தெறி அட்லீயின் மசாலா இட்லி.


சார் டிக்கெட் போட்டாச்சு கட்டாயம் வரணும் என்கிற ஸ்ரீயின் அழைப்பு. ஓகே, நமக்கு சித்திரைத் திருவிழா ஆர்.கே.பியில் இருந்தா அதை எதுக்கு மாத்திட்டு. 
மாஸ் ஹீரோக்கள் படங்கள் வெளியிடப்படும் ஒவ்வொரு நாளுமே திருவிழாதான் தமிழகத்தில். தியேட்டர் திமிலோகப்பட்டது. வழக்கம்போல திரைக்கு முன்னால் குத்தாட்டம், வெறிக் கூச்சல். 


இளைஞர்களின் சக்தி வெளிப்பாட்டினை இங்கே மட்டுமே பார்க்கவேண்டியிருக்கிறது. இது இந்தியத் திரைக் கலாச்சாரம் ஒன்றின் நீண்டகால அங்கம். 

தம்பி படத்தை பத்தி பேசுப்பா என்று யாரும் கொதிப்பதற்கு முன்னால் பேசிவிடுகிறேன். 

அட்லிக்கு ஒரு மாஸ் ஹீரோவை வைத்து பக்கா பாக்கெஜ் கொடுக்கும் வித்தை ஐஸ்.எஸ்.ஓ தரத்துடன் நிருபணமாகியிருக்கிறது. அட்லீயின் இயக்கத்தில் நான் பார்க்கும் முதல் படம் இதுதான். (பாஸ் அப்போ டிக்கெட் போட ஆள் இல்ல பாஸ்)

படத்தின் வில்லனாக வரும் இயக்குனர் மகேந்திரன் ஆ.வியில் இந்தப் படம் குறித்து சொல்லும் போது மெயின் ஸ்ட்ரீம்படம் என்று சொல்லியிருந்தார். சரிப்பா அப்படி என்னதான் இருக்குப்பா இந்த மெயின்ஸ்ட்ரீமில் என்றுதான் போனேன். 

முதல் பாதியில் குட்டிப் பொண்ணு நைனிகா எங்கேப்பா பிடிச்சாங்க? கண்ணழகி மீனாவின் குழந்தையாம். ஊர் கண்ணே உம்மேலதானம்மா. படத்தின் மெயின் ரோல்களில் ஒருவராக வரும் பாப்ஸ் சமீத்திய சினிமா அற்புதங்களில் ஒன்று. வாவ் வாவ். வாவ். 

எப்படிப்பா இப்படி ஒரு நடிப்பை குழந்தைகிட்ட இருந்து வாங்கினார் அட்லி என்று பல இடங்களில் திறந்தவாயை மூடாமல் பார்த்தேன் நான். 
முதல் முறையாக ஒரு குழந்தை நட்சத்திரத்திற்காக ரிபீட் ஆடியன்ஸ் வருவார்கள். ஒரு தபா செக் பண்ணிக்குங்க நீங்க. 

 படத்தின் மேக்கிங் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது பல இடங்களில். செமை சினிமொட்டோகிராபி ஜார்ஜ் சி. வில்லியம்ஸ். தமிழ் திரையின் வெகு அழுத்தமான ஒளிப்பதிவாளராக இருக்கப் போகிறார். (ஆமா வில்லி ஐ.எம்.டி.பி.யில் கூட உன் போட்டோ இல்லேப்பா? ஏன்ப்பா?

ஏமிஜாக்ஸன், சமந்தா என இரண்டு ஆர்.டி.எக்ஸ்கள், ஏமிக்கு கிட்டத்தட்ட துப்பறிவாளர் வேலையே என்றாலும் ரொமான்ஸில் வழக்கம் போலவே சிக்ஸ்சர் அடித்திருக்கிறார் சமந்தா. 

விஜய் கொஞ்சநாட்களுக்கு தியேட்டர்களை தெறிக்க விடப்போகிறார். சாலிட் மெகா பஸ்டர் படம். 

அட்லி அப்படியே சத்திரியனை எடுத்து வைத்திருக்கிறான் என்று போகிற போக்கில் இயக்குனர் மீது ரோடு ரோலரை ஏற்றிவிட்டுப் போக முடியாது. நம்ம பசங்கள தியேட்டருக்கு வரவைக்க, படத்தை கொண்டாட வைக்க, முக்கியமா அதை நூறுநாள் ஓடவைக்க சில விசயங்களை செய்தே ஆகவேண்டியிருக்கிறது. குறைந்த பட்சம் அடுத்த படவாய்ப்பிற்காவது! அந்த வகையில் தெறி அட்லியின் டைரிபக்கங்களை நிரப்பும். 

