ரோஷினிக்கு ஒரு சல்யூட் - விதைக்கலாம் வைகறை நிதி பங்களிப்பு

வைகறை குடும்ப நிதியை திரு.வெங்கட் அவர்கள் சிவா மூலம் கவிஞர் கீதாவிடம் வழங்கிய பொழுது 

விதைக்கலாம் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கலாம் அவர்களின் மறைவை ஒட்டி எழுந்த உணர்வுகளில் தொடரும்  அமைப்பு. மரக்கன்றுகளை கேட்போரின் இடத்திற்கு சென்று நடுவதே நோக்கம். வாரம் ஐந்து கன்றுகள் சில சிறப்பு நிகழ்வுகள் என இதுவரை நானூற்றி முப்பத்தி ஒரு  கன்றுகளை நட்டிருக்கும் இயக்கம்.



கோடை விடுமுறை என்பதால் ஆர்வமிக்க நண்பர்களும் இணைத்து சில நிகழ்வுகளை சிறப்புச் செய்திருகிறார்கள். அமீரகத்தில் இருந்து தோழர் ரபீக், டெல்லியில் இருந்து பயணப் பதிவர் திரு வெங்கட் நாகராஜ் அவர்களும் தலா ஒரு நிகழ்வில் கலந்துகொண்டது மகிழ்வு.

மேலும் ஒரு நல்ல விசயமாக சமீபத்தில் நம்மை விட்டுப் பிரிந்த கவிஞர் வைகறைக்கான குடும்ப நலநிதிப் பங்களிப்பையும் இருவருமே செய்தார்கள். தோழர் ரபீக் அவர்கள் ரூபாய் ஐயாயிரத்தினை வழங்கியது நெகிழ்வு.

இந்நிலையில் டெல்லிப் பதிவர் திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள் ஒரு நாள் அழைத்து நான் விதைக்கலாம் நிகழ்வு ஒன்றிற்கு வர விரும்புகிறேன் என்றார். மகிழ்வு. அதன்படியே புதுகைப் பூங்கா நகர் மாரியம்ம்மன் கோவிலில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வின் தொடர்ச்சியாக விதைகலாமின் முதன்மைப் புரவலர் திரு. மணி அய்யா வீட்டின் மாடியில் நடந்த கூட்டத்தில் பேசினார். கூட்டம் விதைக்கலாம் உறுப்பினர் திரு சிவாஜியின் பிறந்தநாளினை கொண்டாடவும் செய்தது.

வாழ்த்திப் பேசிய திரு வெங்கட் வைகறை நல நிதிக்காக தனது மகள் ரோஷினி தனிப்பட்ட சேமிப்பில் இருந்து ரூபாய் இரண்டாயிரத்தை வழங்குவதாக அறிவித்த பொழுது எல்லோரும் நெகிழ்ந்தோம். நிகழ்வு தேர்தலுக்கு முன் நாள் என்பதால் அனைவருமே தேர்தல் பணி அழுத்தத்தில் இருந்தோம், இல்லை என்றால் நேரே ஸ்ரீ ரெங்கம் சென்று ரோஷினிக்கு நன்றிகளைத் தெரிவித்திருப்போம்.

ஒரு குழந்தை தான் முன் பின் சந்திக்காத ஒரு மனிதனின் மறைவினை கண்டு  அவர் குழந்தைக்காக திரட்டப் படும் நிதிக்கு தனது சேமிப்பினை அளித்திருப்பது என்பது சாதரணமான விஷயம் அல்லவே. ரோஷனி மட்டுமள்ள அவரது பெற்றோரின் சமூகப் பொறுப்பும் நமக்குப் புரிகிறது.
நன்றிகள் திரு.வெங்கட், திருமதி, ஆதிக்கும் சேர்த்தே.

விதைக்கலாம் என்கிற தளத்தில் இருந்து வைகறைக்கு திரட்டப்பட்ட நிதி ரூபாய் முப்பத்தி ஏழாயிரம் என்கிறார் ஸ்ரீ. விதைக்கலாம் உறுப்பினர்கள் பலருக்கு வைகறை யாரென்றே தெரியாது. இந்நிலையில் இளைங்கர்களின் பங்களிப்பு நிச்சயம் பாராட்டுக்கு உரியது.

இந்நிலையில் வைகறைக்கான ஆகச் சிறந்த பதிவை எழுதிய பொள்ளாச்சி பூபாலனும் அம்சப் பிரியவும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறியவும் அவர்களது இணையவும் விரும்புகிறது மனது.

இதைவிட வைகறையை தனது தோள்மீது சுமந்த, வைகறை கடைசி நொடிவரை பாசம்மேலிட  அண்ணன் என அழைத்த யாழியும் இணைந்தால் நலம் விளையும்.

வீதியின் சார்பில் இவர்களை நிதி திரட்டும் நிகழ்விற்கு அழைக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. உரிமையோடு அழைக்கிறேன்.

கூடவே நானற்காடன் அவர்களையும்..

