விடைபெறல்கள்
ஹிஸ்டரி ரிபீட்ஸ்
நினைவடுக்குகளில் இருந்து ஒரு சம்பவம்
நாடு முழுவதும் அதிருப்தி.
நான் அன்று புதுகையின் பிரபலமான உணவகமான முல்லை மெஸ்ஸின் வெளித் திண்ணையில் இருந்தேன்.
நீண்ட ஊர்வலம் ஒன்று சென்றது ..
கோசங்கள் இன்னும் நினைவில்
தோழர்கள்தான்
இந்திரா காந்தி ஆட்சியிலே அண்டா குண்டா அடகு வைச்சோம் என்ற கோசம் இரவில் ஒலித்துக் கொண்டிருந்த பொழுது தான் வடக்கே வெகுதூரத்தில் அது நிகழ்ந்தது
பாரதப் பிரதமர் தந்து பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்
ஒரே இரவில் அத்துணை வெறுப்பும் பதங்கமாக
தொடர்ந்த தேர்தலில் இந்திராவின் ராஜீவ் பிரதமரானார்..
நேற்றுவரை கடுமையான விமர்சனத்துடன் இருந்த நண்பர்கள் கூட இன்றய முதல்வரின் உடல்நிலை குறித்து வருந்திப் பதிவிடுகிறார்கள் ...
எனது ஹோம்பேஜ் முழுக்க வேறு செய்திகளே இல்லை
பிரார்த்தனைப் பேரலை...
அம்மையார் ஜெயாவுக்கு
ஒற்றைக் காரணி ஒன்று உண்டு
அவர் பெண்
இந்தக் காரணிக்காகவே அவரை வெறிகொண்டு ஆதரித்த சகோதரிகளை நான் அறிவேன்
வாழ்வின் எல்லாத் தளங்களில் இருந்தும் அவருக்கு தங்கள் ஆதரவை மாறாமல் மறக்காமல் தந்தனர் சகோதரிகள்
அவர்களைப் பொறுத்தவரை ஆணாதிக்கம் மிக்க இந்தச் சூழலில் தங்களில் ஒருவர் தலைநிமிர்ந்து நிற்பதைத்தான் ரசித்தனர்.
எதிர் முகாமில் இருக்கும் பெண்மணிகள் கூட இவருக்கு வாக்களித்திருக்க கூடுமோ என்கிற அளவுக்கு இவரது ஆளுமையும் இருப்பும் இருந்தது மறக்கவோ மறுக்கவோ முடியாது.
எப்போதும் ஒரு அரசியல் ஆச்சர்யம் அவர்.
எப்படி இந்திரா அவர்கள் இருக்கும் பொழுது கடும் விமர்சனங்களையும் காலம்சென்றபின்னர் அம்மா மாதிரி வருமா என்கிற ஐகானாக மாறினாரோ அதே நிலை இவர்க்கும் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.
நான் உணர்ந்த இரண்டு விசயங்கள்
ஓர் அரசியல் தலைவர் உறுதியாக இருந்தால் மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதை அழுத்தமாக வரலாற்றில் பதிவு செய்தவர்..
இரண்டாம் விசயம்
தமிழக கிராமங்கள் எங்கும் புதிதாக நடப்பட்டிருக்கும் கன்றுகள்.
எல்லாக் கிராமங்களிலும் புதிய போத்துக்கள் அல்லது கன்றுகளைப் பார்க்கலாம்.
ஒரு அரசியல் ஆளுமையின் வீச்சை உணர்ந்த தருணம் அது.
அவரது வாழ்வு தனித்துவம் மிக்கது
அவரே பட்டியலிட்டதுபோல உலகம் கண்ட அத்துணை பெண் அரசியல்வாதிகளும் பாரம்பர்யம் மிக்க அரசியல் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.
அவர் சொன்னார் "ஐஆம் எ ஸெல்ப் மேட் வுமன்"
மனசை அறுக்கிறது இந்த வார்த்தை.
அடித்தட்டு மக்களின் ஆதர்சத்துக்குரிய முதல்வர் இன்று நம்மிடம் இருந்து விடைபெற்றுள்ளார்.
கண்ணியத்துடன் விடைகொடுக்கும் வரலாற்றுக் கடமை நமக்கும் இருக்கிறது
சமகால அரசியல் வரலாற்றின் சம்பவங்கள் நிறைந்த, ஏற்றத்தாழ்வுகள் செறிந்த ஒரு பக்கம் இன்று புரட்டப்பட்டு விட்டது.
