படம் (நன்றி கூகிள் )- பெரிய கோபுரம் |
சில தகவல்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும், நம்புவதற்கு கடினமாக இருக்கும். இப்படியெல்லாம் கூட நடந்ததா என என்ன வைக்கும். ஆனால் சமகால நிகழ்வுகளை விட சரித்திரத்தின் பல பக்கங்கள் பெருத்த அதிர்வை தரவல்லவை.
திருக்குறள் பேரவையின் சிறப்பு அமர்வு ஒன்றிற்கு புதுகை ஞானாலயா நிறுவனர் திருமிகு. பி.கே (கிருஷ்ணமூர்த்தி அய்யா) அழைக்கப் பட்டிருந்தார். அவர் ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம். மிக மெதுவாகப் பேசுவார். பேச்சு பல கிளைகள் விரித்துப் பரந்து பின்னர் ஒரு புள்ளியில் இணையும். நடுவில் ஒரு அலைபேசி அழைப்போ, குறுஞ்செய்தியோ கூட கவனம் சிதைத்தால் பேச்சு புரிபடாமல் போய்விடும் அபாயம் உண்டு. ஆனால் இப்படி தகவல் களஞ்சியமாக இருப்போரின் உரை எப்போதும் ஏமாற்றாது.
அன்றைய உரையில் ஐந்தாம் தமிழ்சங்கம் அமைத்த அய்யா பாண்டித்துரையாரின் வாழ்வின் சில சம்பவங்களை குறித்துப் பேசினார். மதுரையில் ஒரு விழாவில் கலந்துகொள்ள வந்த பாண்டித்துரையார் விழாவில் தான் பேச வேண்டிய உரைக்கு சுவை சேர்க்க சில குறள்களைத் தேடியிருக்கிறார். இதற்காக விழா அமைப்பாளர்களிடம் திருக்குறள் நூல் ஒன்றைக் கேட்டிருக்கிறார். அவர்கள் மதுரையை அலசி விட்டு கையை விரித்திருக்கின்றனர்.
மீண்டும் வலியுறுத்திக் கேட்கவே மதுரையின் சுற்றுப் புறங்களை அலசியும் கிட்டவில்லை ஒரு நூல்கூட!
வெறுத்துப்போன பாண்டித்துரையார் தமிழ் சங்கம் அமைத்து குறள்நூலை மீண்டும் பொதுவெளிக்கு கொணர்ந்தார்.
உரையின் ஒரு பகுதி இது. ஆனால் இது நம்முள் எழுப்பும் கேள்விகள் தரும் வேதனைச் சித்திரங்கள் எத்தனை?
ஆக மிகச் சமீபம் வரை திருக்குறள் புறக்கணிப்பட்டே வந்திருக்கிறது. ஏன் ?
அதுவும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாக தனிப்பெரும் பீடுடன் குறிப்பிடப் படும் மதுரையில் ஏன் குறள் குறிவைத்துத் தாக்கப்பட வேண்டும்?
விடைகள் நமக்குத் தெரியும். இதைக் குறித்து நமது பாடநூற்கள் சமரசமின்றி பேசும் பொழுது வெளிவரலாம் பல சமூக அதிர்வுகள்.
உண்மையை மட்டுமே தேடித் போகும் மனப் பக்குவம் உள்ள மொழி வரலாற்று ஆய்வாளர்கள், தனது சாதியையோ, மதச்சார்பையோ ஆய்வில் கலக்காத தூய ஆய்வாளர்கள் இன்று நமது தேவை.
அப்படி ஆய்வை மேற்கொள்பவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டுமென்றோ அல்லது இந்தியர்களாக இருக்க வேண்டுமென்றோ கட்டாயம் ஏதுமில்லை.
பாட நூற்கள் பகரும் வரலாறு மட்டுமே முழுமையல்ல. சமயத்தில் உண்மை நிகழ்வுகள் தலைகீழாக இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்னாள் என் சக நண்பர்களுடன் நடந்த ஒரு உரையாடலை பகிர்ந்தால் புரியும். ஒரு விசயத்தை உண்மை என்று அவர்கள் சொல்ல இல்லை அது வதந்தி என்றேன் நான்.
1857 புரட்சி முதல் இந்திய சுதந்திரப் போர் என்று நம்மவர்கள் பேசிவருகிறார்கள். நான் பள்ளியில் படித்த பொழுது இந்த புரட்சிக்கு காரணம் துப்பாக்கி தோட்டாக்களில் மாட்டின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் பூசப் பட்டதுதான் காரணம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதையே எனது நண்பர்களும் குறிப்பிட்டனர்.
இன்றய பாட நூல்கள் அப்படிக் குறிப்பிடவில்லை. கொழுப்பு விசயம் ஒரு வதந்தி என்று சொல்கின்றன. இது என் நண்பர்களுக்கு பெரிய அதிர்ச்சி.
இந்த வதந்தி பரப்பபட்டத்தின் விளைவே 1857 பெருவெடிப்பு! ஆக நமது முதல் விடுதலைப் போர் என்று பகட்டுடன் குறிப்பிடப்படும் ஒரு சம்பவமேகூட வதந்திகளின் விளைவுதான்!(இதை குறித்து விரிவாக எழுதுவது இப்போதைய தேவை இல்லை எனவே)
வேறே என்ன ?
பை பார் நவ்
அன்பன்
மது
1847 ?
ReplyDeleteஸ்ரீ நன்றி சரிசெய்தாயிற்று
Deleteஅதிர்ச்சியூட்டும் ஆச்சர்யமான செய்தி.
ReplyDeleteவாசிப்பு அவசியப்படுகிறது...
Deleteஇப்படி மாற்றப்பட்ட வரலாறு எத்தனை எத்தனையோ..... பெரும்பாலான நாடுகளில் நாட்டை ஆள்பவர்கள் தங்களுக்குச் சாதகமான முறையில் வரலாற்றை எழுதி வைப்பதும் அதையே உண்மை என்று அடுத்த சந்ததியினர் நம்புவதும் உண்மை.
ReplyDeleteநன்றிகள்
Deleteஅலக்ஸாண்டர் இந்தியப் படையெடுப்பின் போழ்து அடிபட்டு ஓடியதே உண்மை என்றும் கிரேக்கர்கள் மட்டுமே ஆவணங்களை பேணியதால் இந்து மாற்றப் பட்டதாகவும் தற்போதைய ஆய்வாளர்கள் கூறிவருகிறார்கள்.
காலின் பெரல் நடித்த அலக்சாண்டர் திரைப்பட வசனம் ஒன்று இப்படி இருக்கிறது!
வியப்புதான் நண்பரே
ReplyDeleteஅதிசய தகவல் மட்டுமல்ல அதிரும் தகவலும்தான் தோழரே...
ReplyDeleteத.ம 3
தங்கள் சிறந்த பதிவுக்கு எனது பாராட்டுகள்
ReplyDelete