எக்ஸ் மென் அபோகிளிப்ஸ் எக்ஸ்சின் ஏழாவது படம்

ஹாலிவுட்டின் சீக்குவல் சீசன் முடிந்து பிரீக்குவல் சீசன். 


இயக்குனரின்  பிரையன் சிங்கரின் எக்ஸ் சீரிஸில் தற்போது  திரையில் இருக்கும் படம். அதீத பொருட் செலவில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்பட வரிசையின் தற்போதைய வரவு.  எனது ரசனைக்குரிய ஜேம்ஸ் மேக்காவின் நடிப்பில் வந்திருக்கும் படம் வேறு.


கடந்த 2000ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இப்படங்களை தந்து கொண்டிருக்கும் ப்ரையன் சிங்கர் தனது பதினாறு வருட அனுபவத்தை திரையில் தந்திருகிறாரா என்கிற கேள்வி எழுவது இயல்பே. 

இதைவிட இன்னொரு விசயம் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுக்கு தமிழகத்தில் இருக்கும் ரசிகர் பட்டாளம்! 

படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகங்களின் பொழுது விசில் அடிதுப் பார்கிறார்கள் தியேட்டரில். 

அடுத்தவர் மனதில் புகுந்து அவர்களை இயக்கும் வல்லமை கொண்ட சார்ல்ஸ் சேவியர், தன்னைச் சுற்றி இருக்கும் எந்த உலோகத்தையும் தன் விருப்பப்படி பறக்கவிடும் மக்நீட்டோ, புயலை வரவழைக்கும் ஸ்டார்ம், நொடியில் உருமாறும் மிஸ்டிக் என்கிற ராவன், கண்களைத் திறந்தால் நெருப்பைக் கக்கும் சைக்ளோப்ஸ், சேவியரைப்  போலவே அவரையும் விஞ்சும் திறனுடன் இருக்கும் ஜீன், இறக்கைகளோடு இருக்கும் ஏஞ்சல் மற்றும் இன்னும் பல எக்ஸ் கதா பாத்திரங்கள் கொண்ட கதைக்களம். 

குறிப்பாக குவிக் சில்வர் செய்யும் அதகளம் மறக்க முடியாது! 

கதாபத்திரங்களை படித்தவுடனே உங்களுக்கு ஒரு கேள்வி இயல்பாக எழுந்திருக்கும் இம்புட்டு பாத்திரங்கள் இருந்தால் எம்புட்டு கதையை சொல்ல வேண்டும். 

ஒவ்வொரு பாத்திரமும் பார்வையாளர் மனதில் பதிந்து உருவாக தேவையான நேரமும், இடமும் திரைக்கதையில் இருக்குமா?

சில கதா பத்திரங்களைத் தவிர பெரும்பாலான கதாபாத்திரங்கள் இதற்கு முன்னர் வந்த ஆறு படங்களில் அறிமுகமானவை எனவே இந்த சுமை கொஞ்சம் குறைந்திருகிறது. இருப்பினும் இந்த மாபெரும் கதாபாத்திரப் படை படத்தின் அழுத்தத்தை குறைத்து ஒரு முழுமையான அனுபவத்தை கொடுக்க தவறவைத்து விட்டன. 

குறிப்பாக இந்தப் படத்தில் கட்டாயம் வுல்வரின் தேவையா என்றால் இல்லை என்பதை உணரலாம். ஆனால் அந்தப் பாத்திரம் வருகிற அந்த நொடியில் அரங்கில் எழும் விசில் சத்தம் அடங்கவே சில நிமிடங்கள் ஆகின்றதும் உண்மைதான். 

ஆனால் ஹூஜ் ஜாக்மேன் வுல்வோரினாக தோன்றியாய படங்களில் மிக மோசமான படம் இதுதான். அந்த சில வினடிகளுக்காக ஹூஜ் போன்ற மெகா ஸ்டார் தேவையா?  

இந்தக் காட்சியின் இறுதியில் வரும் வசனம் முக்கியமானது எக்ஸ் ரசிகர்களுக்கு. 

"இனி அவனைப் பார்க்க மாட்டோம்" என்கிற வசனம் இனி வரும் எக்ஸ் படங்களில் ஹூஜ் வுல்வோரினாக வரும் வாய்ப்பே இல்லை என்பது தான் பதிவாகியிருகிறது.  

ஹூஜின் முகநூல் பக்கத்தில் தன் கையில் இருந்து நீளும் உலோக நகங்களை பதிவிட்டு இதுவே கடைசி என்று சொல்லியிருந்தது நினைவில் வந்தது. 

எக்ஸ் சீரிஸ் படங்களின் அதீத புகழ் பெற்ற கதாபாத்திரத்தின் முகம் ஒன்று மாறப் போகிறது. யார் வந்தாலும் ஹூஜ் அளவிற்கு அந்த கதா பாத்திரமாக மாறுவார்களா என்பது சந்தேகம். என்னைப் பொறுத்த வரையில் அதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. 

சரி சரி படத்தின் கதை என்ன என்று தில்லையகம் கீதா அவர்கள் ஒரு முறைப்புடன் கேட்பது எனக்கு புரிகிறது.  

வேற என்ன ஒரு மெகா வில்லன் ஒருவனை எதிர்த்து  தங்களையும் உலகையும் காக்கிறார்கள் எக்ஸ்.மென் படையினர். இவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள், இவர்கள் உணர இருக்கும் அதீத சக்திகள் என வளரும் கதை கடைசியில் நட்புக்காக விஜயகுமார், சரத்குமார் போல சேவியரும், மேக்நீட்டோவும் இணைந்து உலகின் முதல் மியூட்டன்ட் என்று சொல்லிக்கொள்ளும் வில்லனை ஜீன் கிரே உதவியுடன் சில்லு சில்லாக பிரிக்கிறார்கள். 

