நேற்று நிகழ்ந்தது போல இருக்கிறது.
விதைக் கலாமின் துவக்கம், ஆரம்பக் கூட்டம், இரண்டாவது கூட்டத்தின் அதிரடி வரவுகள் சந்தோஷ், கார்த்திக்கின் கேள்விகளிலும் ஆலோசனைகளிலும் துவங்கி இன்று ஐம்பது நிகழ்வுகளை நிறைவு செய்துவிட்டது விதைக்கலாம்.
குட்டி உறுப்பினர் கோவர்த்தினி பணியில் |
கணக்கன் காட்டில் ஒரு எளிய கிராம கோவில் ஒன்றில் இன்று இருபத்தி ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.
மிக நீண்ட பயணம், சவாலான வாகனம் ஒன்றை செலுத்திய பாக்கியராஜ், அவரின் துணையாக வந்த பாலாஜி, அந்தக் குட்டியானையின் பின்னே அமர்ந்து வந்த பாஸ்கர், வசந்த் மற்றும் கார்த்திக்.
பிரபா (நிற்பவர்) காசி (இடது) கார்த்திக் (வலது) |
நிகழ்வை சிறப்பித்த உயர் திரு மரம் தங்கசாமியின் வாரிசு திரு.கண்ணன், அத்துணைப் பேருக்கும் உணவை சமைத்து எடுத்து வந்திருந்த, நிகழ்வின் விருந்தோம்பலை செய்த சந்திரபோஸ் என நிகழ்வு மனதில் ஒரு சுழலை தருகிறது.
சிறப்பு நிகழ்வு என்பதால் வழக்கமான நேரத்தில் இல்லாமல் சற்று தாமதமாக துவங்கிய நிகழ்வு எனக்குள் சில கேள்விகளைத் தந்தாலும் அடுத்த வார நிகழ்வு நல்ல பதில்களோடு தொடரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
தன்னுடைய பணிகளை ஒத்தி வைத்துவிட்டு சாரதியான பொறியாளர்சுஹைப் மலையோடு |
சந்திப்போம்
மது.
Superdealcoupon aims to provide our visitors the latest coupon codes, promotional codes from leading e-commerece stores and brands.Our goal is to create one ultimate savings destination to save you time and money every day.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteபணி தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteமிக நல்ல முயற்சி தொடரட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
விதைக்கலாம் குழுவினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDelete