வீதி கூட்டம் இருபத்தி எட்டு


சில நிகழ்வுகளில் நாம் தொடர்ந்து செயல்படுவது அவசியம்.

ஆங்கில ஆசிரியருக்கு தமிழ் இலக்கியக் குழுமத்தில் என்ன வேலை என்று பலமுறை தோன்றியிருக்கிறது.


இருப்பினும் வீதியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

எவ்வளவு அவசரமான முடிவாக அது இருந்திருக்கும் என்பதை வீதியின் நிகழ்வுகள் பலமுறை நிருபித்திருக்கின்றன.

ஒரு  மாதக் கூட்டத்தில் ஓவியர் சுப்பிரமணியன் அவர்களின் ஓவியம் குறித்த பேச்சும், சித்தன்னவாசலின் ஓவியங்களுக்கு அவர் கொடுத்த அனுபவப்பகிர்வு சார்ந்த அறிமுகமும் தொடர்ந்து ஓவியத்தை ஒரு அனுபவமாக தூரிகையின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளாக அவர் பகிர்ந்தது வெகு அற்புதம்.

வீதி நிகழ்வுகளை காணொளிப்பதிவாக செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை மீண்டும்  ஒருமுறை  உணர்ந்த தருணம் அது.

புதுகையில் மட்டுமல்ல தமிழக அளவில் அப்படி ஒரு கலையுரைவீச்சு வெகு அபூர்வமாகத்தான் நிகழும்.

நினைவில் அடுக்குகளில் ஒரு மெல்லிய சுகந்தமாக அலைகிறது சுப்புவின் பேச்சு.

இப்படி பல்வேறு அனுபங்களை வீதி தொடர்ந்து எனக்குத் தந்து வந்திருக்கிறது.
இன்று அமைப்பாளர்களாக செயல்பட்ட Mani Faro மற்றும் புதுகை மீனாட்சி சுந்தரம் அவர்கள் நிகழ்வை புதிய உயரங்களுக்கு எடுத்துச்சென்றுவிட்டார்கள்.

சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பகிரும் எனது அருமைத்தங்கை கிரேஸ்பிரதீபாவின்வருகையும் சிறப்புரையும் மட்டுமன்றி
காத்திரமான ஆளுமைகள் இருவரையும் அறிமுகம் செய்தார்.

கவிஞர் கிருஷ்ணன், மும்பையில் பணிபுரியும் இவரது ஏன் பெண்ணென்று பிறந்தாய்? தொகுப்பை ரசித்து ரசித்து சகோதரி கவிஞர் மாலதி பேசி சிலாகித்தார்.

காதல் கவிதைகள் என்றாலே காண்டாகும் எனக்கு கிருஷ்ணின் அனுபவம் முகத்தில் அறைந்து துயில்கலைத்ததை போன்று இருந்தது.

உண்மையில் விபத்தில் மரித்துப்போன தனது தாயாரின் வேண்டுகோளுக்கு இசைந்தே கண்ணீருடன் அவர்காதல் கவிதைகளை எழுதியதை பகிர்ந்தபோது கவிதைகள் மீது இருந்த கோபம் காணாமல் போனது.

எப்படி ஒரு கொடும் மன அதிர்வில் இருந்து இலக்கியம் ஒரு தனிமனிதனை மீட்கிறது என்பதன் இன்றய சாட்சி Krishnan Ra.

இன்றய வீதியின் ஆகச்சிறந்த பேச்சு கவிஇளவல் தமிழின் பேச்சு. பேச பேச நண்பர் குருநாத சுந்தரம் அவர்கள் குறிப்புகளை எடுத்துக்கொண்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நிமிடத்தில் நூறு தவறுகளை அனாயசமாக கண்டறிபவர் அவர். கவியின் பேச்சு அவரை மட்டுமல்ல அனைவரையுமே ஆகர்சித்தது.

இருபத்தி மூன்று வயதில் இப்படி ஒரு தீர்க்கமான அணுகுமுறை! வாவ்.
நிகழ்வின் மகுடமாய் முன்னணி இலக்கியச் செயல்பாட்டாளர்கள் அண்ணன் திரு.தங்கம்மூர்த்தி, மற்றும் கம்பன் கழகதின் தலைவர் திரு. சம்பத்குமார் அவர்களும் கலந்துகொண்டது. மகிழ்வு

வாழ்த்துகள் திரு.மணி, ஆம் ஆத்மி புதுகை.
வாழ்த்துகள் திருமதி. மீனாட்சி சுந்தரம். தமிழ் ஆசிரியை புதுகை.

இம்மாதிரியான அனுபவங்களுக்காக தொடர்ந்து பங்கேற்கத்தானே வேண்டும் வீதியில்.

வாய்பிருந்தால் நீங்களும் வாங்களேன்.

அன்பன்
மது 

Comments

  1. பகிர்வுக்கு நன்றி. ஆங்கில ஆசிரியருக்கு ’தமிழ் உணர்வு’ என்ற அடிப்படையில் வீதியில் கலந்து கொள்ள ஏது தடை?

    ReplyDelete
  2. நண்பர்களை ஒரே இடத்தில் கண்டது மகிழ்வைத் தருகிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. விழா பற்றிய குறிப்புகள் மகிழ்ச்சி தருகின்றன.

    காணொளியாக பதிவு செய்ய வேண்டியது அவசியம் - வர முடியாதவர்களும் பார்க்கலாமே....

    ReplyDelete
  4. அருமையான நிகழ்வாக இருந்திருக்கிறது தெரிகிறது. ஆஹா சகோ க்ரேஸ் பிரபா வருகை!!! ஆம் மது காணொளியாகப் பதிவு செய்யலாமே நாங்கள் எல்லோரும் பார்க்க...

    ReplyDelete

Post a Comment

வருக வருக