நூல்கள் பார்வைக்கா ?


இன்று தங்கை கீர்த்தனா வீட்டிற்கு சென்ற பொழுது நூல்கள் இப்படி அடுக்கப்பட்டிருந்தன.



ஒரு அறையின் ஆன்மா புத்தகங்கள், அவை இல்லா வீடுகள் ஆன்மாவற்ற வீடுகள் என்கிற வாக்கியத்தை அடிக்கடி பேசுவார்கள் எனது அம்மாவும் அப்பாவும்.
கணிசமான அளவு புத்தகங்கள் இருந்தன வீட்டில்.
அப்பா அந்த காலத்தில் வெளிவந்த தமிழ்வாணன் கதைகள், கல்கியின் கதைகள் எல்லாவற்றையும் வார இதழ்களில் இருந்து பிரித்து தனியே பயின்ட் செய்து வைத்திருப்பார்.
சொல்லப்போனால் அந்தத் தலைமுறை மனிதர்கள் அனேகர் இதுபோன்ற புத்தகங்களை வைத்திருந்தார்கள்.
அப்படி படித்த கதைகள் ஏராளம்.
அமரர் கல்கியின் அலை ஓசையை அப்படித்தான் படித்தேன்.
விடுதலை பெற்ற இந்தியாவில் இரண்டு ஏழைக்கதா பாத்திரங்கள்
"விடுதலை வந்துவிட்டால் எல்லோருக்கும் சோறும் துணியும் கிடைக்கும்னு சொன்னாங்களே, அதெல்லாம் எங்கே?" என்று கேட்பதாக கல்கி சொல்லியிருப்பார்.
மனசை இன்றுவரை அறுக்கும் வரிகள் அவை.
நான் கல்லூரியில் பயின்ற பொழுது எனது பங்கிற்கு நூல்களை வாங்கிச் சேர்த்தேன்.
அவற்றை வீட்டில் வரிசையாக அடுக்கி வைப்பது வழக்கம்.
ஒருமுறை தோழர் ஒருவர் வந்திருந்தார்.
சில ரீடர்ஸ் டைஜெஸ்ட் நூல்களை வாங்கிக்கொண்டு போனார்.
திரும்பக் கேட்ட பொழுது அலங்காரத்துக்கு அடுக்கிதானே வைச்சிருக்கீங்க நான் வச்சுகிட்டா என்ன என்றார்.
அவர் கேட்ட தொனியும், தாதாத்தனமும் இனி இப்படி நூல்களை அடுக்கி வைத்தால் ஒன்று கூட மிஞ்சாது என்று தெளிவாக புரியவைக்கவே நூல்களை தனியே உள்ளறையில் அடுக்க ஆரம்பித்தேன்.

எதோ கொஞ்சம் நூல்கள் தப்பிப் பிழைத்தன.

இப்படி உள்ளறையில் அடுக்குவதில் இன்னொரு சிரமம் இருக்கிறது. சதா கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் பொழுதே குறைவாகத்தான் படிப்பேன். உள்ளே போய்விட்டால்? நிறய நூல்கள் கைபடாமல் தேங்க ஆரம்பித்தன.

இந்த ஆண்டராய்ட்காலத்தில் நூல்களை பார்வையில்படும் இடத்திலேயே அடுக்கலாம்தான். யார் கேட்கப் போகிறார்கள்>


தங்கை கீர்த்தனா நூல்களை அடுக்கியிருந்ததைப் பார்த்ததும் இதுதான் நினைவில் வந்தது.
என்னுடைய தாதாதோழர்கள் போல் அவளுக்கு யாரும் இல்லை போல.
சிரித்துக் கொண்டேன்.

Comments

  1. நூல்களைக் கடன் கொடுத்து வாங்கமுடியாமல்
    பலமுறை சிரமப்பட்டிருக்கிறேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வலிக்கும்தான் தோழர்

      Delete
  2. இப்படி நானும் புத்தகங்கள் இழந்திருக்கிறேன்.... புத்தகங்கள், ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள் என இழந்தவை நிறையவே.

    ReplyDelete
    Replies
    1. வாழ்வின் தவிர்க்க முடியா நிகழ்வுகள்தான்
      ரொம்ப எச்சரிக்கையாக இருக்கும் வரை இதெல்லாம் நடக்கும்.\

      என்னுடைய நூல்களை திரும்பத்தராத நண்பரிடம் ஒரு நூலை பெற்று திரும்பத் தர மறுத்துவிட்டேன் ..

      அவர் ஆறுமாதம் கெஞ்சினார்

      ஆனால் என்னுடைய நூல்களைப் பற்றி பேசவே இல்லை

      நானும் தரவே இல்லை ..

      Delete
  3. எங்கள் இல்லத்திற்கு வரும் நண்பர்களில் ஒருவர் எங்கள் இல்ல நூலகத்தைப் பார்த்துக் கூறுவார், "உங்கள் வீட்டிற்கு வந்தால் கோயிலுக்கு வந்ததுபோல் உள்ளது". எங்கள் நூலகம் எங்கள் வீட்டின் முக்கிய அங்கம். என்னதான் தொழில்நுட்பம் வந்தாலும் நூலை அடுக்கி வைத்துப் பார்ப்பதில், படிப்பதில் உள்ள சுகம்...அடடா...

    ReplyDelete
    Replies
    1. அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கும் சுகமும் அருமையாக இருக்கும்

      Delete
  4. //அலங்காரத்துக்கு அடுக்கிதானே வைச்சிருக்கீங்க நான் வச்சுகிட்டா என்ன//

    இது முற்றிலும் தவறான வார்த்தை தோழரே மேலும் ரசனை தெரியாதது போலவும் இருக்கின்றது நான் இரவல் வாங்கினால் கண்டிப்பாக கொடுத்து விடுவேன்
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. இப்போதும் நூல்களை ஒளித்துத்தான் வைத்திருக்கிறேன்

      Delete
  5. அப்போதெல்லாம் ஒரு கதையை பல தடவை படிப்போம். இப்போது ஒரு முறை படிப்பதே அரிதாக உள்ளது. தொழில் நுட்பங்கள் உழைப்பின் நேரத்தை மிச்சப் படுத்தினாலும் இன்னொரு விதத்தில் நேரத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்
      வாசிப்பின் நேரத்தை தின்பது இணையம்தான்

      Delete
  6. வாங்க முடிகிறது ,படிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் :)

    ReplyDelete

Post a Comment

வருக வருக