இதுவரை நான் அறியாத எத்துனையோ இந்திய ஆளுமைகளுக்கு கூகிள் டூடில் இருந்தது
இன்று நியாயமாய் இருக்க வேண்டிய சட்ட மேதையின் டூடில் மிஸ்ஸிங்..
இன்னொரு விசயத்திற்காககாவும் இனி இந்த ஆறாம் தேதி நினைவுகூரப்படும் ..
இது தொடர்பாக யோசிக்கையில் பெருமதிப்பிற்குரிய கக்கன் அவர்களுக்கு கோவில்களில் பூரண கும்ப மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அமைச்சராக்கியவர் காமராஜர் என்பது வரலாறு
இதையே இன்னொரு முதல்வரும் நமது காலத்தில் நமது கண்முன்னால் செய்துகாட்டியிருக்கிறார்...
நினைவுகூர நல்ல விசயங்கள் இருக்கின்றன.
நண்பர்கள் வேறு எது எதையோ கேள்வி கேட்பதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது
போக
இனி கருதிடும் நண்பர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நாட்கள்இவை.
சர்வ வல்லமையுடன் ஒரு தலைமை இருந்தபொழுதே நம்மவர்கள் திருவிளையாடல்களில் வல்லவர்கள் ..
இப்போ தடைகள் ஏதும் இல்லை
Be careful நான் என்னைச் சொன்னேன்!
விடைபெறல் இரண்டு
இலைக்கடை கோபு என்றோர் நண்பர் விடைபெற்றுவிட்டார், அதீத உடல் பருமனும், தினம்தோறும் கடைசாப்பாடும் காரணிகள், மாசிவ் ஹார்ட் அட்டாக். முதல் அட்டாக்கிலேயே உயிர் பிரிந்திருக்கிறது.
கட்செவியில் சரியாக செயல்படாது இருப்பதால் மிகச் சரியாய் ஒருவாரம் கழித்துதகவல் தெரிந்தது.
பார்க்கும் பொழுது பேசுகிற நட்பென்றாலும் மரியாதைக்குரிய நபர்.
மரியாதைக்கு காரணம் எனது மாணவர் ஒருவருக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு லட்ச ரூபாய்களை வட்டியில்லா கடனாகத் தந்து படிக்க உதவியவர்.
இன்று அந்த மாணவர் அமீரகத்தில் பணியில் இருக்கிறார்.
விசயம் என்ன என்றால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு லட்சம் ரூபாய்களை கடனாகக் கேட்கக்கூட எனக்கு துணிவு கிடையாது!
வெறும் ப்ளஸ் டு மட்டுமே படிக்கும் மாணவர் உயர் கல்விக்கு கேட்கிறார் என்பதால் கொடுத்து உதவிய கோபு இன்று புதுகையில் இல்லை.
கிரீன் மைல் திரைபடத்தில் சாகாவரம் பெற்ற கதாநாயகன் சொல்வதுதான் நினைவில் வருகிறது.
சாகாவரம் என்பது எவ்வளவு பெரிய வலி என்று தெரியுமா ?
உங்கள் நண்பர்கள் வயதாகி இறப்பதை பார்த்துக்கொண்டே நீங்கள் வாழ்வது கொடுமை என்பான் கதாநாயகன்.
சிலரின் பிரிவுகள் இதை அனுபவப் பூர்வமாக உணரவைக்கின்றன.
சென்று வருக கோபு...

ஒற்றைக் காரணிக்காகவே ,மற்ற குறைகளை பெரிது படுத்த தோன்றவில்லை !
ReplyDeleteஇருவரின் ஆன்மாக்களும் அமைதியடையட்டும் :(
ReplyDeleteநம் காலத்தில் வாழ்ந்த இரும்புப்பெண்மணி. திருமதி இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பின் ஒரு பெரிய தாக்கத்தை நான் உணர்ந்தேன். நண்பரின் பிரிவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteஅம்மாவை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவரின் இல்லாமை மிகப் பெரிய வெற்றிடத்தை மனதில் ஏற்படுத்தியது. எப்படிப்பட்ட ஒரு பெண்மணி அவர் ! பெரிய ஆளுமையை இழந்து விட்டோம்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்....இரு ஆன்மாக்களும் அமைதியடையட்டும்.
ReplyDeleteஜெஜெ பற்றிச் சொல்வதென்றால் இங்கு பதியப்பட்டிருக்கும் உங்கள் கருத்துகளே. என்னதான் பல விமர்சனங்களுக்கு உள்ளானாலும், பலரும், நாங்கள் உட்பட அரசியல் ரீதியாக அவரை நையாண்டி செய்திருந்தாலும்... இன்று அவர் இல்லை என்பது ஏதோ ஒன்றை இழந்தது போல் இருக்கிறதுதான்.