இண்டஸ்ட்ரியல் லைட் அண்ட் மாஜிக்கின் அடுத்த படைப்பு.
ஒரு பில்லியன் டாலர்கள் வசூல் செய்த படம். தயாரிப்பு இரநூறு மில்லியன் டாலர்கள் எனும் பொழுது படத்தின் வீச்சை சொல்லவும் வேண்டுமா என்ன.
காவியத்துவம் வாய்ந்த ரோக் ஒன்.
தனிப்புகழ் வாய்ந்த ஸ்டார் வார்ஸ் சீரிஸின் ப்ரீகுவல்..
(யோவ் அது என்னய்யா ப்ரீகுவல்? என்பவர்களுக்கு தொடர் பாகங்கள் சீக்குவல் என்றால் அந்த தொடர் பாகங்களுக்கு முன்னர் நடக்கும் கதையை தொடர் முடிந்தவுடனோ அல்லது தனியான திரைப்படங்களாகவோ எடுப்பதே ப்ரீக்குவல்.)
ஸ்டான்அலோன் படமாகவும் கொள்ளலாம்.
பிரான்ட் எக்ஸ்பான்சன் முயற்சிதான்.
பலகோடி ரூபாய்களை தரும் ஒரு கதைக்களத்தை அப்படியே விட்டுவிடாமல் மீண்டும் மீண்டும் புதிய கதைகளைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்ந்து கல்லாவை நிரப்பும் வேலையேதான்.
தனது ஐ.எல்.எம் நிறுவனத்தின் மூலம் ஸ்டார் வார்ஸ் என்கிற தலைப்பில் பத்து படங்களை தயாரித்து சிலவற்றை இயக்கி வெளியிட்டவர் ஜார்ஜ் லூகாஸ்.
உலகில் திரைப்படங்கள் மூலம் பொருளீட்டியவர்களில் முதல் மூன்று இடத்தில் எப்போதும் இருப்பவர் இவர்.
நான் வியக்கும் படைப்பாற்றல் பிதாமகன்களில் ஒருவர்.
1970இல் புதிய நம்பிக்கை என்கிற ஸ்டார்ஸ் வார்ஸ் மூவி ஒன்று வெளிவந்தது. 2016இல் வெளிவந்த ரோக் ஒன் 1970இல் வெளிவந்த படத்திற்கு முன்னால் நிகழ்ந்த கதை!
இப்படி ஒரு வித்தியாசமான் டைம் லைன் தரும் வசதியை பயன்படுத்திக் கொண்டு ஒரு பெரும் குழுவே வேலையில் இருக்கிறது.
இத்துணைக்கும் இந்தப் படம் பத்து வருடங்களுக்கு முன்னரே விவாதிக்கப்பட்டு கைவிடப்பட்டு இப்போது மீண்டும் உயிர்பிக்கப்பட்டு வந்திருக்கிறது!
நேரே படத்தைப் பற்றி பேசுவதற்கு முன் படத்தின் ஒன் லைன் என்ன என்று பார்த்துவிட்டு போனால் வசிதியாக இருக்கும்.
மக்களுக்கும் சர்வாதிகாரத்திற்கும் நடக்கும் இடையறா யுத்தம்தான் ஸ்டார் வார்ஸ்.
எம்பரர் தரப்பு சர்வாதிகாரத்தையும் அடக்குமுறையையும் நோக்கி நகர, அவர்களை எதிர்த்து போரிடும் குழு ரிபப்ளிக் என்று அழைக்கப்படுகிறது. குழுவின் போர் வீரர்கள் வெளியெங்கும் பரவியிருக்கும்
சக்தியை பயன்படுத்துகிறார்கள். வழக்கம் போல நல்லவர்கள் வெள்ளை சக்தியையும், தீயவர்கள் கருமைச் சக்தியையும் பயன்படுத்துகிறார்கள்.
சக்தியை பயன்படுத்தும் நல்லவர்கள் ஜெடாய்கள், தீயவர்கள் செத்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
சக்தியைக் கட்டுப்படுத்தும் இருவருமே அடுத்தவரின் மனதைப் படிக்கும், தொலைவில் இருக்கும் பொருட்களை நகர்த்தும், திறன்களோடு இருக்கிறார்கள்.
கதை நடக்கும் களமாக கற்பனையான ஒரு கேலக்சியை வைத்திருப்பதால் ஒளிவேக விண்வெளிப் பயணம், வினோதமான அயல் கிரக உயிரினங்கள் என பல்வேறு அசத்தல் சி.ஜி. வேலைகள் உண்டு.
இந்தப் பின்னணியில் பார்த்தால்தான் படம் புரியும்.
2016இல் வெளிவந்த ரோக் ஒன்தான் எல்லாப் படங்களுக்கும் முந்திய கதையைச் சொல்கிறது.
