முகநூல் இற்றைகள் சில

சாதிக்கு இரண்டாய்
வீடுகள் ஒதுக்கப்பட்டன
சமத்துவபுரம்
கவிஞர் பவல்ராஜ்
வீதி நினைவுகள் ..


வீதி நிகழ்வு இன்று மனதில் நிற்கும் வரிகள் ...
பூபாலனின் தனிமை அரக்கனிடமிருந்து குழந்தைகளைக் காக்க வாசிப்பை அறிமுகம் செய்க ...
அம்சப் பிரியாவின் கனவு நூலகங்கள்
துரத்தும் சொற்கள் குறித்த உரையுடன் 
கவிதைக்கு ஒரு நூலகம்
குழந்தைகளுக்கு ஒரு நூலகம் என முன்மொழிவுகளைச் செய்திருக்கிறார்.
நனவாக வேண்டும் நம் அனைவரின் ஒத்துழைப்போடு

வீதி இலக்கிய களத்தின் பதினெட்டாம் அமர்வு இனிதே முடிந்தது, அமர்வின் சிறப்பு அம்சப்பிரியாவும் பூபாலனும் என்ன ஒரு அற்புதமான உரைவீச்சுக்கள் ...
நன்றி இருவருக்கும்
ஓர் எளிய பார்வையாளன் என்கிற முறையில்

அவர் மீது
விமர்சனங்கள் எனக்கும் உண்டு
இனி
அவை தேவையில்லை
அவரி மரித்த அந்த நாள் 
இந்தியா அழுதது
முதன் முதலில் ஒரு தமிழனின் மறைவிற்கு
அவரின் மறைவில் கூட ஆயிரம் நல்ல விசயங்களை அவர் தொடக்கி வைக்கிறார்
வைக்கவும் இருக்கிறார்.
நிஜம்தானோ
பிரான்சில் கம்பன் கழகத்தில் ஒருவர் பேசும் பொழுது சொன்னார்.
தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு ..
...
...
...
அது நீச குணம்
என்றார்
இன்னும் காதில் இருக்கிறது அது
பத்தாதற்கு
மீண்டும் மீண்டும் நிறுவுகிறோம்
‪#‎கலாம்‬

IFB கடந்த இருபது நாட்களாக பிரித்துப் போட்டபடியே கிடக்குது. 
அம்மா ருக்குமணி தாயே கொஞ்சம் சீக்கிரம் சரிபண்ணுங்க தாயே ... 
உலகின் சிறந்த துவைப்பான் ... பாடா படுத்துறான் ...

கடந்த மூன்று நாட்களாக சக ஆசிரியர்களை சந்திக்கும் வாய்ப்பு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் பயிற்சியில் கலந்துகொண்டதால் கிடைத்தது.
திரு.மாணிக்கம் எனும் ஆசிரியர் ஜெயமோகனின் எழுத்துக்களை தீவிரமாய்ப் படிப்பதும், பல்வேறு எழுத்து ஆளுமைகளை அவர்கள் சிலாகித்ததும் புதிய புரிதல்களையும் கண்திறப்பு அனுபவங்களை எனக்குத் தந்தது.
கரம்பக்குடியில் ஒரு சகோதரி மாணவர்களின் மனநிலையைச் சமப்படுத்த 
நீங்கள் இமயத்தில் இருக்கீங்க
குளிர் காத்து
அத நீங்க உணர்கிறீர்கள்
என்று சொல்லி பின்னர் படிக்க வைத்தால் மாணவர்கள் எளிதில் மனப்பாடம் செய்துவிடுகிறார்கள் என்று சொன்னார்.
கரம்பக்குடி ஆசிரியர்கள் கற்பித்தல் நுட்பங்களில் ஜமாய்த்தால் திருமயம் ஆசிரியர்கள் அசாத்திய வாசிப்பில் அசத்தினார்கள்.
அரிமளம் பாலாஜி நான் பதினைந்து ஆங்கில தினசரிகளை வாங்கி மாணவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் தாங்களாவே ஒரு பத்து நாளிதழ்களை வாங்கிவருவதாக சொன்னார்.
இன்று ஆலங்குடியில் நம்பமுடியாத சில ஆசிரியர்களை சந்தித்தேன். ஆங்கில இலக்கணத்தில் விளையாட்டுக்களை வடிமைதிருந்தார்கள். ரொம்ப அருமையாக.
ஆசிரியர்கள் உழைக்கிறார்கள். வெளியில் தெரிவதே இல்லை. மரம் நிழல் தருவது செய்தி ஆவதில்லை.
சில மரங்கள் வெயிலையும் தரும். நாம் அவைகுறித்து வியக்கிறோம் சினக்கிறோம்.
நிழல் தரும் தருக்கள் தொடர்கின்றன தங்களது பணிகளை. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி. அவை குறித்து நமக்கு வியப்போ மரியாதையோ இல்லை.
சந்தித்த உழைக்கும், சாதிக்கத் துடிக்கும் அத்துணை ஆசிரியர்களிடமிருந்தும் நான் நிறையக் கற்றுக் கொண்டேன்.
நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
தொடர்வோம் பயணத்தை.

