் முந்திக்கொண்டு திரையிடப்படுகிறது!
அன்புக்குரிய இளவல் மேக்னேஷ் திருமுருகன் தனது விமர்சன உலகம் தளத்தில் படத்தை உப்புக்கண்டம் போட்டுக் காயவிட்டிருந்தார். இன்னும் சில நெகடிவ் கமெண்ட்ஸ்.
நம்ம வையரிங் கொஞ்சம் இசகு பிசகு எனவே படத்தை பார்த்தே தீர்வது என்று முடிவெடுத்தேன். நண்பர்களின் அக்கறையான எச்சரிப்புகளை புறம் தள்ளி கிளம்பினேன். விஜய்யில் நூற்றி இருபது ரூபாயை வாங்கிக்கொண்டு ஒரு திரி டி கிளாஸ் கொடுத்தார்கள். ஹை புதுக்கோட்டை பரவால்லப்பா என்கிற உணர்வுடன் தியட்டரில் நுழைந்தால் ஷிவ் பாஸ்கருடன் அமர்ந்திருந்தார்.
சிவாவின் விமர்சனங்கள் வெகு நேர்த்தியாக தெளிவாக இருக்கும். வலைப்பூவில் இல்லையே ஒழிய ட்விட்டர், எப்.பியில் நச்சுன்னு நாலே வரியில் விமர்சனம் செய்துவிடுவார்.
ஏகப்பட்ட ட்ரைலர்களுக்கு பின்னர் படம் துவங்கியது. சூப்பர்மேன் பாத்திரம் இந்தப் படத்தில் கொஞ்சம் அடிவாங்கிஇருக்கிறது. பாட் அப்படியல்ல. செமை கெத்து பாட்மேன் வேடத்தில் வரும் பென் அப்ளேக் (பேசெக், பேர்ல் ஹார்பர்) இவ்வளவு கெத்தா பண்ணுவாரான்னு நம்பமுடியாம பார்த்த படம் இது!
குறிப்பா வசனங்கள் "அவங்க வேட்டைக்காரங்க" என்று தனது முன்னோர்கள் குறித்துச் சொல்லி சூப்பர்மேனைப் போட்டுத் தள்ள தயாராகும் காட்சியாகட்டும், சூப்பர்மேன் இனி உன் விளையாட்டை நிறுத்திக்கோ என்று சொல்லி விலகும் பொழுது ஏய் என்று அவனை நிறுத்தி உன்னை அடிச்சா ரத்தம் வருமா ? என்று கேட்கிற கெத்து ஒரு வாவ்.
இதே போல் அந்த விஷன், பிரவுன் டின்ட்டில் விரியும் பிரேமில் வலது ஓரத்தில் ஆதியந்தம் இல்லாமல் ஒரு பெரும் நெருப்புத் தூண் எரிய, சூப்பர் மெனின் படை பாட்மேனை மண்டை அடியாக அடித்துப் பிடிக்கும் காட்சி! சின்ன சீக்வென்ஸ். என்னவோர் விசுவல் இம்பாக்ட். அவ்வளவும் சி.ஜிதான்! இருந்தும் செமையான காட்சி அது!
அடுத்த தலைமுறை தமிழ் இயக்குனர்களுக்கு ஒரு நல்ல இன்ஸ்பிரேசன் இந்த சீக்வன்ஸ்.
டைட்டில் போடும் பொழுதே வாவ் என்று சொல்ல வைத்தது இசை ஹான்ஸ் சிம்மர் என்பது. பல காட்சிகளில் இசை விஸ்வரூபம் எடுக்கிறது. ஜங்கி எக்ஸ்.எல்லுடன் இணைந்து தந்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை பல்வேறு தளங்களில் ரொம்ப ஹாட்டா டவுன்லோடு ஆகிக்கொண்டிருக்கிறது!
ஆமா சூப்பர் மேனுக்கு அதிமுக்கியமான வேலையே அவரது காதலியை மீட்பதுதானா? படம் ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை இதே வேலையாக செய்கிறாரே அவர். திரைக் கதை எழுதியவர்களின் துணிச்சல் கிலியை ஏற்படுத்துகிறது. கிளிஷேவாக இருக்கிறது இவரது சீக்குவன்ஸ்.
ஆங்கிலத்தில் சொல்வார்கள் worst villeins make best heroes என்று, லக்ஸ் லூதரின் மகனாக வரும் ஜெசி ஐசன்பர்க் படத்தில் ஒரு சதுரங்க விளையாட்டை விளையாடுகிறான், பாட்மேனைக் கொண்டு சூப்பர்மேனைப் போட்டுத்தள்ள அவன் துவங்கும் சகுனிச் சடுகுடு பிராவோ. தனது ரத்தத்தை கொண்டு டூம்ஸ்டேவை உருவாக்கி ஒரே கல்லில் சூப்பர் ஹீரோக்கள் இருவரையும் போட்டுத்தள்ள முயலும் அவனது குள்ளநரித் தந்திரம் படத்தின் பலம்.
எப்படி அடித்தாலும் இந்தியாக்காரன் தாங்குவாண்டா என்கிற விசயம் ஹாலிவுட்வரை தெரிந்திருக்கிறது. திரைக்கதை மிக மெதுவாக இருப்பதால் படம் வரவேற்புப் பெறாமல் போகலாம். ஆனால் தியேட்டரை நிரப்பிய ரசிகர்கள் படத்தின் வெற்றி அதிரடி சரவெடியாக இல்லாவிட்டாலும் மினிமம் கியாரண்டி என்பதற்கு சாட்சி.
