மெமரி கார்ட்

மீண்ட பதிவர்கள்

சில ஆசிரிய ஆளுமைகள் பதிவுலகில் இருந்தார்கள். வெகு எளிய காரணத்திர்காக ஒருவரும் புரிந்துகொள்ளக்கூடிய  காரணத்தினால் ஒருவரும் வலைப்பூ உலகில் இருந்து விலகி இருந்தனர்.



தலைகள் இப்போ பாக் இன் பார்ம். மகிழ்வுதான்.

பிறரின் விமர்சனத்திற்காக, பிறரின் பீடுக்காக நாம் எழுதுவதை நிறுத்துவது என்பது எந்தவிதத்திலும் பக்குவமான செய்கை அல்ல.

யாழியிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தது நினைவில் வருகிறது.  அற்புதமாய் எழுதும் இளம்   பதிவர் ஒருவர் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதை அறிந்து வருத்தப்பட்ட நாட்களில் யாழியிடம் கேட்டேன்.

ஆமா, எழுத்து நம்மைப் பாதிக்குமா என்ன ?

ஒரே வார்த்தையில் சொன்னார்.

மீட்கும்.

உண்மைதான் இன்று செமையாக எழுத (பழைய பார்மிலேயே) எழுதத் துவங்கியிருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

செல்லாது செல்லாது வெண்பாவில் சொல்லுங்கள் என்று கேட்க மாட்டார்கள் என்று நினைக்கேன்.

நினைவில் நிற்கும் பிறந்தநாள் கேக் ஒன்று



எத்துனை மெனக்கெடல்... ஹானிக்கு வேதியியலில் ஆர்வம் என்பதற்காக சகோ கிரேஸ் செய்த கேக்தான் இது. பெற்றோர் பண்பு குறித்து கொஞ்சம் சீரியசாகவே யோசிக்க வைத்த கேக். ஹானிக்கு வாழ்த்துகள். தாமத்திற்கு கோபம் வேண்டாம்.

ஐநூறு ஆயிரம்

சமகாலத்தில் இதைப் போன்று ஒரு கேனத்தனமான ஒரு அரசியல் முடிவு  இருக்க முடியாது.

இன்று தமிழ் ஹிந்துவின் இரண்டு முழுப் பக்கங்களில் அல்லாடிய மக்களின் படங்கள் வெளிவந்திருகின்றன.

நம்ம துக்ளக் மகராசா இப்போ ஜப்பானில் இருந்து ஒரு செல்பி போடுவார் பாருங்க.

இதே  அதிரடியை விளைநிலங்களை அரசுடமையாக்குவதிலும், ஆறுகளை தேசியமயப்படுத்துவதிலும், கல்வியை இலவசமாகத் தருவதிலும், மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பித்து மருத்துவத்தை இலவசமாக செய்வதிலும், மருந்துக் கம்பனிகளை தேசியமயமாகுவதிலும் காட்டியிருந்தால் பாராட்டலாம்.

இவற்றில் எதையும் செய்யும் வக்கு இல்லை ஏழைகளை வங்கிகளில் மணிக்கணக்கில் நிற்க விட்டு ப்ளைட் ஏறிப் போய்ட்டார் துக்ளக்.

ஆமா அந்த ஜப்பான் செல்பி வந்துடுத்தா ?

நினைவுகள் தொடரும்
அன்பன்
மது

Comments

  1. அசத்தல் பிறந்தநாள் கேக்...!

    ReplyDelete
    Replies
    1. சில பெற்றோர்கள் குழந்தைகளுக்காக எடுக்கும் முயற்சிகள் உண்மையில் கிளாஸ் ...
      நான் கற்றுக்கொள்வது உண்டு...
      இவ்வளவு தூரம் போக முடியுமா என்றல்லாம் தெரியவில்லை

      Delete
  2. அண்ணா... :) என்ன சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து எழுதவே விரும்புகிறேன்.

    ஹானிக்கு உங்கள் வாழ்த்தைச் சொல்லிவிட்டேன். மிக்க நன்றி அண்ணா. கேக்கைப் பாராட்டிப் பகிர்ந்தமைக்கு மீண்டும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் தங்கையிடம் இருந்து நிறைய கற்க வேண்டும் ...

      Delete
  3. உண்மைதான் அண்ணா..செய்ய வேண்டிய நல்ல விசயங்கள் நிறைய இருக்க, சாதாரண மக்களை உணவிற்குத் தடுமாற வைத்தாயிற்று..

    ReplyDelete
    Replies
    1. நமது தலைவர்கள் இனி நல்லது அவர்களாக செய்ய மாட்டார்கள் போராடி செய்ய வைக்க வேண்டும்.

      Delete
  4. பிறந்த நாள் கேக் டிசைன் அழகு செய்வது ரொம்ப நேரம் பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ..
      அடியேன் சாப்பிடுவதை மட்டும் நன்கு செய்வேன்..

      Delete
  5. நிறைய பேர் வலைப்பக்கம் வருவதே இல்லை! எழுத்து நம் திருப்திக்கு மற்றவர் விமர்சனம் குறித்து கவலை வேண்டாம். திருத்துவதற்கு ஏதேனும் இருப்பின் திருத்திக் கொள்ளலாம். நன்றி!

    ReplyDelete
  6. அன்பைக் குழைத்து செய்த கேக் ஆனதால் ,ஒரு மாதமானாலும் கேக் சுவையாய் இருக்கிறது :)

    ReplyDelete
  7. பிறாந்தநாள் கேக் அருமை! நான் கேக் பேக் செய்வதுண்டு ஆனால் முட்டை சேர்க்காத கேக். பொறுமை தெரிகிறது! அன்பு இழைந்திருக்கிறது அல்லவா. தாமதமான வாழ்த்துக்கள்!

    கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக