இப்பத் தெரிகிறதா?



      அன்பான நண்பர்களே வணக்கம்...
     அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடிய போது பெரும்பாலான ஏன் அனைத்து ஊடகங்களுமே போராட்டங்களை கொச்சைப் படுத்தி விவாதித்தன விமர்சித்தன.



  ஊதியத்தற்கேற்ற உழைப்பில்லை அளவுக்கதிகமான ஊதியம் என்றெல்லாம் பேசினார்கள்.தற்போது தெரிகிறதா யார் பணக்கார முதலைகள் என்று?
   அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் வாங்கும் ஒவ்வொரு நித ஆண்டு ஊதியத்திற்கும் வரிசெலுத்தினால் மட்டுமே அடுத்த நிதி ஆண்டிற்கான ஊதியம் பெற முடியும்.கூடுதலாக தன் ஊதியம் மூலம் சேமிக்கும் பணத்திற்கும் வரி செலுத்த வேண்டும் என்பதை எல்லாம் மறைத்துப் பேசியவர்கள் எல்லாம் இன்று ஓடிப்போய் பழைய நோட்டை வைத்து வரிப்பாக்கியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
        அன்று ஒரே வேலைக்கு மாறுபட்ட ஊதியம் நீக்கக் கேட்டுப் போராடிய போது மக்கள் மிகவும் ஒருவேலை சோற்றுக்கே கஷ்டப் படுகிறார்கள் உங்களுக்கு இதுவே அதிகம் என்று பேசியவர்கள் எல்லாம் இன்று வெள்ளையாக்க முயற்சிக்கிறார்கள்.
        கஜானாவில் உள்ளது எல்லாம் சம்பளத்திற்கே போகிறது என்று கூறி மக்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கினார்கள் ஆனால் இன்று மத்திய அரசின் கூற்றுப்படி பார்த்தால். அந்த 2%மக்கள் தான் முறையாக வரி செலுத்தி வந்துள்ளார்கள் என்பது உறுதியாகிறது.
       அரசு எதிர்பார்ப்பது போன்று அனைத்து வகையான பணப்பறிமாற்றங்களும் வங்கிகள் மூலமே நடந்தால் நாட்டில் உள்ள பெரும்பாலான  கிட்டத்தட்ட(75%) மக்கள் தற்போதுள்ள வருமான வரி உச்சவரம்பைத் தொட்டுவிடுவார்கள்.அனைவரும் வருமான வரி கட்ட வேண்டிய சூழ்நிலை வரும்.
           அப்படி நடந்தால் வரி வருமானம் கூடும் அரசு வருவாய் பெருகும் என்று கூறப்படுகிறது.
          இதுவரை நாம் பார்த்த வரை எந்த மளிகைக் கடையிலும் ஜவுளிக்கடையிலும் உண்மையான ரசீது தருவதில்லை ஏனென்றால் வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க என்று எந்த ஊடகத்திலும் விவாதிக்கப்பட்டதில்லை.
எந்தச் செய்தித் தாளும் தலைப்புச் செய்தியாக்குவதில்லை ஆகையால் எந்தச் சாமானியனும் டீக்கடையில் விவாதிப்பதில்லை.
      ஆனால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நியாயமான கோரிக்கைக்காகப் போராடினால் அதைத் திரித்து செய்தியாக்கி விவாதப் பொருளாக்கி பிழைப்பு நடத்தும் ஊடகங்கள் இன்று ஊளையிடுகின்றன.
         ஒருவரின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்றே தெரியாமல் ஆண்டு வருமானம் ரூ.48000 என்று சான்று வாங்கி அரசின் சலுகை பெறும் பெரும்பாலான மக்கள் வாழும் நம் நாட்டில்
  இதுதான் என் வருமானம்அதற்கு நீங்கள் விதித்த வரி இவ்வளவு என்று துள்ளியமாக கணக்கிட்டு முறையாக வரி செலுத்தும் ஊழியர்கள் சில சலுகைகள் கேட்டால் கூக்குரலிட்டீர்களே இப்பொழுது தெரிகிறதா யார் இந்நாட்டின் நலன் சார்ந்தவர்கள் என்று.
          எங்களுடைய ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்து வைத்து பணக்கார முதலைகள் விளையாடும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வரும் இலாபத்தில் உங்களுக்கு ஓய்வுதியம் (CPS) என்றார்கள் அதை எதிர்த்துப் போராடினோம் என்னவென்றே கேட்காமல் கொடுப்பது போதாதென்று சம்பள உயர்வு கேட்டு போராடுகிறார்கள் என்று ஏளனம் செய்தார்கள்.
        இன்று வங்கிகளில் கால் கடுக்க நின்று வெள்ளையாக்குகிறார்கள்.
           அன்று சட்டம் பேசினார்கள் வரைமுறை பேசினார்கள் இன்று வரிஏய்ப்பு செய்தவர்களில் நாமுமா என்று செய்வதறியாது தவிக்கிறார்கள்.
           இன்னும் முறையாகக் கணக்குக் காட்டாமல் வருமான வரி உச்சவரம்பைத் தாண்டி இலாபம் ஈட்டி வரி ஏய்ப்புச் செய்யும் முதலைகள் அதிகம் உள்ளனர்.அவர்கள் எல்லாம் வரி வரம்புக்குள் வர வேண்டும்என்ற நோக்கம் நன்று வெற்றி பெற வேண்டும்.குறிப்பிட்ட குறைந்த சதவீத மக்களின் நேரடி வரிப்பணம் கொண்டே நாடு முன்னேற்றம் கண்டுள்ளது எனும்போது பெருமைப்படுகிறோம்.
           எனவே இனிமேலாவது அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம் நடத்தினால் அவர்கள் தான் வாங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் முறையாக வரி செலுத்துகிறார்கள் அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது என்பதை உணருங்கள் சாமானியனுக்கும் புரிய வையுங்கள்.
      இப்பத் தெரிகிறதா அரசு ஊழியன் ஏன் தெருவில் நின்று போராடுகிறான் என்று......?

Comments

  1. தங்களது ஆதங்கம் நியாயமானது தோழரே விரிவான விளக்கம்
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்.. ஒரு குமுறலை பகிர்ந்தேன்

      Delete
  2. உங்களின்ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் பட்டியலில் அரசு பொதுத் துறை ஊழியர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் தோழரே :)

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்குமான குரல்தானே தோழர்

      Delete
  3. //இன்னும் முறையாகக் கணக்குக் காட்டாமல் வருமான வரி உச்சவரம்பைத் தாண்டி இலாபம் ஈட்டி வரி ஏய்ப்புச் செய்யும் முதலைகள் அதிகம் உள்ளனர்.// உண்மை..அவர்களைக் கணக்கிட முடியாது.
    //வரிஏய்ப்பு செய்தவர்களில் நாமுமா என்று செய்வதறியாது தவிக்கிறார்கள்.// இதுவும் சிலருக்குத்தான் உரைக்கிறது. பணமாகக் கொடுத்தால் பத்து சதவிகித தள்ளுபடி என்று ரசீது இல்லாமல் வணிகம் செய்கிறவர்கள்- எல்லாம் ஊழல்தான், வரி ஏய்ப்புதான்!
    நல்ல பதிவு.

    ReplyDelete
  4. மக்கள் உணர வேண்டும் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அய்யா

      Delete
  5. நல்ல ஆதங்கம். செய்தித் தாள்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. இப்போதும் உணர்வார்களா என்றும் தெரியாது!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீ
      நன்றிகள் பல

      Delete
  6. உணர்வார்கள் தோழர்

    ReplyDelete
  7. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
  8. அய்யா மன்னிக்கணும்... 90 சதவிகிதம் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குகுறார்களே? அவர்களும் அதற்கு வரி கட்டுகிறார்களோ?

    ReplyDelete
  9. செம பதிவு கஸ்தூரி!!! பாராட்டுகள். அடிச்சுத் தள்ளிட்டீங்க!!! செம ஆதங்க அடி..(அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் அல்ல கஸ்தூரி. ஆசிரியர்களுக்கு மட்டுமே எங்களின் இந்த ஆதரவு!!!!) செய்தி ஊடகங்களுக்கு
    ----இருவரின் கருத்தும்..

    கீதா: நான் எந்தக் கடைக்குச் சென்றாலும் பில் வாங்காமல் வருவதில்லை. மளிகைக் கடை அண்ணாச்சிகள் அதாவது சிறிய வணிகர்கள் ரசீது தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால் நான் அவர்களிடமும் பில் கேட்டால் அங்கு ரசீசு புத்தகம் இருந்தால்தானே நமக்குத் தருவார்கள். அதனால் அவர்களிடம் நான் சொல்லுவது அட்டை தேய்க்கும் வசதியைக் கொண்டு வாருங்கள் என்று. அவர்களும் இதோ அதோ என்றவர்கள் இப்போது என்னிடம், அம்மா நீங்க சொன்னத இப்ப நாங்க செய்ய வேண்டிய நிலைமை வந்துருச்சு என்று....

    பார்ப்போம் அட்டை வந்தால் உருப்படும்..ஆனால் அதிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டுதான். அது போன்று ஸ்மார்ட் கார்ட்/ ஆதார் இப்போது சிலவற்றிற்கு மட்டுமே இல்லையா ஆனால் அந்த ஆதரையெ ஸ்மார்ட் கார்டாக எல்லோருக்கும் வேண்டும் என்று அந்த எண்ணைக் கணினியில் பதிந்து விட்டால் அதை உபயோகித்துத்தான் எல்லாமே செய்ய வேண்டும் நமது பரிவர்த்தனைகள் முதற்கொண்டு என்று வந்துவிட்டால் நன்றாக இருக்குமோ...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete

Post a Comment

வருக வருக