எல்லா தொழில் நுட்பங்கள் இருந்தும் திரையில் சொதப்பிய தமிழின்  இருபத்தி நான்கு திரைப்படத்தைப் போலவே ஹாலிவுட்டின் இந்தப் படமும் எல்லா வாய்ப்புகளையும் வீணடித்து சொதப்ஸ்சாகி விட்டது. 

இருப்பினும் படத்தின் ஹைலைட்ஸ் சில 

சி.ஜி (கணிப்பொறியில் உருவாக்கும் கலை) படம் தொட்டிருக்கும் புதிய எல்லைகள் ஒரு வாவ். 

குறிப்பாக வில்லனின் பிரமிட் காட்சிகள். அதீத சக்திகள் கொண்ட மியூட்டன்ட் ஒருவனை மனிதர்கள் எப்படி திட்டமிட்டுச் சமாதியாக்குகிறார்கள் எனும் விசயத்தை திரையில் கொண்டுவந்திருக்கும் விதம் ஜோர். கிட்டத் தட்ட மின்னியல் சுற்றுகளைப் போலவே இருக்கும் கோடுகளில் தங்கம் வழிந்துஓடுவது அருமை. 

இதே போல குவிக் சில்வர் பள்ளியின் மாணவர்களை காப்பாற்றும் காட்சி அதகளம். 

படத்தின் நீண்ட உரையாடல்களும், தொய்வையும் சோர்வையும் தரும் காட்சிகளும் எரிச்சலூட்டுகின்றன. 

பொதுவாக இந்த மாதிரி இழுவைக் காட்சிகளை ஹாலிவுட் இயக்குனர்கள் வைக்கிறார்கள் என்றால் அந்த காட்சிகள் அடுத்த பாகத்தில் அழுத்தம் பெரும். அடுத்த பாகம் நன்றாகக் கூட வரும்!

கடந்த பதினாறு ஆண்டுகளாக எக்ஸ் மென் படங்களை இயக்கம் இந்த பெரும் படைப்பாளக் கூட்டம் அனேகமாக அடுத்த பாகத்தின் போஸ்ட் ப்ரொடக்சனில் இருக்கலாம்! 

வேறு பணிகள் எதுமே இல்லாமல் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கும் ஒரு சூழல் ஹாலிவுட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று. இங்கே மாதிரி ஒருவர் யப்பா ஆறுமாசம் டைம் அதுக்குள்ளே எனக்கு ஒரு படம் வேணும் என்று விரட்டி மிரட்டும் கேவலமான நிலை அங்கே இல்லை. ஸ்டான்லி குப்ரிக் அவருடைய சில படங்களுக்காக பனிரெண்டு ஆண்டுகள் ஆய்வில் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்தானே. நம்ம ஆட்கள் அந்த  பாணியில் படங்களை எடுக்க இன்னும் சில தசாப்தங்கள் ஆகலாம். குப்ரிக்கின் படங்கள் நிரந்தரமாய் ஐ.எம்.டி.பியின் ஆகச் சிறந்த இருநூற்றி ஐம்பது உலகப் படங்களில் இருப்பது இங்கே நினைவில் இடறுகிறது. 

எனவே மக்களே எக்ஸ் மென் என்கிற உலகளாவிய வீச்சினைக் கொண்ட பட வரிசையை மார்வல் நிறுவனமோ பாட் ஹாட் ஹாரி (இயக்குனர் பிரையன் சிங்கரின் நிறுவனம்) நிறுத்தப் போவதில்லை. 

வந்துகினே இருக்கும். யார் கண்டது உங்கள் பெயர்த்திகள் காலத்தில் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து ரசிக்கும் வண்ணம் ஒரு எக்ஸ்.மென் படம் வரலாம்!   
ப்ரூவன் பிராண்டை யாரவது கைவிடுவார்களா என்ன? 

ரசிகர்கள் கைவிடாமல் இருந்தால் சரி. 

எவ்வளோ டெக்னாலஜி இருந்தாலும் திரைக்கதை அழுத்தமாக இல்லை என்றால் அபோகளிப்ஸ் (பேரழிவு) என்பதை மீண்டும் ஒருமுறை நிருவியிருக்கிறது இந்தப் படம். 

இருந்தாலும் டை ஹார்ட் எக்ஸ் மென் ரசிகர்கள் பார்க்கலாம்.  நேக்கு படம் ஒக்கே. ஆனால் நண்பர்கள்தான் டரியல் ஆகிவிட்டனர்!


மேலும் பேசலாம் 

அன்பன் 
மது 

பதிவு டெடிகேட்டேட் டூ ஸ்ரீ ... (சார் வேலை இருக்கு என்று சொன்னவரை  யப்பா என்னப்பா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்க வந்துருப்பா என்று சொன்னால் படம் துவங்கும் முன் அழைத்து எங்கள வர சொலீட்டு நீங்க எங்கே இருக்கீர் என்றார்.. நன்றி ... யூகெ, மற்றும் காசிக்கும்) 

Comments

  1. அருமையான விமர்சனம்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. சிறப்பான அறிமுகம். படம் பார்க்க விரும்பினாலும், பார்க்க முடியும் எனத் தோன்றவில்லை.

    ReplyDelete

Post a Comment

வருக வருக