ஒரு தமிழ் கவிஞன் எதிர்பாராமுறையில் நம்மை விட்டுப் பிரியும் பொழுது நாம் என்ன செய்கிறோம் என்பதை கலை இலக்கிய வரலாற்று நூலின் வெற்றுப் பக்கங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.

இது வைகறைக்கு மட்டுமே செய்யும் உதவியல்ல. நாம் சக கவிஞர்களை எப்படி மதிக்கிறோம், உடுக்கை இழந்தவனின் கைகள் போன்று எப்படி இடரில் எப்படி உதவுகிறோம் என்பதற்கான log book. கவிஞர்கள் கலை இலக்கிய செயல்பாட்டாளர்கள் அனைவரையுமே அழைக்கிறேன்.

மரித்துப் போன கவிஞனின் கல்லறையில் ஒரு பிடி மண்ணை ஈரம் கசியும் விழிகளோடு போடுவதில் மட்டுமல்ல நமது மனிதம். நிராதரவாய் நிற்கும் அவன் குழந்தக்கு நாம் என்ன செய்கிறோம், வைகறையின் லீகசியை அவரது ஜெய் தொடர நாம் என்ன செய்யப் போகிறோம் எனபதும் மிக முக்கியம்.


நம்பிக்கையோடு அழைக்கிறேன். வாருங்கள் ஒன்றுபட்டுச் செயல்படலாம்.


நன்றிகளோடும்
நம்பிக்கையோடும்
மது

இது பழைய தகவல் ஆர்வலர்களுக்காக

வணக்கம்,

வலைப்பதிவர் மாநாட்டின் வங்கிக் கணக்கையே வைகறை நிதிக்கும்  பயன்படுத்தலாமா என்கிற ஆலோசனைக் கூட்டம் இன்று பாரி மழலையர் பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்தில் கவிஞர் முத்து நிலவன், கவிஞர் செல்வா, கவிஞர் கீதா மற்றும் கவிஞர் மாலதி அவர்களுடன் விதைக்கலாம் ஸ்ரீ மற்றும் சிவாவும் கலந்துகொண்டனர்.

நிறைய யோசனைக்குப்பிறகு அதே கணக்கினையே வைகறை நிதிக்கும் பயன்படுத்தலாம் என்கிற முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிதியளிக்க விரும்புவோர்கள் கீழ்க்கண்ட கணக்கிலேயே வரவு வைக்கலாம்.



First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
vaigaraifamilyfund@gmail.com

Comments

  1. இதுவரை நன்கொடை அளித்தோர் பட்டியலை உடன் வெளியிட வேண்டுகிறேன்! அபனால் மேலும் பலர் தர முன் வருவர் என்பது என் கருத்து!

    ReplyDelete
  2. தேவையான கோரிக்கை, சரியான நேரத்தில் வைக்கப்பட்டுள்ளது. வைகறையை நேரடியாக அறியாத குழந்தை ரோஷிணியை வைகறை நிதிவழங்கும் எளிய விழாவில் சந்திக்க ஆவல். நண்பர் வெங்கட் அவர்களிடம் இந்த என் கோரிக்கையை வைக்கிறேன்.
    வைகறையின் நண்பர்களை இந்த நல்லநோக்கத்தில் இணைந்து பணியாற்ற அழைத்தது சரியானது. நானும் இதனை வழிமொழிகிறேன். வாருங்கள் நண்பர்களே!
    “விதைக்கலாம்”அமைப்பின் சமூகநோக்கம் மரக்கன்று தாண்டியும் வெளிப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தனித்தனிப் பெயரோடும் விதைக்கலாம் அமைப்பின் நிதிவரவைத் தெரிவிப்பது அந்த நண்பர்களுக்கான கௌரவம் என்றே நினைக்கிறேன். அதையும் தெரிவிக்கலாம். நன்றி.

    ReplyDelete
  3. ரோஷினிக் குட்டிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பெற்றோர் எவ்வழி அவ்வழியே குழந்தைகளும் என்பதற்கான ஒரு நல்ல முன்னோடி.

    புதுகைத் தென்றல் சகோ கீதா அவர்களின் தளத்தில் தெரிந்தும் கொண்டோம். வங்கிக் கணக்கைக் குறித்துக் கொண்டுள்ளோம்.

    நல்லதொரு முயற்சி புதுகை நண்பர்களால் எடுக்கப்பட்டுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி. வைகைறையின் மகன் ஜெய் குட்டியின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவும் மனமார வாழ்த்துவோம்!

    ReplyDelete
  4. ரோஷிணிக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. ரோஷிணிக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  6. ரோஷினி, ஆயிஷா = இந்தியன் மலாலா

    ReplyDelete
  7. ரோஷிணிக்கு பாராட்டுகள். விதைக்கலாம் முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துகள்.வலைப்பதிவர் மாநாட்டின் வங்கிக் கணக்கையே வைகறை நிதிக்கும் பயன்படுத்தலாம் என்று எடுக்கப்பட்ட முடிவு சரியானதே.

    ReplyDelete
  8. நன்றி நண்பர்களே.... எனது மகளை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக