மனோஜ் நைட் ஷியமளனின் அடுத்த உளவியல் பயங்கரவாதப் படம்!
அந்நியனில் ஒரே உடலில் அம்பி, ரெமோ மற்றும் அந்நியன் என்கிற ஆளுமைகள் இருந்ததைப் பார்த்தவர்கள் இந்தப் படத்தை புரிந்து கொள்ளலாம்.
என்ன இம்முறை ஸ்பிலிட் பர்சனாலிட்டி இன்றி டிஸ்அசோசியேடிவ் டிஸ்ஆர்டர் (DID) என்று புதிய ஒரு உளவியல் பிரச்னையைக் கதைக் கருவாக எடுத்து வெற்றி பெற்றுள்ளார் நட்டு.
ஆம் ஒன்பது மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட படம் இரநூற்றி ஐம்பத்தி ஆறு புள்ளி ஒன்பது மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது! (இதுவரை)
மனோஜின் இயக்குபாணி ஒரு இழுவை, ஆனால் அப்படி இழு இழு என்று இழுத்ததை ஒரே நிமிடத்தில் சரி செய்துவிடுவார். இதற்கு முன்னர் வந்த சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் அன்பிரேக்கபில் படங்களைப் பார்த்திருந்தால் இது புரிந்திருக்கும்.
ஹீரோ ஜேம்ஸ் மேக்காவ் என்னுடைய பேவரிட் நடிகர்களில் ஒருவர்.
எக்ஸ் மென் சீரிஸில் இளம் சார்ல்ஸ் சேவியராக வந்தவர்.
இயக்குனரின் நடிகர் என்பதை முழுதாக நிறுவியிருக்கிறார். ஒன்பது வயது சிறுவனாக நடிக்கும் பொழுது இவர் நடந்துவருவதே அசத்தல்.
அதே போல பீஸ்ட்டாக விஸ்வரூபம் எடுத்து கொடூரமான செயல்களை செய்யும் பொழுதும் மிரட்டியிருக்கிறார்.
எண்ணம் போலவே வாழ்க்கை என்று சொல்வோம் இல்லையா இந்த ஒன் லைனைப் கச்சிதமாகப் பிடித்து கதை பின்னியிருக்கிறார் மனோஜ்.
நமக்கு புரியவேண்டும் என்பதற்காவே பிரச்னைக்குரிய கெவின் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டிடம் சமத்தாக உட்கார்ந்து பேசுகிறான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நபராக வருகிறான்.
இதவிட தனது மனநல டாக்டருக்கே ஒரு உளவியல் அதிசயத்தை சொல்கிறான்.
பாணி க்ராஸ்பி எனும் பெண்மணி தனது கண்பார்வையை இழந்தபின்னர் தீவிர நம்பிக்கையின் அடிப்படையில் பார்வை நரம்புகளை புதிதாக வளர்த்துக்கொண்டு பார்க்கும் திறனை மீட்டாள் என்பதை சொல்கிறான். (உண்மைதான்)
அதே போல டாக்டரும் நம்புகிறார். அவருடைய கருதுகோளின்படி தான் யார் என்று ஒருவன் நம்புகிறானோ அந்த நம்பிக்கையின் தீவிரத்தைப் பொருத்து அவனது உடலின் வேதியல் மாறிவிடும் என்கிறார்.
படத்தில் இதே தான் நடக்கிறது. இருபத்தி நான்காவது ஆளுமை பீஸ்ட் வெளிவருகிறபொழுது சூப்பர்ஹுமன் பலத்தை பெறுகிறான் கெவின். அவனது உடலே மாறிப்போகிறது, சுவர்களில் பல்லி போல ஏறவும், மனித மாமிசம் உண்ணவும் செய்யும் ஆளுமை அது.
மிரட்டல்தான்.
ஒருமுறை பார்க்கலாம்.
அன்பன்
மது
விமர்சனமே மிரட்டுகிறது தோழர்
ReplyDeleteநன்றி தோழர்
Deleteஇன்னும் ஸிக்ஸ்த் சென்ஸே முழுசும் பார்க்கவில்லை.
ReplyDeleteபாருங்கள் தோழர்
Deleteஅவசியம் பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது நண்பரே
ReplyDeleteஅருமையான விமர்சனம்
நன்றி
பாருங்கள் அய்யா வாய்ப்பு இருந்தால்
Deleteஸ்ப்லிட் லிஸ்டில் இருக்கிறது எங்கள் ஊரில் வரும் என்று நினைக்கிறேன்....பார்க்கணும்
ReplyDeleteகீதா:மனோஜ் நை ஸ்யாமளன் எனக்கும் மகனுக்கும் மிகவும் பிடித்த இயக்குனர். அவரது முந்தைய இரு படங்களும் பார்த்திருக்கிறோம். மிக மிக மெதுவாக நகரும் வகைதான். சில சமயம் பொறுமையச் சோதிக்கும் அளவிற்கு என்றாலும் நாங்கள் பார்ப்பதுண்டு....எனவே இதுவும் பார்க்க வேண்டும்..ஆனால் என்னவென்றால் என் மகன் இங்கில்லை...நானும் அவனும் சேர்ந்துதான் பார்ப்பது வழக்கம்...
வருகைக்கு நன்றி சகோ
Delete