பார்த்துச் சலித்த திரைக்கதைதான். வேற்று கிரகவாசிகளின் வருகை. அதைத் தொடர்ந்த பதட்டம் பின்விளைவுகள் இத்யாதி இத்யாதி.
சிறந்த ஒலித்தொகுப்புக்காக ஆஸ்கர் வென்றுள்ள படம்.
ஆனால் படம் எங்கே ஸ்கோர் செய்கிறது என்றால் திரைக்கதையில்!
காலத்தின் முன்னும் பின்னும் செல்லும் திறனை திரைக்கதைக்குள் ஆகர்சிக்கும் விதத்தில் கொண்டுவந்தது அருமை.
இயக்குனர் டெனிஸ் விலேநேவ் வெகு நுட்பமாக திரைக்கதையைச் செதுக்கியிருகிறார்.
படத்தின் துவக்கத்தில் டாக்டர் லூயிஸ் பாங்க்ஸ் தனது மகள் பிறப்பில் இருந்து கான்சர் வந்து அவள் இறப்பது வரை நினைவில் கொணர்கிறார்.
சோகம் தாக்க அவர் வெளியுலகு குறித்த பிரஞ்கையற்று இருக்கிறார். சோகையாக நடந்து பெரும் வளாகத்தைக் கடந்து தனது வகுப்பை அடையும் அவர் பாடத்தைதுவக்க மாணவர்கள் எதையும் கவனிக்கும் மூடில் இல்லை.
என்ன என்று கேட்கிறார். நியூஸ் போடுமா என்கிறார் ஒரு மாணவர்.
நியூஸ் திடுமென புவியின் பனிரெண்டு இடங்களில் தரையிறங்கிஇருக்கும் வேற்று கிரக வாசிகளின் விண்கலங்களை காட்ட பாணிக் பெல் ஒன்று ஒலிக்கிறது.
ஆசிரியை உத்தரவுக்ககெள்லாம் காத்திருக்காமல் வெளியேறுகிறார்கள் இருக்கும் ஐந்து மாணவர்களும்.
மீண்டும் சோகையாக நடக்கிறார் பாங்க்ஸ்.
காரை அடையும் தருணத்தில் வானில் விரையும் இரண்டு பைட்டர் ஜெட்கள் பயமுறுத்துகின்றன.
அடுத்த நாள் யாருமே இல்லாத மாபெரும் வளாகத்தில் தனியே நடக்கிறார் டாக்டர் லூயிஸ் பாங்க்ஸ்.
காணேல் வெபர் லூயிஸை வெற்றுக் கிரக வாசிகளின் மொழியை படிக்க அழைக்கிறார்.
ஆனால் லூயிஸ் மறுக்கிறார்.
மீண்டும் வீடு திரும்புகிறார்.
நள்ளிரவில் அவர் வீட்டின் முன்னர் ஒரு ஹெலி இறங்குகிறது. காணேல் வெபர், லூயிஸ் புறப்படுகிறார்.
மான்டேனா பகுதியில் தரையை தொடாமல் மிதக்கும் விண்வெளிக் கப்பலுக்கு வருகிறார்கள்.
தகுந்த பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்ட பிறகு கலத்தின் உள்ளே இருக்கும் ஹெப்டோபாட் உயிரினங்களுடன் பேசுகிறார்.
எதுவம் வேலைக்கு ஆகவில்லை என்ற நிலையில் சடார் என ஒரு எழுதும் அட்டையில் ஹியுமன் என்று எழுதி காட்ட ஹெப்டோ பாட்களில் ஒன்று கண்ணாடிச் சுவர்களில் வட்டவட்டமாக எழுதத் துவங்குகிறது.
வட்ட வடிவ எழுத்துகளை எழுத அவற்றை எழுதும் முன்னரே எவ்வளவு இடம் தேவைப்படும் என்ற கணக்கீடு வேண்டும்.
இந்த எழுத்துக்களைப் படிக்கதுவங்கும் டாக்டர் லூயிஸ் பாங்க்ஸ் அந்நிய உயிரினங்களைப்போலவே சிந்திக்கவும் ஆரம்பிக்கிறார்.
அந்த உயிரினங்களுக்கு கடந்த காலம் நிகழ்காலம் இறந்தகாலம் என்கிற நேர்கோட்டு காலம் இல்லை. மாறாக வாழ்வின் அத்துணை அனுபவங்களையும் ஒரே புள்ளியில் அனுபவித்து சம்பவங்கள் தரும் மெய்பொருளை உணரக்கூடிய திறனுடன் இருகின்றன அவை.
ஒரு கட்டத்தில் அவற்றின் திறன் டாக்டர் லூயிஸ் பாங்க்ஸ்கும் வந்த்விடுகிறது.
இதைக்கொண்டு அந்நிய உயிரினங்கள் மீது நடக்க இருந்த பெரும் போரைத் தவிர்க்கிறார் லூயிஸ்..
மனித குலத்திற்கு தங்களின் அத்துனை அறிவையும், தொழில் நுட்பத்தையும் வழங்கிவிட்டு மேகத்துக்குள் மறைந்து விடுகின்றன விண்கலங்கள்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் மனித குலம் மீண்டும் தங்களுக்கு உதவும் என்கிற முன்னறிவிப்போடு மேகங்களில் கரைந்து போகின்றன விண்கலங்கள்.
பொறுமை இருதால் பார்க்கவேண்டிய படம்தான்.
நீங்கள் அதிரடி ஆக்சன் படங்களைப் பார்க்கும் வழக்கம் உள்ளவர் என்றால் படம் கொஞ்சம் ஸ்லோதான்.
படம் முடிகின்ற தருவாயில்தான் லூயிஸ் பாங்க்ஸ் திருமணமே ஆகாதவர் என்பதும் தன்னுடன் பணியாற்றிய இயான் டானலியைத் திருமணம் செய்ய இருப்பதும் அதன் பின்னர்தான் ஹானா பிறக்கப் போகிறாள் என்பதும் புரிகிறது. ! அந்நிய மொழியைப் பயின்றதால் லூயிஸ் காலத்தை முன்னே பார்க்கும் திறன் பெற்றவராக இருக்கிறார் என்று திரைக்கதை முடிச்சு அவிழ்கிறது.
ஆனால் இசை, காமிரா என்று அசத்தல் ட்ரீட்கள் உண்டு.
"இந்தப் படம் பார்க்கலாம் போல." - என்று நினைக்க வைக்கும் விமர்சனம்...!
ReplyDeleteமொமெண்டோ பார்த்து ரசிக்க முடிந்தது என்றால் தாரளமாக இப்படத்தையும் பார்க்கலாம்
Deleteநல்லதொரு விமர்சனம். பார்க்க முயல்கிறேன்.
ReplyDeleteவணக்கம்
Deleteபார்ப்பது இருக்கட்டும்
ஒருமுறை கேளுங்கள் படம் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே ஒலித்தொகுப்பு என்னைக் கவர்ந்தது
அதேபோல ஆஸ்கரை வென்றும் இருக்கிறது
விமர்சனத்தை ரசித்தேன். நுணுக்கமாக இருந்தது.
ReplyDeleteவாருங்கள் முனைவரே
Deleteநன்றிகள்
லிஸ்டில் சேர்த்தாச்சு..உங்க விமர்சனம் அப்படிச் சொல்லிச்சு!!
ReplyDeleteசிறந்த கண்ணோட்டம்
ReplyDeleteபாராட்டுகள்
வணக்கம் தோழர்
Deleteவருகைக்கு நன்றி