தனிமனிதர்கள் சமூகம் குறித்துப் பேசுவது பெரும்பாலும் தங்கள் சுய அனுபவங்களை வைத்துத்தான் ...
வெகு அரிதாக சிலர் பொதுவாக பேசுகிறார்கள். நட்பு வட்டத்தில் பலர் இப்படி இருப்பது மகிழ்வு.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நந்தன் ஸ்ரீதரன், ஷான், சாஜ் ஜி, ஸ்ரீதர் சுப்பிரமணியன் என பட்டியல் இடலாம்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்கள் பெரும்பாலும் தங்கள் சுய அனுபவங்களைக் கொண்டே சமூகப் பிரச்னைகளை அணுகுகிறார்கள்.
இட ஒதுக்கீடுக்கு எதிராக கடும் குரல் எழுப்பும் நண்பர் ஒருவரை ஆதூரமாய் பற்றி வினவிய பொழுது என் தம்பிக்கு கிடைக்காத சீட் இன்னொருவனுக்கு கிடைத்திருக்கிறது என்கிற விசயத்தை பகிர்ந்தார்.
அவரது தம்பி எனது மாணவர். இன்று ஒரு முதுகலை ஆசிரியர் (அடியேன் பட்டதாரி ஆசிரியர்!)
தனது தம்பிக்கு இட ஒதுக்கீடு வில்லன் என்பது அவரது அனுபவம்
அவர் அமைத்துக் கொண்ட கருத்தும் இட ஒதுக்கீடுக்கு எதிராகத்தான் இருக்கிறது.
`
பிரச்னை என்னவென்றால் தனது குடும்பம் தாண்டி ஒரு சமூகம் இருப்பதையோ, இன்னும் மின் மரங்களே எட்டாத வீடுகள் இருப்பதையோ அங்கும் குழந்தைகள் இருப்பதையோ உணரக் கூட தயாரில்லை இந்தமாதிரி கருத்துடையவர்கள் ...
இது ஒரு உதாரணம்தான்
இப்படிதான் பலர் இருக்கிறோம்
ஒரு பிரச்சனையை உயரே நின்று அணுகாமல் அதை நமது கண்ணாடிகளைக் கொண்டு அதுவும் சுய அனுபவங்களால் சாயமேறிப்போன கண்ணாடிகளைக் கொண்டு பார்க்கிறோம் பகிர்கிறோம்
பெரும்பாலனோர் மாற்று மதத்தை வெறுப்பதற்கும் இதுபோன்ற
சிறுபிள்ளைத்தன்மான நிலைப்பாடுகள்தான் காரணம்
நான் பள்ளியில் இருந்த பொழுது துப்பாக்கி ரவைகளில் பன்றிக் கொழுப்பும் பசுவின் கொழுப்பும் தடவப்பட்டன இதை எதிர்த்து கொடும் கலவரம் நிகழ்ந்தது என்று படித்தேன்
இன்றய அரசுப் பாட நூல்கள் இந்தத்தகவலை வேறுமாதிரி பகிர்கின்றன.
அதாவது துப்பாக்கி தோட்டாவில் கொழுப்பு தடவப்பட்ட செய்தி உண்மை அல்ல!
அப்படி ஒரு வதந்தி கிளப்பப்பட்டது
இது பற்றிக்கொண்டு எரிந்தது
யார் பலன் அடைத்தார்கள் என்று வரலாற்றின் பக்கங்களைப் பார்த்தாலே புரியும்.
தியாகத்தின் நிறம் பச்சை காட்டும் கலவரத்தின் பின்விளைவுகளில் மொத்தமாக கொன்றளிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்களே. ஆனால் இது எந்தப் பாட நூலிலும் வராது!
கசப்பான காரணங்கள்தான்.
இஸ்லாமியர்கள் இந்திய விடுதலைக்கு பாடுபட்டனர் என்பதையோ, அவர்கள் குறிவைத்துத்தாக்கப்பட்ட விவரங்களையோ சொல்லாமல் கஜனி முகமதுவையும்( அவன் படையின் தளபதிகள் பலர் இந்தியர்கள்!), ஔரங்கசீப்பையும் சொல்லிக் கொண்டிருகின்றன நமது பாட நூல்கள்.
ஆனால் இந்த விவரங்களை அறியமால், வாசிப்பை விரிவாக்காமல் தங்கள் முன் விரிக்கப் பட்ட வார்த்தை வலைகளுக்குள் விழுந்து சாயங்களை ஏற்றிக் கொண்டு சமூகப் பிரச்சனைகளை நாம் அணுகுவோம் என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது.
#தட் எப்படியோ தொலைங்கடா மொமன்ட்
அன்பன்
மது
உண்மை... பகுத்தறிதல் வேண்டும்...
ReplyDeleteஆனால் இந்த விவரங்களை அறியமால், வாசிப்பை விரிவாக்காமல் தங்கள் முன் விரிக்கப் பட்ட வார்த்தை வலைகளுக்குள் விழுந்து சாயங்களை ஏற்றிக் கொண்டு சமூகப் பிரச்சனைகளை நாம் அணுகுவோம் என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது.//
ReplyDeleteமிகச் சரியானக கருத்து
சொல்லிச் சென்ற விதமும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
எதார்த்தமான சூழ்நிலை பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDelete// தனிமனிதர்கள் சமூகம் குறித்துப் பேசுவது பெரும்பாலும் தங்கள் சுய அனுபவங்களை வைத்துத்தான் //
என்ற தங்களின் கருத்தினுக்கு உடன்படுகின்றேன். இவ்வாறு எழுதுவதற்கு காரணம், இம்முறையில் தனிநபர் சுதந்திரத்திற்கு ஒரு பாதுகாப்பு இருப்பதுதான். விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றல், ஒரு சமூகப் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக, கேள்விப்பட்டதை வைத்துக் கொண்டு எழுதுவதை விட, இந்த பிரச்சினையில் இதுதான் நடந்தது அல்லது நடக்கிறது, என்னுடைய அனுபவம் இதுதான், எதிர்கொள்ள வேண்டியவை இதுதான் எனும்போது ஒரு நம்பகத்தன்மை உருவாகிறது. சமூகப் பாதுகாப்பும் உருவாகி விடுகிறது. கூடவே இன்னும் ஆவணங்களை இணைத்தால் இன்னும் நல்லது.
உண்மை... பல வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டே வைக்கப்படுகின்றன... குறிப்பாக வட இந்தியரின் வரலாற்று உண்மைகளைச் சொல்லும் பாடநூல்கள் நம்மவர்கள், இஸ்லாமியரின் வரலாறுகளை மறைக்கவே செய்கின்றன.
ReplyDeleteஉண்மைதான். அதே சமயம் நமது புரிதல்களில் வேறுபாடு காரணமாகக் கூட எதிர்பாரா நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது அல்லவா?
ReplyDeleteபல வரலாறுகள் உண்மையே இல்லை. பல உணமைகள் மறைக்கப்பட்டு பொய்யும் புரட்டுமே உண்மையாக மாறிவிட்டன.... ஒவ்வொரு அரசுமே இப்படித்தான் - அக்காலமாக இருந்தாலும் இக்காலமாக இருந்தாலும்.
ReplyDeleteதனக்கு இன்னல் நேர்ந்துவிட்டதால் நல்ல விஷயங்கள் கூட நியாயமாக பார்க்கப்படுவதில்லை. சுயநலமே குறிக்கோளாய் இருக்கும் மனிதருக்கு பொது நலன்களின் மேல் மேலோட்டமான பார்வை மட்டும் இருக்கும். படித்தவர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.
ReplyDelete