எழுத்தாளர் ராஜா சுந்தர்ராஜன் அவர்களின் விமர்சனம் கொஞ்சம் பர்சனல் டச்சோடு ..
தர்மதுரை
_____________
is a feel good movie.
இப்படிப்பட்ட படங்களை ‘மூவி’ என்று சொல்லக்கூடாது ‘ஃபில்ம்’ என்க வேண்டும் என்கிறார் டாரன்டீனோ. Yes, it’s a film indeed.
பொழுதுபோக்கிற்காக, லாபம்சம்பாதிப்பதற்காக பண்ணப்படுவது மூவி. கலைமதிப்பிற்காக, படிப்பினைக்காக ஆக்கப்படுவது ஃபில்ம்.
மேலே சொல்லப்பட்டது பொது வரையறை. ஆனால் அப்படிப் புரிந்துகொள்ளவில்லை நான். ஒரு மலையோடை போல துள்ளிப்புரண்டு பாய்வது மூவி. ஒரு நடந்தாய் வாழி காவேரி போல தெள்ளத்தவழ்வது ஃபில்ம். இவ் வரையறையே டாரன்டீனோவின் அர்த்தப்படுத்தலுக்கு நெருங்கியதாகக் கொள்கிறேன்.
இடைவேளையில், என்ன இந்தப் படம் இன்னும் பிரச்சனையைத் தொடவில்லையே என்று வியந்தபடி வெளிவராந்தையில் அலைந்தேன். ஆனால், அந்த மருத்துவக் கல்லூரி ஃப்ளாஸ்பேக் முழுவதும், கண்ணீர்கசியக் கிடந்தேன் என்பதையும் நினைந்து நெகிழ்ந்தேன்.
வெள்ளைக் கருங்கல் திண்டுகளால் கட்டப்பட்ட அந்தக் கல்லூரி வளாகத்தில் எவ்வளவு அலைந்திருக்கிறேன்! எங்கள் டாக்டரம்மா படித்த கல்லூரி அது. மதுரை மருத்துவக் கல்லூரி. ஏதோ நான்தான் அங்கே படித்தது போலோர் உணர்வு எனக்குள்! இவளுடைய தோழியர் முகமெல்லாம் வந்துவந்து முகிழ்த்தனவே ஏன்?
மன்னிக்கவும், அகவயப்பட்டுவிட்டேன். அது ஒரு கனாக்காலம்.
படத்தில், கன்னங் குழிவிழ ‘ஸ்டெல்லா’வாக வருகிற அந்தப் பெண்ணைத்தான் எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. நாயகியராய், தமன்னா, ஐஸ்வர்யா இருக்கிறார்கள் என முன்பே தெரிந்திருந்தாலும் அந்தக் கன்னக்குழிப் பெண்ணின் கேரக்டர் உருவாக்கம் என்னைக் கவர்ந்துவிட்டது.
ஆனால் அது வண்டுவராமலே... வந்தும் ஐஸ்வர்யா தேன்விளம்பாமலே... விளம்பியும் தமன்னா...
இந்த மூன்று கேரக்டர்கள்தாம் கதை. நாயகன் சேதுபதியும் அவர்க்கு சகோதரர்களாக வரும் வில்லன்களும் அம்மாவும் இவர்களுக்கு இடையில் இட்டுக்கட்டப்பட்ட கண்ணிகள். இந்தப் பெண் கேரக்டர்களை முன்னிருத்தியதுதான் இந்தப் படத்தின் வெற்றிச் சூத்திரம்.
ஒரு முஸ்லீம் கேரக்டரை வில்லன்போல முன்னெடுத்தபோது வருந்தினேன், ஆனால் என்ன ஒரு பின்தொடுப்பு!
“என் காதல் கண்மணி”யில் மணிரத்னம் ஹாலிவுட்டை நகலெடுத்ததுபோல் சீனு ராமசாமி செய்யவில்லை. சேர்ந்துவாழ்வது இந்த நாட்டில் இப்போதைக்கு சரியில்லை என்பதை தெளிவாகவே விளக்குகிறார்.
