2017இல் உலகின் மாபெரும் தலைவர்கள் என்கிற பட்டியலில் இடம் பெற்றவர் முனைவர் லிசா சூ.
1969இல் தைவானில் பிறந்த இந்தப் பெண் எம்.ஐ.டியில் பயின்றவர். குறைகடத்திகளை வடிமைப்பதில் கில்லி.
டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்சில் பணியைத் துவக்கி ஐ.பிஎம். நிறுவனத்தில் சிலிகன் சிப்களின் திறனை மேம்படுத்துவதில் பல முன்னோடிச் சோதனை முயற்சிகளை செய்தார்.
பிறகு தற்போது பணிபுரியும் ஏ.எம்.டி. நிறுவனத்தில்
முதன்மைச் செயல் அதிகாரியாகச் சேர்ந்தார்.
தைவானில் பிறந்திருந்தாலும் இவருக்கு இரண்டு வயதான பொழுது இவரது குடும்பம் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது.
புள்ளியியல் வல்லுநரான இவரது தந்தை பெருக்கல் வாய்ப்பாட்டை வினாடி வினாவாக கேட்டுக் கொண்டே இருப்பாராம். அம்மா ஒரு தொழில்முனைவர்.
அம்மாவிடம் இருந்து வணிகமும் அப்பாவிடம் இருந்து கணிதமும் குழந்தைகளுக்கு பற்றிக்கொண்டது.
லிசாவிற்கு பத்து வயதாக இருக்கும் பொழுது தனது சகோதரனின் ரிமோட் கார்களை பிரித்து அவை எப்படி இயங்குகின்றன என்பதைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்!
தனது உயர்நிலைப் பள்ளி நாட்களை ஆப்பிள் மார்க் டூ கணிப்பொறியோடு கழித்தவர்.
1986இல் மாசசூசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சேர்ந்த பொழுது, மிகுந்த சவாலான எலக்ட்ரிகல் எஞ்னிரிங் துறையை தேர்ந்தெடுத்தார்.
சீனியர் மாணவர்களுக்கு சிலிக்கன் வேபர்களை வடிமைத்துத் தரும் பணியைச் செய்தார்.
ஒரு கல்வி நிறுவனம் எப்படி தனது மாணவர்களின் தொழில் நுட்ப அறிவை, அவர்களின் எதிர்காலத்தை வடிமைக்கிறது என்பதன் சாட்சி லிசா லு.
சாய் டெக் எனப்படும் சிலிக்கன் சில்லுகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆய்வினை செய்த முன்னோடிகளில் லிசா சூவும் ஒருவர் என்பதை எம்.ஐ.டி டெக் ரெவ்யூ குறிப்பிடுகிறது.
தனது முனைவர் பட்டதுடன் இவர் இணைந்த முதல் நிறுவனம் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ். அதன் பிறகு ஐ.பி.எம். அங்கே மைக்ரோ சிப்களில் காப்பர் இணைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும், காப்பர் துகள்கள் சிப்பின் செயல்பாட்டை பாதிக்காமல் தடுப்பதை உறுதி செய்யும் ஆய்வுகளை செய்தார்.
பயோசிப்களை வடிமைத்ததற்காக முப்பத்தி ஐந்து வயதிற்குள் சிறந்த கண்டிபிடிப்பாளர் விருதைப் பெற்றவர். இவருடைய பயோசிப்கள் குறைந்த மின்தேவையோடு அதிக திறனோடு செயல்படும் கைபேசிகளை சாத்தியப்படுத்தின.
விளையாட்டு மின்கருவிகளின் மைக்ரோ பிரசசர்களின் திறனை ஆயிரம் மடங்கு அதிகப் படுத்தியது லிசா சூவின் தனிப்பெரும் தொழில் நுட்பச்சாதனை.
ஒன்பது பிராசசர்களை ஒரே பிரசஸ்ரில் வைக்கும் ஆய்வின் முன்னோடியும் அம்மணிதான்.
ஐ.பி.எம் நிறுவனப் பணிக்கு பின்னர் ப்ரீஸ்கேல் செமிகண்டக்டர் நிறுவனத்தில் இணைந்து அதன் தலைமை தொழில் நுட்ப அதிகாரியாகப் பணியாற்றினார். லிசா சூவின் புண்ணியத்தில் அந்த நிறுவனம் 2011இல் பங்கு வர்த்தகத்தில் ஐ.பி.ஒ வெளியிட்டது.
இதன் பின்னர் ஏ.எம்.டி. நிறுவனத்தில் இணைந்தார். இவரது பழைய நிறுவனங்களில் இவருக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு இப்போது இவருக்கு கைகொடுத்தது.
ஆம், ஏ.எம்.டி நிறுவனத்தின் சிப்களை சோனி ப்ளேஸ்டேசனிலும், மைக்ரோ சாப்ட் எக்ஸ்.பாக்ஸ் ஒன்னிலும் பொருத்தும் ஆர்டர்களை பெற்றார்!
சூ வின் பரந்துபட்ட அனுபவம் ஏ.எம்.டி நிறுவனத்திற்கு பெரும் செல்வமாக மாறிப்போனது.
பர்சனல் கம்பியூட்டர் மார்க்கெட்டை மட்டுமே குறிவைத்து இயங்கிய ஏ.எம்.டியின் தற்போதைய வருவாயில் நாற்பது சதம் கேம் கன்சோல்களின் சிப்கள் மூலம் வருகிறது.
பெண்கள் ஒழுங்கா சமைத்து துவைத்தால் போதும் என்கிற மனநிலையில் இருக்கும் நம்மவர்க்கு லிசா வின் சாதனைகள் பெரும் அற்புதம்தானே!
அன்பன்
மது
லிசா சாதனைப்பெண் தான் ..பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபோற்றுதலுக்கு உரியவர்
ReplyDeletethank you
Deleteசிறந்த சாதனையாளரைப் படிக்க முடிந்தது.
ReplyDelete.சமையலில் மட்டுமல்ல ,எந்த துறையிலும் பெண்கள் சாதிக்க முடியும் என்பதற்கு லிசா சு ஒரு முன்னோடி :)
ReplyDelete