ஒரு கலையைக் கற்றுக்கொள்ள முனையும் பொழுது நமக்கு நல்ல குரு ஒருவர் வேண்டும்.
மிகத்திறமையான குருவாக இருந்தால்கூட மிகக்கடுமையாக, கீழ்மையாக நடந்தார் என்றால் கலையாவது மண்ணாங்கட்டியாவது என்றுதான் முடிவெடுப்போம்.
அப்படிப்பட்ட சைக்கோ குருவிடம் சிக்கும் ஒரு மாணவன் எப்படி அவரை மீறி வளர்ந்து மிளிர்கிறான் என்பதைச் சொல்லும் படம்.
மூன்று ஆஸ்கர்விருதுகளைப் பெற்றபடம், சிறந்த துணை நடிகர்(சிமன்ஸ், குரு பாத்திரத்திற்காக), சிறந்த ஒலிகலப்பு, சிறந்த எடிட்டிங் என்று மூன்று விருதுகள்.
ஆண்ட்ரு நெய்மான் சிறுவயதிலிருந்து டிரம் வாசிப்பவன், படி ரிச் என்கிற புகழ்பெற்ற ட்ரம்மர் போல வளரவேண்டும் என்பதற்காக ஷாபர் கன்சர்வேட்டரியில் இணைகிறான்.
அங்கே இவனது அற்பணிப்பைப் பார்த்த டெரன்ஸ் பிளட்சர் அவரது குழுவிற்கு இவனை அழைக்கிறார். நம்பவே முடியாமல் அவரின் குழுவில் இடம் பெறுகிறான்.
ஆனால் பிளாட்ச்சர் எவ்வளவுக்கு புகழப்படுகிறாரோ அதே அளவிற்கு சில சைக்கோதனங்களோடு இருக்கிறார், அவரது மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறார்கள்.
மிகக் கடுமையான வார்த்தைகளால் மாணவர்களைத்திட்டுவது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது என்பதெல்லாம் ப்ளட்சரின் பயிற்றுவிப்புப் பாணி.
எசகு பிசகாக ஆண்ட்ரு இவரது சனிப்பார்வையல் வசமாக மாட்டுகிறான், இவரிடம் நல்லபேர் வாங்குவதற்காக நீண்ட நேரம் ட்ரம்மை வாசித்து கைகளில் இருந்து இரதம் ஒழுகுகிறது.
ஒரு மாணவனை கார்னர் செய்து, உளவியல் ரீதியில் வதைத்தால் மட்டுமே அவன் திறன் மேம்படும் என்கிற தியரியில் பிளட்சர் செயல்பட்டாலும் அது உண்மையல்ல.
அவரது சுபாவமே அப்படித்தான்.
சாவடிப்பது எனக்கு டி குடிப்பது போல என்பவர் அவர்.
தனது மாணவர்களின் திணறலை பரிதாபத்தை கற்சிலை போன்ற முகத்தோடு ரசிப்பவர் பிளட்சர்.
திமிறி எழுந்து ஆண்ட்ரு வெல்கிறான், ஆனால் அந்தத் தருணத்தில் கூட பிளட்சர் அவனக்கு தரவேண்டிய அங்கீகாரத்தை தரவில்லை என்பது அவரது பாத்திரம் முழுமைபெறா டைப் பாத்திரம் என்பதைக் உணர்த்துகிறது.
தனது சைக்கோதனமான நடிப்பிற்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
இசை நேசர்கள் தவிர்க்கக்கூடாத படம்.
இந்தப் படத்தின் இயக்குனருக்கு 2017இல் சிறந்த இயக்குனருக்கான விருது லா லா லேண்ட் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டிருக்கிறது.
சந்திப்போம்
அன்பன்
மது
வித்தியாசமான படம்
ReplyDeleteநன்றி நண்பரே
கதை நல்லாயிருக்கே...
ReplyDeleteநம்ம விசுவாமித்திரர் ஒரு சீடரிடம் இப்படித்தான் நடந்து கொண்டார் ஞாபகம் இருக்கா :)
ReplyDelete