எளிது எளிது ஆங்கிலம் ஞானசேகரன் அவர்களின் முகநூல் பதிவு 1

முன்னோடி  ஆசிரியர் திரு ஞானசேகரன்  அவர்களின்  முகநூல் பகிர்வு  ஒன்று

ஒரு முறை நேருஜிக்கே prepositions (உரிச்சொல் அல்லது வேற்றுமை உருபுக்கள் என்று சொல்லிவந்தேன். நண்பர் கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் உரிச்சொல் என்பதே பொருத்தமாக இருக்கிறது என்றார்) "about" "of" என்பதில் சந்தேகம் வந்து அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர், ஆங்கிலப் புலமை மிக்கவர், கிருஷ்ணமேனன் அவர்களிடம் எது சரியாக இருக்கும் என்றாராம். அதற்கு அவரும் about சரியாக இருக்கும்....இருந்தாலும் "of" கூட போடலாம் என்றாராம்.



அதற்கு நேரு "I don't want any supposition; I want the exact preposition. Get me Fowler's MEU", என்றாராம். அவர் குறிப்பிட்டது மிகப் பிரபலமான H.W. Fowler ன் Modern English Usage. ஆங்கிலத்தில் நாட்டமுள்ள, ஆங்கில ஆசிரியர் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய reference புத்தகம் இது. இன்றளவும் English Usage என்று வரும்போது இவரைத்தான் துணைக்கழைத்துக் கொள்ளவேண்டி இருக்கும். இந்தப் புத்தகம்தான் ஆங்கிலச் சொற்கள் பயன்பாட்டுக்கு இன்றளவும் அதாரிட்டி.
நேருவுக்கு வந்த சந்தேகம் இதுதான். remind என்ற வார்த்தைக்குப் பின் அவர் நினைக்கும் பொருளை உணர்த்த "about" வருமா அல்லது "of" வருமா என்பதே.
remind என்ற வினைச்சொல்லுக்கு இரு வேறு பொருள் உண்டு. ஒன்று தனக்குத் தானே நினைவு படுத்திப் பார்த்துக் கொள்ளுதல். இதற்கு of வரும்.
When I was in her company, it reminds me of my childhood.
Mals' sudden departure from the country reminds all the banks of his loan he availed from them.
இன்னொன்று நினைவு படுத்துதல்(இன்னொருவருக்கு). இதற்கு இந்த இரண்டிலும் ஏதேனும் ஒன்றைப் பயன் படுத்தலாம்.
Unless you remind me of the work, I may forget. இங்கு of க்கு பதிலாக about ம் போடலாம்.
அதே சமயம் about is used when the words(a phrase or a clause) that follow it denotes a reminder.
Did you remind him about the book which he borrowed? (means that he has not yet returned it.)
1. call or bring to mind
2. to prompt one's memory
‪#‎Who_will_remind_Mals_ABOUT_his_loan‬?.
If he visits any bank in London, will he remind himself OF the loan he has already availed in India?

Comments