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் அதற்காக ஒரு செண்டிமெண்ட் ஆக்சன் அதகளம், அமைச்சரைப் பார்த்து உன்னால ஒரு ம___ரும் ____ முடியாது என சொல்கிற ஹீரோ என சினிமாவில் மட்டுமாவது பார்க்க வைத்ததற்காவே ஒரு ஸ்பெசல் சலூட் அட்லிக்கு. 

விஜயை பசங்களுக்கு ஒரு மாஸ் ஹீரோவாக மட்டுமே தெரியும், அவர் நடித்த ஆரம்பகால படங்களை கொண்டு அவர் இன்று இருக்கும் இடத்தைப் பார்த்தால் நிச்சயம் யாரும் நம்ப மாட்டார்கள். லவ் டுடேவும், பூவே உனக்காகவும் இல்லை என்றால் இன்று இந்த ஆக்சன் ஹீரோ இல்லை என்பதே என் சோட்டு பங்காளிகளின் கருத்து. 
அந்த வகையில் இன்றைய ஆக்சன் ஹீரோ விஜய் திரையில் ரசிகர்களை மெஸ்மரைஸ் செய்வதை பார்ப்பது ஒரு தனித்த அனுபவம். உடலைப் பேணுவதில், நடனத்தில் முத்திரை, வெறிபிடித்த ரசிகர் கூட்டம், என்றாவது ஒருநாள் முதல்வர் என நம்பும் ஒரு வெறிபிடித்த ரசிகர் பட்டாளம் இப்படி நம்பவே முடியாத விசயங்களை ஒரு நடிகர் அடைந்திருப்பது சாதாரண விசயம் இல்லையே. 
ஆக்ரோசமாக மட்டுமல்ல செண்டிமென்டாலும் கொஞ்சநாளைக்கு படம் தியேட்டர்களை தெறிக்க விடும். விஷஸ் அட்லி. 

ஒரு கேள்வி. 
படம் பாலியல் தாக்குதலுக்கு எதிரானது. பல காட்சிகளில் திரையரங்கை நிரப்பிய ரசிகர்கள் பாலியல் தாக்குதலுக்கு எதிரான வெகு அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்துவதை பார்க்க முடிகிறது. 

இவ்வளோ விசயத்தை பார்த்துப் பார்த்துச் செய்துவிட்டு  கிளைமாக்சில் ஆநிக்காவிற்கு காஸ்டியூம் டிசைனிங் செய்ததில் கோட்டைவிட்டது சரியா?

தேறி இரண்டில் இது சரியாகிவிடும், கூடவே கதையும் தெறிக்கவிட்டால் சரி.  

நம்ம தமிழ் சினிமாவில் ஹாலிவுட் தரத்திற்கு காமிராமேன்கள் வந்துவிட்டார்கள், இயக்குனர்கள் வந்துவிட்டார்கள், இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள், ஏன் ஹீரோக்கள்கூட வந்து விட்டார்கள். கதைதான் இன்னும் வரல. வரும் அதுவும் விரைவில்.  

Comments

  1. Athukulla parthacha...ponumo....

    ReplyDelete
  2. விமர்சனத்தை ரசித்தேன். கடைசி பத்தியில் கடைசி வரி உங்கள் ஆதங்கம் மட்டுமல்ல, பலரின் ஆதங்கமே. நன்றி.

    ReplyDelete
  3. சிலாகிச்சு சொல்லிருக்கிங்க. அந்த அளவு வொர்த் தானா??? எனக்கு அப்டி சிறப்பா தெரில.. பரவாயில்ல பார்வைகள் பலவிதம்

    ReplyDelete
    Replies
    1. பாஸ் உங்க விமர்சனம் எங்க பாஸ்

      Delete
  4. விமர்சனம் அருமை...கடைசில சொல்லிருக்கீங்க பாருங்க அது அது நச்!!! அதான் கதைதான் இன்னும் வரலைனு....