இருந்ததும் புரிந்ததும்
நேற்று
இருந்தது
புலிகள் என்றோர் அமைப்பு 
இருந்தது
கடும் விமர்சனங்கள்
இருந்தது
பீடு
இருந்தது
எல்லாமே
இன்று
நான்கு பேர் கைது
என்று
சொன்ன
நாளிதழைக் கடந்து
தேநீரைச் சுவைக்கையில்
புரிந்தது
நான்
எருமையாகியிருந்தது

இருந்ததும் புரிந்ததும்
நேற்று
இருந்தது
புலிகள் என்றோர் அமைப்பு 
இருந்தது
கடும் விமர்சனங்கள்
இருந்தது
பீடு
இருந்தது
எல்லாமே
இன்று
நான்கு பேர் கைது
என்று
சொன்ன
நாளிதழைக் கடந்து
தேநீரைச் சுவைக்கையில்
புரிந்தது
நான்
எருமையாகியிருந்தது

ஆர்.எம்.எஸ்.ஏ பயிற்சிகள் துவக்கம், 
கரம்பக்குடி பள்ளியில் முதல் பகுதி, இரண்டாம் பகுதி திருமயத்தில் ... அருமையான ஆசிரியர்களை சந்தித்தேன் 
ஒரே நாள் நூற்றிப் பத்து கி.மி...

August 14
நந்தன்தான் அறிமுகம் செய்தது ...
இந்த நல்ல இதயத்தை
கற்க கசடற அமைப்பை நிறுவி
தமிழக கிராமப்புற ஏழை மாணவர்களின்
கல்விக்கு நிதியளிக்கும் 
இனிய நண்பர் இஸ்மாயில் முகமதுக்கு இன்று பிறந்தநாள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Comments

  1. ஆசிரியர்கள் உழைக்கிறார்கள். வெளியில் தெரிவதே இல்லை. மரம் நிழல் தருவது செய்தி ஆவதில்லை.
    சில மரங்கள் வெயிலையும் தரும். நாம் அவைகுறித்து வியக்கிறோம் சினக்கிறோம்./ ஆம் அது உண்மையே. தவறுகள் மட்டும் வெளியில் சொல்லப்படுகிறது. நல்லவர்கள் வெளியில் தெரிவதில்லை. கஸ்தூரி நீங்களேனும் இதனை வெளிப்படுத்துங்கள் வலையில். ஆசிரியர்கள், கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைப் பதியுங்கள் தயவாய். ஒரு ஆசிரியன்தான் ஒரு நல்ல சமுதாயம் உருவாகக் காரணம் ஆதலால் நீங்கள் தொடர்ந்து பதியுங்கள்.

    அருமையான ஆசிரியர்களின் மாணவர்களுக்காகத் தன்னலமற்றச் செயல்கள் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். வெல்டன்...வாழ்த்துகள். இன்னும் அறிய காத்திருக்கிறோம்

    ReplyDelete

Post a Comment

வருக வருக