காலையில்தான் “ஜோக்கர்” திரைப்படக்குழு கலந்துகொண்டதொரு கலந்துரையாடற் கூட்டத்தில் உரையாற்றினேன். இரவில் இந்தப் படம். அது ஒரு வகை, இது ஒரு வகை. ஆனால் இரண்டுமே மூவியில்லை, ஃபில்ம்.
“கபாலி” இரண்டும்கெட்டான்.
படம் நல்லபடம்தான், ஆனால் “தர்மதுரை” என்னும் பெயருக்கு என்ன பொருத்தம்? அவரது மருத்துவசேவை என்றுதான் யூகித்துக்கொண்டேன்.
It’s a feel good film.

வணக்கம்
ReplyDeleteவிமர்சனம் அருமை பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி தோழர்
Deleteவரதட்சணைக்கொடுமை பற்றியும் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு திருநங்கைக்கு அழகான வேடம் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்க விஷயம். இதை மற்ற இயக்குனர்களும் பின்பற்றலாம். கிராமமும் சரி கொடைக்கானலும் சரி locations நடிகர்களைக் காட்டிலும் அழகு. ஐஸ்வர்யா கண்டிப்பாக ராதிகா போல் நெடுநாள் கோலிவுட்டில் இருப்பார்.
ReplyDeleteதலையில் மோட்டார் சாவி பட்டும் உயிர் பிழைப்பது கொஞ்சம் நெருடினாலும் டாக்டர் டாக்டர் என அழைத்தவுடன் விஜய் சேதுபதி எழுந்து வைத்தியம் பார்ப்பது மிக அழகு. ராஜேஷூம் விஜய் சேதுபதியும் பின்னாளில் சந்திக்கும் காட்சி மனதில் பதிந்து விட்டது. தர்மதுரை சீனு ராமசாமியின் சிறப்பான மற்றொரு படம்.
வருக நபி பால் நடராஜன்
Deleteமுகநூலில் வாசித்தேன்... அருமையான விமர்சனம்...
ReplyDeleteஎனக்கு படம் ரொம்ப பிடிதத்திருந்தது...
நன்றி ஜி
Deleteநல்லதொரு பகிர்வு. தர்மதுரை பற்றி படிக்கும் நான்காவது விமர்சனம். எல்லோரும் நன்றாக இருப்பதாகவே சொல்லி இருக்கிறார்கள். பார்க்க முயல்கிறேன்.
ReplyDeleteநன்றிதோழர்
Deleteபார்க்கும் ஆவலைத் தூண்டியது உங்களது விமர்சனம். நன்றி.
ReplyDeleteநன்றிகள் தோழர்
Delete# மதுரை மருத்துவக் கல்லூரி. ஏதோ நான்தான் அங்கே படித்தது போலோர் உணர்வு எனக்குள்!#
ReplyDeleteஇந்த வரி ,என் கனாக் காலத்தையும் நினைவு படுத்தியது ...இளையராஜா ,பப்பி லஹரி போன்றவர்களின் இசை நிகழ்ச்சி ,ஸ்வர்ணமுகி நடன நிகழ்ச்சிகள் எல்லாம் காந்தி மியூசிய திறந்த வெளி அரங்கில் நடக்கும் ,ரோட்டிற்கு வெளியே எதிர்புறம் உள்ள மெடிக்கல் காலேஜ் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தும் கேட்டும்ரசித்தது ,இன்னும் மனதுக்கு சந்தோசத்தை தருகிறது :)
படத்துக்கு பொருத்தமான பெயர்... தர்'மதுரை'!
நான் போட்ட வாக்கு விழுந்திருக்கு ,கருத்து எந்த காக்கா தூக்கிட்டு போச்சோ !
ReplyDeleteதர்'மதுரை 'பெயர் பொருத்தம் உள்ளதே :)
பல நல்ல விமர்சனாங்கள் இப்படம் பற்றி....பார்க்க வேண்டும்..
ReplyDeleteநல்ல விமர்சனம் பகிர்விற்கு மிக்க நன்றி
விமர்சனத்தால் பல படங்களை பார்க்க வைத்து விடுகிறீர்களே தோழரே !
ReplyDeleteஅருமையான விமர்சனம்நண்பரே
ReplyDelete