    ReplyDelete
  5. இது உங்க ரிவியூ மாதிரி தெரியலை. வழக்கமாக வரும் "அன்பன் மது" னு உங்க கையெழுத்தையும் காணோம். இணையத்தில் முதல் பாஸிடிவ் ரிவியூவும் இதுதான். உங்க பசங்க யாரும் படத்தைப் பத்தி சிலாகிச்சுச் சொல்லச் சொல்ல எழுதினீங்களா? என்னனு தெரியலை. :))

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக இணயத்தில் விஜய் ஹேட்டர்ஸ் அதிகம்...
      குழந்தைக்கும் தகப்பனுக்கும் திரை விரிந்த அந்த அன்யோன்யம் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது...

      பசங்க நான் என்ன எழுதுகிறேன் என்று பார்க்கத்தான் ஆவலாக இருந்தார்கள்..

      உண்மையில் என்னை தியேட்டருக்கு அழைத்துச் சென்ற நண்பர்கள் குழு அஜீத்தின் ரசிகர்கள்...

      தட்ஸ் இட் வருண்

      இணயத்தில் நண்பர் சிவா தந்த ஒரு ஆங்கில ரெவியு பார்த்தேன்...

      தெறி ரெவியு அது..

      இதற்கு பின்னர் உள்ள சமூக உள்ளீடுகள் குறித்து சில எண்ணங்கள் வந்தது..

      பரத்வாஜ் ரெங்கன் என்று நினைவு செமையான ரைட்அப்

      மேக்நேஷ் திருமுருகனின் விமர்சன உலகத்தின் (அவரது தளம்) ரெவியு நான் படித்ததிலே செமையான தமிழ் ரெவியு ...
      உண்மையல் மேக்னேஷ்சிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.

      Delete
  6. //நம்ம தமிழ் சினிமாவில் ஹாலிவுட் தரத்திற்கு காமிராமேன்கள் வந்துவிட்டார்கள், இயக்குனர்கள் வந்துவிட்டார்கள், இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள், ஏன் ஹீரோக்கள்கூட வந்து விட்டார்கள். கதைதான் இன்னும் வரல. வரும் அதுவும் விரைவில்//

    நெற்றியடி தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தேவகோட்டையாரே

      Delete
  7. தமிழ் திரைப் படத் துறையினர் கதை இல்லாமலே படம் எடுப்பதில் சாமர்த்தியசாலிகள்அல்லவா
    வரும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  8. சிறந்த பதிவு

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஆகா நன்றிகள் அய்யா

      Delete
  9. படம் ஓடிருமா?
    கதைகளுக்காக படம் வேண்டும் என்றால் சற்றே மலையாளம் பக்கம் ஒதுங்கணும் மது சார்

    ReplyDelete
    Replies
    1. எனது நண்பர்கள் பலரும் சிலாகித்து பேசுகிறார்கள்..
      சார்லி பார்க்கவேண்டும் ..
      ஸ்ரீ உஸ்தாத் ஹோட்டல் நன்றாக இருக்கு என்று சொன்னான்..
      பார்ப்போம் ..

      Delete
  10. நானும் ,யாராவது டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் பார்க்கலாம் என்றிருக்கிறேன் :)

    ReplyDelete
  11. படம் பார்த்து விட்டு வந்து பிறகு பின்னூட்டம் இடலாம் என்று நினைத்தேன். பார்த்தேன். இளைஞர்கள் விஜயின் ஒவ்வொரு அசைவுக்கும் கை தட்டி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் மீது சிறு எரிச்சல் ஏற்பட்டாலும் நானும் இப்படிதானே ரஜினி, கமல் நடித்தப் படங்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்திருப்பேன் என நினைத்துப் பார்த்து அடக்கிக் கொண்டேன்.

    நீங்கள் எழுதியதில் ஒன்று உண்மை. இளைஞர்களின் சக்தி சினிமாக்களுக்கு மட்டுமே அதிகம் விரையமாகிறது. அப்போது முதல் இப்போது வரை தான் செய்ய முடியாததை ஒரு நிழல் ஹீரோ செய்வதைப் பார்த்து திருப்தி அடைந்து கொள்ளும் மனசு மட்டும் மாறவேயில்லை. மாஸ் ஹீரோ பாஸ் ஆகி விடுகிறார். பாஸ் பண்ண வேண்டிய நம் இளைஞர் சக்தி நிறைய விசயங்களில் லாஸ் ஆகி விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆகா இது செமையான பின்னூட்டம் ...
      ரைமிங் விளையாடுது ...
      நன்றி

      Delete

Post a Comment

வருக வருக