இந்த Alephi ReadsApp பல்வேறு நாடுகளில் நடக்கின்ற இலக்கிய நிகழ்வுகளை சர்வதேச இலக்கிய வாசகனின் கவனத்திற்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் முயற்சியாகும். இது Alephi.com க்குச் சொந்தமானது. தமிழ் மொழியின் நவீன இலக்கிய வளங்களையும், பண்பாட்டுக் கூறுகளையும், சிந்தனை மரபையும், வாழ்வியல் அம்சங்களையும் உலக இலக்கியத் தளத்திற்குக் கொண்டுபோகும் கனவின் வெளிப்பாடாக ஆரம்பிக்கப்பட்டது Alephi.com என்னும் கலை இலக்கியம் சார்ந்த இணைய இதழ். உலக மொழிகளிலேயே மூத்த மொழி என்றும் செம்மொழி அந்தஸ்தும் கொண்ட தமிழ் மொழியின் கலை இலக்கிய வளங்களும், சிந்தனை மரபும் உலக இலக்கிய அரங்கிற்கு பெருமளவில் அறிமுகமாகவேயில்லை. பண்டைய புகழ்பெற்ற இலக்கியச் செழுமையை உள்வாங்கி தற்போது நவீனமடைந்துகொண்டிருக்கும் தமிழ் மொழியை உலகத் தரத்திற்கு கொண்டுபோகும் Alephi.com இணைய இதழின் முயற்சியில் கை கோர்த்துக் கொண்டு துணை வருவது இந்த mobile App.
இது முழுக்க முழுக்க ஒரு Literary App. சர்வதேச இதழ்களில் வரும் கலை இலக்கிய நிகழ்வுகள், மற்றும் கலை இலக்கிய செய்திகள், புத்தக வெளியீடுகள், புத்தக மதிப்புரைகள் போன்ற விஷயங்களை இலக்கிய ஆர்வம் கொண்ட சர்வதேச வாசகனுக்கு சுருக்கமாக தொகுத்து அவைகளின் link ஐ கொடுக்கும் இலக்கியச் சேவையாக இந்த Alephi ReadsApp செயல்படும். பெரும் புகழ் பெற்ற சர்வதேச இதழ்களின் செய்திகளை மட்டுமல்லாது, உலகளவில் பெரிதும் கவனத்திற்கு வராத சிறு சிறு அளவில் இயங்கிக் கொண்டிருக்கிற, எழுத்தாளர்களின் Blogகள், சிறு Websiteகள், முகநூல் பக்கங்கள், சிறு குறிப்புகள், போன்றவைகளிலிருந்து செய்திகளை எடுத்துப் போட்டு, எல்லா வாசகர்களுக்கும் அவைகளை அறிமுகப்படுத்தும் இலக்கிய சேவையாகவும் இந்த App செயல்படும்.
இதில் வெறுமனே செய்திகளின் தொகுப்புகள் மட்டுமல்லாது, கூடவே இந்த ReadsApp க்கென்றே பிரத்யேகமாக சர்வதேசஎழுத்தாளர்களிடம் கேட்டு வாங்கப்பட்ட சிறு பேட்டிகள், சிறு குறிப்புகள், சிறு அபிப்ராயங்கள், நூல் விருப்பங்கள் .. போன்றவைகளும் வெளியாகும். மேலும், சர்வதேச இலக்கிய தளத்தில் மிக முக்கியமான நிகழ்வு எதுவும் நிகழ்ந்தால் (Breaking News) உடனே அதை வாசகனின் பிரத்யேக கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அவருக்கு குறுந்தகவலாக (ReadsApp Notes) அனுப்பப்படும். இதை எல்லாவற்றையும் ஒரு மாபெரும் இலக்கிய சேவையாக செய்கிறது Alephi ReadsApp.
(https://play.google.com/store/apps/details…)
கெளதம சித்தார்த்தன்
தேவைப்படும்போது அவசியம் பயன்படுத்திக்கொள்ளும்வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபயன்படுத்தி விட்டு சொல்கிறேன்...
ReplyDeleteநன்றி...
நன்றி நண்பரே
ReplyDeleteநல்ல பயன்படும் தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteநல்லதொரு தகவல். நன்றி.
ReplyDeleteபயனுள்ள தகவல் பகிர்வு.
ReplyDelete