இயக்குனர் ஜாக் ஷ்னைடர் ஏற்கனவே சக்கர் பஞ்சில் எனக்கு கொலை நடுக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் ஒரு கல்ட் இயக்குனரோ என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. சக்கர் பன்ச் சில நாட்களுக்கு நினைவில் வலியாக தங்கியிருந்தது. இவர் படங்களை தொடர்ந்து பார்ப்பது மனநலத்திற்கு நல்லதல்ல என்று உணரவைத்த படம் அது.
ஆகச் சிறந்த இயக்குனர் கிறிஸ்டபர் நோலன் ஷ்னைடருக்கு சில வழிகாட்டுதல்களையும் செய்திருக்கிறார் என்பது கவுண்டமணியின் வாய்சில் ஹாலிவுட்ல இதல்லாம் சகஜமப்பா என்று சொல்ல வைக்கிறது.
படத்தில் அறிமுகமாயிருக்கும் புதிய கதாபாத்திரங்கள் ப்ளாஷ், அக்குவாமேன், வொண்டர்வுமன் அடுத்த அடுத்த ஆண்டுகளில் தனித் திரைப்படங்களாக வர இருகின்றன. இவ்வளவு நீண்ட தயாரிப்பும், அசுரத்தனமான உழைப்பும் படத்தைப்பற்றி பேசவும் எழுதவும் வைக்கிறது.
ஆனால் வழக்கமான ஷ்னைடர் படங்களைப் போல் கலவரப்படுத்தாமல் எல்லோரும் பார்க்கிறமாதிரி இருக்கிறது படம்.
இன்னொரு தகவல் மே மாதம் 1939 பாப் கேன் பாட்மேனை உருவாக்கினார். இதற்கும் ஓராண்டு முன்பே ஜூன் 1938இல் பிறந்துவிட்டான் சூப்பர்மேன்! ஜெரி சீகல் கற்பனையை அவர் நண்பர் ஜோ ஷஷ்டர் வரைய ஆக்சன் காமிக்ஸில் வெளிவந்தார் சூப்பர் மேன்.
இவற்றைப் படிக்கும் இளம் சிறார்களின் எண்ணத்தில் பல விதமான படிமங்களினை ஏற்படுத்தின. குற்றத்திற்கு எதிராக போராடாது குற்றச்செயல்களில் சிறார்கள் ஈடுபடவே சூப்பர்மேன் கொஞ்ச நாளைக்கு தடை செய்யப்பட்டது. அதே போல் பாட்மேன் மற்றும் ராபின் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்ற கருத்துப் பரவிய பொழுது சிலகாலம் நிறுத்தப் பட்டு பின்னர் பாட் வுமன் என்கிற பெண்கதா பாத்திரத்துடன் வெளிவந்தது பாட்மேன் காமிக்ஸ்.
நேர்மறை விளைவாக துப்பறியும் சிந்தனை, உடற்பயிற்சி, வாசிப்பு மற்றும் எண்ணற்ற அறிவியல் கருத்துக்களை சிறார்கள் அடைந்தார்கள். (ஏன் நாமும்தான்!)
காலத்தின் நினைவுகளாக நீட்சிகளாக இருக்கும் அந்த காலகட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு!
நிறைய நேரம் இருப்பவர்கள் ஒருதபா பார்க்கலாம் தப்பே இல்லை.
குழந்தைகள் பார்க்கலாம் முப்பரிமாண அனுபவத்திற்கே ஒருமுறை பார்க்கலாம். தமிழ் படங்களைவிட டீசன்ட்டாத்தான் இருக்கு!
அன்பன்
மது
நீங்க கவுண்டர்ல வாங்குன டிக்கெட்ட்டையும் கேன்டீன் கவுண்டர்ல வாங்குன காபி ரேட்டையும் confuse பண்ணிட்டேள்.. டிக்கெட் 100 காபி 120
ReplyDeleteomg ஷிவ் காபி முப்பது ரூபாய்!
Deleteஆனால் நன்னா இருந்தது
எனக்கு சினிமா பார்ப்பதில் உடன்பாடில்லாதவன் தங்களது விமர்சனம் பார்க்க தேன்றுகின்றது தோழரே
ReplyDeleteதமிழ் மணம் 2
உங்களின் அபரா உழைப்பு குறிப்பாக ப்ளாகிங் உலகில் அசத்துவது எனக்கு ஒரு நல்ல இன்ஸ்பிரேசன் நீங்க
Deleteபடமெல்லாம் பாக்கவேண்டாம்
வலைப்பூ உலகில் உங்கள் சின்சியாரிட்டியுடன் தொடர்ந்தாலே போதும் ..
வாழ்த்துகள் தோழர்
நன்றி நண்பரே
ReplyDeleteஅவசியம் பார்க்கிறேன்
ஓமந்தூரார் பதிவில் தேநீர் எப்படி இங்கே அறிமுகம் என்பதை குறிப்பிட்டிருந்தீர்கள்
Deleteநல்ல பதிவு அது
வருகைக்கு நன்றி
படம் பார்க்கவில்லை. 3டி அப்போ பார்த்திட வேண்டும்..நல்ல விமர்சனம். நீங்கள் நன்றாக விமர்சனம் செய்கிறீர்கள் அதுவும் ஆங்கிலப்படங்களை. வாழ்த்துகள்
ReplyDeleteபாருங்க தோழர்
Delete