சர்வாதிகாரத்தை வெறுக்கும் கேலன் எர்சோ அதிகார மையத்தில் இருந்து விலகி லாமு என்கிற கிரகத்தில் தனது குடும்பத்துடன் தனியே வாழ்கிறான். கேலன் எர்சோவின் திறனை பயன்படுத்த விரும்பும் எம்பையர் அவனை மீண்டும் அழைக்க கேலன் தவிர்க்கிறான்.
கேலனைத் தேடி வரும் ஆர்சன் கிரனிக் எனும் ஆயுத தயாரிப்பு இயக்குனர் துப்பாக்கி முனையில் அவரைக் கடத்துகிறான். இந்த மோதலில் கேலன் தனது மனைவியை இழக்கிறான், குழந்தையைப் பிரிகிறான்.
குழந்தை ஜின் எர்சோ தனியே வளர்கிறாள்.
பல்வேறு சாகசங்களுக்குப் பின்னர் பிடிபட்டு ஒரு பணி முகாமில் அடைக்கப்படுகிறாள்.
இதனிடையே கேலன் எம்பரர்க்கு ஒரு சூப்பர் வெப்பனை தயாரிப்பதை அறிந்த புரட்சிக் குழு ஜின் மூலம் கேலன் இருக்கும் இடத்தை அறிந்தால் கேலனைப் போட்டுத் தள்ளிவிடலாம் என்று கணக்குப் போட்டு கொத்தடிமை முகாமில் இருந்து அவளை மீட்கிறது.
புரட்சிக் குழுவின் உண்மையான நோக்கம் தெரியாமல் ஜின் தன் தந்தையைத் தேடி அவர் இருக்கும் கிரகத்திற்று செல்கிறாள். அவளுடன் வரும் புரட்சிப் படை வீரன் காசியன் கேலனைக் குறிவைக்கிறான்.
தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத் திருப்பங்களில் ஜின் எர்சோ தன் தந்தையை இழக்கிறாள்.
தனது மகளின் கரத்தில் மரணிக்கும் கேலன் அழிவாயுத்தின் பளு பிரின்ட் ஸ்காரிப் கிரகத்தின் டேட்டா பாங்கில் இருக்கிறது என்று சொல்லி மரிக்கிறான்.
ஜின் ஸ்காரிப் கிரகம் சென்று பளு பிரிண்டை கைப்பற்ற நினைக்க புரட்சியாளர் சங்கமோ நம்பிக்கை இன்றி சரணடைய தயாராகிறது.
ஜின், காசியன், ஒரு ரோபாட் மற்றும் பல நண்பர்கள் எல்லோர் எதிர்ப்பையும் மீறி பயணத்தை தொடர்கிறார்கள்.
காவியத்துவம் வாய்ந்த முடிவு.
இயக்குனர் காரத் எட்வர்ட்ஸ் பல விசயங்களில் தனித்துவத்தை பேணியிருக்கிறார்.
படத்தின் துவக்கத்தில் ஸ்டார் வார்ஸ் பாணி க்ராலிங் டைட்டிலே கிடையாது!
படம் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வெளிவந்த படம் என்பதால் அநியாயத்திற்கு செய்நேர்த்தியுடன் இருக்கிறது.
ஸ்டார் வார்ஸ் படங்களில் என்னைக் கேட்டால் மிக முக்கியமான படமாக இதைத்தான் சொல்வேன்.
எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் விரைந்து செல்லும் திரைக்கதை, ஒளியாண்டுகளை தாண்டி விரியும் புதிய கிரகங்கள், அவற்றின் தனித்துவமான புவியியல் தன்மைகள், என இது அற்புதமான சி.ஜி ட்ரீட்.
அறிவியல் புதின ரசிகர்கள் தவிர்க்க கூடாத படம்.
கூல் பாக்டர்
ஐ.எல்.எம்மைத் தாண்டி என்ன?
இருக்கு
அது இசை. அயம் லவிங் இட். ஒரு கலாச்சரா அடையாளமாக இருப்பது இந்தப் படம் மட்டுமல்ல படத்தின் இசையும்தான்.
படம் தியாகம், சமத்துவத்துக்காண போராட்டத்தில் நம்பிக்கையை கைவிடாமல் இருப்பது போன்ற நுட்பமான மனித உணர்வுகளை பேசுவதால் காவியத்துவம் பெறுகிறது.
மீண்டும்
சந்திப்போம்
அன்பன்
மது
உங்கள் மூலம் சில ஆங்கிலப் படங்கள் பற்றி தெரிந்து கொள்கிறேன் மது. நன்றி.
ReplyDeleteநன்றிகள் தோழர்
Deleteவிமர்சனம் அருமை தோழரே...
ReplyDeleteஅசத்தலான விமர்சனம். வாய்ப்பிருப்பின் பார்ப்பேன்.
ReplyDeleteநன்றிகள் முனைவரே
Delete#2016இல் வெளிவந்த ரோக் ஒன்தான் எல்லாப் படங்களுக்கும் முந்திய கதையைச் சொல்கிறது.#
ReplyDeleteஇதிலும் இதுதான் நம்பர் ஒண்ணா :)
ஆம் தோழர்
Deleteஇதுதான் நம்பர் ஒன்